Check out the new design

クルアーンの対訳 - クルアーン簡潔注釈(タミル語対訳) * - 対訳の目次


対訳 章: 創成者章   節:
وَمَا یَسْتَوِی الْبَحْرٰنِ ۖۗ— هٰذَا عَذْبٌ فُرَاتٌ سَآىِٕغٌ شَرَابُهٗ وَهٰذَا مِلْحٌ اُجَاجٌ ؕ— وَمِنْ كُلٍّ تَاْكُلُوْنَ لَحْمًا طَرِیًّا وَّتَسْتَخْرِجُوْنَ حِلْیَةً تَلْبَسُوْنَهَا ۚ— وَتَرَی الْفُلْكَ فِیْهِ مَوَاخِرَ لِتَبْتَغُوْا مِنْ فَضْلِهٖ وَلَعَلَّكُمْ تَشْكُرُوْنَ ۟
35.12. இரு கடல்களும் சமமாகி விடாது. அவற்றில் ஒன்று நன்கு சுவையான நீரை உடையது. அதன் சுவையினால் அதனைக் குடிப்பது இலகுவானது. மற்றொன்று உப்பும் கசப்பும் உடையது. அதன் கடுமையான உவர்ப்பின் காரணமாக அதனைப் பருக முடியாது. மேற்கூறப்பட்ட இரு கடல்களிலிருந்தும் நீங்கள் புத்தம் புது (இறைச்சியான) மீனை உண்கிறீர்கள். அவற்றிலிருந்து முத்து, பவளம் போன்ற அலங்காரத்துக்காக அணியும் ஆபரணங்களை எடுக்கின்றீர்கள். -பார்க்கக்கூடியவனே!- வியாபாரத்தின் மூலம் நீங்கள் அல்லாஹ்வின் அருளைத் தேடுவதற்காக கடலில் கப்பல்கள் முன்னோக்கியவாறும் பின்னோக்கியவாறும் கடல்களை பிளந்தவாறு செல்வதை நீ பார்க்கின்றாய். அவன் உங்கள் மீது பொழிந்த ஏராளமான அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தலாம் என்பதற்காகத்தான்.
アラビア語 クルアーン注釈:
یُوْلِجُ الَّیْلَ فِی النَّهَارِ وَیُوْلِجُ النَّهَارَ فِی الَّیْلِ ۙ— وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ ۖؗ— كُلٌّ یَّجْرِیْ لِاَجَلٍ مُّسَمًّی ؕ— ذٰلِكُمُ اللّٰهُ رَبُّكُمْ لَهُ الْمُلْكُ ؕ— وَالَّذِیْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِهٖ مَا یَمْلِكُوْنَ مِنْ قِطْمِیْرٍ ۟ؕ
35.13. அல்லாஹ் இரவை பகலில் பிரவேசிக்கச் செய்து அதனை நீளமாக்குகிறான். பகலை இரவில் பிரவேசிக்கச் செய்பிரவேசிக்கச் செய்து அதனை நீளமாக்குகிறான். சூரியனையும் சந்திரனையும் அவன் வசப்படுத்தித் தந்துள்ளான். அவற்றில் ஒவ்வொன்றும் அல்லாஹ் அறிந்த தவணையின்படி சென்று கொண்டிருக்கும். அந்த தவணை மறுமை நாளாகும். இவையனைத்தையும் நிர்ணயம் செய்து இயங்கச் செய்பவன்தான் உங்கள் இறைவனான அல்லாஹ். ஆட்சியதிகாரம் அவனுக்கு மட்டுமே உரியது. அவனை விடுத்து அவர்கள் வணங்கும் சிலைகள் பேரீச்சம் பழக்கொட்டையின் மேலுள்ள தோலளவுக்குக் கூட உரிமையுடையவைகளல்ல. எனவே என்னை விடுத்து அவற்றை எவ்வாறுதான் நீங்கள் வணங்குகிறீர்களோ?!
アラビア語 クルアーン注釈:
اِنْ تَدْعُوْهُمْ لَا یَسْمَعُوْا دُعَآءَكُمْ ۚ— وَلَوْ سَمِعُوْا مَا اسْتَجَابُوْا لَكُمْ ؕ— وَیَوْمَ الْقِیٰمَةِ یَكْفُرُوْنَ بِشِرْكِكُمْ ؕ— وَلَا یُنَبِّئُكَ مِثْلُ خَبِیْرٍ ۟۠
35.14. நீங்கள் உங்களின் தெய்வங்களை அழைத்தால் அவை உங்களின் அழைப்புக்குச் செவியேற்க மாட்டா. ஏனெனில் அவை உயிரற்ற, கேட்கமுடியாத ஜடப்பொருள்கள். -ஒரு வேளை- அவை உங்களின் அழைப்பை செவியுற்றாலும் அவை உங்களுக்குப் பதிலளிக்க மாட்டாது. மறுமை நாளில் உங்களின் இணைவைப்பைவிட்டும், நீங்கள் அவற்றை வணங்கியதைவிட்டும் விலகிவிடும். -தூதரே!- அல்லாஹ்வைவிட உமக்கு உண்மையான செய்தியை அறிவிப்பவர் வேறு யாருமில்லை.
アラビア語 クルアーン注釈:
یٰۤاَیُّهَا النَّاسُ اَنْتُمُ الْفُقَرَآءُ اِلَی اللّٰهِ ۚ— وَاللّٰهُ هُوَ الْغَنِیُّ الْحَمِیْدُ ۟
35.15. -மனிதர்களே!- உங்களின் எல்லா விவகாரங்களிலும் நிலைகளிலும் நீங்கள்தாம் அல்லாஹ்விடம் தேவையுடையவர்களாக இருக்கின்றீர்கள். அவன் உங்களிடம் எந்த வகையிலும் தேவையற்றவனாகவும் தனது அடியார்களுக்கு நிர்ணயிப்பவற்றுக்காக இவ்வுலகிலும் மறுவுலகிலும் புகழுக்குரியவனாகவும் இருக்கின்றான்.
アラビア語 クルアーン注釈:
اِنْ یَّشَاْ یُذْهِبْكُمْ وَیَاْتِ بِخَلْقٍ جَدِیْدٍ ۟ۚ
35.16. அவன் உங்களை அழிக்க நாடினால் உங்களை அழித்துவிட்டு உங்களுக்குப் பதிலாக அவனை மட்டுமே வணங்கக்கூடிய, அவனுக்கு யாரையும் இணையாக்காத புதிய படைப்பைக் கொண்டு வருவான்.
アラビア語 クルアーン注釈:
وَمَا ذٰلِكَ عَلَی اللّٰهِ بِعَزِیْزٍ ۟
35.17. உங்களை அழிப்பதும் உங்களுக்குப் பதிலாக புதிய படைப்பைக் கொண்டு வருவதும் அல்லாஹ்வுக்குக் இயலாத ஒன்றல்ல.
アラビア語 クルアーン注釈:
وَلَا تَزِرُ وَازِرَةٌ وِّزْرَ اُخْرٰی ؕ— وَاِنْ تَدْعُ مُثْقَلَةٌ اِلٰی حِمْلِهَا لَا یُحْمَلْ مِنْهُ شَیْءٌ وَّلَوْ كَانَ ذَا قُرْبٰی ؕ— اِنَّمَا تُنْذِرُ الَّذِیْنَ یَخْشَوْنَ رَبَّهُمْ بِالْغَیْبِ وَاَقَامُوا الصَّلٰوةَ ؕ— وَمَنْ تَزَكّٰی فَاِنَّمَا یَتَزَكّٰی لِنَفْسِهٖ ؕ— وَاِلَی اللّٰهِ الْمَصِیْرُ ۟
35.18. பாவம் செய்த ஒருவர் பாவம் செய்த இன்னொருவரின் பாவச்சுமையை சுமக்க மாட்டார். மாறாக ஒவ்வொருவரும் தன் பாவத்தையே சுமப்பார்கள். கனமான பாவச் சுமையுடையவர் தன் பாவங்களில் எதையேனும் சுமந்து கொள்ளுமாறு மற்றவர்களை அழைத்தாலும் அவற்றில் எதையும் அவரால் சுமக்க முடியாது, அழைக்கப்பட்டவர் நெருங்கிய உறவினராக இருந்தாலும் சரியே. -தூதரே!- தங்கள் இறைவனைக் காணாமலேயே அவனை அஞ்சி, தொழுகையை பரிபூரணமான முறையில் நிறைவேற்றக்கூடியவர்களுக்குத்தான் உம்மால் அவனுடைய வேதனையைக் குறித்து எச்சரிக்கை செய்ய முடியும். அவர்கள்தாம் உம்முடைய எச்சரிக்கையால் பயனடைவார்கள். யார் பாவங்களிலிருந்து -அதிலும் பெரியது இணைவைப்பிலிருந்து- தன்னை தூய்மைப்படுத்திக் கொண்டாரோ நிச்சயமாக அவர் தனக்காகவே தூய்மைப்படுத்திக் கொண்டார். திட்டமாக அதனால் ஏற்படும் பலன் அவரையே சாரும். அவரின் கீழ்ப்படிதலைவிட்டும் அல்லாஹ் தேவையற்றவன். மறுமை நாளில் விசாரணைக்காகவும் கூலியைப் பெறவும் அவன் பக்கமே திரும்ப வேண்டும்.
アラビア語 クルアーン注釈:
本諸節の功徳:
• تسخير البحر، وتعاقب الليل والنهار، وتسخير الشمس والقمر: من نعم الله على الناس، لكن الناس تعتاد هذه النعم فتغفل عنها.
1. கடல், சூரியன், சந்திரன் ஆகிவற்றை வசப்படுத்தல், இரவு, பகல் மாறிமாறி வருதல் ஆகியவை மக்கள் மீது அல்லாஹ் புரிந்த அருட்கொடைகளாகும். ஆயினும் அவர்கள் இந்த அருட்கொடைகளைப் பார்த்து பழகிவிட்டதால் அலட்சியமாக இருக்கிறார்கள்.

• سفه عقول المشركين حين يدعون أصنامًا لا تسمع ولا تعقل.
2. செவியேற்கவோ, விளங்கிக் கொள்ளவோ முடியாத சிலைகளை இணைவைப்பாளர்கள் அழைப்பது அவர்களின் முட்டாள்தனமாகும்.

• الافتقار إلى الله صفة لازمة للبشر، والغنى صفة كمال لله.
3. அல்லாஹ்விடம் தேவையுடையவர்களாக இருப்பது மனிதனுடன் எப்போதும் ஒன்றியிருக்கும் பண்பாகும். தேவையற்ற தன்மை அல்லாஹ்வின் ஒரு பரிபூரணத் தன்மையாகும்.

• تزكية النفس عائدة إلى العبد؛ فهو يحفظها إن شاء أو يضيعها.
4. மனதை தூய்மைப்படுத்திக் கொள்வதால் அடியானுக்குத்தான் நன்மை ஏற்படுகிறது. அவன் விரும்பினால் அதனைப் பாதுகாக்கலாம் இல்லையெனில் வீணாக்கிவிடலாம்.

 
対訳 章: 創成者章
章名の目次 ページ番号
 
クルアーンの対訳 - クルアーン簡潔注釈(タミル語対訳) - 対訳の目次

- Tafsir Center for Quranic Studies - 発行

閉じる