Check out the new design

വിശുദ്ധ ഖുർആൻ പരിഭാഷ - ഖുർആൻ സംക്ഷിപ്ത വിശദീകരണം - പരിഭാഷ (തമിഴ്) * - വിവർത്തനങ്ങളുടെ സൂചിക


പരിഭാഷ അദ്ധ്യായം: ഇസ്റാഅ്   ആയത്ത്:
وَاِذَا مَسَّكُمُ الضُّرُّ فِی الْبَحْرِ ضَلَّ مَنْ تَدْعُوْنَ اِلَّاۤ اِیَّاهُ ۚ— فَلَمَّا نَجّٰىكُمْ اِلَی الْبَرِّ اَعْرَضْتُمْ ؕ— وَكَانَ الْاِنْسَانُ كَفُوْرًا ۟
17.67. -இணைவைப்பாளர்களே!- கடலில் உங்களுக்கு ஏதேனும் துன்பம் ஏற்பட்டு, அதனால் அழிந்து விடுவீர்கள் என்று நீங்கள் அஞ்சும் போது அல்லாஹ்வை விடுத்து நீங்கள் வணங்கிக் கொண்டிருந்த தெய்வங்கள் எல்லாம் உங்களின் சிந்தனையை விட்டு அகன்று விடுகின்றன. நீங்கள் அப்போது அல்லாஹ்விடம் மட்டுமே நினைத்து அவனிடம் உதவி கோருகிறீர்கள். அவன் உங்களுக்கு உதவி செய்து, நீங்கள் அஞ்சும் விஷயத்திலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கரைசேர்த்து விட்டால் நீங்கள் அவன் மட்டுமே வணக்கத்திற்குத் தகுதியானவன் என்பதையும் அவனை மாத்திரமே அழைத்துப் பிரார்த்திப்பதையும் புறக்கணித்து, உங்களின் சிலைகளின்பால் திரும்பி விடுகிறீர்கள். மனிதன் அல்லாஹ்வின் அருட்கொடைகளை மிகவும் அதிகமாக மறுக்கக்கூடியவனாக இருக்கின்றான்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
اَفَاَمِنْتُمْ اَنْ یَّخْسِفَ بِكُمْ جَانِبَ الْبَرِّ اَوْ یُرْسِلَ عَلَیْكُمْ حَاصِبًا ثُمَّ لَا تَجِدُوْا لَكُمْ وَكِیْلًا ۟ۙ
17.68. -இணைவைப்பாளர்களே!- அவன் உங்களைக் காப்பாற்றி கரைசேர்த்த போது எங்களை அதில் புதையச் செய்திடுவான் என்பதைக் குறித்து அச்சமற்று இருக்கிறீர்களா? அல்லது லூத்துடைய சமூகத்தனரின் மீது கல்மழையைப் பொழியச் செய்தது போன்று உங்கள் மீதும் கல்மழையைப் பொழியச் செய்திடுவான் என்பதைக் குறித்து அச்சமற்று இருக்கிறீர்களா? பின்னர் உங்களைப் பாதுகாக்கக் கூடிய பாதுகாவலரையோ அழிவிலிருந்து உங்களை தடுத்து உதவி செய்யக் கூடியவரையோ நீங்கள் பெற்றுக்கொள்ள மாட்டீர்கள்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
اَمْ اَمِنْتُمْ اَنْ یُّعِیْدَكُمْ فِیْهِ تَارَةً اُخْرٰی فَیُرْسِلَ عَلَیْكُمْ قَاصِفًا مِّنَ الرِّیْحِ فَیُغْرِقَكُمْ بِمَا كَفَرْتُمْ ۙ— ثُمَّ لَا تَجِدُوْا لَكُمْ عَلَیْنَا بِهٖ تَبِیْعًا ۟
17.69. அல்லது முதலில் உங்களைப் பாதுகாத்த அல்லாஹ்வின் அருளை நீங்கள் நிராகரித்து நடந்துகொண்டதனால் உங்களை அவன் மீண்டும் கடலுக்கு திரும்பச்செய்து கடும் காற்றை அனுப்பி உங்களை மூழ்கடித்துவிடலாம் என்பதைக்குறித்து அச்சமற்று இருக்கிறீர்களா? பின்னர் நாம் உங்களுக்குச் செய்ததைக் குறித்து நம்மிடம் உங்களுக்குச் சார்பாக கேள்விகேட்பவர் எவரையும் நீங்கள் பெறமாட்டீர்கள்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
وَلَقَدْ كَرَّمْنَا بَنِیْۤ اٰدَمَ وَحَمَلْنٰهُمْ فِی الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنٰهُمْ مِّنَ الطَّیِّبٰتِ وَفَضَّلْنٰهُمْ عَلٰی كَثِیْرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِیْلًا ۟۠
17.70. நாம் ஆதமின் மக்களை பகுத்தறிவின் மூலமும், வானவர்களை அவர்களின் தந்தைக்கு சிரம்பணிய வைத்தது போன்ற ஏனையவற்றைக்கொண்டும் சிறப்பித்துள்ளோம். தரைமார்க்கமாக அவர்களை ஏந்திச் செல்லும் விலங்குகளையும், வாகனங்களையும் கடலில் அவர்களைச் சுமந்து செல்லும் கப்பல்களையும் அவர்களுக்காக நாம் வசப்படுத்திக் கொடுத்துள்ளோம். தூய்மையான உணவு, பானம், திருமணஉறவு போன்றனவற்றை அவர்களுக்கு வழங்கியுள்ளோம். எங்களுடைய படைப்பினங்களில் அதிகமானவற்றை விடவும் நாம் அவர்களை அதிகமாகச் சிறப்பித்துள்ளோம். எனவே அவர்கள் மீது அல்லாஹ் புரிந்த அருட்கொடைகளுக்கு அவர்கள் நன்றிசெலுத்த வேண்டும்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
یَوْمَ نَدْعُوْا كُلَّ اُنَاسٍ بِاِمَامِهِمْ ۚ— فَمَنْ اُوْتِیَ كِتٰبَهٗ بِیَمِیْنِهٖ فَاُولٰٓىِٕكَ یَقْرَءُوْنَ كِتٰبَهُمْ وَلَا یُظْلَمُوْنَ فَتِیْلًا ۟
17.71. -தூதரே!- நாம் ஒவ்வொரு கூட்டத்தினரையும் அவர்கள் உலகில் பின்பற்றிய அதனது தலைவருடன் அழைக்கும் நாளை நினைவுகூர்வீராக. யாருடைய செயல்பதிவேடு அவருடைய வலது கையில் கொடுக்கப்படுமோ அவர்கள் தங்களின் செயல்பதிவேடுகளை மகிழ்ச்சியாகப் படிப்பார்கள். அவர்கள் செய்த நன்மைகளில் எதையும் அவர்கள் குறைவாகப் பெற மாட்டார்கள். அது பேரீச்சம் பழத்தின் கொட்டையின் மீதுள்ள தோலின் அளவு சிறிதாக இருந்தாலும் சரியே.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
وَمَنْ كَانَ فِیْ هٰذِهٖۤ اَعْمٰی فَهُوَ فِی الْاٰخِرَةِ اَعْمٰی وَاَضَلُّ سَبِیْلًا ۟
17.72. இந்த உலகத்தில் சத்தியத்தை ஏற்காமல், அதற்குக் கட்டுப்படாமல் குருட்டு இதயத்தோடு வாழ்ந்தவர் மறுமை நாளில் அதைவிடக் கடும் குருடராக இருப்பார். அவரால் சுவனத்தின் வழியைப் பெறமுடியாது. நேர்வழியை விட்டும் அவர் மிகவும் வழிகெட்டவராக இருப்பார். செயலுக்கேற்பவே கூலி வழங்கப்படும்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
وَاِنْ كَادُوْا لَیَفْتِنُوْنَكَ عَنِ الَّذِیْۤ اَوْحَیْنَاۤ اِلَیْكَ لِتَفْتَرِیَ عَلَیْنَا غَیْرَهٗ ۖۗ— وَاِذًا لَّاتَّخَذُوْكَ خَلِیْلًا ۟
17.73. -தூதரே!- நீர் இணைவைப்பாளர்களின் மனஇச்சைக்கேற்ப நம்மீது வேறொன்றை புனைந்து கூற வேண்டும் என்பதற்காக நாம் உமக்கு வஹியாக அறிவித்த குர்ஆனைவிட்டும் உம்மை திசைதிருப்ப முயன்றார்கள். அவர்கள் விரும்பியதை நீர் செய்திருந்தால் உம்மை பிரியத்திற்குரியவராக தேர்ந்தெடுத்திருப்பார்கள்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
وَلَوْلَاۤ اَنْ ثَبَّتْنٰكَ لَقَدْ كِدْتَّ تَرْكَنُ اِلَیْهِمْ شَیْـًٔا قَلِیْلًا ۟ۗۙ
17.74. நாம் உம்மை சத்தியத்தில் உறுதிப்படுத்தி உம்மீது அருள் செய்திருக்காவிட்டால், அவர்களின் பலமான தந்திரத்தினாலும் அவர்கள் நம்பிக்கை கொள்வதில் உமக்கிருந்த அதீத ஆர்வத்தினாலும் அவர்கள் உமக்குக் கூறிய ஆலோசனைகளில் நீர் அவர்களை சரிகண்டு அவர்களின்பால் சிறிதளவேனும் சாய்ந்திருப்பீர். ஆயினும் நாம் உம்மை அவர்களின் பக்கம் ஈர்க்கப்படுவதிலிருந்து காப்பாற்றினோம்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
اِذًا لَّاَذَقْنٰكَ ضِعْفَ الْحَیٰوةِ وَضِعْفَ الْمَمَاتِ ثُمَّ لَا تَجِدُ لَكَ عَلَیْنَا نَصِیْرًا ۟
17.75. அவர்கள் உமக்குக் கூறிய ஆலோசனையின்படி நீர் அவர்களின்பால் சாய்ந்திருந்தால் இவ்வுலகிலும் மறுவுலகிலும் இருமடங்கு வேதனையால் நாம் உம்மைத் தண்டித்திருப்போம். பின்னர் எங்களுக்கு எதிராக உமக்கு உதவி செய்யக்கூடிய உதவியாளரையோ வேதனையிலிருந்து உம்மைக் காப்பாற்றக்கூடியவரையோ நீர் பெற்றுக்கொள்ள மாட்டீர்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
ഈ പേജിലെ ആയത്തുകളിൽ നിന്നുള്ള പാഠങ്ങൾ:
• الإنسان كفور للنعم إلا من هدى الله.
1. மனிதன் அருட்கொடைகளை மிக அதிகமாக மறுக்கக்கூடியவனாக இருக்கின்றான். அல்லாஹ் நேர்வழிகாட்டியவர்களைத் தவிர.

• كل أمة تُدْعَى إلى دينها وكتابها، هل عملت به أو لا؟ والله لا يعذب أحدًا إلا بعد قيام الحجة عليه ومخالفته لها.
2. ஒவ்வொரு சமூகமும் அதனுடைய மார்க்கம் மற்றும் வேதத்தின்பால் அழைக்கப்படும். அவர்கள் அதனடிப்படையில் செயல்பட்டார்களா? இல்லையா? (என்று விசாரிக்கப்படுவார்கள்). அல்லாஹ் எந்த ஒரு மனிதரையும், ஆதாரம் கிடைத்த பின் அதற்கு மாற்றம் செய்தாலேயன்றி தண்டிக்க மாட்டான்.

• عداوة المجرمين والمكذبين للرسل وورثتهم ظاهرة بسبب الحق الذي يحملونه، وليس لذواتهم.
3. குற்றவாளிகளும் பொய்பித்தவர்களும் தூதர்களையும் அவர்களது வாரிசுகளையும் எதிர்ப்பது வெளிப்படையானது. அதற்குக் காரணம் அவர்கள் சுமந்திருக்கும் சத்தியமேயாகும். மாறாக அவர்களல்ல.

• الله تعالى عصم النبي من أسباب الشر ومن البشر، فثبته وهداه الصراط المستقيم، ولورثته مثل ذلك على حسب اتباعهم له.
4. அல்லாஹ் நபியை தீங்குகளின் காரணங்களிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் பாதுகாத்துள்ளான். அவரை உறுதிப்படுத்தி நேரான பாதைக்கு வழிகாட்டியுள்ளான். அவர்களது வாரிசுகள் அவர்களைப் பின்பற்றுவதற்கேற்ப அவற்றைப் பெறுவார்கள்.

 
പരിഭാഷ അദ്ധ്യായം: ഇസ്റാഅ്
സൂറത്തുകളുടെ സൂചിക പേജ് നമ്പർ
 
വിശുദ്ധ ഖുർആൻ പരിഭാഷ - ഖുർആൻ സംക്ഷിപ്ത വിശദീകരണം - പരിഭാഷ (തമിഴ്) - വിവർത്തനങ്ങളുടെ സൂചിക

മർക്കസ് തഫ്സീർ പ്രസിദ്ധീകരിച്ചത്.

അടക്കുക