លេខ​ទំព័រ:close

external-link copy
22 : 28

وَلَمَّا تَوَجَّهَ تِلْقَآءَ مَدْیَنَ قَالَ عَسٰی رَبِّیْۤ اَنْ یَّهْدِیَنِیْ سَوَآءَ السَّبِیْلِ ۟

மேலும், அவர் மத்யன் நகரத்தின் பக்கம் முன்னோக்கிச் சென்றபோது கூறினார்: “என் இறைவன் எனக்கு நேரான பாதையை வழிகாட்டுவான்.” info
التفاسير: |

external-link copy
23 : 28

وَلَمَّا وَرَدَ مَآءَ مَدْیَنَ وَجَدَ عَلَیْهِ اُمَّةً مِّنَ النَّاسِ یَسْقُوْنَ ؗ۬— وَوَجَدَ مِنْ دُوْنِهِمُ امْرَاَتَیْنِ تَذُوْدٰنِ ۚ— قَالَ مَا خَطْبُكُمَا ؕ— قَالَتَا لَا نَسْقِیْ حَتّٰی یُصْدِرَ الرِّعَآءُ ٚ— وَاَبُوْنَا شَیْخٌ كَبِیْرٌ ۟

அவர் மத்யனுடைய நீர்நிலைக்கு வந்தபோது அதனருகில் மக்களில் (தங்களது கால்நடைகளுக்கு) நீர் புகட்டுகின்ற ஒரு கூட்டத்தைக் கண்டார். அவர்கள் அன்றி (தங்கள் ஆடுகளை மக்களை விட்டும் அங்கும் இங்கும் ஓடுவதை விட்டும்) தடுத்துக் கொண்டிருந்த இரண்டு பெண்களையும் கண்டார். அவர் கேட்டார்: “உங்கள் இருவரின் பிரச்சனை என்ன?” அவ்விருவரும் கூறினர்: நாங்கள் (எங்கள் கால்நடைகளுக்கு) நீர் புகட்ட மாட்டோம். மேய்ப்பவர்கள் (தங்களது கால்நடைகளை இங்கிருந்து) வெளியேற்றாதவரை. எங்கள் தந்தையோ வயதான பெரியவர் ஆவார். info
التفاسير: |

external-link copy
24 : 28

فَسَقٰی لَهُمَا ثُمَّ تَوَلّٰۤی اِلَی الظِّلِّ فَقَالَ رَبِّ اِنِّیْ لِمَاۤ اَنْزَلْتَ اِلَیَّ مِنْ خَیْرٍ فَقِیْرٌ ۟

ஆகவே, அவர் அவ்விருவருக்காக (அவ்விருவரின் கால்நடைகளுக்கு) நீர் புகட்டினார். பிறகு, நிழலின் பக்கம் (அதில் அமர்ந்து இளைப்பாறுவதற்காக) திரும்பிச் சென்றார். அவர் கூறினார்: என் இறைவா! நீ எனக்கு இறக்கிய நன்மையின் பக்கம் (-நல்ல உணவின் பக்கம்) நிச்சயமாக நான் தேவை உள்ளவன். (ஆகவே, என் பசிக்கு உணவளிப்பாயாக!) info
التفاسير: |

external-link copy
25 : 28

فَجَآءَتْهُ اِحْدٰىهُمَا تَمْشِیْ عَلَی اسْتِحْیَآءٍ ؗ— قَالَتْ اِنَّ اَبِیْ یَدْعُوْكَ لِیَجْزِیَكَ اَجْرَ مَا سَقَیْتَ لَنَا ؕ— فَلَمَّا جَآءَهٗ وَقَصَّ عَلَیْهِ الْقَصَصَ ۙ— قَالَ لَا تَخَفْ ۫— نَجَوْتَ مِنَ الْقَوْمِ الظّٰلِمِیْنَ ۟

அவ்விருவரில் ஒருத்தி (தன் முகத்தை மறைத்தவளாக) வெட்கத்துடன் நடந்தவளாக வந்து கூறினாள்: நிச்சயமாக என் தந்தை உம்மை அழைக்கிறார் நீ எங்களுக்காக நீர் புகட்டியதற்குரிய கூலியை உமக்கு தருவதற்காக. அவர் அவரிடம் வந்து, (தனது) வரலாற்றை விவரித்த போது அவர் (-அப்பெண்ணின் தந்தை) கூறினார்: பயப்படாதே! அநியாயக்கார மக்களிடமிருந்து நீ தப்பித்து விட்டாய். info
التفاسير: |

external-link copy
26 : 28

قَالَتْ اِحْدٰىهُمَا یٰۤاَبَتِ اسْتَاْجِرْهُ ؗ— اِنَّ خَیْرَ مَنِ اسْتَاْجَرْتَ الْقَوِیُّ الْاَمِیْنُ ۟

அவ்விருவரில் ஒருத்தி கூறினாள்: என் தந்தையே! அவரை பணியில் அமர்த்துவீராக! நீர் பணியில் அமர்த்தியவர்களில் சிறந்தவர் (இந்த) நம்பிக்கையாளரான பலசாலி ஆவார். info
التفاسير: |

external-link copy
27 : 28

قَالَ اِنِّیْۤ اُرِیْدُ اَنْ اُنْكِحَكَ اِحْدَی ابْنَتَیَّ هٰتَیْنِ عَلٰۤی اَنْ تَاْجُرَنِیْ ثَمٰنِیَ حِجَجٍ ۚ— فَاِنْ اَتْمَمْتَ عَشْرًا فَمِنْ عِنْدِكَ ۚ— وَمَاۤ اُرِیْدُ اَنْ اَشُقَّ عَلَیْكَ ؕ— سَتَجِدُنِیْۤ اِنْ شَآءَ اللّٰهُ مِنَ الصّٰلِحِیْنَ ۟

அவர் கூறினார்: நான் எனது இந்த இரண்டு பெண்பிள்ளைகளில் ஒருத்தியை உனக்கு மணமுடித்துத்தர விரும்புகிறேன். நீர் எனக்கு எட்டு ஆண்டுகள் (என் கால்நடைகளை மேய்ப்பதை) எனக்கு கூலியாக (-மஹராக)த் தரவேண்டும் என்ற நிபந்தனையின் மீது. நீ (எட்டுக்குப் பதிலாக) பத்து ஆண்டுகளை பூர்த்திசெய்தால் அது உன் புறத்திலிருந்து (நீ செய்யும் உதவியாகும்). நான் உன்மீது சிரமம் ஏற்படுத்த விரும்பவில்லை. அல்லாஹ் நாடினால் என்னை நல்லோரில் நீ காண்பாய். info
التفاسير: |

external-link copy
28 : 28

قَالَ ذٰلِكَ بَیْنِیْ وَبَیْنَكَ ؕ— اَیَّمَا الْاَجَلَیْنِ قَضَیْتُ فَلَا عُدْوَانَ عَلَیَّ ؕ— وَاللّٰهُ عَلٰی مَا نَقُوْلُ وَكِیْلٌ ۟۠

அவர் (-மூஸா) கூறினார்: இது (நாம் செய்த இந்த ஒப்பந்தம்) எனக்கு மத்தியிலும் உமக்கு மத்தியிலும் உள்ளதாகும். (இருவரும் அதை சரியாக நிறைவேற்றுவது கடமையாகும்.) இரண்டு தவணையில் எதை நான் நிறைவேற்றினாலும் என் மீது வரம்பு மீறுதல் கூடாது. (அதைவிட அதிகம் என்னிடம் கேட்கக்கூடாது.) நாம் கூறுவதற்கு அல்லாஹ் பொறுப்பாளன் (சாட்சியாளன்) ஆவான். info
التفاسير: |