លេខ​ទំព័រ:close

external-link copy
59 : 40

اِنَّ السَّاعَةَ لَاٰتِیَةٌ لَّا رَیْبَ فِیْهَا ؗ— وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا یُؤْمِنُوْنَ ۟

நிச்சயமாக மறுமை வந்தே தீரும். அதில் எவ்வித சந்தேகமும் இல்லை. என்றாலும் மனிதர்களில் அதிகமானவர்கள் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள். info
التفاسير: |

external-link copy
60 : 40

وَقَالَ رَبُّكُمُ ادْعُوْنِیْۤ اَسْتَجِبْ لَكُمْ ؕ— اِنَّ الَّذِیْنَ یَسْتَكْبِرُوْنَ عَنْ عِبَادَتِیْ سَیَدْخُلُوْنَ جَهَنَّمَ دٰخِرِیْنَ ۟۠

உங்கள் இறைவன் கூறுகிறான்: “என்னிடம் பிரார்த்தியுங்கள்! நான் உங்களுக்கு (உங்கள் பிரார்த்தனையை) அங்கீகரிப்பேன். நிச்சயமாக எனது வணக்க வழிபாடுகளை விட்டு பெருமை அடிப்பவர்கள் சிறுமைப்பட்டவர்களாக நரகத்தில் நுழைவார்கள். info
التفاسير: |

external-link copy
61 : 40

اَللّٰهُ الَّذِیْ جَعَلَ لَكُمُ الَّیْلَ لِتَسْكُنُوْا فِیْهِ وَالنَّهَارَ مُبْصِرًا ؕ— اِنَّ اللّٰهَ لَذُوْ فَضْلٍ عَلَی النَّاسِ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا یَشْكُرُوْنَ ۟

அல்லாஹ்தான் உங்களுக்கு இரவை அதில் நீங்கள் ஓய்வு எடுப்பதற்காகவும் பகலை வெளிச்சமுள்ளதாகவும் ஆக்கினான். நிச்சயமாக அல்லாஹ் மக்கள் மீது அருளுடையவன். என்றாலும், மனிதர்களில் அதிகமானவர்கள் நன்றி செலுத்த மாட்டார்கள். info
التفاسير: |

external-link copy
62 : 40

ذٰلِكُمُ اللّٰهُ رَبُّكُمْ خَالِقُ كُلِّ شَیْءٍ ۘ— لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ؗ— فَاَنّٰی تُؤْفَكُوْنَ ۟

அந்த அல்லாஹ்தான் உங்கள் இறைவன், எல்லாவற்றையும் படைத்தவன். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாரும் அறவே இல்லை. நீங்கள் எவ்வாறு (சத்தியப்பாதையில் இருந்து) திருப்பப்படுகிறீர்கள். info
التفاسير: |

external-link copy
63 : 40

كَذٰلِكَ یُؤْفَكُ الَّذِیْنَ كَانُوْا بِاٰیٰتِ اللّٰهِ یَجْحَدُوْنَ ۟

இவ்வாறுதான் அல்லாஹ்வின் அத்தாட்சிகளை மறுப்பவர்களாக இருந்தவர்கள் (சத்தியத்தைவிட்டு) திருப்பப்பட்டார்கள். info
التفاسير: |

external-link copy
64 : 40

اَللّٰهُ الَّذِیْ جَعَلَ لَكُمُ الْاَرْضَ قَرَارًا وَّالسَّمَآءَ بِنَآءً وَّصَوَّرَكُمْ فَاَحْسَنَ صُوَرَكُمْ وَرَزَقَكُمْ مِّنَ الطَّیِّبٰتِ ؕ— ذٰلِكُمُ اللّٰهُ رَبُّكُمْ ۖۚ— فَتَبٰرَكَ اللّٰهُ رَبُّ الْعٰلَمِیْنَ ۟

அல்லாஹ்தான் உங்களுக்கு பூமியை வசிப்பதற்கு வசதியாகவும் வானத்தை ஒரு கட்டிடமாகவும் அமைத்தான். அவன்தான் உங்களை உருவமைத்தான். உங்கள் உருவங்களை அழகாக்கினான். இன்னும், நல்ல உணவுகளில் இருந்து உங்களுக்கு உணவளித்தான். அவன்தான் உங்கள் இறைவனாகிய அல்லாஹ் ஆவான். அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ் மிக்க அருள்வளம் நிறைந்தவன். info
التفاسير: |

external-link copy
65 : 40

هُوَ الْحَیُّ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ فَادْعُوْهُ مُخْلِصِیْنَ لَهُ الدِّیْنَ ؕ— اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِیْنَ ۟

அவன்தான் என்றும் உயிரோடு இருப்பவன். வணக்கத்திற்குரிய (இறை)வன் அவனைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை. அவனிடமே நீங்கள் பிரார்த்தியுங்கள், வழிபாடுகளை அவனுக்கு தூய்மைப்படுத்தியவர்களாக. அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும். info
التفاسير: |

external-link copy
66 : 40

قُلْ اِنِّیْ نُهِیْتُ اَنْ اَعْبُدَ الَّذِیْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ لَمَّا جَآءَنِیَ الْبَیِّنٰتُ مِنْ رَّبِّیْ ؗ— وَاُمِرْتُ اَنْ اُسْلِمَ لِرَبِّ الْعٰلَمِیْنَ ۟

(நபியே) நீர் கூறுவீராக! என் இறைவனிடமிருந்து தெளிவான அத்தாட்சிகள் வந்துவிட்ட போது, நிச்சயமாக நான் அல்லாஹ்வை அன்றி நீங்கள் பிரார்த்திக்கின்றவர்களை (-வணங்குகின்றவர்களை) நான் வணங்குவதற்கு தடுக்கப்பட்டு விட்டேன். அகிலங்களின் இறைவனுக்கு நான் முற்றிலும் பணிந்து நடக்கவேண்டும் என்று நான் ஆணை இடப்பட்டுள்ளேன். info
التفاسير: |