クルアーンの対訳 - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - 対訳の目次


対訳 節: (43) 章: 高壁章
وَنَزَعْنَا مَا فِیْ صُدُوْرِهِمْ مِّنْ غِلٍّ تَجْرِیْ مِنْ تَحْتِهِمُ الْاَنْهٰرُ ۚ— وَقَالُوا الْحَمْدُ لِلّٰهِ الَّذِیْ هَدٰىنَا لِهٰذَا ۫— وَمَا كُنَّا لِنَهْتَدِیَ لَوْلَاۤ اَنْ هَدٰىنَا اللّٰهُ ۚ— لَقَدْ جَآءَتْ رُسُلُ رَبِّنَا بِالْحَقِّ ؕ— وَنُوْدُوْۤا اَنْ تِلْكُمُ الْجَنَّةُ اُوْرِثْتُمُوْهَا بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟
7.43. சொர்க்கத்தில் அவர்களுக்குக் கிடைக்கும் பரிபூரணமான அருட்கொடைகளில் ஒன்று, அல்லாஹ் அவர்களின் உள்ளங்களில் இருக்கும் பகைமையையும் குரோதத்தையும் நீக்கிவிடுவதும், அவர்களுக்குக் கீழே ஆறுகளை ஓடச் செய்வதுமாகும். அல்லாஹ் தங்களின் மீது பொழிந்த அருட்கொடைகளை ஒத்துக் கொண்டவர்களாக அவர்கள் கூறுவார்கள்: “இந்த உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றுத் தந்த நற்செயலைப் புரிவதற்கு பாக்கியம் அளித்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். அவன் எங்களுக்குப் பாக்கியம் அளிக்கவில்லையென்றால் நாங்களாகவே இதனைப் பெற்றிருக்க முடியாது. எங்களின் தூதர்கள் சந்தேகமற்ற சத்தியத்தையும் வாக்குறுதியிலும் எச்சரிக்கையிலும் உண்மையையே எங்களிடம் கொண்டு வந்தார்கள்.” அப்பொழுது ஒரு அழைப்பாளர் அவர்களை நோக்கி கூறுவார்: “இதுதான் உலகில் எனது தூதர்கள் உங்களுக்குக் கூறிய சுவர்க்கமாகும். தனது திருப்பொருத்தத்தை நாடி நீங்கள் செய்த நற்செயல்களின் காரணமாக உங்களுக்கு அவன் அதனை வழங்கியுள்ளான்”.
アラビア語 クルアーン注釈:
本諸節の功徳:
• المودة التي كانت بين المكذبين في الدنيا تنقلب يوم القيامة عداوة وملاعنة.
1. இவ்வுலகில் நிராகரிப்பாளர்களிடையே காணப்படும் நட்பு மறுமை நாளில் பகைமையாகவும் சாபமாகவும் ஆகிவிடும்.

• أرواح المؤمنين تفتح لها أبواب السماء حتى تَعْرُج إلى الله، وتبتهج بالقرب من ربها والحظوة برضوانه.
2. நம்பிக்கையாளர்களின் ஆன்மாக்கள் அல்லாஹ்விடம் செல்வதற்காக அவைகளுக்கு வானத்தின் கதவுகள் திறக்கப்படும். இறை நெருக்கத்தையும் திருப்தியையும் பெற்று அவர்கள் மகிழ்ச்சியடைவார்கள்.

• أرواح المكذبين المعرضين لا تفتح لها أبواب السماء، وإذا ماتوا وصعدت فهي تستأذن فلا يؤذن لها، فهي كما لم تصعد في الدنيا بالإيمان بالله ومعرفته ومحبته، فكذلك لا تصعد بعد الموت، فإن الجزاء من جنس العمل.
3. அல்லாஹ்வை நிராகரித்த ஆன்மாக்களுக்காக வானத்தின் கதவுகள் திறக்கப்படாது. அவை இறந்தபிறகு வானத்தின்பால் சென்று அனுமதி கேட்டாலும் அவற்றிற்கு அனுமதியளிக்கப்படாது. இவ்வுலகில் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு அவனை அறிந்து அவனை நேசம் கொண்டு மேலே செல்லாதது போல் இறந்த பிறகும் அவ்வாறு மேலே செல்லாது. ஏனெனில் கூலி செயல்களுக்கேற்பவே கிடைக்கும்.

• أهل الجنة نجوا من النار بعفو الله، وأدخلوا الجنة برحمة الله، واقتسموا المنازل وورثوها بالأعمال الصالحة وهي من رحمته، بل من أعلى أنواع رحمته.
4. சுவனவாசிகள் அல்லாஹ்வின் மன்னிப்பினால் நரகத்திலிருந்து பாதுகாக்கப்பட்டு அவன் அருளால் சுவனத்தில் நுழைக்கப்படுவார்கள். அவன் அருளால் அவர்கள் செய்த நற்செயல்களால் உயர்ந்த அந்தஸ்தையும் சுவனத்தையும் அவர்கள் பெறுவார்கள். அதுவே அவனது மிகப் பெரும் அருள்களில் ஒன்றாகும்.

 
対訳 節: (43) 章: 高壁章
章名の目次 ページ番号
 
クルアーンの対訳 - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - 対訳の目次

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

閉じる