அந்நஹ்ல்

external-link copy
1 : 16

اَتٰۤی اَمْرُ اللّٰهِ فَلَا تَسْتَعْجِلُوْهُ ؕ— سُبْحٰنَهٗ وَتَعٰلٰی عَمَّا یُشْرِكُوْنَ ۟

அல்லாஹ்வுடைய கட்டளை வந்தே தீரும்! அதை நீங்கள் அவசரமாக தேடாதீர்கள். அவன் மிகப் பரிசுத்தமானவன்; அவர்கள் இணைவைப்பதை விட்டு அவன் முற்றிலும் உயர்ந்தவன். info
التفاسير: |

external-link copy
2 : 16

یُنَزِّلُ الْمَلٰٓىِٕكَةَ بِالرُّوْحِ مِنْ اَمْرِهٖ عَلٰی مَنْ یَّشَآءُ مِنْ عِبَادِهٖۤ اَنْ اَنْذِرُوْۤا اَنَّهٗ لَاۤ اِلٰهَ اِلَّاۤ اَنَا فَاتَّقُوْنِ ۟

அவன் தன் கட்டளைப்படி (வஹ்யி எனும்) உயிருடன், தன் அடியார்களில் தான் நாடுகின்றவர் மீது வானவர்களை இறக்குகிறான். “நிச்சயமாக வணக்கத்திற்குரியவன் என்னைத் தவிர அறவே இல்லை; ஆகவே (என்னை) அஞ்சுங்கள்” என்று நீங்கள் (மனிதர்களை) எச்சரியுங்கள். info
التفاسير: |

external-link copy
3 : 16

خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ بِالْحَقِّ ؕ— تَعٰلٰی عَمَّا یُشْرِكُوْنَ ۟

வானங்களையும் பூமியையும் உண்மையான நோக்கத்திற்கே படைத்தான்; அவர்கள் இணைவைப்பதை விட்டு அவன் முற்றிலும் உயர்ந்தவன். info
التفاسير: |

external-link copy
4 : 16

خَلَقَ الْاِنْسَانَ مِنْ نُّطْفَةٍ فَاِذَا هُوَ خَصِیْمٌ مُّبِیْنٌ ۟

இந்திரியத்திலிருந்து மனிதனைப் படைத்தான். அவனோ பகிரங்கமான வாதியாக (எதிரியாக) இருக்கிறான். info
التفاسير: |

external-link copy
5 : 16

وَالْاَنْعَامَ خَلَقَهَا لَكُمْ فِیْهَا دِفْءٌ وَّمَنَافِعُ وَمِنْهَا تَاْكُلُوْنَ ۟

கால்நடைகள், அவற்றை உங்களுக்காகப் படைத்தான். அவற்றில் உங்களுக்கு (குளிருக்கும் வெப்பத்திற்கும் இதமான) ஆடையும் இன்னும் (பல) பலன்களும் உள்ளன. அவற்றிலிருந்து (சிலவற்றைப்) புசிக்கிறீர்கள். info
التفاسير: |

external-link copy
6 : 16

وَلَكُمْ فِیْهَا جَمَالٌ حِیْنَ تُرِیْحُوْنَ وَحِیْنَ تَسْرَحُوْنَ ۪۟

நீங்கள் அவற்றை மாலையில் (இருப்பிடங்களுக்கு) ஓட்டி வரும் நேரத்திலும் (காலையில்) மேய்க்க ஓட்டிச் செல்லும் நேரத்திலும் அவற்றில் உங்களுக்கு அழகு(ம் மகிழ்ச்சியும்) இருக்கிறது. info
التفاسير: |