クルアーンの対訳 - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - 対訳の目次


対訳 節: (32) 章: 食卓章
مِنْ اَجْلِ ذٰلِكَ ؔۛۚ— كَتَبْنَا عَلٰی بَنِیْۤ اِسْرَآءِیْلَ اَنَّهٗ مَنْ قَتَلَ نَفْسًا بِغَیْرِ نَفْسٍ اَوْ فَسَادٍ فِی الْاَرْضِ فَكَاَنَّمَا قَتَلَ النَّاسَ جَمِیْعًا ؕ— وَمَنْ اَحْیَاهَا فَكَاَنَّمَاۤ اَحْیَا النَّاسَ جَمِیْعًا ؕ— وَلَقَدْ جَآءَتْهُمْ رُسُلُنَا بِالْبَیِّنٰتِ ؗ— ثُمَّ اِنَّ كَثِیْرًا مِّنْهُمْ بَعْدَ ذٰلِكَ فِی الْاَرْضِ لَمُسْرِفُوْنَ ۟
5.32. காபீல் தன் சகோதரனைக் கொலை செய்ததனால் இஸ்ராயீலின் மக்களுக்கு அறிவித்தோம்: “பழிவாங்குதல் அல்லது நிராகரிப்போ வழிப்பறிக்கொள்ளை மூலமோ பூமியில் குழப்பம் விளைவித்தல் ஆகிய காரணத்திற்காக அன்றி ஒரு மனிதனைக் கொலை செய்பவர் மனிதர்கள் அனைவரையும் கொலை செய்தவரைப் போன்றவராவார். ஏனெனில் அவன் அப்பாவிக்கும் குற்றவாளிக்கும் இடையே எந்த வேறுபாட்டையும் காணவில்லை. யார் அல்லாஹ் தடைசெய்துள்ளான் என்பதற்காக ஒரு உயிரைக் கொலைசெய்யாமல் தவிர்ந்துகொண்டாரோ அவர் மனிதர்கள் அனைவரையும் வாழவைத்தவரைப் போலாவார். ஏனெனில் அவரது செயலால் அனைவருக்கும் அமைதி கிடைக்கிறது. எமது தூதர்கள் இஸ்ராயீலின் மக்களிடம் தெளிவான ஆதாரங்களையும் அத்தாட்சிகளையும் கொண்டு வந்தார்கள். இருந்தும் அவர்களில் பெரும்பாலானோர் பாவங்கள் புரிந்து தங்கள் தூதர்களுக்கு மாறுசெய்து அல்லாஹ்வின் வரம்புகளை மீறக்கூடியவர்களாகவே இருந்தார்கள்.
アラビア語 クルアーン注釈:
本諸節の功徳:
• حرمة النفس البشرية، وأن من صانها وأحياها فكأنما فعل ذلك بجميع البشر، وأن من أتلف نفسًا بشرية أو آذاها من غير حق فكأنما فعل ذلك بالناس جميعًا.
1.மனித உயிர் புனிதமானது. ஒரு உயிரைப் பாதுகாத்து உயிர் வாழவைத்தவர் அனைத்து மனிதர்களையும் வாழவைத்தவர் போன்றவராவார். எவ்வித உரிமையுமின்றி ஒரு உயிரை அழித்தவர் அல்லது தீங்கு விளைவித்தவர் அனைத்து மனிதர்களுக்கும் அவ்வாறு செய்தவர் போலாவார்.

• عقوبة الذين يحاربون الله ورسوله ممن يفسدون بالقتل وانتهاب الأموال وقطع الطرق هي: القتل بلا صلب، أو مع الصلب، أو قطع الأطرف من خلاف، أو بتغريبهم من البلاد؛ وهذا على حسب ما صدر منهم.
2. கொலை, கொள்ளை, வழிப்பறி ஆகியவற்றின் மூலம் பூமியில் குழப்பம் விளைவித்து அல்லாஹ்வுடனும் அவனுடைய தூதருடனும் போரிடக்கூடியவர்களுக்கான தண்டனை இதுதான், தூக்கில் போடப்பட்டோ தூக்கில் போடப்படாமலோ அவர்கள் கொல்லப்பட வேண்டும் அல்லது அவர்களின் மாறுகை மாறுகால் வெட்டப்பட வேண்டும் அல்லது அவர்கள் நாடுகடத்தப்பட வேண்டும். இது அவர்களின் செயல்களுக்கேற்பவே அமைந்துள்ளது.

• توبة المفسدين من المحاربين وقاطعي الطريق قبل قدرة السلطان عليهم توجب العفو.
3. மன்னர் கைது செய்வதற்கு முன் குழப்பக்காரர்களும் வழிப்பறிக்கொள்ளயைர்களும் திருந்திவிட்டால் அவர்களை மன்னிப்பது அவசியமாகும்.

 
対訳 節: (32) 章: 食卓章
章名の目次 ページ番号
 
クルアーンの対訳 - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - 対訳の目次

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

閉じる