Check out the new design

ಪವಿತ್ರ ಕುರ್‌ಆನ್ ಅರ್ಥಾನುವಾದ - ಅಲ್-ಮುಖ್ತಸರ್ ಫಿ ತಫ್ಸೀರಿಲ್ ಕುರ್‌ಆನಿಲ್ ಕರೀಮ್ - ತಮಿಳು ಅನುವಾದ * - ಅನುವಾದಗಳ ವಿಷಯಸೂಚಿ


ಅರ್ಥಗಳ ಅನುವಾದ ಅಧ್ಯಾಯ: ಅಲ್ -ಬಯ್ಯಿನ   ಶ್ಲೋಕ:

அல்பையினாஹ்

ಅಧ್ಯಾಯದ ಉದ್ದೇಶಗಳು:
بيان كمال الرسالة المحمدية ووضوحها.
நபி முஹம்மத்(ஸல்) அவர்களின் தூதுப்பணியின் பரிபூரணத்துவம், தெளிவு என்பவற்றைத் தெளிவுபடுத்தல்

لَمْ یَكُنِ الَّذِیْنَ كَفَرُوْا مِنْ اَهْلِ الْكِتٰبِ وَالْمُشْرِكِیْنَ مُنْفَكِّیْنَ حَتّٰی تَاْتِیَهُمُ الْبَیِّنَةُ ۟ۙ
98.1. யூதர்கள், கிறிஸ்தவர்கள், இணைவைப்பாளர்கள் ஆகியோரிலுள்ள நிராகரிப்பாளர்கள் பிரிவுபட்டவர்களாக தாங்கள் ஒன்றுபட்டுள்ள நிராகரிப்பை தெளிவான ஆதாரம் தங்களிடம் வரும்வரை விட்டுவிடக்கூடியவர்கள் அல்ல.
ಅರಬ್ಬಿ ವ್ಯಾಖ್ಯಾನಗಳು:
رَسُوْلٌ مِّنَ اللّٰهِ یَتْلُوْا صُحُفًا مُّطَهَّرَةً ۟ۙ
98.2. இந்த தெளிவான ஆதாரம் அல்லாஹ்வின் தூதராவார். தூய்மையானவர்கள் மட்டுமே தொடக்கூடிய பரிசுத்தமான வேதங்களை ஓதுபவராக அவரை அனுப்பினான்.
ಅರಬ್ಬಿ ವ್ಯಾಖ್ಯಾನಗಳು:
فِیْهَا كُتُبٌ قَیِّمَةٌ ۟ؕ
98.3. அந்த வேதங்களில் உண்மையான செய்திகளும் நீதிமிக்க சட்டங்களும் இருக்கின்றன. அவை மக்களுக்கு நேர்வழி, நன்மையின் பக்கம் வழிகாட்டுகின்றன.
ಅರಬ್ಬಿ ವ್ಯಾಖ್ಯಾನಗಳು:
وَمَا تَفَرَّقَ الَّذِیْنَ اُوْتُوا الْكِتٰبَ اِلَّا مِنْ بَعْدِ مَا جَآءَتْهُمُ الْبَیِّنَةُ ۟ؕ
98.4. தவ்ராத் வழங்கப்பட்ட யூதர்களும் இன்ஜீல் வழங்கப்பட்ட கிறிஸ்தவர்களும் அல்லாஹ் தங்களிடம் நபியை அனுப்பிய பின்னரே கருத்துவேறுபாடு கொண்டார்கள். அவர்களில் சிலர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். சிலர் நபி உண்மையானவர் என்பதை அறிந்துகொண்டே நிராகரிப்பில் நிலைத்திருந்தார்கள்.
ಅರಬ್ಬಿ ವ್ಯಾಖ್ಯಾನಗಳು:
وَمَاۤ اُمِرُوْۤا اِلَّا لِیَعْبُدُوا اللّٰهَ مُخْلِصِیْنَ لَهُ الدِّیْنَ ۙ۬— حُنَفَآءَ وَیُقِیْمُوا الصَّلٰوةَ وَیُؤْتُوا الزَّكٰوةَ وَذٰلِكَ دِیْنُ الْقَیِّمَةِ ۟ؕ
98.5. யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் பிடிவாதம் பின்வரும் விஷயத்தில் வெளிப்படுகிறது. அவர்கள் தங்களின் வேதங்களில் ஏவப்பட்டுள்ளவாறே - அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும், அவனுக்கு இணையாக்குவதை விட்டும் தவிர்ந்து இருக்க வேண்டும், தொழுகை நிலைநாட்ட வேண்டும், ஸகாத்தை வழங்க வேண்டும் என்றுதான் இந்த குர்ஆனிலும் ஏவப்பட்டுள்ளார்கள். அவர்கள் எதைக் கொண்டு ஏவப்பட்டுள்ளார்களோ அதுதான் எவ்வித கோணலுமற்ற நேரான மார்க்கமாகும்.
ಅರಬ್ಬಿ ವ್ಯಾಖ್ಯಾನಗಳು:
ಈ ಪುಟದಲ್ಲಿರುವ ಶ್ಲೋಕಗಳ ಉಪಯೋಗಗಳು:
• فضل ليلة القدر على سائر ليالي العام.
1. லைலத்துல் கத்ர் என்னும் இரவு வருடத்தின் அனைத்து இரவுகளையும்விடச் சிறந்ததாகும்.

• الإخلاص في العبادة من شروط قَبولها.
2. அல்லாஹ்வை மட்டுமே உளப்பூர்வமாக வணங்குவது அது ஏற்றுக் கொள்ளப்படுவதற்கான நிபந்தனைகளில் ஒன்றாகும்.

• اتفاق الشرائع في الأصول مَدعاة لقبول الرسالة.
4. அனைத்து மார்க்கங்களும் அடிப்படைகளில் உடன்படுவது தூதுத்துவத்தை ஏற்றுக்கொள்வதற்கு தூண்டக்கூடியதாகும்.

 
ಅರ್ಥಗಳ ಅನುವಾದ ಅಧ್ಯಾಯ: ಅಲ್ -ಬಯ್ಯಿನ
ಅಧ್ಯಾಯಗಳ ವಿಷಯಸೂಚಿ ಪುಟ ಸಂಖ್ಯೆ
 
ಪವಿತ್ರ ಕುರ್‌ಆನ್ ಅರ್ಥಾನುವಾದ - ಅಲ್-ಮುಖ್ತಸರ್ ಫಿ ತಫ್ಸೀರಿಲ್ ಕುರ್‌ಆನಿಲ್ ಕರೀಮ್ - ತಮಿಳು ಅನುವಾದ - ಅನುವಾದಗಳ ವಿಷಯಸೂಚಿ

ಪ್ರಕಾಶನ - ಕುರ್‌ಆನ್ ತಫ್ಸೀರ್ ಸ್ಟಡಿ ಸೆಂಟರ್

ಮುಚ್ಚಿ