ការបកប្រែអត្ថន័យនៃគម្ពីរគួរអាន - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

លេខ​ទំព័រ:close

external-link copy
21 : 46

وَاذْكُرْ اَخَا عَادٍ اِذْ اَنْذَرَ قَوْمَهٗ بِالْاَحْقَافِ وَقَدْ خَلَتِ النُّذُرُ مِنْ بَیْنِ یَدَیْهِ وَمِنْ خَلْفِهٖۤ اَلَّا تَعْبُدُوْۤا اِلَّا اللّٰهَ ؕ— اِنِّیْۤ اَخَافُ عَلَیْكُمْ عَذَابَ یَوْمٍ عَظِیْمٍ ۟

(நபியே!) ஆது சமுதாயத்தின் சகோதரரை (நபி ஹூதை) நினைவு கூர்வீராக! அவர் தனது மக்களை மணல் பாங்கான இடத்தில் (உள்ள அவர்களது இல்லங்களுக்கு அருகில் வைத்து) எச்சரித்த சமயத்தை நினைவு கூர்வீராக! இவருக்கு முன்னரும் இவருக்குப் பின்னரும் எச்சரிப்பாளர்கள் திட்டமாக சென்றுள்ளனர். (அவர் எச்சரித்து கூறியதாவது:) “அல்லாஹ்வை அன்றி யாரையும் நீங்கள் வணங்காதீர்கள். நிச்சயமாக நான் உங்கள் மீது பெரிய நாளின் தண்டனையை பயப்படுகின்றேன்.” info
التفاسير: |

external-link copy
22 : 46

قَالُوْۤا اَجِئْتَنَا لِتَاْفِكَنَا عَنْ اٰلِهَتِنَا ۚ— فَاْتِنَا بِمَا تَعِدُنَاۤ اِنْ كُنْتَ مِنَ الصّٰدِقِیْنَ ۟

அவர்கள் கூறினர்: “நீர் எங்களை எங்கள் தெய்வங்களை விட்டு திருப்புவதற்காக எங்களிடம் வந்தீரா? நீர் உண்மையாளர்களில் இருந்தால் எங்களுக்கு நீர் எச்சரிக்கை செய்வதை எங்களிடம் கொண்டு வருவீராக!” info
التفاسير: |

external-link copy
23 : 46

قَالَ اِنَّمَا الْعِلْمُ عِنْدَ اللّٰهِ ؗ— وَاُبَلِّغُكُمْ مَّاۤ اُرْسِلْتُ بِهٖ وَلٰكِنِّیْۤ اَرٰىكُمْ قَوْمًا تَجْهَلُوْنَ ۟

அவர் கூறினார்: (உங்கள் முடிவைப் பற்றிய) அறிவெல்லாம் அல்லாஹ்விடம்தான் இருக்கிறது. நான் எதைக் கொண்டு அனுப்பப்பட்டேனோ அதை உங்களுக்கு எடுத்துச் சொல்கிறேன். என்றாலும், நீங்கள் அறியாத மக்களாக இருப்பதாகவே நான் உங்களை கருதுகிறேன். info
التفاسير: |

external-link copy
24 : 46

فَلَمَّا رَاَوْهُ عَارِضًا مُّسْتَقْبِلَ اَوْدِیَتِهِمْ ۙ— قَالُوْا هٰذَا عَارِضٌ مُّمْطِرُنَا ؕ— بَلْ هُوَ مَا اسْتَعْجَلْتُمْ بِهٖ ؕ— رِیْحٌ فِیْهَا عَذَابٌ اَلِیْمٌ ۟ۙ

அவர்கள் அதை (-அல்லாஹ்வின் வேதனையை) தங்களது பள்ளத் தாக்கை முன்னோக்கி வரக்கூடிய அடர்த்தியான கார் மேகமாக பார்த்தபோது, கூறினார்கள்: “இது நமக்கு மழை பொழிவிக்கும் அடர்த்தியான கார் மேகமாகும்.” (ஆது நபி கூறினார்: இது மழை பொழியும் மேகம் இல்லை) மாறாக, இது நீங்கள் எதை அவசரமாகத் தேடினீர்களோ அதுவாகும். இது ஒரு காற்றாகும். இதில் வலி தரக்கூடிய தண்டனை இருக்கிறது. info
التفاسير: |

external-link copy
25 : 46

تُدَمِّرُ كُلَّ شَیْ بِاَمْرِ رَبِّهَا فَاَصْبَحُوْا لَا یُرٰۤی اِلَّا مَسٰكِنُهُمْ ؕ— كَذٰلِكَ نَجْزِی الْقَوْمَ الْمُجْرِمِیْنَ ۟

இது தனது இறைவனின் கட்டளைப்படி எல்லாவற்றையும் சின்னாபின்னமாக்கிவிடும் (நாசமாக்கிவிடும்). அவர்களின் வசிப்பிடங்களைத் தவிர (வேறு எதையும்) பார்க்க முடியாதபடி அவர்கள் ஆகிவிட்டனர். (அவர்கள் எல்லோரும் அழிந்துவிட்டனர். அவர்கள் வசித்த வீடுகளின் இடிபாடுகள் மட்டும் மிஞ்சி இருக்கின்றன.) இவ்வாறுதான் குற்றவாளிகளான மக்களுக்கு நாம் கூலி கொடுப்போம். info
التفاسير: |

external-link copy
26 : 46

وَلَقَدْ مَكَّنّٰهُمْ فِیْمَاۤ اِنْ مَّكَّنّٰكُمْ فِیْهِ وَجَعَلْنَا لَهُمْ سَمْعًا وَّاَبْصَارًا وَّاَفْـِٕدَةً ۖؗ— فَمَاۤ اَغْنٰی عَنْهُمْ سَمْعُهُمْ وَلَاۤ اَبْصَارُهُمْ وَلَاۤ اَفْـِٕدَتُهُمْ مِّنْ شَیْءٍ اِذْ كَانُوْا یَجْحَدُوْنَ بِاٰیٰتِ اللّٰهِ وَحَاقَ بِهِمْ مَّا كَانُوْا بِهٖ یَسْتَهْزِءُوْنَ ۟۠

உங்களுக்கு நாம் எதில் வசதியளிக்க வில்லையோ அதில் (எல்லாம்) அவர்களுக்கு நாம் வசதியளித்தோம். இன்னும், அவர்களுக்கு செவியையும் பார்வைகளையும் உள்ளங்களையும் ஏற்படுத்தினோம். ஆனால், அவர்கள் அல்லாஹ்வின் அத்தாட்சிகளை மறுப்பவர்களாக இருந்தபோது அவர்களின் செவியும் அவர்களின் பார்வைகளும் அவர்களின் உள்ளங்களும் அவர்களை விட்டும் (அல்லாஹ்வின் தண்டனையில்) எதையும் தடுக்கவில்லை. அவர்கள் எதை பரிகாசம் செய்பவர்களாக இருந்தார்களோ அது (-அல்லாஹ்வின் தண்டனை) அவர்களை சூழ்ந்து கொண்டது. info
التفاسير: |

external-link copy
27 : 46

وَلَقَدْ اَهْلَكْنَا مَا حَوْلَكُمْ مِّنَ الْقُرٰی وَصَرَّفْنَا الْاٰیٰتِ لَعَلَّهُمْ یَرْجِعُوْنَ ۟

ஊர்களில் உங்களை சுற்றி உள்ளவற்றை நாம் திட்டவட்டமாக அழித்தோம். அவர்கள் (நம் பக்கம்) திரும்புவதற்காக அத்தாட்சிகளை நாம் விவரித்தோம். info
التفاسير: |

external-link copy
28 : 46

فَلَوْلَا نَصَرَهُمُ الَّذِیْنَ اتَّخَذُوْا مِنْ دُوْنِ اللّٰهِ قُرْبَانًا اٰلِهَةً ؕ— بَلْ ضَلُّوْا عَنْهُمْ ۚ— وَذٰلِكَ اِفْكُهُمْ وَمَا كَانُوْا یَفْتَرُوْنَ ۟

அல்லாஹ்வை அன்றி இவர்கள் வழிபாட்டுக்காக எவர்களை தெய்வங்களாக எடுத்துக் கொண்டார்களோ அவர்கள் இவர்களுக்கு உதவி செய்திருக்க வேண்டாமா? மாறாக, அவர்கள் (-தெய்வங்கள்) இவர்களை (-வணங்கியவர்களை) விட்டு மறைந்து விட்டனர். இது (-சிலை வணக்க வழிபாடு) இவர்களின் பொய்யும் இன்னும் இவர்கள் (எதை) இட்டுக் கட்டுபவர்களாக இருந்தார்களோ அதுவுமாகும். (பல தெய்வ வழிபாடும் சிலை வழிபாடுகளும் மனிதர்கள் பொய்யாக இட்டுக்கட்டியதும் அவர்கள் கற்பனை செய்ததும்தான். அவற்றுக்கு எவ்வித உண்மை ஆதாரம் இல்லை.) info
التفاسير: |