クルアーンの対訳 - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - 対訳の目次


対訳 節: (14) 章: 食卓章
وَمِنَ الَّذِیْنَ قَالُوْۤا اِنَّا نَصٰرٰۤی اَخَذْنَا مِیْثَاقَهُمْ فَنَسُوْا حَظًّا مِّمَّا ذُكِّرُوْا بِهٖ ۪— فَاَغْرَیْنَا بَیْنَهُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَآءَ اِلٰی یَوْمِ الْقِیٰمَةِ ؕ— وَسَوْفَ یُنَبِّئُهُمُ اللّٰهُ بِمَا كَانُوْا یَصْنَعُوْنَ ۟
5.14. யூதர்களிடம் உறுதியான வாக்குறுதியைப் பெற்றதைப் போன்றே தங்களைத் தாங்களே தூய்மையானவர்கள் என்று கூறிக் கொண்ட ஈஸாவைப் பின்பற்றியவர்களிடமும் உறுதியான வாக்குறுதி வாங்கினோம். யூதர்கள் செய்ததைப் போன்றே தங்களுக்கு வழங்கப்பட்ட அறிவுரையில் ஒரு பகுதியின்படி செயல்படுவதை இவர்களும் விட்டுவிட்டார்கள். நாம் அவர்களிடையே பகைமையையும் குரோதத்தையும் ஏற்படுத்தினோம். அவர்கள் ஒருவர் மற்றவரை காஃபிர் என்று கூறி சண்டையிடக்கூடியவர்களாகி விட்டார்கள். அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றை விரைவில் அல்லாஹ் அவர்களுக்கு அறிவித்துக் கொடுப்பான். அவற்றிற்கேற்ப அவர்களுக்குக் கூலி வழங்குவான்.
アラビア語 クルアーン注釈:
本諸節の功徳:
• تَرْك العمل بمواثيق الله وعهوده قد يوجب وقوع العداوة وإشاعة البغضاء والتنافر والتقاتل بين المخالفين لأمر الله تعالى.
1. அல்லாஹ்விடம் செய்த ஒப்பந்தங்களின்படி செயல்படாமல் இருப்பது அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறாகச் செயல்பட்டவர்களிடையே பகைமையையும் வெறுப்பையும் சண்டையையும் சிலவேளை ஏற்படுத்திவிடுகின்றன.

• الرد على النصارى القائلين بأن الله تعالى تجسد في المسيح عليه السلام، وبيان كفرهم وضلال قولهم.
2. ‘ஈஸாவின் உருவில் இறைவனே இருக்கின்றான்’ என்று கூறும் கிறிஸ்தவர்களின் தீய கொள்கை மறுத்துரைக்கப்பட்டுள்ளது. அவர்களின் நிராகரிப்பும் வழிகேடும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

• من أدلة بطلان ألوهية المسيح أن الله تعالى إن أراد أن يهلك المسيح وأمه عليهما السلام وجميع أهل الأرض فلن يستطيع أحد رده، وهذا يثبت تفرده سبحانه بالأمر وأنه لا إله غيره.
3. அல்லாஹ் ஈஸாவையும் அவரது தாயாரையும் உலகிலுள்ள அனைவரையும் அழிக்க விரும்பினால் யாராலும் அதனைத் தடுக்க முடியாது என்பது ஈஸா இறைவனல்ல என்பதற்கான சான்றுகளில் ஒன்றாகும். இது அவன் தனித்தே காரியமாற்றுகிறான் என்பதையும் அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை என்பதையும் நிரூபிக்கின்றது.

• من أدلة بطلان ألوهية المسيح أن الله تعالى يُذَكِّر بكونه تعالى ﴿ يَخْلُقُ مَا يَشَاءُ﴾ (المائدة: 17)، فهو يخلق من الأبوين، ويخلق من أم بلا أب كعيسى عليه السلام، ويخلق من الجماد كحية موسى عليه السلام، ويخلق من رجل بلا أنثى كحواء من آدم عليهما السلام.
4. மஸீஹ் இறைவனல்ல என்பற்கான ஆதாரங்களில் ஒன்றுதான் “தான் நாடியதைப் படைப்பதாக அல்லாஹ் நினைவூட்டுவதாகும்.” அவன் தாய் தந்தையிலிருந்தும் படைப்பான். ஈஸாவைப் போன்று தந்தையின்றி தாயிலிருந்து மாத்திரமும் படைப்பான். மூஸா (அலை) அவர்களது பாம்பைப் போன்று உயிரற்ற ஜடப்பொருளிலிருந்தும் படைப்பான். ஹவ்வா (அலை) அவர்களை ஆதம் (அலை) அவர்களிலிருந்து படைத்ததைப் போன்று பெண் துணையின்றி ஆணிலிருந்து மாத்திரமும் படைப்பான்.

 
対訳 節: (14) 章: 食卓章
章名の目次 ページ番号
 
クルアーンの対訳 - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - 対訳の目次

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

閉じる