លេខ​ទំព័រ:close

external-link copy
33 : 30

وَاِذَا مَسَّ النَّاسَ ضُرٌّ دَعَوْا رَبَّهُمْ مُّنِیْبِیْنَ اِلَیْهِ ثُمَّ اِذَاۤ اَذَاقَهُمْ مِّنْهُ رَحْمَةً اِذَا فَرِیْقٌ مِّنْهُمْ بِرَبِّهِمْ یُشْرِكُوْنَ ۟ۙ

மக்களுக்கு ஒரு தீங்கு நேர்ந்தால் தங்கள் இறைவனை -அவன் பக்கம் முற்றிலும் திரும்பியவர்களாக- அழைக்கின்றனர். பிறகு, அவன் தன் புறத்திலிருந்து அவர்களுக்கு (தனது) அருளை சுவைக்க வைத்தால் அப்போது அவர்களில் ஒரு சாரார் தங்கள் இறைவனுக்கு இணைவைக்கின்றனர். info
التفاسير: |

external-link copy
34 : 30

لِیَكْفُرُوْا بِمَاۤ اٰتَیْنٰهُمْ ؕ— فَتَمَتَّعُوْا ۥ— فَسَوْفَ تَعْلَمُوْنَ ۟

நாம் அவர்களுக்கு கொடுத்தவற்றை (-நமது அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தாமல்) நிராகரிப்பதற்காக (இவ்வாறு இணைவைக்கின்றனர்). (இணைவைப்போரே! சிறிது காலம்) சுகம் அனுபவியுங்கள்! (விரைவில் உங்கள் இறைவனிடம் நீங்கள் வரும்போது உங்கள் முடிவை) நீங்கள் அறிவீர்கள். info
التفاسير: |

external-link copy
35 : 30

اَمْ اَنْزَلْنَا عَلَیْهِمْ سُلْطٰنًا فَهُوَ یَتَكَلَّمُ بِمَا كَانُوْا بِهٖ یُشْرِكُوْنَ ۟

(அவர்களின் இணைவைப்புக்கு) அவர்கள் மீது நாம் ஓர் ஆதாரத்தை இறக்கினோமா? அவர்கள் எதை அவனுக்கு இணைவைப்பவர்களாக இருந்தார்களோ அதைப் பற்றி (அது சரி என்று) அது (-அந்த ஆதாரம்) பேசுகிறதா? info
التفاسير: |

external-link copy
36 : 30

وَاِذَاۤ اَذَقْنَا النَّاسَ رَحْمَةً فَرِحُوْا بِهَا ؕ— وَاِنْ تُصِبْهُمْ سَیِّئَةٌ بِمَا قَدَّمَتْ اَیْدِیْهِمْ اِذَا هُمْ یَقْنَطُوْنَ ۟

மக்களுக்கு நாம் (நமது) அருளை சுவைக்க வைத்தால் அவர்கள் அதனால் மகிழ்ச்சியடைகின்றனர். அவர்களின் கரங்கள் முற்படுத்தியவற்றினால் அவர்களை ஒரு தீமை அடைந்தால் அப்போது அவர்கள் நிராசையடைந்து விடுகின்றனர். info
التفاسير: |

external-link copy
37 : 30

اَوَلَمْ یَرَوْا اَنَّ اللّٰهَ یَبْسُطُ الرِّزْقَ لِمَنْ یَّشَآءُ وَیَقْدِرُ ؕ— اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّقَوْمٍ یُّؤْمِنُوْنَ ۟

இவர்கள் பார்க்க வேண்டாமா? நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவருக்கு உணவை விசாலமாக்குகின்றான். இன்னும், (தான் நாடியவருக்கு) சுருக்குகின்றான். நிச்சயமாக நம்பிக்கை கொள்கின்ற மக்களுக்கு இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. info
التفاسير: |

external-link copy
38 : 30

فَاٰتِ ذَا الْقُرْبٰى حَقَّهٗ وَالْمِسْكِیْنَ وَابْنَ السَّبِیْلِ ؕ— ذٰلِكَ خَیْرٌ لِّلَّذِیْنَ یُرِیْدُوْنَ وَجْهَ اللّٰهِ ؗ— وَاُولٰٓىِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ ۟

ஆகவே, உறவினருக்கு அவருடைய உரிமையையும் வறியவருக்கும் வழிப்போக்கருக்கும் (அவரவர்களுடைய உரிமைகளையும்) கொடுப்பீராக! அல்லாஹ்வின் முகத்தை நாடுவோருக்கு இதுதான் சிறந்ததாகும். இவர்கள்தான் வெற்றியாளர்கள். info
التفاسير: |

external-link copy
39 : 30

وَمَاۤ اٰتَیْتُمْ مِّنْ رِّبًا لِّیَرْبُوَاۡ فِیْۤ اَمْوَالِ النَّاسِ فَلَا یَرْبُوْا عِنْدَ اللّٰهِ ۚ— وَمَاۤ اٰتَیْتُمْ مِّنْ زَكٰوةٍ تُرِیْدُوْنَ وَجْهَ اللّٰهِ فَاُولٰٓىِٕكَ هُمُ الْمُضْعِفُوْنَ ۟

மக்களின் செல்வங்களில் வளர்ச்சி காணுவதற்காக (பிரதிபலனை எதிர்பார்த்து) அன்பளிப்புகளிலிருந்து எதை நீங்கள் கொடுத்தீர்களோ அது அல்லாஹ்விடம் வளர்ச்சி காணாது. அல்லாஹ்வின் முகத்தை நீங்கள் நாடியவர்களாக தர்மங்களிலிருந்து எதை நீங்கள் கொடுத்தீர்களோ (அதுதான் வளர்ச்சி அடையும். அப்படி கொடுக்கின்ற) அவர்கள்தான் (தங்கள் செல்வங்களையும் நன்மைகளையும்) பன்மடங்காக்கிக் கொள்பவர்கள். info
التفاسير: |

external-link copy
40 : 30

اَللّٰهُ الَّذِیْ خَلَقَكُمْ ثُمَّ رَزَقَكُمْ ثُمَّ یُمِیْتُكُمْ ثُمَّ یُحْیِیْكُمْ ؕ— هَلْ مِنْ شُرَكَآىِٕكُمْ مَّنْ یَّفْعَلُ مِنْ ذٰلِكُمْ مِّنْ شَیْءٍ ؕ— سُبْحٰنَهٗ وَتَعٰلٰى عَمَّا یُشْرِكُوْنَ ۟۠

அல்லாஹ்தான் உங்களைப் படைத்தான். பிறகு, அவன் உங்களுக்கு உணவளித்தான். பிறகு, அவன் உங்களை மரணிக்க வைப்பான். பிறகு, அவன் உங்களை உயிர்ப்பிப்பான். இவற்றில் (-இந்தக் காரியங்களில்) எதையும் செய்கின்றவர் உங்கள் தெய்வங்களில் இருக்கின்றாரா? அவன் (-அல்லாஹ்) மிக பரிசுத்தமானவன். அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் அவன் மிக உயர்ந்தவன். info
التفاسير: |

external-link copy
41 : 30

ظَهَرَ الْفَسَادُ فِی الْبَرِّ وَالْبَحْرِ بِمَا كَسَبَتْ اَیْدِی النَّاسِ لِیُذِیْقَهُمْ بَعْضَ الَّذِیْ عَمِلُوْا لَعَلَّهُمْ یَرْجِعُوْنَ ۟

தரையிலும் கடலிலும் (நகரங்களிலும் கிராமங்களிலும்) பாவம் பெருகி விட்டது. மக்களின் கரங்கள் செய்தவற்றினால் (அநியாயங்கள் அதிகரித்து விட்டன). இறுதியாக, அவர்கள் செய்தவற்றின் (-அவர்களின் பாவங்களின்) சிலவற்றை (-அதற்குரிய தண்டனையை) அவர்களுக்கு சுவைக்க வைப்போம்- அவர்கள் (உண்மையின் பக்கம்) திரும்புவதற்காக. info
التفاسير: |