Check out the new design

クルアーンの対訳 - タミル語対訳 - Omar Sharif * - 対訳の目次

PDF XML CSV Excel API
Please review the Terms and Policies

対訳 章: 高壁章   節:
وَلَوْ اَنَّ اَهْلَ الْقُرٰۤی اٰمَنُوْا وَاتَّقَوْا لَفَتَحْنَا عَلَیْهِمْ بَرَكٰتٍ مِّنَ السَّمَآءِ وَالْاَرْضِ وَلٰكِنْ كَذَّبُوْا فَاَخَذْنٰهُمْ بِمَا كَانُوْا یَكْسِبُوْنَ ۟
இன்னும், ஊர்வாசிகள் நம்பிக்கை கொண்டு (அல்லாஹ்வை) அஞ்சி இருந்தால், அவர்கள் மீது வானம் இன்னும் பூமியிலிருந்து அருள்வளங்களை திறந்திருப்போம். எனினும், (அவர்களோ நமது தூதர்களைப்) பொய்ப்பித்தனர். ஆகவே, அவர்கள் செய்துகொண்டிருந்ததன் காரணமாக (தண்டனையால்) அவர்களைப் பிடித்தோம்.
アラビア語 クルアーン注釈:
اَفَاَمِنَ اَهْلُ الْقُرٰۤی اَنْ یَّاْتِیَهُمْ بَاْسُنَا بَیَاتًا وَّهُمْ نَآىِٕمُوْنَ ۟ؕ
ஆக, ஊர்வாசிகள், - அவர்களோ தூங்கியவர்களாக இருக்கும்போது நம் தண்டனை அவர்களுக்கு இரவில் வருவதை - அச்சமற்று விட்டார்களா?
アラビア語 クルアーン注釈:
اَوَاَمِنَ اَهْلُ الْقُرٰۤی اَنْ یَّاْتِیَهُمْ بَاْسُنَا ضُحًی وَّهُمْ یَلْعَبُوْنَ ۟
அல்லது, ஊர்வாசிகள், - அவர்களோ விளையாடுபவர்களாக இருக்கும்போது நம் தண்டனை அவர்களுக்கு முற்பகலில் வருவதை - அச்சமற்று விட்டார்களா?
アラビア語 クルアーン注釈:
اَفَاَمِنُوْا مَكْرَ اللّٰهِ ۚ— فَلَا یَاْمَنُ مَكْرَ اللّٰهِ اِلَّا الْقَوْمُ الْخٰسِرُوْنَ ۟۠
ஆக, அல்லாஹ்வின் சூழ்ச்சியை (அவர்கள்) அச்சமற்று விட்டார்களா? அல்லாஹ்வின் சூழ்ச்சியை அச்சமற்று இருக்க மாட்டார்கள், நஷ்டவாளிகளான மக்களைத் தவிர.
アラビア語 クルアーン注釈:
اَوَلَمْ یَهْدِ لِلَّذِیْنَ یَرِثُوْنَ الْاَرْضَ مِنْ بَعْدِ اَهْلِهَاۤ اَنْ لَّوْ نَشَآءُ اَصَبْنٰهُمْ بِذُنُوْبِهِمْ ۚ— وَنَطْبَعُ عَلٰی قُلُوْبِهِمْ فَهُمْ لَا یَسْمَعُوْنَ ۟
இன்னும், பூமிக்கு, அதில் (முன்பு) வசித்தவர்களுக்கு பின்னர் வாரிசானவர்களுக்கு - நாம் நாடினால் அவர்களுடைய பாவங்களின் காரணமாக அவர்களை (தண்டனையினால் உடனே) சோதித்திருப்போம் - என்பது தெளிவாகவில்லையா? இன்னும், அவர்களுடைய உள்ளங்கள் மீது முத்திரையிடுவோம். ஆகவே, (இவர்கள் நல்லுபதேசங்களை) செவியுற மாட்டார்கள்.
アラビア語 クルアーン注釈:
تِلْكَ الْقُرٰی نَقُصُّ عَلَیْكَ مِنْ اَنْۢبَآىِٕهَا ۚ— وَلَقَدْ جَآءَتْهُمْ رُسُلُهُمْ بِالْبَیِّنٰتِ ۚ— فَمَا كَانُوْا لِیُؤْمِنُوْا بِمَا كَذَّبُوْا مِنْ قَبْلُ ؕ— كَذٰلِكَ یَطْبَعُ اللّٰهُ عَلٰی قُلُوْبِ الْكٰفِرِیْنَ ۟
(நபியே!) அந்த ஊர்கள், - அவற்றின் செய்திகளிலிருந்து உமக்கு (எடுத்துக் கூறி) விவரிக்கிறோம். இன்னும், அவர்களுடைய தூதர்கள் திட்டவட்டமாக அத்தாட்சிகளை அவர்களிடம் கொண்டுவந்தனர். எனினும், முன்னர் அவர்கள் எதை பொய்ப்பித்து விட்டார்களோ அதை (இப்போது) அவர்கள் நம்பிக்கை கொள்பவர்களாக இருக்கவில்லை. இவ்வாறே, நிராகரிப்பாளர்களின் உள்ளங்கள் மீது அல்லாஹ் முத்திரையிடுகிறான்.
アラビア語 クルアーン注釈:
وَمَا وَجَدْنَا لِاَكْثَرِهِمْ مِّنْ عَهْدٍ ۚ— وَاِنْ وَّجَدْنَاۤ اَكْثَرَهُمْ لَفٰسِقِیْنَ ۟
இன்னும், அவர்களில் அதிகமானவர்களுக்கு உடன்படிக்கையை எதையும் (பாதுகாக்கும் பண்பு இருப்பதாக) நாம் காணவில்லை. இன்னும், நிச்சயமாக அவர்களில் அதிகமானவர்களை பாவிகளாகவே கண்டோம்.
アラビア語 クルアーン注釈:
ثُمَّ بَعَثْنَا مِنْ بَعْدِهِمْ مُّوْسٰی بِاٰیٰتِنَاۤ اِلٰی فِرْعَوْنَ وَمَلَاۡىِٕهٖ فَظَلَمُوْا بِهَا ۚ— فَانْظُرْ كَیْفَ كَانَ عَاقِبَةُ الْمُفْسِدِیْنَ ۟
பிறகு, அவர்களுக்குப் பின்னர் மூஸாவை நம் அத்தாட்சிகளைக் கொண்டு, ஃபிர்அவ்ன் இன்னும் அவனுடைய முக்கிய பிரமுகர்களிடம் அனுப்பினோம். ஆக, அவர்கள் அவற்றுக்கு அநீதியிழைத்(து பொய்ப்பித்)தனர். ஆகவே, விஷமிகளின் முடிவு எவ்வாறு இருந்தது என்பதை (நபியே!) கவனிப்பீராக.
アラビア語 クルアーン注釈:
وَقَالَ مُوْسٰی یٰفِرْعَوْنُ اِنِّیْ رَسُوْلٌ مِّنْ رَّبِّ الْعٰلَمِیْنَ ۟ۙ
இன்னும், மூஸா கூறினார்: “ஃபிர்அவ்னே! நிச்சயமாக நான் அகிலங்களின் இறைவனிடமிருந்து அனுப்பப்பட்ட ஒரு தூதர் ஆவேன்.”
アラビア語 クルアーン注釈:
 
対訳 章: 高壁章
章名の目次 ページ番号
 
クルアーンの対訳 - タミル語対訳 - Omar Sharif - 対訳の目次

Sh. Omar Sharif bin Abdul-Salam

閉じる