அல்கஸஸ்

external-link copy
1 : 28

طٰسٓمّٓ ۟

தா, சீம், மீம். info
التفاسير: |

external-link copy
2 : 28

تِلْكَ اٰیٰتُ الْكِتٰبِ الْمُبِیْنِ ۟

(உமக்கு இறக்கப்படும் வசனங்களாகிய) இவை, தெளிவான வேதத்தின் வசனங்களாகும். info
التفاسير: |

external-link copy
3 : 28

نَتْلُوْا عَلَیْكَ مِنْ نَّبَاِ مُوْسٰی وَفِرْعَوْنَ بِالْحَقِّ لِقَوْمٍ یُّؤْمِنُوْنَ ۟

மூஸா மற்றும் ஃபிர்அவ்னின் செய்தியை உண்மையாக உம்மீது நம்பிக்கை கொள்கின்ற மக்களுக்காக நாம் ஓதுகிறோம். info
التفاسير: |

external-link copy
4 : 28

اِنَّ فِرْعَوْنَ عَلَا فِی الْاَرْضِ وَجَعَلَ اَهْلَهَا شِیَعًا یَّسْتَضْعِفُ طَآىِٕفَةً مِّنْهُمْ یُذَبِّحُ اَبْنَآءَهُمْ وَیَسْتَحْیٖ نِسَآءَهُمْ ؕ— اِنَّهٗ كَانَ مِنَ الْمُفْسِدِیْنَ ۟

நிச்சயமாக ஃபிர்அவ்ன் (எகிப்து) பூமியில் (மக்களை) பலவந்தப்படுத்தினான். அங்குள்ளவர்களை பல பிரிவுகளாக ஆக்கினான். அவர்களில் ஒரு வகுப்பாரை பலவீனப்படுத்தி (அவர்களை துன்புறுத்தி)னான். அவர்களின் ஆண் பிள்ளைகளைக் கொன்றான். அவர்களின் பெண் (பிள்ளை)களை வாழவிட்டான். நிச்சயமாக அவன் கெட்டவர்களில் ஒருவனாக இருந்தான். info
التفاسير: |

external-link copy
5 : 28

وَنُرِیْدُ اَنْ نَّمُنَّ عَلَی الَّذِیْنَ اسْتُضْعِفُوْا فِی الْاَرْضِ وَنَجْعَلَهُمْ اَىِٕمَّةً وَّنَجْعَلَهُمُ الْوٰرِثِیْنَ ۟ۙ

இன்னும் பூமியில் பலவீனப்படுத்தப்பட்டவர்கள் மீது நாம் அருள்புரிவதற்கும் அவர்களை அரசர்களாக நாம் ஆக்குவதற்கும் அவர்களை (ஃபிர்அவ்னின்) வாரிசுகளாக (-ஃபிர்அவ்ன் அழிக்கப்பட்டதன் பின்னர் அவனுடைய பூமிக்கும் சொத்துகளுக்கும் சொந்தக்காரர்களாக) நாம் ஆக்குவதற்கும் நாடினோம். info
التفاسير: |