Check out the new design

クルアーンの対訳 - クルアーン簡潔注釈(タミル語対訳) * - 対訳の目次


対訳 章: 慈悲あまねきお方章   節:

அர்ரஹ்மான்

本章の趣旨:
تذكير الجن والإنس بنعم الله الباطنة والظاهرة، وآثار رحمته في الدنيا والآخرة.
உள்ரங்கமான வெளிரங்கமான அல்லாஹ்வின் அருட்கொடைகளையும் அவனது அருளின் ஈருலக விளைவுகளையும் ஜின்களுக்கும் மனிதர்களுக்கும் ஞாபகமூட்டல்

اَلرَّحْمٰنُ ۟ۙ
55.1. விசாலமான அன்புடைய கருணையாளன்
アラビア語 クルアーン注釈:
عَلَّمَ الْقُرْاٰنَ ۟ؕ
55.2. குர்ஆனை மனனம் செய்வதையும் அதன் கருத்துக்களைப் புரிவதையும் இலகுபடுத்தி அதனை அவன் மனிதர்களுக்குக் கற்றுக் கொடுத்தான்.
アラビア語 クルアーン注釈:
خَلَقَ الْاِنْسَانَ ۟ۙ
55.3. மனிதனைச் செம்மையாகப் படைத்து அவனுடைய வடிவத்தை அழகாக்கினான்.
アラビア語 クルアーン注釈:
عَلَّمَهُ الْبَیَانَ ۟
55.4. தன் மனதிலுள்ளதை பேச்சிலும் எழுத்திலும் எவ்வாறு வெளிப்படுத்துவது என்பதையும் அவனுக்கு கற்பித்தான்.
アラビア語 クルアーン注釈:
اَلشَّمْسُ وَالْقَمَرُ بِحُسْبَانٍ ۟ۙ
55.5. மனிதர்களுக்கு வருடங்களின் எண்ணிக்கையையும் கணக்கையும் அறிவிக்கும்பொருட்டு சூரியனையும் சந்திரனையும் நுணுக்கமான விதத்தில் இயங்குமாறு நிர்ணயித்துள்ளான்.
アラビア語 クルアーン注釈:
وَّالنَّجْمُ وَالشَّجَرُ یَسْجُدٰنِ ۟
55.6. செடிகொடிகளும் மரங்களும் அவனுக்குக் கட்டுப்பட்டு சிரம்பணிகின்றன.
アラビア語 クルアーン注釈:
وَالسَّمَآءَ رَفَعَهَا وَوَضَعَ الْمِیْزَانَ ۟ۙ
55.7. அவன் பூமிக்கு முகடாக அமையும்பொருட்டு வானத்தை உயர்த்தியுள்ளான். பூமியில் நீதியை நிலைநிறுத்தியுள்ளான். தன் அடியார்களுக்கு நீதியை நிலைநிறுத்துமாறு கட்டளையிட்டுள்ளான்.
アラビア語 クルアーン注釈:
اَلَّا تَطْغَوْا فِی الْمِیْزَانِ ۟
55.8. -மக்களே!- நீங்கள் அநீதி இழைத்து, அளவையிலும் நிறுவையிலும் மோசடி செய்யாமல் இருப்பதற்காகவே அவன் நீதியை நிலைநிறுத்தியுள்ளான்.
アラビア語 クルアーン注釈:
وَاَقِیْمُوا الْوَزْنَ بِالْقِسْطِ وَلَا تُخْسِرُوا الْمِیْزَانَ ۟
55.9. உங்களிடையே நிறுக்கும்போது நியாயமாக அளங்கள். மற்றவர்களுக்காக அளக்கும்போதோ நிறுக்கும்போதோ அளவையை, நிறுவையை குறைத்துவிடாதீர்கள்.
アラビア語 クルアーン注釈:
وَالْاَرْضَ وَضَعَهَا لِلْاَنَامِ ۟ۙ
55.10. அவன் பூமியை படைப்புகள் உறுதியாக வசிப்பதற்கு ஏற்றதாக ஆக்கித் தந்துள்ளான்.
アラビア語 クルアーン注釈:
فِیْهَا فَاكِهَةٌ وَّالنَّخْلُ ذَاتُ الْاَكْمَامِ ۟ۖ
55.11. அதில் கனி தரக்கூடிய மரங்களும் பேரீச்சம் பழங்களை தரக்கூடிய பாளைகளுடைய பேரீச்சை மரங்களும்
アラビア語 クルアーン注釈:
وَالْحَبُّ ذُو الْعَصْفِ وَالرَّیْحَانُ ۟ۚ
55.12. அதில் கோதுமை பார்லி போன்ற தொலியுடைய தானியங்களும் மனம் வீசும் தாவரங்களும் இருக்கின்றன.
アラビア語 クルアーン注釈:
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟
55.13. -மனித, ஜின் சமூகமே!- அல்லாஹ் உங்கள் மீது பொழிந்த ஏராளமான அருட்கொடைகளில் எதனை பொய்ப்பிப்பீர்கள்?
アラビア語 クルアーン注釈:
خَلَقَ الْاِنْسَانَ مِنْ صَلْصَالٍ كَالْفَخَّارِ ۟ۙ
55.14. சுடப்பட்ட மற்பாண்டத்தைப் போன்ற சப்தமுண்டாகும் காய்ந்த களி மண்ணிலிருந்து அவன் ஆதமைப் படைத்தான்.
アラビア語 クルアーン注釈:
وَخَلَقَ الْجَآنَّ مِنْ مَّارِجٍ مِّنْ نَّارٍ ۟ۚ
55.15. புகையற்ற தூய நெருப்பிலிருந்து ஜின்களின் தந்தையைப் படைத்தான்.
アラビア語 クルアーン注釈:
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟
55.16. -மனித, ஜின் சமூகமே!- அல்லாஹ் உங்கள் மீது பொழிந்த ஏராளமான அருட்கொடைகளில் எதனை பொய்ப்பிப்பீர்கள்?
アラビア語 クルアーン注釈:
رَبُّ الْمَشْرِقَیْنِ وَرَبُّ الْمَغْرِبَیْنِ ۟ۚ
55.17. அவன் கோடை காலத்திலும் குளிர் காலத்திலும் சூரியனின் இரு கிழக்குத் திசைகளுக்கும் மேற்குத் திசைகளுக்கும் இறைவனாவான்.
アラビア語 クルアーン注釈:
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟
55.18. -மனித, ஜின் சமூகமே!- அல்லாஹ் உங்கள் மீது பொழிந்த ஏராளமான அருட்கொடைகளில் எதனை பொய்ப்பிப்பீர்கள்?
アラビア語 クルアーン注釈:
本諸節の功徳:
• كتابة الأعمال صغيرها وكبيرها في صحائف الأعمال.
1. சிறிய மற்றும் பெரிய செயல்கள் அனைத்தும் செயற்பதிவேடுகளில் பதிவுசெய்யப்படுகிறது.

• ابتداء الرحمن بذكر نعمه بالقرآن دلالة على شرف القرآن وعظم منته على الخلق به.
2. அருளாளன் தனது அருட்கொடைகளைக் குறிப்பிடும் போது அல்குர்ஆனைக் கொண்டு ஆரம்பம் செய்திருப்பது அதன் சிறப்பையும் அதன் மூலம் படைப்பினத்துக்குச் செய்த அருட்கொடையின் மகத்துவத்தையும் உணர்த்துகிறது.

• مكانة العدل في الإسلام.
3. இஸ்லாத்தில் நீதியின் முக்கியத்துவம் தெளிவாகிறது.

• نعم الله تقتضي منا العرفان بها وشكرها، لا التكذيب بها وكفرها.
4. அல்லாஹ்வின் அருட்கொடைகள் நம்மிடம் வேண்டுவது இதுதான், நாம் அவற்றை அறிந்து அதற்காக நன்றிசெலுத்த வேண்டும். ஒருபோதும் அதனை பொய்ப்பித்து அதற்கு நன்றிகெட்டத்தனமாக நடந்துகொள்ளக்கூடாது.

 
対訳 章: 慈悲あまねきお方章
章名の目次 ページ番号
 
クルアーンの対訳 - クルアーン簡潔注釈(タミル語対訳) - 対訳の目次

- Tafsir Center for Quranic Studies - 発行

閉じる