លេខ​ទំព័រ:close

external-link copy
6 : 46

وَاِذَا حُشِرَ النَّاسُ كَانُوْا لَهُمْ اَعْدَآءً وَّكَانُوْا بِعِبَادَتِهِمْ كٰفِرِیْنَ ۟

மக்கள் எழுப்பப்படும்போது அவர்கள் (-வணங்கப்பட்டவர்கள்) அவர்களுக்கு (-வணங்கியவர்களுக்கு) எதிரிகளாக ஆகிவிடுவார்கள். இன்னும், அவர்கள் (-மக்கள்) தங்களை வணங்கியதை மறுப்பவர்களாக ஆகிவிடுவார்கள். info
التفاسير: |

external-link copy
7 : 46

وَاِذَا تُتْلٰی عَلَیْهِمْ اٰیٰتُنَا بَیِّنٰتٍ قَالَ الَّذِیْنَ كَفَرُوْا لِلْحَقِّ لَمَّا جَآءَهُمْ ۙ— هٰذَا سِحْرٌ مُّبِیْنٌ ۟ؕ

இவர்கள் மீது நமது வசனங்கள் தெளிவான அத்தாட்சிகளாக ஓதிக் காண்பிக்கப்பட்டால், “இது தெளிவான சூனியமாகும்” என்று சத்தியத்தை (-குர்ஆனையும் நபியின் மற்ற அற்புதங்களையும்) பார்த்து அது அவர்களிடம் வந்த போது நிராகரித்தவர்கள் கூறினார்கள்: info
التفاسير: |

external-link copy
8 : 46

اَمْ یَقُوْلُوْنَ افْتَرٰىهُ ؕ— قُلْ اِنِ افْتَرَیْتُهٗ فَلَا تَمْلِكُوْنَ لِیْ مِنَ اللّٰهِ شَیْـًٔا ؕ— هُوَ اَعْلَمُ بِمَا تُفِیْضُوْنَ فِیْهِ ؕ— كَفٰی بِهٖ شَهِیْدًا بَیْنِیْ وَبَیْنَكُمْ ؕ— وَهُوَ الْغَفُوْرُ الرَّحِیْمُ ۟

இதை இவர் (-நமது தூதர்) இட்டுக்கட்டினார் என்று கூறுகிறார்களா? (நபியே!) கூறுவீராக! நான் இதை இட்டுக்கட்டி இருந்தால் (அதற்காக அல்லாஹ் என்னை தண்டிக்கும் போது) அல்லாஹ்விடமிருந்து எனக்காக எதையும் (பரிந்துரை செய்ய) நீங்கள் ஆற்றல் பெற மாட்டீர்கள். நீங்கள் எதில் ஈடுபடுகிறீர்களோ அதை அவன் மிக அறிந்தவன் ஆவான். எனக்கு மத்தியிலும் உங்களுக்கு மத்தியிலும் அவனே சாட்சியால் போதுமானவன். அவன்தான் மகா மன்னிப்பாளன் மகா கருணையாளன் ஆவான். info
التفاسير: |

external-link copy
9 : 46

قُلْ مَا كُنْتُ بِدْعًا مِّنَ الرُّسُلِ وَمَاۤ اَدْرِیْ مَا یُفْعَلُ بِیْ وَلَا بِكُمْ ؕ— اِنْ اَتَّبِعُ اِلَّا مَا یُوْحٰۤی اِلَیَّ وَمَاۤ اَنَا اِلَّا نَذِیْرٌ مُّبِیْنٌ ۟

(நபியே!) கூறுவீராக! நான் தூதர்களில் புதுமையானவனாக (முதலாமவனாக) இருக்கவில்லை. எனக்கு என்ன செய்யப்படும் உங்களுக்கு என்ன செய்யப்படும் என்று நான் அறியமாட்டேன். எனக்கு எது வஹ்யி அறிவிக்கப்படுகின்றதோ அதைத் தவிர வேறு எதையும் நான் பின்பற்ற மாட்டேன். தெளிவான எச்சரிப்பாளராகவே தவிர நான் இல்லை. info
التفاسير: |

external-link copy
10 : 46

قُلْ اَرَءَیْتُمْ اِنْ كَانَ مِنْ عِنْدِ اللّٰهِ وَكَفَرْتُمْ بِهٖ وَشَهِدَ شَاهِدٌ مِّنْ بَنِیْۤ اِسْرَآءِیْلَ عَلٰی مِثْلِهٖ فَاٰمَنَ وَاسْتَكْبَرْتُمْ ؕ— اِنَّ اللّٰهَ لَا یَهْدِی الْقَوْمَ الظّٰلِمِیْنَ ۟۠

(நபியே!) கூறுவீராக! இது (-இந்த வேதம்) அல்லாஹ்விடமிருந்து (வந்ததாக) இருந்தால், இஸ்ரவேலர்களில் உள்ள ஒரு சாட்சியாளர் இது போன்ற ஒன்றுக்கு சாட்சியும் கூறி, (அவர் இதை) நம்பிக்கை கொண்டிருக்க, (ஆனால்,) நீங்களோ பெருமை அடித்து, இதை நீங்கள் நிராகரித்து விட்டால்... (இதை விட பெரிய அநியாயம் வேறென்ன இருக்க முடியும்?) நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களுக்கு நேர்வழி காட்டமாட்டான். info
التفاسير: |

external-link copy
11 : 46

وَقَالَ الَّذِیْنَ كَفَرُوْا لِلَّذِیْنَ اٰمَنُوْا لَوْ كَانَ خَیْرًا مَّا سَبَقُوْنَاۤ اِلَیْهِ ؕ— وَاِذْ لَمْ یَهْتَدُوْا بِهٖ فَسَیَقُوْلُوْنَ هٰذَاۤ اِفْكٌ قَدِیْمٌ ۟

நிராகரித்தவர்கள் நம்பிக்கை கொண்டவர்களை நோக்கி கூறினார்கள்: இது (-இந்த வேதமும் இந்த மார்க்கமும்) சிறந்ததாக இருந்தால் இவர்கள் (இந்த பாமர மக்கள்) இதனளவில் நம்மை முந்தியிருக்க மாட்டார்கள். அவர்கள் இதன் மூலம் நேர்வழி பெறாமல் போனபோது, “இது பழைய பொய்யாகும்” என்று கூறுகின்றனர். info
التفاسير: |

external-link copy
12 : 46

وَمِنْ قَبْلِهٖ كِتٰبُ مُوْسٰۤی اِمَامًا وَّرَحْمَةً ؕ— وَهٰذَا كِتٰبٌ مُّصَدِّقٌ لِّسَانًا عَرَبِیًّا لِّیُنْذِرَ الَّذِیْنَ ظَلَمُوْا ۖۗ— وَبُشْرٰی لِلْمُحْسِنِیْنَ ۟

இதற்கு முன்னர் மூஸாவின் வேதம் ஒரு முன்னோடியாகவும் அருளாகவும் இருக்கின்றது. (அதையும் நாம்தான் இறக்கினோம்.) இதுவோ (முந்திய வேதங்களை) மெய்ப்பிக்கக்கூடிய அரபி மொழியில் உள்ள ஒரு வேதமாகும், அநியாயக்காரர்களை எச்சரிப்பதற்காகவும் நல்லவர்களுக்கு நற்செய்தியாகவும் (இதையும் நாம்தான் இறக்கினோம்). info
التفاسير: |

external-link copy
13 : 46

اِنَّ الَّذِیْنَ قَالُوْا رَبُّنَا اللّٰهُ ثُمَّ اسْتَقَامُوْا فَلَا خَوْفٌ عَلَیْهِمْ وَلَا هُمْ یَحْزَنُوْنَ ۟ۚ

நிச்சயமாக, எவர்கள் “எங்கள் இறைவன் அல்லாஹ்தான்” என்று கூறி, பிறகு (தங்களது நம்பிக்கையிலும் மார்க்கத்திலும்) உறுதியாக இருந்தார்களோ அவர்கள் மீது பயமில்லை, அவர்கள் கவலைப்பட மாட்டார்கள். info
التفاسير: |

external-link copy
14 : 46

اُولٰٓىِٕكَ اَصْحٰبُ الْجَنَّةِ خٰلِدِیْنَ فِیْهَا ۚ— جَزَآءً بِمَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟

அவர்கள் சொர்க்கவாசிகள். அவர்கள் செய்துகொண்டிருந்தவற்றிற்கு (-நன்மைகளுக்கு) கூலியாக அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். info
التفاسير: |