Check out the new design

ការបកប្រែអត្ថន័យគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិល - អាប់ឌុលហាមុីទ ពេីក៏វី * - សន្ទស្សន៍នៃការបកប្រែ

XML CSV Excel API
Please review the Terms and Policies

ការបកប្រែអត្ថន័យ ជំពូក​: ហ្គហ្វៀរ   អាយ៉ាត់:
هُوَ الَّذِیْ خَلَقَكُمْ مِّنْ تُرَابٍ ثُمَّ مِنْ نُّطْفَةٍ ثُمَّ مِنْ عَلَقَةٍ ثُمَّ یُخْرِجُكُمْ طِفْلًا ثُمَّ لِتَبْلُغُوْۤا اَشُدَّكُمْ ثُمَّ لِتَكُوْنُوْا شُیُوْخًا ۚ— وَمِنْكُمْ مَّنْ یُّتَوَفّٰی مِنْ قَبْلُ وَلِتَبْلُغُوْۤا اَجَلًا مُّسَمًّی وَّلَعَلَّكُمْ تَعْقِلُوْنَ ۟
67. அவன்தான் உங்களை (ஆரம்பத்தில்) மண்ணிலிருந்தும் பின்னர், இந்திரியத்துளியிலிருந்தும், பின்னர், கருவிலிருந்தும் படைத்தான். பிறகு, அவனே உங்களை ஒரு சிசுவாகவும் வெளிப்படுத்துகிறான். பின்னர், (படிப்படியாக) நீங்கள் உங்கள் வாலிபத்தை அடைந்து, பின்னர் நீங்கள் முதியவர்களாக ஆகிறீர்கள். இதற்கு முன்னரும் உங்களில் பலர் இறந்து விடுகின்றனர். ஆயினும், (உங்களில் ஒவ்வொருவரும்) குறிப்பிட்ட தவணையை அடைந்தே தீருகிறீர்கள். இதை நீங்கள் அறிந்து கொள்வீர்களாக!
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
هُوَ الَّذِیْ یُحْیٖ وَیُمِیْتُ ۚ— فَاِذَا قَضٰۤی اَمْرًا فَاِنَّمَا یَقُوْلُ لَهٗ كُنْ فَیَكُوْنُ ۟۠
68. அவனே உயிர் கொடுக்கிறான்; உயிர் வாங்குகின்றான். எதையும் (படைக்க) அவன் தீர்மானித்தால் அதை ‘ஆகுக' என்று அவன் கூறியவுடன் அது ஆகிவிடுகிறது.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
اَلَمْ تَرَ اِلَی الَّذِیْنَ یُجَادِلُوْنَ فِیْۤ اٰیٰتِ اللّٰهِ ؕ— اَنّٰی یُصْرَفُوْنَ ۟ۙۛ
69. (நபியே!) அல்லாஹ்வுடைய வசனங்களைப் பற்றி (வீணாக)த் தர்க்கிப்பவர்கள் எவ்வாறு (உண்மையை விட்டும்) திருப்பப்படுகின்றனர் என்பதை நீர் பார்க்கவில்லையா?
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
الَّذِیْنَ كَذَّبُوْا بِالْكِتٰبِ وَبِمَاۤ اَرْسَلْنَا بِهٖ رُسُلَنَا ۛ۫— فَسَوْفَ یَعْلَمُوْنَ ۟ۙ
70. எவர்கள் இந்த வேதத்தையும், நமது (மற்ற) தூதர்கள் கொண்டு வந்த (வேதத்)தையும் பொய்யாக்குகின்றனரோ, அவர்கள் (பின்னர் அதை உண்மைதான் என்று) நிச்சயமாக அறிந்து கொள்வார்கள்.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
اِذِ الْاَغْلٰلُ فِیْۤ اَعْنَاقِهِمْ وَالسَّلٰسِلُ ؕ— یُسْحَبُوْنَ ۟ۙ
71. அவர்களுடைய கழுத்துகளில் விலங்கிட்டு, சங்கிலிகளால் கட்டப்பட்டு (வேதனை செய்ய) இழுத்துக் கொண்டு போகப்படுவார்கள்.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
فِی الْحَمِیْمِ ۙ۬— ثُمَّ فِی النَّارِ یُسْجَرُوْنَ ۟ۚ
72. (அவர்கள்) முதலில் கொதிக்கும் நீரின் பக்கமும், பின்னர் நரகத்திற்கும் (கொண்டு போகப்பட்டு, அதில்) எரிக்கப்படுவார்கள்.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
ثُمَّ قِیْلَ لَهُمْ اَیْنَ مَا كُنْتُمْ تُشْرِكُوْنَ ۟ۙ
73. பின்னர், அவர்களை நோக்கி ‘‘(அல்லாஹ்வுக்கு) இணையென்று நீங்கள் கூறிக்கொண்டிருந்த அல்லாஹ் அல்லாதவை எங்கே?'' என்று கேட்கப்படும்.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
مِنْ دُوْنِ اللّٰهِ ؕ— قَالُوْا ضَلُّوْا عَنَّا بَلْ لَّمْ نَكُنْ نَّدْعُوْا مِنْ قَبْلُ شَیْـًٔا ؕ— كَذٰلِكَ یُضِلُّ اللّٰهُ الْكٰفِرِیْنَ ۟
74. அதற்கவர்கள், ‘‘அவையெல்லாம் எங்களை விட்டும் மறைந்து விட்டன. இதற்கு முன்னர் நாம் (அல்லாஹ் அல்லாத) எதையுமே அழைத்துக் கொண்டிருக்கவில்லையே!'' என்று (பொய்) கூறுவார்கள். இவ்வாறு நிராகரிப்பவர்கள் (உடைய புத்தி) தடுமாறும்படி அல்லாஹ் செய்துவிடுவான்.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
ذٰلِكُمْ بِمَا كُنْتُمْ تَفْرَحُوْنَ فِی الْاَرْضِ بِغَیْرِ الْحَقِّ وَبِمَا كُنْتُمْ تَمْرَحُوْنَ ۟ۚ
75. (பின்னர், அவர்களை நோக்கி) ‘‘பூமியில் நீங்கள் செய்த உண்மையற்றதைக் கொண்டு அளவுகடந்து சந்தோஷப்பட்டுக் கொண்டு இருந்ததாலும், இறுமாப்போடு இருந்ததாலும் இதுவே உங்களுக்கு (தகுமான கூலியாகும்)
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
اُدْخُلُوْۤا اَبْوَابَ جَهَنَّمَ خٰلِدِیْنَ فِیْهَا ۚ— فَبِئْسَ مَثْوَی الْمُتَكَبِّرِیْنَ ۟
76. நீங்கள் நரகத்தின் வாயில்களில் நுழையுங்கள். அதில் என்றென்றும் தங்கி விடுங்கள்'' (என்று கூறப்படும்). கர்வம்கொண்ட இவர்கள் தங்குமிடம் மிகக் கெட்டது.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
فَاصْبِرْ اِنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّ ۚ— فَاِمَّا نُرِیَنَّكَ بَعْضَ الَّذِیْ نَعِدُهُمْ اَوْ نَتَوَفَّیَنَّكَ فَاِلَیْنَا یُرْجَعُوْنَ ۟
77. (நபியே!) பொறுமையுடன் (உறுதியாக) இருப்பீராக. நிச்சயமாக அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானது. அவர்களை நாம் பயமுறுத்துகின்ற வேதனைகளில் சிலவற்றை (உமது வாழ்நாளில்) நாம் உமக்குக் காண்பித்தாலும் சரி, அல்லது, (அவை வருவதற்கு முன்னதாகவே) நாம் உம்மைக் கைப்பற்றி (நீர் இறந்து) விட்டாலும் சரி, நிச்சயமாக அவர்கள் நம்மிடமே கொண்டு வரப்படுவார்கள்.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
 
ការបកប្រែអត្ថន័យ ជំពូក​: ហ្គហ្វៀរ
សន្ទស្សន៍នៃជំពូក លេខ​ទំព័រ
 
ការបកប្រែអត្ថន័យគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិល - អាប់ឌុលហាមុីទ ពេីក៏វី - សន្ទស្សន៍នៃការបកប្រែ

បកប្រែដោយលោកអាប់ឌុលហាមុីទ អាលពើក៏វី

បិទ