ಪವಿತ್ರ ಕುರ್‌ಆನ್ ಅರ್ಥಾನುವಾದ - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

ಪುಟ ಸಂಖ್ಯೆ:close

external-link copy
23 : 3

اَلَمْ تَرَ اِلَی الَّذِیْنَ اُوْتُوْا نَصِیْبًا مِّنَ الْكِتٰبِ یُدْعَوْنَ اِلٰی كِتٰبِ اللّٰهِ لِیَحْكُمَ بَیْنَهُمْ ثُمَّ یَتَوَلّٰی فَرِیْقٌ مِّنْهُمْ وَهُمْ مُّعْرِضُوْنَ ۟

வேதத்தில் ஒரு பகுதி கொடுக்கப்பட்டவர்களை (நபியே! நீர்) கவனிக்கவில்லையா? அல்லாஹ்வின் வேதத்தின் பக்கம் அது அவர்களுக்கு மத்தியில் தீர்ப்பளிப்பதற்கு அழைக்கப்படுகிறார்கள். பிறகு, அவர்களில் ஒரு பிரிவினர் விலகிவிடுகிறார்கள். அவர்கள் (எப்போதும் சத்தியத்தை) புறக்கணிப்பவர்களே. info
التفاسير:

external-link copy
24 : 3

ذٰلِكَ بِاَنَّهُمْ قَالُوْا لَنْ تَمَسَّنَا النَّارُ اِلَّاۤ اَیَّامًا مَّعْدُوْدٰتٍ ۪— وَّغَرَّهُمْ فِیْ دِیْنِهِمْ مَّا كَانُوْا یَفْتَرُوْنَ ۟

இது, "சில நாட்களைத் தவிர (நரக) நெருப்பு எங்களை அறவே தீண்டாது" என்று நிச்சயமாக அவர்கள் கூறிய காரணத்தாலாகும். தங்கள் மார்க்கத்தில் (அவர்கள்) பொய் கூறுபவர்களாக இருந்தது, அவர்களை ஏமாற்றிவிட்டது. info
التفاسير:

external-link copy
25 : 3

فَكَیْفَ اِذَا جَمَعْنٰهُمْ لِیَوْمٍ لَّا رَیْبَ فِیْهِ ۫— وَوُفِّیَتْ كُلُّ نَفْسٍ مَّا كَسَبَتْ وَهُمْ لَا یُظْلَمُوْنَ ۟

(நபியே!) அறவே அதில் சந்தேகமில்லாத ஒரு நாளில் நாம் அவர்களை ஒன்று சேர்த்து, எல்லா ஆத்மாவும் தான் செய்ததற்கு முழுமையாக (கூலி) அளிக்கப்பட்டால் (அவர்களின் நிலைமை) எப்படி இருக்கும்? (அந்நாளில்) அவர்கள் அநீதி இழைக்கப்படமாட்டார்கள். info
التفاسير:

external-link copy
26 : 3

قُلِ اللّٰهُمَّ مٰلِكَ الْمُلْكِ تُؤْتِی الْمُلْكَ مَنْ تَشَآءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَآءُ ؗ— وَتُعِزُّ مَنْ تَشَآءُ وَتُذِلُّ مَنْ تَشَآءُ ؕ— بِیَدِكَ الْخَیْرُ ؕ— اِنَّكَ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟

(நபியே!) கூறுவீராக: "அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் உரிமையாளனே! நாடியவருக்கு ஆட்சியைக் கொடுக்கிறாய்; நாடியவரிடமிருந்து ஆட்சியை பறிக்கிறாய்; நாடியவரை கண்ணியப்படுத்துகிறாய்; நாடியவரை இழிவுபடுத்துகிறாய்; நன்மை உன் கையில்தான் இருக்கிறது; நிச்சயமாக நீ எல்லாப் பொருளின் மீதும் பேராற்றலுடையவன்." info
التفاسير:

external-link copy
27 : 3

تُوْلِجُ الَّیْلَ فِی النَّهَارِ وَتُوْلِجُ النَّهَارَ فِی الَّیْلِ ؗ— وَتُخْرِجُ الْحَیَّ مِنَ الْمَیِّتِ وَتُخْرِجُ الْمَیِّتَ مِنَ الْحَیِّ ؗ— وَتَرْزُقُ مَنْ تَشَآءُ بِغَیْرِ حِسَابٍ ۟

இரவைப் பகலில் நுழைக்கிறாய்; பகலை இரவில் நுழைக்கிறாய்; இறந்ததிலிருந்து உயிருள்ளதை வெளியாக்குகிறாய்; உயிருள்ளதிலிருந்து இறந்ததை வெளியாக்குகிறாய்; நீ நாடியவருக்கு கணக்கின்றி வழங்குகிறாய். info
التفاسير:

external-link copy
28 : 3

لَا یَتَّخِذِ الْمُؤْمِنُوْنَ الْكٰفِرِیْنَ اَوْلِیَآءَ مِنْ دُوْنِ الْمُؤْمِنِیْنَ ۚ— وَمَنْ یَّفْعَلْ ذٰلِكَ فَلَیْسَ مِنَ اللّٰهِ فِیْ شَیْءٍ اِلَّاۤ اَنْ تَتَّقُوْا مِنْهُمْ تُقٰىةً ؕ— وَیُحَذِّرُكُمُ اللّٰهُ نَفْسَهٗ ؕ— وَاِلَی اللّٰهِ الْمَصِیْرُ ۟

நம்பிக்கையாளர்கள் நம்பிக்கையாளர்களைத் தவிர நிராகரிப்பாளர்களை பாதுகாவலர்களாக (உதவியாளர்களாக) எடுத்துக்கொள்ள வேண்டாம். எவர் இதைச் செய்வாரோ அவர் அல்லாஹ்விடம் எதிலுமில்லை. (அல்லாஹ்வின் மார்க்கத்தை விட்டு நீங்கியவர் ஆவார்.) நீங்கள் (அவர்களின் ஆதிக்கத்தில் இருந்து) அவர்களை கடுமையாக அஞ்சினால் தவிர (அப்படி செய்யாதீர்கள்). அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களை எச்சரிக்கிறான். அல்லாஹ்வின் பக்கம்தான் மீளுமிடம் இருக்கிறது. info
التفاسير:

external-link copy
29 : 3

قُلْ اِنْ تُخْفُوْا مَا فِیْ صُدُوْرِكُمْ اَوْ تُبْدُوْهُ یَعْلَمْهُ اللّٰهُ ؕ— وَیَعْلَمُ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ؕ— وَاللّٰهُ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟

(நபியே!) கூறுவீராக: உங்கள் நெஞ்சங்களிலுள்ளதை நீங்கள் மறைத்தாலும் அல்லது அதை வெளிப்படுத்தினாலும் அல்லாஹ் அதை அறிவான். இன்னும் வானங்களில் உள்ளதையும், பூமியில் உள்ளதையும் (அவன்) அறிவான். அல்லாஹ் எல்லாப் பொருள் மீதும் பேராற்றலுடையவன். info
التفاسير: