លេខ​ទំព័រ:close

external-link copy
42 : 30

قُلْ سِیْرُوْا فِی الْاَرْضِ فَانْظُرُوْا كَیْفَ كَانَ عَاقِبَةُ الَّذِیْنَ مِنْ قَبْلُ ؕ— كَانَ اَكْثَرُهُمْ مُّشْرِكِیْنَ ۟

(நபியே! இணை வைப்பவர்களை நோக்கி) கூறுவீராக! பூமியில் பயணியுங்கள். (உங்களுக்கு) முன்னிருந்தவர்களுடைய முடிவு எப்படி இருந்தது என்று பாருங்கள். அவர்களில் அதிகமானவர்கள் இணை வைப்பவர்களாக இருந்தனர். info
التفاسير: |

external-link copy
43 : 30

فَاَقِمْ وَجْهَكَ لِلدِّیْنِ الْقَیِّمِ مِنْ قَبْلِ اَنْ یَّاْتِیَ یَوْمٌ لَّا مَرَدَّ لَهٗ مِنَ اللّٰهِ یَوْمَىِٕذٍ یَّصَّدَّعُوْنَ ۟

ஆக, (நபியே!) அதை தடுக்க முடியாத ஒரு நாள் அல்லாஹ்விடமிருந்து வருவதற்கு முன்னர் உமது முகத்தை நேரான மார்க்கத்தின் பக்கம் நிறுத்துவீராக! அந்நாளில் அவர்கள் (-மக்கள் இரண்டு பிரிவுகளாக) பிரிந்து விடுவார்கள். info
التفاسير: |

external-link copy
44 : 30

مَنْ كَفَرَ فَعَلَیْهِ كُفْرُهٗ ۚ— وَمَنْ عَمِلَ صَالِحًا فَلِاَنْفُسِهِمْ یَمْهَدُوْنَ ۟ۙ

யார் நிராகரிப்பாரோ அவருடைய நிராகரிப்பு அவர் மீதுதான் கேடாக முடியும். எவர்கள் நன்மை செய்வார்களோ அவர்கள் தங்களுக்குத்தான் (சொர்க்கத்தில் சொகுசான படுக்கைகளை) விரித்துக் கொள்கிறார்கள். info
التفاسير: |

external-link copy
45 : 30

لِیَجْزِیَ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصَّلِحٰتِ مِنْ فَضْلِهٖ ؕ— اِنَّهٗ لَا یُحِبُّ الْكٰفِرِیْنَ ۟

இறுதியாக, நம்பிக்கை கொண்டு நன்மைகளை செய்தவர்களுக்கு அவன் தன் அருளிலிருந்து கூலி கொடுப்பான். (மேலும், பாவிகளுக்கு தண்டனை கொடுப்பான்). நிச்சயமாக அவன் நிராகரிப்பாளர்களை நேசிக்க மாட்டான். info
التفاسير: |

external-link copy
46 : 30

وَمِنْ اٰیٰتِهٖۤ اَنْ یُّرْسِلَ الرِّیٰحَ مُبَشِّرٰتٍ وَّلِیُذِیْقَكُمْ مِّنْ رَّحْمَتِهٖ وَلِتَجْرِیَ الْفُلْكُ بِاَمْرِهٖ وَلِتَبْتَغُوْا مِنْ فَضْلِهٖ وَلَعَلَّكُمْ تَشْكُرُوْنَ ۟

இன்னும், காற்றுகளை (-மழையை) நற்செய்தி தரக்கூடியவையாக அவன் அனுப்புவதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதுதான். இன்னும் தனது அருளை (-மழையை) உங்களுக்கு சுவைக்க வைப்பதற்கும் கப்பல்கள் அவனுடைய கட்டளையின்படி (கடலில்) செல்வதற்கும் அவனது அருளிலிருந்து நீங்கள் (-வாழ்வாதாரத்தை) தேடுவதற்கும் நீங்கள் நன்றி செலுத்துவதற்கும் (அவன் உங்களுக்கு காற்றுகளை அனுப்புகின்றான்). info
التفاسير: |

external-link copy
47 : 30

وَلَقَدْ اَرْسَلْنَا مِنْ قَبْلِكَ رُسُلًا اِلٰى قَوْمِهِمْ فَجَآءُوْهُمْ بِالْبَیِّنٰتِ فَانْتَقَمْنَا مِنَ الَّذِیْنَ اَجْرَمُوْا ؕ— وَكَانَ حَقًّا عَلَیْنَا نَصْرُ الْمُؤْمِنِیْنَ ۟

திட்டவட்டமாக உமக்கு முன்னர் பல தூதர்களை அவர்களுடைய மக்களுக்கு நாம் அனுப்பினோம். அவர்களிடம் அவர்கள் தெளிவான அத்தாட்சிகளுடன் வந்தனர். ஆகவே, குற்றமிழைத்தவர்களிடம் நாம் பழிவாங்கினோம். (தூதர்களை நம்பிக்கை கொண்டவர்களுக்கு நாம் உதவினோம்.) நம்பிக்கை கொண்டவர்களுக்கு உதவுவது நம்மீது கடமையாக இருக்கிறது. info
التفاسير: |

external-link copy
48 : 30

اَللّٰهُ الَّذِیْ یُرْسِلُ الرِّیٰحَ فَتُثِیْرُ سَحَابًا فَیَبْسُطُهٗ فِی السَّمَآءِ كَیْفَ یَشَآءُ وَیَجْعَلُهٗ كِسَفًا فَتَرَی الْوَدْقَ یَخْرُجُ مِنْ خِلٰلِهٖ ۚ— فَاِذَاۤ اَصَابَ بِهٖ مَنْ یَّشَآءُ مِنْ عِبَادِهٖۤ اِذَا هُمْ یَسْتَبْشِرُوْنَ ۟

அல்லாஹ்தான் காற்றுகளை அனுப்புகின்றான். அவை மேகங்களை கிளப்புகின்றன. அவன் அவற்றை வானத்தில் தான் நாடியவாறு பரப்புகின்றான். இன்னும், அவற்றை பல துண்டுகளாக அவன் மாற்றுகின்றான். ஆகவே, மழையை -அது அவற்றுக்கு இடையிலிருந்து வெளியேறக்கூடியதாக- நீர் பார்க்கிறீர். அதை தனது அடியார்களில் தான் நாடியவர்களுக்கு அவன் அதை அடையச் செய்தால், அப்போது அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். info
التفاسير: |

external-link copy
49 : 30

وَاِنْ كَانُوْا مِنْ قَبْلِ اَنْ یُّنَزَّلَ عَلَیْهِمْ مِّنْ قَبْلِهٖ لَمُبْلِسِیْنَ ۟

நிச்சயமாக அவர்கள் இதற்கு முன்னர் அது (-மழை) அவர்கள் மீது இறக்கப்படுவதற்கு முன்னர் நிராசையடைந்தவர்களாக இருந்தனர். info
التفاسير: |

external-link copy
50 : 30

فَانْظُرْ اِلٰۤی اٰثٰرِ رَحْمَتِ اللّٰهِ كَیْفَ یُحْیِ الْاَرْضَ بَعْدَ مَوْتِهَا ؕ— اِنَّ ذٰلِكَ لَمُحْیِ الْمَوْتٰى ۚ— وَهُوَ عَلٰى كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟

ஆக, அல்லாஹ்வுடைய அருளின் அடையாளங்களைப் பார்ப்பீராக! பூமியை அது மரணித்த பின்னர் அவன் எப்படி உயிர்ப்பிக்கின்றான் (என்பதை கவனியுங்கள்)! நிச்சயமாக அவன்தான் இறந்தவர்களையும் உயிர்ப்பிப்பவன் ஆவான். அவன் எல்லா பொருள்கள் மீதும் பேராற்றலுடையவன் ஆவான். info
التفاسير: |