លេខ​ទំព័រ:close

external-link copy
60 : 28

وَمَاۤ اُوْتِیْتُمْ مِّنْ شَیْءٍ فَمَتَاعُ الْحَیٰوةِ الدُّنْیَا وَزِیْنَتُهَا ۚ— وَمَا عِنْدَ اللّٰهِ خَیْرٌ وَّاَبْقٰی ؕ— اَفَلَا تَعْقِلُوْنَ ۟۠

நீங்கள் (உலக) பொருளில் எது கொடுக்கப்பட்டீர்களோ அது உலக வாழ்க்கையின் இன்பமும் அதன் அலங்காரமும் ஆகும். அல்லாஹ்விடம் உள்ளதுதான் சிறந்ததும் நிலையானதும் ஆகும். நீங்கள் சிந்தித்து புரியமாட்டீர்களா? info
التفاسير: |

external-link copy
61 : 28

اَفَمَنْ وَّعَدْنٰهُ وَعْدًا حَسَنًا فَهُوَ لَاقِیْهِ كَمَنْ مَّتَّعْنٰهُ مَتَاعَ الْحَیٰوةِ الدُّنْیَا ثُمَّ هُوَ یَوْمَ الْقِیٰمَةِ مِنَ الْمُحْضَرِیْنَ ۟

எவருக்கு நாம் அழகிய வாக்கை வாக்களித்து அவர் அதை (மறுமையில்) சந்திப்பாரோ அவர் இவ்வுலக வாழ்க்கையின் இன்பத்தைக் கொண்டு நாம் இன்பமளித்தவர் போன்று ஆவாரா? பிறகு இவர் (-உலக இன்பம் பெற்ற நிராகரிப்பாளர்) மறுமை நாளில் (வேதனைக்கும் தண்டனைக்கும்) ஆஜர்படுத்தப்பட்டவர்களில் இருப்பார். info
التفاسير: |

external-link copy
62 : 28

وَیَوْمَ یُنَادِیْهِمْ فَیَقُوْلُ اَیْنَ شُرَكَآءِیَ الَّذِیْنَ كُنْتُمْ تَزْعُمُوْنَ ۟

இன்னும் அவன் அவர்களை அழைக்கும் நாளில் நீங்கள் சொல்லிக் கொண்டிருந்த எனது இணைகள் எங்கே? என்று அவன் கேட்பான். info
التفاسير: |

external-link copy
63 : 28

قَالَ الَّذِیْنَ حَقَّ عَلَیْهِمُ الْقَوْلُ رَبَّنَا هٰۤؤُلَآءِ الَّذِیْنَ اَغْوَیْنَا ۚ— اَغْوَیْنٰهُمْ كَمَا غَوَیْنَا ۚ— تَبَرَّاْنَاۤ اِلَیْكَ ؗ— مَا كَانُوْۤا اِیَّانَا یَعْبُدُوْنَ ۟

(அல்லாஹ்வின் சாபத்தின்) வாக்கு கடமையாகிவிட்டவர்கள் (ஷைத்தான்கள்) கூறுவார்கள்: எங்கள் இறைவா! நாங்கள் வழிகெடுத்தவர்கள் இவர்கள்தான். நாங்கள் வழிகெட்டது போன்றே அவர்களையும் நாங்கள் வழிகெடுத்தோம். (இப்போது அவர்களை விட்டும்) உன் பக்கம் நாங்கள் விலகி விட்டோம். அவர்கள் எங்களை வணங்கிக் கொண்டிருக்கவில்லை. info
التفاسير: |

external-link copy
64 : 28

وَقِیْلَ ادْعُوْا شُرَكَآءَكُمْ فَدَعَوْهُمْ فَلَمْ یَسْتَجِیْبُوْا لَهُمْ وَرَاَوُا الْعَذَابَ ۚ— لَوْ اَنَّهُمْ كَانُوْا یَهْتَدُوْنَ ۟

இன்னும் (அவர்களுக்கு) சொல்லப்படும்: (நீங்கள் அல்லாஹ்வுக்கு இணையாக்கிய) “உங்கள் தெய்வங்களை அழையுங்கள்” என்று. அவர்கள் அவற்றை அழைப்பார்கள். ஆனால், அவர்களுக்கு அவை பதில் தரமாட்டா. இன்னும், தண்டனையை (கண்கூடாக)க் காண்பார்கள். நிச்சயமாக தாங்கள் நேர்வழி பெற்றவர்களாக இருந்திருக்க வேண்டுமே! (என்று ஆசைப்படுவார்கள்!) info
التفاسير: |

external-link copy
65 : 28

وَیَوْمَ یُنَادِیْهِمْ فَیَقُوْلُ مَاذَاۤ اَجَبْتُمُ الْمُرْسَلِیْنَ ۟

இன்னும், அவன் அவர்களை அழைக்கின்ற நாளில், “நீங்கள் தூதர்களுக்கு என்ன பதிலளித்தீர்கள்” என்று அவன் கேட்பான். info
التفاسير: |

external-link copy
66 : 28

فَعَمِیَتْ عَلَیْهِمُ الْاَنْۢبَآءُ یَوْمَىِٕذٍ فَهُمْ لَا یَتَسَآءَلُوْنَ ۟

அந்நாளில் அவர்கள் மீது செய்திகள் மறைத்து விடும். ஆகவே, அவர்கள் (தங்களுக்குள் ஒருவர் மற்றவரிடம் எதையும்) கேட்டுக்கொள்ள மாட்டார்கள். info
التفاسير: |

external-link copy
67 : 28

فَاَمَّا مَنْ تَابَ وَاٰمَنَ وَعَمِلَ صَالِحًا فَعَسٰۤی اَنْ یَّكُوْنَ مِنَ الْمُفْلِحِیْنَ ۟

ஆக, யார் திருந்தி, நம்பிக்கைகொண்டு, நற்செயலை செய்வாரோ, அவர் வெற்றியாளர்களில் ஆகக்கூடும். info
التفاسير: |

external-link copy
68 : 28

وَرَبُّكَ یَخْلُقُ مَا یَشَآءُ وَیَخْتَارُ ؕ— مَا كَانَ لَهُمُ الْخِیَرَةُ ؕ— سُبْحٰنَ اللّٰهِ وَتَعٰلٰی عَمَّا یُشْرِكُوْنَ ۟

உமது இறைவன் தான் நாடுவதை படைக்கிறான். இன்னும் தேர்ந்தெடுக்கிறான். அவர்களுக்கு (இதில் எந்த) விருப்பமும் இல்லை. அல்லாஹ் மகா பரிசுத்தமானவன். அவர்கள் இணைவைப்பவற்றை விட்டு மிக உயர்ந்தவன். info
التفاسير: |

external-link copy
69 : 28

وَرَبُّكَ یَعْلَمُ مَا تُكِنُّ صُدُوْرُهُمْ وَمَا یُعْلِنُوْنَ ۟

அவர்களது நெஞ்சங்கள் மறைக்கின்றவற்றையும் அவர்கள் பகிரங்கப்படுத்துபவற்றையும் உமது இறைவன் நன்கறிவான். info
التفاسير: |

external-link copy
70 : 28

وَهُوَ اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ؕ— لَهُ الْحَمْدُ فِی الْاُوْلٰی وَالْاٰخِرَةِ ؗ— وَلَهُ الْحُكْمُ وَاِلَیْهِ تُرْجَعُوْنَ ۟

அவன்தான் அல்லாஹ். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் அறவே இல்லை. இவ்வுலகிலும் மறுமையிலும் அவனுக்கே புகழ் அனைத்தும் உரியன. தீர்ப்பளிப்பது அவனுக்கே (உரிமையானது)! அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள். info
التفاسير: |