Check out the new design

വിശുദ്ധ ഖുർആൻ പരിഭാഷ - അൽ മുഖ്തസ്വർ ഫീ തഫ്സീറിൽ ഖുർആനിൽ കരീം (തമിഴ് വിവർത്തനം) * - വിവർത്തനങ്ങളുടെ സൂചിക


പരിഭാഷ അദ്ധ്യായം: ഇസ്റാഅ്   ആയത്ത്:
وَمَا مَنَعَنَاۤ اَنْ نُّرْسِلَ بِالْاٰیٰتِ اِلَّاۤ اَنْ كَذَّبَ بِهَا الْاَوَّلُوْنَ ؕ— وَاٰتَیْنَا ثَمُوْدَ النَّاقَةَ مُبْصِرَةً فَظَلَمُوْا بِهَا ؕ— وَمَا نُرْسِلُ بِالْاٰیٰتِ اِلَّا تَخْوِیْفًا ۟
17.59. தூதரை உண்மைப்படுத்த இணைவைப்பாளர்கள் கோரும் இறந்தவர்களை உயிர்ப்பித்தல் போன்ற பௌதீக சான்றுகளை நாம் இறக்காமல் இருப்பது, நாம் முந்தைய சமூகங்களின் மீது அவற்றை இறக்கியும் அவர்கள் நம்பிக்கைகொள்ளாமல் அவற்றை நிராகரித்து விட்டார்கள் என்பதானால்தான். நாம் ஸமூத் சமூகத்திற்கு பெண் ஒட்டகம் என்னும் மிகப் பெரும், தெளிவான சான்றை இறக்கினோம். அவர்கள் அதனை நிராகரித்தார்கள். நாம் அவர்களை உடனடியாகத் தண்டித்தோம். நாம் தூதர்களுக்கு சான்றுகளைக் கொடுத்து அனுப்புவது அவர்களது சமூகத்தை அச்சுறுத்துவதற்கே. அவர்கள் அதனால் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளலாமல்லவா.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
وَاِذْ قُلْنَا لَكَ اِنَّ رَبَّكَ اَحَاطَ بِالنَّاسِ ؕ— وَمَا جَعَلْنَا الرُّءْیَا الَّتِیْۤ اَرَیْنٰكَ اِلَّا فِتْنَةً لِّلنَّاسِ وَالشَّجَرَةَ الْمَلْعُوْنَةَ فِی الْقُرْاٰنِ ؕ— وَنُخَوِّفُهُمْ ۙ— فَمَا یَزِیْدُهُمْ اِلَّا طُغْیَانًا كَبِیْرًا ۟۠
17.60. -தூதரே!- நாம் உம்மிடம் கூறியதை நினைவு கூர்வீராக: “உம் இறைவன் தன் வல்லமையால் மக்கள் அனைவரையும் சூழ்ந்துள்ளான். அவர்கள் அவனுடைய பிடியில்தான் இருக்கிறார்கள். அவர்களிடமிருந்து அல்லாஹ் உம்மைப் பாதுகாப்பான். எனவே உமக்குக் கட்டளையிடப்பட்டதை எடுத்துரைத்து விடுவீராக. மக்கள் ஏற்றுக்கொள்கிறார்களா? அல்லது நிராகரிக்கிறார்களா? என்பதைச் சோதிப்பதற்கே இராப்பயணத்தில் நீர் கண்டவற்றை உமக்குக் காட்டினோம். நிச்சயமாக நரகத்தின் அடித்தளத்திலிருந்து வளரும் என்று நாம் குர்ஆனில் கூறிய ஸக்கூம் என்னும் மரத்தையும் அவர்களுக்கு சோதனையாகவே ஆக்கியுள்ளோம். அவர்கள் இந்த இரண்டு அத்தாட்சிகளையும் நம்பவில்லையெனில் மற்றவற்றை நம்ப மாட்டார்கள். நாம் சான்றுகளை இறக்கி அவர்களை அச்சமூட்டுகின்றோம். ஆனால் அத்தாட்சிகளை இறக்கி அச்சுறுத்தினாலும் அவர்கள் மென்மேலும் நிராகரிப்பிலும் வழிகேட்டில் பிடிவாதமாகவுமே உள்ளனர்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
وَاِذْ قُلْنَا لِلْمَلٰٓىِٕكَةِ اسْجُدُوْا لِاٰدَمَ فَسَجَدُوْۤا اِلَّاۤ اِبْلِیْسَ ؕ— قَالَ ءَاَسْجُدُ لِمَنْ خَلَقْتَ طِیْنًا ۟ۚ
17.61. -தூதரே!- நாம் வானவர்களிடம், “ஆதமுக்கு முகமன் கூறும் விதமாக (வணங்கும் விதமாக அல்லாமல்) அவருக்கு சிரம்பணியுங்கள்” என்று கூறியதை நினைவு கூர்வீராக. அவர்கள் அனைவரும் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து ஆதமுக்கு சிரம்பணிந்தார்கள். ஆனால் இப்லீஸ் கர்வத்தினால் சிரம்பணிய மறுத்துவிட்டான். “நீ மண்ணால் படைத்த மனிதனுக்கு நான் சிரம்பணிவதா? என்னை நீ நெருப்பால் படைத்துள்ளாய். நான் அவனைவிட சிறந்தவன்” என்று கூறினான்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
قَالَ اَرَءَیْتَكَ هٰذَا الَّذِیْ كَرَّمْتَ عَلَیَّ ؗ— لَىِٕنْ اَخَّرْتَنِ اِلٰی یَوْمِ الْقِیٰمَةِ لَاَحْتَنِكَنَّ ذُرِّیَّتَهٗۤ اِلَّا قَلِیْلًا ۟
17.62. இப்லீஸ் தன் இறைவனிடம் கூறினான்: “நீ எனக்கு சிரம்பணியுமாறு கட்டளையிட்டு கௌரவித்த இந்தப் படைப்பை நீ பார்த்தாயா? இந்த உலக வாழ்வின் இறுதிவரை உயிருடன் என்னை வாழவைத்தால், அவரது சந்ததியினரை கவர்ந்திழுத்து நேரான பாதையை விட்டும் நெறிபிறழச் செய்வேன். அவர்களில் நீ பாதுகாத்த சிலரைத் தவிர. அவர்களே உனது தூய்மையான அடியார்கள்.”
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
قَالَ اذْهَبْ فَمَنْ تَبِعَكَ مِنْهُمْ فَاِنَّ جَهَنَّمَ جَزَآؤُكُمْ جَزَآءً مَّوْفُوْرًا ۟
17.63. அவனது இறைவன் அவனிடம் கூறினான்: “நீயும் அவர்களில் உன்னைப் பின்பற்றியவர்களும் சென்றுவிடவும். நரகமே உனக்கும் அவர்களுக்குமுரிய கூலியாகும். அது உங்களது செயல்களுக்குரிய பரிபூரணமான கூலியாகும்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
وَاسْتَفْزِزْ مَنِ اسْتَطَعْتَ مِنْهُمْ بِصَوْتِكَ وَاَجْلِبْ عَلَیْهِمْ بِخَیْلِكَ وَرَجِلِكَ وَشَارِكْهُمْ فِی الْاَمْوَالِ وَالْاَوْلَادِ وَعِدْهُمْ ؕ— وَمَا یَعِدُهُمُ الشَّیْطٰنُ اِلَّا غُرُوْرًا ۟
17.64. பாவத்துக்கு அழைக்கும் உன் குரலால் அவர்களில் உன்னால் ஏமாற்ற முடிந்தவர்களை ஏமாற்றிக்கொள். உனக்குக் கட்டுப்படுமாறு அழைப்பு விடுக்கும் உன் குதிரைப்படைகளையும் காலாட்படைகளையும் அவர்கள் மீது ஏவி உன்பக்கம் அவர்களை ஈர்த்துக்கொள். மார்க்கத்திற்கு முரணான கொடுக்கல் வாங்கல்களை அவர்களுக்கு அலங்கரித்து அவர்களுடைய செல்வங்களில் கூட்டுச்சேர்ந்து கொள். தம்முடைய பிள்ளையல்லாதவர்களைப் பொய்யாக தமது பிள்ளையெ வாதிட வைத்தும், விபச்சாரத்தின் மூலம் பிள்ளைகளைப் பெறச் செய்வதன் மூலமும் அல்லாஹ் அல்லாதவருக்கு அவர்களை அடிமைப்படுத்தி பெயர் வைப்பதன் மூலமும் அவர்களின் பிள்ளைகளிலும் பங்கெடுத்துக் கொள். பொய்யான வாக்குறுதிகளையும் தவறான ஆசைகளையும் அவர்களுக்கு அலங்கரித்துக் காட்டு. ஷைத்தான் அவர்களுக்கு அளிக்கும் வாக்குறுதி அவர்களை ஏமாற்றும் பொய்யான வாக்குறுதிகளே அன்றி வேறில்லை.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
اِنَّ عِبَادِیْ لَیْسَ لَكَ عَلَیْهِمْ سُلْطٰنٌ ؕ— وَكَفٰی بِرَبِّكَ وَكِیْلًا ۟
17.65. -இப்லீஸே!- என் மீது நம்பிக்கைகொண்டு எனக்குக் கட்டுப்பட்ட, அமல் செய்த அடியார்கள் மீது உன் ஆதிக்கம் செல்லுபடியாகாது.” ஏனெனில் அல்லாஹ் அவர்களை விட்டும் உனது தீங்கை தடுத்து விடுகிறான். தம்முடைய எல்லா விவகாரங்களிலும் அல்லாஹ்வையே சார்ந்திருப்போருக்கு பொறுப்பேற்க அல்லாஹ்வே போதுமானவன்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
رَبُّكُمُ الَّذِیْ یُزْجِیْ لَكُمُ الْفُلْكَ فِی الْبَحْرِ لِتَبْتَغُوْا مِنْ فَضْلِهٖ ؕ— اِنَّهٗ كَانَ بِكُمْ رَحِیْمًا ۟
17.66. -மனிதர்களே!- நீங்கள் வியாபாரத்தினால் கிடைக்கும் இலாபம் மற்றும் இன்னபிற விஷயங்களின் மூலம் இறைவனின் வாழ்வாதாரத்தை தேடுவதற்காக அவனே கடலில் உங்களுக்காக கப்பல்களைச் ஓடச்செய்கிறான். நிச்சயமாக அவன் உங்கள் மீது மிகுந்த கருணையாளனாக இருப்பதனால்தான் இந்த சாதனங்களையெல்லாம் உங்களுக்கு இலகுபடுத்தித் தந்துள்ளான்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
ഈ പേജിലെ ആയത്തുകളിൽ നിന്നുള്ള പാഠങ്ങൾ:
• من رحمة الله بالناس عدم إنزاله الآيات التي يطلبها المكذبون حتى لا يعاجلهم بالعقاب إذا كذبوا بها.
1. பொய்பிப்பவர்கள் கோரும் சான்றுகளை இறக்காமலிருப்பது அல்லாஹ் மனிதர்கள் மேல் கொண்ட கருணையாகும். அவ்வாறு இறக்கப்பட்டு அவர்கள் அவற்றை மறுத்தால் அவர்கள் உடனுக்குடன் தண்டிக்கப்பட்டு விடுவார்கள்.

• ابتلى الله العباد بالشيطان الداعي لهم إلى معصية الله بأقواله وأفعاله.
2. தன் சொல்லாலும் செயலாலும் பாவத்தின்பால் அழைக்கும் ஷைத்தானைக்கொண்டு அல்லாஹ் அடியார்களை சோதிக்கிறான்.

• من صور مشاركة الشيطان للإنسان في الأموال والأولاد: ترك التسمية عند الطعام والشراب والجماع، وعدم تأديب الأولاد.
3. மனிதனின் செல்வங்களிலும் பிள்ளைகளிலும் ஷைத்தான் பங்குபெறுவதின் சில வடிவங்கள், சாப்பிடும் போதும், தண்ணீர் குடிக்கும் போதும் உடலுறவுகொள்ளும் போதும் அல்லாஹ்வின் பெயரை கூறாமை, பிள்ளைகளை ஒழுக்கமாக வளர்க்காமை என்பனவாகும்.

 
പരിഭാഷ അദ്ധ്യായം: ഇസ്റാഅ്
സൂറത്തുകളുടെ സൂചിക പേജ് നമ്പർ
 
വിശുദ്ധ ഖുർആൻ പരിഭാഷ - അൽ മുഖ്തസ്വർ ഫീ തഫ്സീറിൽ ഖുർആനിൽ കരീം (തമിഴ് വിവർത്തനം) - വിവർത്തനങ്ങളുടെ സൂചിക

മർകസ് തഫ്സീർ പുറത്തിറക്കിയത്.

അടക്കുക