លេខ​ទំព័រ:close

external-link copy
14 : 72

وَّاَنَّا مِنَّا الْمُسْلِمُوْنَ وَمِنَّا الْقٰسِطُوْنَ ؕ— فَمَنْ اَسْلَمَ فَاُولٰٓىِٕكَ تَحَرَّوْا رَشَدًا ۟

நிச்சயமாக நாங்கள் எங்களில் முஸ்லிம்களும் உள்ளனர். எங்களில் (அல்லாஹ்வை நிராகரிக்கின்ற) அநியாயக்காரர்களும் உள்ளனர். யார் இஸ்லாமை ஏற்றாரோ அவர்கள்தான் நேர்வழியை நன்கு (ஆராய்ந்து) தேடினார்கள். info
التفاسير: |

external-link copy
15 : 72

وَاَمَّا الْقٰسِطُوْنَ فَكَانُوْا لِجَهَنَّمَ حَطَبًا ۟ۙ

ஆக, அநியாயக்காரர்கள் நரகத்தின் எரி கொள்ளிகளாக இருக்கின்றனர். info
التفاسير: |

external-link copy
16 : 72

وَّاَنْ لَّوِ اسْتَقَامُوْا عَلَی الطَّرِیْقَةِ لَاَسْقَیْنٰهُمْ مَّآءً غَدَقًا ۟ۙ

அவர்கள் நேரான (இஸ்லாமிய) மார்க்கத்தில் நிலையாக இருந்திருந்தால் நாம் அவர்களுக்கு (தேவையான) பலன்தரக்கூடிய அதிகமான நீரை (-அதிகமான செல்வத்தை) நாம் புகட்டி (-கொடுத்து) இருப்போம். info
التفاسير: |

external-link copy
17 : 72

لِّنَفْتِنَهُمْ فِیْهِ ؕ— وَمَنْ یُّعْرِضْ عَنْ ذِكْرِ رَبِّهٖ یَسْلُكْهُ عَذَابًا صَعَدًا ۟ۙ

(அவர்கள் நமக்கு நன்றி செலுத்துகின்றார்களா என்று) அதன்மூலம் அவர்களை நாம் சோதிப்பதற்காக. எவர் தன் இறைவனின் அறிவுரையை புறக்கணிப்பாரோ அவரை கடினமான தண்டனையில் அவன் புகுத்துவான். info
التفاسير: |

external-link copy
18 : 72

وَّاَنَّ الْمَسٰجِدَ لِلّٰهِ فَلَا تَدْعُوْا مَعَ اللّٰهِ اَحَدًا ۟ۙ

நிச்சயமாக மஸ்ஜிதுகள் அல்லாஹ்விற்கு உரியன. ஆகவே, அல்லாஹ்வுடன் வேறு ஒருவரை அழைக்காதீர்கள் (-வணங்காதீர்கள்)! info
التفاسير: |

external-link copy
19 : 72

وَّاَنَّهٗ لَمَّا قَامَ عَبْدُ اللّٰهِ یَدْعُوْهُ كَادُوْا یَكُوْنُوْنَ عَلَیْهِ لِبَدًا ۟ؕ۠

நிச்சயமாக செய்தி, அல்லாஹ்வின் அடியார் (முஹம்மது) அவனை அழைப்பதற்காக நின்ற போது அவர்கள் (-அரபுகள்) எல்லோரும் சேர்ந்து அவருக்கு எதிராக ஆகிவிட முயற்சித்தனர். info
التفاسير: |

external-link copy
20 : 72

قُلْ اِنَّمَاۤ اَدْعُوْا رَبِّیْ وَلَاۤ اُشْرِكُ بِهٖۤ اَحَدًا ۟

(நபியே!) கூறுவீராக! நான் அழைப்பதெல்லாம் (-வணங்குவதெல்லாம்) என் இறைவனை (மட்டும்)தான். ஒருவரையும் அவனுக்கு நான் இணையாக்க மாட்டேன். info
التفاسير: |

external-link copy
21 : 72

قُلْ اِنِّیْ لَاۤ اَمْلِكُ لَكُمْ ضَرًّا وَّلَا رَشَدًا ۟

(நபியே!) கூறுவீராக! நிச்சயமாக நான் உங்களின் கெட்டதற்கும் நல்லதற்கும் உரிமை பெறமாட்டேன். info
التفاسير: |

external-link copy
22 : 72

قُلْ اِنِّیْ لَنْ یُّجِیْرَنِیْ مِنَ اللّٰهِ اَحَدٌ ۙ۬— وَّلَنْ اَجِدَ مِنْ دُوْنِهٖ مُلْتَحَدًا ۟ۙ

(நபியே!) கூறுவீராக! நிச்சயமாக நான் (அவனுக்கு மாறுசெய்தால்) என்னை அல்லாஹ்விடமிருந்து அறவே ஒருவரும் காப்பாற்ற மாட்டார். அவனை அன்றி நான் (வேறு ஓர்) ஒதுங்குமிடத்தை (எனக்கு) அறவே காணமாட்டேன். info
التفاسير: |

external-link copy
23 : 72

اِلَّا بَلٰغًا مِّنَ اللّٰهِ وَرِسٰلٰتِهٖ ؕ— وَمَنْ یَّعْصِ اللّٰهَ وَرَسُوْلَهٗ فَاِنَّ لَهٗ نَارَ جَهَنَّمَ خٰلِدِیْنَ فِیْهَاۤ اَبَدًا ۟ؕ

(எனினும்,) அல்லாஹ்விடமிருந்து (செய்திகளை) எடுத்துரைப்பதற்கும் அவனுடைய தூதுத்துவ செய்திகளுக்கும் தவிர (வேறு எதற்கும் நான் உரிமை பெற மாட்டேன்). எவர் அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் மாறு செய்வாரோ நிச்சயமாக அவருக்கு நரக நெருப்புதான் உண்டு. அதில் அவர்கள் எப்போதும் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள். info
التفاسير: |

external-link copy
24 : 72

حَتّٰۤی اِذَا رَاَوْا مَا یُوْعَدُوْنَ فَسَیَعْلَمُوْنَ مَنْ اَضْعَفُ نَاصِرًا وَّاَقَلُّ عَدَدًا ۟

இறுதியாக, அவர்கள் தாங்கள் எச்சரிக்கப்பட்டதை (கண்கூடாக) பார்த்தால் அவர்கள் அறி(ந்து கொள்)வார்கள், எவர் உதவியாளரால் மிக பலவீனமானவர், எண்ணிக்கையால் மிக குறைவானவர் என்று. info
التفاسير: |

external-link copy
25 : 72

قُلْ اِنْ اَدْرِیْۤ اَقَرِیْبٌ مَّا تُوْعَدُوْنَ اَمْ یَجْعَلُ لَهٗ رَبِّیْۤ اَمَدًا ۟

(நபியே!) கூறுவீராக! நீங்கள் எச்சரிக்கப்படுவது சமீபமாக உள்ளதா அல்லது அதற்கு என் இறைவன் ஒரு அவகாசத்தை ஆக்கி இருக்கின்றானா? என்று நான் அறியமாட்டேன். info
التفاسير: |

external-link copy
26 : 72

عٰلِمُ الْغَیْبِ فَلَا یُظْهِرُ عَلٰی غَیْبِهٖۤ اَحَدًا ۟ۙ

(அவன்தான்) மறைவான ஞானங்களை நன்கறிந்தவன். அவன் தன் மறைவான ஞானங்களை ஒருவருக்கும் வெளிப்படுத்த மாட்டான். info
التفاسير: |

external-link copy
27 : 72

اِلَّا مَنِ ارْتَضٰی مِنْ رَّسُوْلٍ فَاِنَّهٗ یَسْلُكُ مِنْ بَیْنِ یَدَیْهِ وَمِنْ خَلْفِهٖ رَصَدًا ۟ۙ

(எனினும்,) அவன் (தனது) தூதர்களில் எவர்களை திருப்திகொண்டானோ அவர்களைத் தவிர. (அவர்களுக்கு மட்டும் தன் ஞானத்தில் சிலவற்றை வெளிப்படுத்துவான்.) நிச்சயமாக அவன் அவர்களுக்கு முன்னும் அவர்களுக்குப் பின்னும் பாதுகாவலர்களை அனுப்புவான். info
التفاسير: |

external-link copy
28 : 72

لِّیَعْلَمَ اَنْ قَدْ اَبْلَغُوْا رِسٰلٰتِ رَبِّهِمْ وَاَحَاطَ بِمَا لَدَیْهِمْ وَاَحْصٰی كُلَّ شَیْءٍ عَدَدًا ۟۠

அவர்கள் (-முந்திய தூதர்கள் எல்லோரும்) தங்கள் இறைவனின் தூதுத்துவ செய்திகளை திட்டமாக எடுத்துரைத்தார்கள் என்று அவர் (-முஹம்மது நபி) அறிவதற்காக (அவன் தூதர்களுக்கு முன்னும் பின்னும் பாதுகாவலர்களை அனுப்பி வைத்தான்). இன்னும், அவன் அவர்களிடம் உள்ளவற்றை சூழ்ந்து அறிவான். இன்னும் எல்லா பொருள்களையும் அவன் எண்ணிக்கையால் (அவை என்னென்ன, எத்தனை என துல்லியமாக) கணக்கிட்டுள்ளான். info
التفاسير: |
prev

அல்ஜின்

next