ការបកប្រែអត្ថន័យនៃគម្ពីរគួរអាន - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

លេខ​ទំព័រ:close

external-link copy
15 : 52

اَفَسِحْرٌ هٰذَاۤ اَمْ اَنْتُمْ لَا تُبْصِرُوْنَ ۟

இது என்ன சூனியமா? நீங்கள் (இதை கண்கூடாக) பார்க்கவில்லையா? info
التفاسير: |

external-link copy
16 : 52

اِصْلَوْهَا فَاصْبِرُوْۤا اَوْ لَا تَصْبِرُوْا ۚ— سَوَآءٌ عَلَیْكُمْ ؕ— اِنَّمَا تُجْزَوْنَ مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟

இதில் எரிந்து பொசுங்குங்கள்! பொறுமையாக இருங்கள்! அல்லது பொறுக்காதீர்கள்! இரண்டும் உங்களுக்கு சமம்தான். நீங்கள் கூலி கொடுக்கப்படுவதெல்லாம் நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்குத்தான். info
التفاسير: |

external-link copy
17 : 52

اِنَّ الْمُتَّقِیْنَ فِیْ جَنّٰتٍ وَّنَعِیْمٍ ۟ۙ

நிச்சயமாக இறையச்சம் உள்ளவர்கள் சொர்க்கங்களிலும் இன்பங்களிலும் இருப்பார்கள். info
التفاسير: |

external-link copy
18 : 52

فٰكِهِیْنَ بِمَاۤ اٰتٰىهُمْ رَبُّهُمْ ۚ— وَوَقٰىهُمْ رَبُّهُمْ عَذَابَ الْجَحِیْمِ ۟

அவர்களின் இறைவன் அவர்களுக்கு வழங்கியதால் (அதிகமான) பழங்கள் அவர்களிடம் இருக்கும். இன்னும், அவர்களின் இறைவன் அவர்களை நரக வேதனையை விட்டும் பாதுகாப்பான். info
التفاسير: |

external-link copy
19 : 52

كُلُوْا وَاشْرَبُوْا هَنِیْٓـًٔا بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟ۙ

நீங்கள் (நல்லமல்கள்) செய்துகொண்டிருந்த காரணத்தால் மகிழ்ச்சியாக உண்ணுங்கள்! பருகுங்கள்! info
التفاسير: |

external-link copy
20 : 52

مُتَّكِـِٕیْنَ عَلٰی سُرُرٍ مَّصْفُوْفَةٍ ۚ— وَزَوَّجْنٰهُمْ بِحُوْرٍ عِیْنٍ ۟

கட்டில்களில் வரிசையாக வைக்கப்பட்ட தலையணைகளில் சாய்ந்தவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு நாம் கண்ணழகிகளான வெண்மையான கன்னிகளை மணமுடித்து வைப்போம். info
التفاسير: |

external-link copy
21 : 52

وَالَّذِیْنَ اٰمَنُوْا وَاتَّبَعَتْهُمْ ذُرِّیَّتُهُمْ بِاِیْمَانٍ اَلْحَقْنَا بِهِمْ ذُرِّیَّتَهُمْ وَمَاۤ اَلَتْنٰهُمْ مِّنْ عَمَلِهِمْ مِّنْ شَیْءٍ ؕ— كُلُّ امْرِىۢ بِمَا كَسَبَ رَهِیْنٌ ۟

எவர்கள் நம்பிக்கை கொண்டார்களோ, இன்னும் அவர்களின் சந்ததிகளும் இறை நம்பிக்கையில் அவர்களைப் பின்பற்றினார்களோ நாம் அவர்களின் சந்ததிகளை அவர்களுடன் சேர்த்து வைப்போம். அவர்களின் அமல்களில் எதையும் அவர்களுக்கு நாம் குறைக்க மாட்டோம். ஒவ்வொரு மனிதனும் தான் செய்த செயலுக்காக (மட்டுமே) தடுத்து வைக்கப்பட்டிருப்பான். (ஒருவர் - பிறரின் குற்றத்தை சுமக்க மாட்டான்.) info
التفاسير: |

external-link copy
22 : 52

وَاَمْدَدْنٰهُمْ بِفَاكِهَةٍ وَّلَحْمٍ مِّمَّا یَشْتَهُوْنَ ۟

நாம் இவர்களுக்கு பழங்களையும் அவர்கள் விரும்புகின்றவற்றின் மாமிசங்களையும் கொடுத்துக்கொண்டே இருப்போம். info
التفاسير: |

external-link copy
23 : 52

یَتَنَازَعُوْنَ فِیْهَا كَاْسًا لَّا لَغْوٌ فِیْهَا وَلَا تَاْثِیْمٌ ۟

அதில் குடிபானம் நிறைந்த குவளைகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்வார்கள். அதில் பொய் இருக்காது, பிறரை பாவத்தில் தள்ளுகின்ற செயல்கள் இருக்காது. info
التفاسير: |

external-link copy
24 : 52

وَیَطُوْفُ عَلَیْهِمْ غِلْمَانٌ لَّهُمْ كَاَنَّهُمْ لُؤْلُؤٌ مَّكْنُوْنٌ ۟

அவர்களுக்குரிய சிறுவர்கள் அவர்களை சுற்றி வருவார்கள். அவர்களோ (சிப்பியில்) பாதுகாக்கப்பட்ட முத்துக்களைப் போன்று இருப்பார்கள். info
التفاسير: |

external-link copy
25 : 52

وَاَقْبَلَ بَعْضُهُمْ عَلٰی بَعْضٍ یَّتَسَآءَلُوْنَ ۟

அவர்களில் சிலர் சிலரை முன்னோக்கி வருவார்கள் - தங்களுக்குள் கேட்டவர்களாக. info
التفاسير: |

external-link copy
26 : 52

قَالُوْۤا اِنَّا كُنَّا قَبْلُ فِیْۤ اَهْلِنَا مُشْفِقِیْنَ ۟

(அப்போது) அவர்கள் கூறுவார்கள்: நிச்சயமாக நாங்கள் இதற்கு முன்னர் (உலகத்தில் வாழ்ந்த போது) எங்கள் குடும்பங்களில் (அல்லாஹ்வின் தண்டனையை) பயந்தவர்களாகவே இருந்தோம். info
التفاسير: |

external-link copy
27 : 52

فَمَنَّ اللّٰهُ عَلَیْنَا وَوَقٰىنَا عَذَابَ السَّمُوْمِ ۟

ஆக, அல்லாஹ் எங்கள் மீது உபகாரம் புரிந்தான். இன்னும், எங்களை நரகத்தின் வேதனையை விட்டும் பாதுகாத்தான். info
التفاسير: |

external-link copy
28 : 52

اِنَّا كُنَّا مِنْ قَبْلُ نَدْعُوْهُ ؕ— اِنَّهٗ هُوَ الْبَرُّ الرَّحِیْمُ ۟۠

நிச்சயமாக நாங்கள் இதற்கு முன்னர் அவனை அழைப்பவர்களாக (அவனை மட்டும் பரிசுத்தமாக வணங்குகின்றவர்களாக) இருந்தோம். நிச்சயமாக அவன்தான் (தன் அடியார்கள் மீது) மிகவும் அருளுடையவன் மகா கருணையாளன் ஆவான். info
التفاسير: |

external-link copy
29 : 52

فَذَكِّرْ فَمَاۤ اَنْتَ بِنِعْمَتِ رَبِّكَ بِكَاهِنٍ وَّلَا مَجْنُوْنٍ ۟ؕ

ஆகவே, (நபியே!) நீர் நல்லுபதேசம் செய்வீராக! உமது இறைவனின் அருட்கொடையால் நீர் குறி சொல்பவராகவும் பைத்தியக்காரராகவும் இல்லை. info
التفاسير: |

external-link copy
30 : 52

اَمْ یَقُوْلُوْنَ شَاعِرٌ نَّتَرَبَّصُ بِهٖ رَیْبَ الْمَنُوْنِ ۟

“(இவர்) ஒரு கவிஞர், காலத்தின் அசம்பாவிதங்களை அவருக்கு நாங்கள் எதிர்பார்க்கின்றோம்” என்று அவர்கள் கூறுகிறார்களா? info
التفاسير: |

external-link copy
31 : 52

قُلْ تَرَبَّصُوْا فَاِنِّیْ مَعَكُمْ مِّنَ الْمُتَرَبِّصِیْنَ ۟ؕ

(நபியே!) கூறுவீராக! “நீங்கள் எதிர்பாருங்கள். நிச்சயமாக நானும் உங்களுடன் எதிர்பார்ப்பவர்களில் உள்ளவன்தான்.” info
التفاسير: |