ការបកប្រែអត្ថន័យនៃគម្ពីរគួរអាន - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

លេខ​ទំព័រ:close

external-link copy
53 : 29

وَیَسْتَعْجِلُوْنَكَ بِالْعَذَابِ ؕ— وَلَوْلَاۤ اَجَلٌ مُّسَمًّی لَّجَآءَهُمُ الْعَذَابُ ؕ— وَلَیَاْتِیَنَّهُمْ بَغْتَةً وَّهُمْ لَا یَشْعُرُوْنَ ۟

அவர்கள் உம்மிடம் தண்டனையை அவசரமாகக் கேட்கின்றனர். குறிப்பிடப்பட்ட ஒரு தவணை இல்லை என்றால் நிச்சயமாக அவர்களுக்கு தண்டனை வந்தே இருக்கும். இன்னும் அவர்கள் உணராதவர்களாக இருக்க, அவர்களிடம் (அது) திடீர் என வரும். info
التفاسير: |

external-link copy
54 : 29

یَسْتَعْجِلُوْنَكَ بِالْعَذَابِ ؕ— وَاِنَّ جَهَنَّمَ لَمُحِیْطَةٌ بِالْكٰفِرِیْنَ ۟ۙ

அவர்கள் உம்மிடம் தண்டனையை அவசரமாகக் கேட்கின்றனர். நிச்சயமாக நரகம் நிராகரிப்பாளர்களை சூழ்ந்தே உள்ளது. info
التفاسير: |

external-link copy
55 : 29

یَوْمَ یَغْشٰىهُمُ الْعَذَابُ مِنْ فَوْقِهِمْ وَمِنْ تَحْتِ اَرْجُلِهِمْ وَیَقُوْلُ ذُوْقُوْا مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟

அவர்களுக்கு மேலிருந்தும் அவர்களின் கால்களுக்கு கீழே இருந்தும் தண்டனை அவர்களை மூடிக்கொள்கின்ற நாளில் (நரகம் அவர்களை சூழ்ந்து இருக்கும்). நீங்கள் செய்து கொண்டிருந்ததை நீங்கள் சுவையுங்கள் என்று (இறைவன்) கூறுவான். info
التفاسير: |

external-link copy
56 : 29

یٰعِبَادِیَ الَّذِیْنَ اٰمَنُوْۤا اِنَّ اَرْضِیْ وَاسِعَةٌ فَاِیَّایَ فَاعْبُدُوْنِ ۟

நம்பிக்கை கொண்ட என் அடியார்களே! நிச்சயமாக எனது பூமி விசாலமானது. ஆகவே, என்னையே நீங்கள் வணங்குங்கள்! info
التفاسير: |

external-link copy
57 : 29

كُلُّ نَفْسٍ ذَآىِٕقَةُ الْمَوْتِ ۫— ثُمَّ اِلَیْنَا تُرْجَعُوْنَ ۟

எல்லா ஆன்மாவும் மரணத்தை சுவைக்கக் கூடியதே! பிறகு, நம்மிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள். info
التفاسير: |

external-link copy
58 : 29

وَالَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَنُبَوِّئَنَّهُمْ مِّنَ الْجَنَّةِ غُرَفًا تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِیْنَ فِیْهَا ؕ— نِعْمَ اَجْرُ الْعٰمِلِیْنَ ۟ۗۖ

நம்பிக்கை கொண்டு நன்மைகளை செய்தவர்கள் -அவர்களுக்கு சொர்க்கத்தில் பல அறைகளை நாம் தயார்படுத்திக் கொடுப்போம். அவற்றின் கீழ் நதிகள் ஓடும். அவர்கள் அதில் நிரந்தரமானவர்கள். அமல் செய்தவர்களின் கூலி மிகச் சிறப்பானதே! info
التفاسير: |

external-link copy
59 : 29

الَّذِیْنَ صَبَرُوْا وَعَلٰی رَبِّهِمْ یَتَوَكَّلُوْنَ ۟

அவர்கள் பொறுமையாக இருந்தனர். இன்னும், தங்கள் இறைவன் மீதே (நம்பிக்கை வைத்து அவனையே) சார்ந்து இருந்தனர். info
التفاسير: |

external-link copy
60 : 29

وَكَاَیِّنْ مِّنْ دَآبَّةٍ لَّا تَحْمِلُ رِزْقَهَا ۖۗؗ— اَللّٰهُ یَرْزُقُهَا وَاِیَّاكُمْ ۖؗ— وَهُوَ السَّمِیْعُ الْعَلِیْمُ ۟

எத்தனையோ கால்நடைகள் தனது உணவை சுமப்பதில்லை. அல்லாஹ் தான் அவற்றுக்கும் உங்களுக்கும் உணவளிக்கிறான். அவன்தான் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன். info
التفاسير: |

external-link copy
61 : 29

وَلَىِٕنْ سَاَلْتَهُمْ مَّنْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ لَیَقُوْلُنَّ اللّٰهُ ۚ— فَاَنّٰی یُؤْفَكُوْنَ ۟

வானங்களையும் பூமியையும் யார் படைத்தான்? சூரியனையும் சந்திரனையும் (யார்) வசப்படுத்தினான் என்று அவர்களிடம் நீர் கேட்டால், நிச்சயமாக அவர்கள் “அல்லாஹ்தான்” என்று கூறுவார்கள். ஆக, அவர்கள் எப்படி (தெளிவான உண்மையிலிருந்து) திருப்பப்படுகிறார்கள். info
التفاسير: |

external-link copy
62 : 29

اَللّٰهُ یَبْسُطُ الرِّزْقَ لِمَنْ یَّشَآءُ مِنْ عِبَادِهٖ وَیَقْدِرُ لَهٗ ؕ— اِنَّ اللّٰهَ بِكُلِّ شَیْءٍ عَلِیْمٌ ۟

அல்லாஹ்தான் தனது அடியார்களில் தான் நாடியவருக்கு உணவை விசாலமாக்குகின்றான். இன்னும் (தான் நாடுகின்ற) அவருக்கு (அதை) சுருக்குகின்றான். நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவன். info
التفاسير: |

external-link copy
63 : 29

وَلَىِٕنْ سَاَلْتَهُمْ مَّنْ نَّزَّلَ مِنَ السَّمَآءِ مَآءً فَاَحْیَا بِهِ الْاَرْضَ مِنْ بَعْدِ مَوْتِهَا لَیَقُوْلُنَّ اللّٰهُ ؕ— قُلِ الْحَمْدُ لِلّٰهِ ؕ— بَلْ اَكْثَرُهُمْ لَا یَعْقِلُوْنَ ۟۠

வானத்திலிருந்து மழையை இறக்கி, அதன் மூலம் பூமியை அது இறந்து விட்ட பின்னர் உயிர்ப்பிப்பவன் யார் என்று நீர் அவர்களிடம் கேட்டால் நிச்சயமாக அவர்கள் “அல்லாஹ்” என்று கூறுவார்கள். (நபியே!) நீர் கூறுவீராக! “புகழ் எல்லாம் அல்லாஹ்விற்கே!” மாறாக, அவர்களில் அதிகமானவர்கள் சிந்தித்து புரியமாட்டார்கள். info
التفاسير: |