លេខ​ទំព័រ:close

external-link copy
51 : 28

وَلَقَدْ وَصَّلْنَا لَهُمُ الْقَوْلَ لَعَلَّهُمْ یَتَذَكَّرُوْنَ ۟ؕ

திட்டவட்டமாக அவர்களுக்கு (-குறைஷிகளுக்கும் யூதர்களுக்கும் இவர்களுக்கு முன்னர் நிராகரித்தவர்களுக்கு இறக்கப்பட்ட தண்டனைகள் பற்றிய) செய்தியை நாம் சேர்ப்பித்தோம், அவர்கள் நல்லுணர்வு பெறுவதற்காக. info
التفاسير: |

external-link copy
52 : 28

اَلَّذِیْنَ اٰتَیْنٰهُمُ الْكِتٰبَ مِنْ قَبْلِهٖ هُمْ بِهٖ یُؤْمِنُوْنَ ۟

இதற்கு முன்னர் (-இந்த குர்ஆனுக்கு முன்னர்) நாம் வேதத்தை கொடுத்தவர்கள் (-அவர்களில் உள்ள உண்மை விரும்பிகள்) இதையும் (இந்த குர்ஆனையும் அது கொடுக்கப்பட்ட தூதரையும்) நம்பிக்கை கொள்வார்கள். info
التفاسير: |

external-link copy
53 : 28

وَاِذَا یُتْلٰی عَلَیْهِمْ قَالُوْۤا اٰمَنَّا بِهٖۤ اِنَّهُ الْحَقُّ مِنْ رَّبِّنَاۤ اِنَّا كُنَّا مِنْ قَبْلِهٖ مُسْلِمِیْنَ ۟

அவர்கள் முன் (இந்த வேதம்) ஓதப்பட்டால் அவர்கள் கூறுவார்கள்: நாங்கள் இதை நம்பிக்கை கொண்டோம். நிச்சயமாக இது எங்கள் இறைவனிடமிருந்து வந்த உண்மையான வேதம்தான். நிச்சயமாக நாங்கள் இதற்கு முன்னரும் (எங்கள் வேதத்தில் கூறப்பட்ட பிரகாரம் இறுதி நபியையும் இறுதி வேதத்தையும் நம்பிக்கை கொண்ட) முஸ்லிம்களாகவே இருந்தோம். info
التفاسير: |

external-link copy
54 : 28

اُولٰٓىِٕكَ یُؤْتَوْنَ اَجْرَهُمْ مَّرَّتَیْنِ بِمَا صَبَرُوْا وَیَدْرَءُوْنَ بِالْحَسَنَةِ السَّیِّئَةَ وَمِمَّا رَزَقْنٰهُمْ یُنْفِقُوْنَ ۟

அவர்கள் தங்கள் கூலியை இருமுறை வழங்கப்படுவார்கள் அவர்கள் (முந்திய வேதத்தை பின்பற்றி நடந்ததிலும் இந்தத் தூதரை பின்பற்றியதிலும்) பொறுமையாக (உறுதியாக) இருந்ததால். அவர்கள் நன்மையைக் கொண்டு தீமையைத் தடுப்பார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து தர்மம் செய்வார்கள். info
التفاسير: |

external-link copy
55 : 28

وَاِذَا سَمِعُوا اللَّغْوَ اَعْرَضُوْا عَنْهُ وَقَالُوْا لَنَاۤ اَعْمَالُنَا وَلَكُمْ اَعْمَالُكُمْ ؗ— سَلٰمٌ عَلَیْكُمْ ؗ— لَا نَبْتَغِی الْجٰهِلِیْنَ ۟

அவர்கள் வீணானவற்றை செவிமடுத்தால் அதை புறக்கணித்து விடுவார்கள். எங்களுக்கு எங்கள் செயல்கள் (உடைய கூலி கிடைக்கும்). உங்களுக்கு உங்கள் செயல்கள் (உடைய கூலி கிடைக்கும்). உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும். (நாங்கள் உங்களுக்கு தொந்தரவு தரமாட்டோம்.) அறியாதவர்களிடம் (பேசுவதையும் தர்க்கிப்பதையும்) நாங்கள் விரும்ப மாட்டோம். (எனவே, உங்களோடு தர்க்கம் செய்யமாட்டோம்) என்று கூறுவார்கள். info
التفاسير: |

external-link copy
56 : 28

اِنَّكَ لَا تَهْدِیْ مَنْ اَحْبَبْتَ وَلٰكِنَّ اللّٰهَ یَهْدِیْ مَنْ یَّشَآءُ ۚ— وَهُوَ اَعْلَمُ بِالْمُهْتَدِیْنَ ۟

நிச்சயமாக நீர் விரும்பியவரை நேர்வழி செலுத்த மாட்டீர். (அது உம்மால் முடியாது.) என்றாலும் அல்லாஹ் தான் நாடியவரை நேர்வழி செலுத்துகின்றான். அவன்தான் நேர்வழி செல்பவர்களை மிக அறிந்தவன். info
التفاسير: |

external-link copy
57 : 28

وَقَالُوْۤا اِنْ نَّتَّبِعِ الْهُدٰی مَعَكَ نُتَخَطَّفْ مِنْ اَرْضِنَا ؕ— اَوَلَمْ نُمَكِّنْ لَّهُمْ حَرَمًا اٰمِنًا یُّجْبٰۤی اِلَیْهِ ثَمَرٰتُ كُلِّ شَیْءٍ رِّزْقًا مِّنْ لَّدُنَّا وَلٰكِنَّ اَكْثَرَهُمْ لَا یَعْلَمُوْنَ ۟

அவர்கள் கூறினர்: “நாம் உம்முடன் நேர்வழியை பின்பற்றினால் நாங்கள் எங்கள் பூமியிலிருந்து (உடனே) வெளியேற்றப்பட்டிருப்போம்.” (அவர்கள் சொல்வது பொய்.) நாம் அவர்களுக்கு பாதுகாப்பான புனித தலத்தை ஸ்திரப்படுத்தித் தரவில்லையா? எல்லா வகையான கனிகளும் நம் புறத்திலிருந்து உணவாக அங்கு கொண்டு வரப்படுகின்றன. என்றாலும் அவர்களில் அதிகமானவர்கள் அறியமாட்டார்கள். info
التفاسير: |

external-link copy
58 : 28

وَكَمْ اَهْلَكْنَا مِنْ قَرْیَةٍ بَطِرَتْ مَعِیْشَتَهَا ۚ— فَتِلْكَ مَسٰكِنُهُمْ لَمْ تُسْكَنْ مِّنْ بَعْدِهِمْ اِلَّا قَلِیْلًا ؕ— وَكُنَّا نَحْنُ الْوٰرِثِیْنَ ۟

எத்தனையோ ஊர்களை நாம் அழித்தோம். அவர்கள் தங்களது வாழ்க்கை வசதியால் வரம்பு மீறி நிராகரித்தனர். இதோ அவர்களது இல்லங்கள் அவர்களுக்கு பின்னர் குறைவாகவே தவிர (பிற மக்களால்) வசிக்கப்படவில்லை. நாமே (அனைத்திற்கும்) வாரிசுகளாக (சொந்தக்காரர்களாக) இருக்கின்றோம். info
التفاسير: |

external-link copy
59 : 28

وَمَا كَانَ رَبُّكَ مُهْلِكَ الْقُرٰی حَتّٰی یَبْعَثَ فِیْۤ اُمِّهَا رَسُوْلًا یَّتْلُوْا عَلَیْهِمْ اٰیٰتِنَا ۚ— وَمَا كُنَّا مُهْلِكِی الْقُرٰۤی اِلَّا وَاَهْلُهَا ظٰلِمُوْنَ ۟

உமது இறைவன் (மக்காவை சுற்றி உள்ள) ஊர்களை அழிப்பவனாக இல்லை. அதனுடைய தலைநகரில் (மக்காவில்) ஒரு தூதரை (-உம்மை) அனுப்புகின்ற வரை. அவர் அவர்கள் முன் நமது வசனங்களை ஓதுவார். (எந்த) ஊர்களை(யும்) நாம் அழிப்பவர்களாக இல்லை அதன் வாசிகள் அநியாயக்காரர்களாக இருந்தே தவிர. info
التفاسير: |