Check out the new design

クルアーンの対訳 - クルアーン簡潔注釈(タミル語対訳) * - 対訳の目次


対訳 節: (43) 章: 婦人章
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَقْرَبُوا الصَّلٰوةَ وَاَنْتُمْ سُكٰرٰی حَتّٰی تَعْلَمُوْا مَا تَقُوْلُوْنَ وَلَا جُنُبًا اِلَّا عَابِرِیْ سَبِیْلٍ حَتّٰی تَغْتَسِلُوْا ؕ— وَاِنْ كُنْتُمْ مَّرْضٰۤی اَوْ عَلٰی سَفَرٍ اَوْ جَآءَ اَحَدٌ مِّنْكُمْ مِّنَ الْغَآىِٕطِ اَوْ لٰمَسْتُمُ النِّسَآءَ فَلَمْ تَجِدُوْا مَآءً فَتَیَمَّمُوْا صَعِیْدًا طَیِّبًا فَامْسَحُوْا بِوُجُوْهِكُمْ وَاَیْدِیْكُمْ ؕ— اِنَّ اللّٰهَ كَانَ عَفُوًّا غَفُوْرًا ۟
4.43. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றியவர்களே! நீங்கள் போதையில் இருக்கும்போது போதைதெளியும்வரை, நீங்கள் கூறுவதை அறிந்துகொள்ளும்வரை தொழாதீர்கள். இது மது தடைசெய்யப்படுவதற்கு முன்னால் உள்ள நிலை. நீங்கள் குளிப்பு அவசியமான நிலையில் இருக்கும்போது குளிக்கும் வரை தொழவோ, தரிக்காமல் கடந்துசெல்வதற்காகவே தவிர பள்ளிவாயில்களில் நுழையவோ வேண்டாம். நீங்கள் நோய்வாய்ப்பட்டு உங்களால் தண்ணீரைப் பயன்படுத்த முடியவில்லையெனில் அல்லது நீங்கள் பயணத்தில் இருந்தால் அல்லது நீங்கள் மலஜலம் கழித்துவிட்டுவந்தால் அல்லது உங்கள் மனைவியுன் உடலுறவு கொண்டால் அப்போது நீங்கள் தண்ணீரைப் பெறவில்லையெனில் தூய்மையான மண்ணை எடுத்து, அதனால் உங்கள் முகங்களையும் கைகளையும் தடவிக்கொள்ளுங்கள். நிச்சயாக அல்லாஹ் உங்களின் குறைகளை கண்டுகொள்ளாமல் விட்டுவிடக்கூடியவனாகவும் மன்னிப்பவனாகவும் இருக்கின்றான்.
アラビア語 クルアーン注釈:
本諸節の功徳:
• من كمال عدله تعالى وتمام رحمته أنه لا يظلم عباده شيئًا مهما كان قليلًا، ويتفضل عليهم بمضاعفة حسناتهم.
1. அல்லாஹ்வின் பரிபூரண நீதி மற்றும் கருணையின் காரணமாகவே தன் அடியார்களுக்கு சிறிதும் அநீதி இழைப்பதில்லை. மாறாக அவர்களுக்குப் பன்மடங்கு நன்மைகளை வழங்கி அருள்புரிகிறான்.

• من شدة هول يوم القيامة وعظم ما ينتظر الكافر يتمنى أن يكون ترابًا.
2. மறுமை நாளின் திகில் மற்றும் நிராகரிப்பாளனை எதிர்பார்த்திருக்கும் பெரும் தண்டைனைகளின் காரணமாக அவன் தான் மண்ணோடு மண்ணாக ஆகிவிடக்கூடாதா என்று ஆசைகொள்வான்.

• الجنابة تمنع من الصلاة والبقاء في المسجد، ولا بأس من المرور به دون مُكْث فيه.
3. குளிப்பு அவசியமான நிலையில் இருப்பவர் தொழுவதோ பள்ளிவாயிலில் தங்குவதோ கூடாது. அதனைக் கடந்து செல்வது அனுமதிக்கப்பட்டது.

• تيسير الله على عباده بمشروعية التيمم عند فقد الماء أو عدم القدرة على استعماله.
4. தண்ணீர் கிடைக்காதபோது அல்லது அதனைப் பயன்படுத்த முடியாதபோது மண்ணைப் பயன்படுத்தலாம் என்ற சட்டத்தின் மூலம் அல்லாஹ் தன் அடியார்கள் மீது எளிதாக்கியுள்ளான்.

 
対訳 節: (43) 章: 婦人章
章名の目次 ページ番号
 
クルアーンの対訳 - クルアーン簡潔注釈(タミル語対訳) - 対訳の目次

- Tafsir Center for Quranic Studies - 発行

閉じる