Check out the new design

വിശുദ്ധ ഖുർആൻ പരിഭാഷ - ഖുർആൻ സംക്ഷിപ്ത വിശദീകരണം - പരിഭാഷ (തമിഴ്) * - വിവർത്തനങ്ങളുടെ സൂചിക


പരിഭാഷ അദ്ധ്യായം: ഖിയാമഃ   ആയത്ത്:

அல்கியாமா

സൂറത്തിൻ്റെ ഉദ്ദേശ്യങ്ങളിൽ പെട്ടതാണ്:
إظهار قدرة الله على بعث الخلق وجمعهم يوم القيامة.
மறுமையில் படைப்பினங்களை எழுப்பி அவர்களை ஒன்று சேர்ப்பதற்கான அல்லாஹ்வின் ஆற்றலை வெளிப்படுத்தல்

لَاۤ اُقْسِمُ بِیَوْمِ الْقِیٰمَةِ ۟ۙ
75.1. படைப்புகள் அனைத்தையும் படைத்துப் பராமரிக்கும் இறைவனுக்கு முன்னால் மனிதர்கள் அனைவரும் எழுந்து நிற்கும் மறுமை நாளைக் கொண்டு அல்லாஹ் சத்தியம் செய்கின்றான்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
وَلَاۤ اُقْسِمُ بِالنَّفْسِ اللَّوَّامَةِ ۟
75.2. நற்செயல்கள் புரிவதில் குறைபாடு ஏற்பட்டாலோ, தீய செயல் புரிந்தாலோ அதற்காக தன்னை நிந்திக்கும் தூய்மையான ஆன்மாவைக் கொண்டு அல்லாஹ் சத்தியம் செய்கிறான். இந்த இரண்டு விஷயங்களையும் கொண்டு அல்லாஹ் சத்தியம் செய்து மனிதர்கள் விசாரணை செய்யப்படுவதற்காகவும் கூலி கொடுக்கப்படுவதற்காகவும் மீண்டும் எழுப்பப்படுவார்கள் என்று கூறுகிறான்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
اَیَحْسَبُ الْاِنْسَانُ اَلَّنْ نَّجْمَعَ عِظَامَهٗ ۟ؕ
75.3. நாம் மனிதன் இறந்தபிறகு மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புவதற்காக அவனது எலும்புகளை ஒன்றுசேர்க்க மாட்டோம் என்று மனிதன் எண்ணிக் கொண்டானா?
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
بَلٰى قٰدِرِیْنَ عَلٰۤی اَنْ نُّسَوِّیَ بَنَانَهٗ ۟
75.4. அவ்வாறன்று. அவனது விரல்களின் நுனிகளைக்கூட முன்னர் இருந்தவாறே செவ்வையான படைப்பாக ஒன்றுசேர்ப்பதற்கு சக்தி பெற்றவர்களாவோம்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
بَلْ یُرِیْدُ الْاِنْسَانُ لِیَفْجُرَ اَمَامَهٗ ۟ۚ
75.5. மாறாக மனிதன் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை மறுத்து தொடர்ந்து எவ்வித தடையுமின்றி எதிர்காலத்தில் பாவங்கள் புரிந்துகொண்டே செல்லலாம் என்று விரும்புகிறான்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
یَسْـَٔلُ اَیَّانَ یَوْمُ الْقِیٰمَةِ ۟ؕ
75.6. மறுமை நாள் நிகழ்வதை சாத்தியமற்றதாகக் கருதி ‘அது எப்போது நிகழும்’ என்று கேட்கிறான்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
فَاِذَا بَرِقَ الْبَصَرُ ۟ۙ
75.7. தான் பொய்ப்பித்ததை அவன் காணும் வேளையில் பார்வை தடுமாறி அதிர்ச்சியடையும் போது.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
وَخَسَفَ الْقَمَرُ ۟ۙ
75.8. சந்திரனின் ஒளி இல்லாமலாகிவிடும்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
وَجُمِعَ الشَّمْسُ وَالْقَمَرُ ۟ۙ
75.9. சூரியனும் சந்திரனும் ஒன்றிணைந்துவிடும்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
یَقُوْلُ الْاِنْسَانُ یَوْمَىِٕذٍ اَیْنَ الْمَفَرُّ ۟ۚ
75.10. அந்நாளில் பாவியான மனிதன் “எங்கே தப்பிச் செல்வது” என்று கேட்பான்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
كَلَّا لَا وَزَرَ ۟ؕ
75.11. அந்த நாளில் எங்கும் தப்ப முடியாது. பாவி ஒதுங்குவதற்கு எந்த அடைக்கலமும் இருக்காது. பாதுகாப்புப் பெற எதுவும் இருக்காது.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
اِلٰى رَبِّكَ یَوْمَىِٕذِ ١لْمُسْتَقَرُّ ۟ؕ
75.12. -தூதரே!- அந்த நாளில் விசாரணை செய்யப்படுவதற்காகவும் கூலி வழங்கப்படுவதற்காகவும் உம் இறைவனின் பக்கமே திரும்ப வேண்டும்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
یُنَبَّؤُا الْاِنْسَانُ یَوْمَىِٕذٍ بِمَا قَدَّمَ وَاَخَّرَ ۟ؕ
75.13. அந்நாளில் மனிதன் தான் செய்த செயல்களைக் குறித்தும் செய்யாமல் விட்டுவிட்டவற்றைக் குறித்தும் அறிவிக்கப்படுவான்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
بَلِ الْاِنْسَانُ عَلٰی نَفْسِهٖ بَصِیْرَةٌ ۟ۙ
75.14. மாறாக மனிதன் தனக்கு எதிராக சாட்சி கூறக்கூடியவனாக இருக்கின்றான். அவன் சம்பாதித்த பாவங்கள் குறித்து அவனது உறுப்புகளே அவனுக்கு எதிராக சாட்சி கூறும்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
وَّلَوْ اَلْقٰى مَعَاذِیْرَهٗ ۟ؕ
75.15. அவன் தான் எத்தீங்கும் இழைக்கவில்லை என பல காரணங்களைக் கூறி தனக்காக வாதாடினாலும் அவை அவனுக்கு எந்தப் பயனையும் அளிக்காது.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
لَا تُحَرِّكْ بِهٖ لِسَانَكَ لِتَعْجَلَ بِهٖ ۟ؕ
75.16. -தூதரே!- உமக்கு ஒதிக்காட்டப்படும் வசனங்கள் விடுபட்டுவிடுமோ என்ற அச்சத்தில் விரைவாக உம் நாவை அசைக்காதீர்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
اِنَّ عَلَیْنَا جَمْعَهٗ وَقُرْاٰنَهٗ ۟ۚۖ
75.17. உம் உள்ளத்தில் அதனை ஒன்று சேர்த்து உம் நாவால் அதனை ஓதி உறுதிபெறச் செய்வது நிச்சயமாக நம்மீதுள்ள பொறுப்பாகும்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
فَاِذَا قَرَاْنٰهُ فَاتَّبِعْ قُرْاٰنَهٗ ۟ۚ
எமது தூதர் ஜிப்ரீல் உம்மிடம் அதனை ஓதிக்காட்டும் போது அவரது ஓதலை செவிமடுத்துக் கேட்பீராக!
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
ثُمَّ اِنَّ عَلَیْنَا بَیَانَهٗ ۟ؕ
75.19. பின்னர் அதனை உமக்கு தெளிவுபடுத்துவதும் நிச்சயமாக நம்மீதுள்ள கடமையாகும்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
ഈ പേജിലെ ആയത്തുകളിൽ നിന്നുള്ള പാഠങ്ങൾ:
• مشيئة العبد مُقَيَّدة بمشيئة الله.
1. அடியானின் விருப்பம் அல்லாஹ்வின் விருப்பத்திற்குக் கட்டுப்பட்டது.

• حرص رسول الله صلى الله عليه وسلم على حفظ ما يوحى إليه من القرآن، وتكفّل الله له بجمعه في صدره وحفظه كاملًا فلا ينسى منه شيئًا.
2. தனக்கு வஹியாக இறங்கிய குர்ஆனை மனனம் செய்வதற்கு நபியவர்கள் கொண்ட பேராசை தெளிவாகிறது. அவர்களின் உள்ளத்தில் முழுமையாக ஒன்றுசேர்த்து பாதுகாக்கும் பொறுப்பை அல்லாஹ் ஏற்றுக்கொண்டான். அவற்றில் எதுவும் மறந்து விடாது.

 
പരിഭാഷ അദ്ധ്യായം: ഖിയാമഃ
സൂറത്തുകളുടെ സൂചിക പേജ് നമ്പർ
 
വിശുദ്ധ ഖുർആൻ പരിഭാഷ - ഖുർആൻ സംക്ഷിപ്ത വിശദീകരണം - പരിഭാഷ (തമിഴ്) - വിവർത്തനങ്ങളുടെ സൂചിക

മർക്കസ് തഫ്സീർ പ്രസിദ്ധീകരിച്ചത്.

അടക്കുക