លេខ​ទំព័រ:close

external-link copy
85 : 28

اِنَّ الَّذِیْ فَرَضَ عَلَیْكَ الْقُرْاٰنَ لَرَآدُّكَ اِلٰی مَعَادٍ ؕ— قُلْ رَّبِّیْۤ اَعْلَمُ مَنْ جَآءَ بِالْهُدٰی وَمَنْ هُوَ فِیْ ضَلٰلٍ مُّبِیْنٍ ۟

நிச்சயமாக உம்மீது குர்ஆனை இறக்கியவன் உம்மை (உமது) வழமைக்கு (இயல்பான மரணத்திற்கு அல்லது நீர் பிறந்து வளர்ந்த மக்காவிற்கு) திரும்பக் கொண்டு வருவான். (நபியே!) கூறுவீராக! “நேர்வழியைக் கொண்டு வந்தவரையும் தெளிவான வழிகேட்டில் இருப்பவரையும் என் இறைவன் மிக அறிந்தவன்.” info
التفاسير: |

external-link copy
86 : 28

وَمَا كُنْتَ تَرْجُوْۤا اَنْ یُّلْقٰۤی اِلَیْكَ الْكِتٰبُ اِلَّا رَحْمَةً مِّنْ رَّبِّكَ فَلَا تَكُوْنَنَّ ظَهِیْرًا لِّلْكٰفِرِیْنَ ۟ؗ

(நபியே!) இந்த வேதம் உமக்கு இறக்கப்படுவதை நீர் எதிர்பார்த்திருக்கவில்லை, என்றாலும் உமது இறைவனின் கருணையினால் தான் (உமக்கு இது அருளப்பட்டது). ஆகவே, நிராகரிப்பாளர்களுக்கு உதவியாளராக அறவே நீர் ஆகிவிடாதீர். info
التفاسير: |

external-link copy
87 : 28

وَلَا یَصُدُّنَّكَ عَنْ اٰیٰتِ اللّٰهِ بَعْدَ اِذْ اُنْزِلَتْ اِلَیْكَ وَادْعُ اِلٰی رَبِّكَ وَلَا تَكُوْنَنَّ مِنَ الْمُشْرِكِیْنَ ۟ۚ

அல்லாஹ்வின் வசனங்களை (பின்பற்றுவதையும் அவற்றை மக்களுக்கு எடுத்துச் சொல்வதையும்) விட்டு -அவை உமக்கு இறக்கப்பட்டதன் பின்னர் உம்மை அவர்கள் (-அந்த நிராகரிப்பாளர்கள்) திருப்பி விடவேண்டாம். உமது இறைவன் பக்கம் (உலக மக்களை) அழைப்பீராக! இணைவைப்பவர்களில் நீர் ஒருபோதும் ஆகிவிடாதீர். info
التفاسير: |

external-link copy
88 : 28

وَلَا تَدْعُ مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَ ۘ— لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ۫— كُلُّ شَیْءٍ هَالِكٌ اِلَّا وَجْهَهٗ ؕ— لَهُ الْحُكْمُ وَاِلَیْهِ تُرْجَعُوْنَ ۟۠

அல்லாஹ்வுடன் வேறு ஒரு கடவுளை அழைத்து விடாதீர்! (வணங்கி விடாதீர்!) அவனைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு ஒரு கடவுள் இல்லவே இல்லை. எல்லாப் பொருள்களும் அழியக்கூடியவையே அவனது முகத்தைத் தவிர (-அவனைத் தவிர). அதிகாரம் அவனுக்கே உரியது. அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள். info
التفاسير: |