വിശുദ്ധ ഖുർആൻ പരിഭാഷ - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

പേജ് നമ്പർ:close

external-link copy
60 : 23

وَالَّذِیْنَ یُؤْتُوْنَ مَاۤ اٰتَوْا وَّقُلُوْبُهُمْ وَجِلَةٌ اَنَّهُمْ اِلٰی رَبِّهِمْ رٰجِعُوْنَ ۟ۙ

இன்னும் அவர்கள் கொடுப்பதை (-தர்மத்தை) கொடுப்பார்கள் அவர்களுடைய உள்ளங்களோ நிச்சயம் தாங்கள் தங்கள் இறைவனின் பக்கம் திரும்பக் கூடியவர்கள் என்று பயந்தவையாக இருக்கும். info
التفاسير:

external-link copy
61 : 23

اُولٰٓىِٕكَ یُسٰرِعُوْنَ فِی الْخَیْرٰتِ وَهُمْ لَهَا سٰبِقُوْنَ ۟

அவர்கள்தான் நன்மைகளில் விரைகின்றார்கள். இன்னும் அவர்கள் அவற்றுக்கு முந்தக் கூடியவர்கள். info
التفاسير:

external-link copy
62 : 23

وَلَا نُكَلِّفُ نَفْسًا اِلَّا وُسْعَهَا وَلَدَیْنَا كِتٰبٌ یَّنْطِقُ بِالْحَقِّ وَهُمْ لَا یُظْلَمُوْنَ ۟

எந்த ஓர் ஆன்மாவுக்கும் அதன் வசதிக்கு உட்பட்டே தவிர நாம் சிரமம் தருவதில்லை. நம்மிடம் (படைப்பினங்களுடைய செயல்கள் எழுதப்பட்ட) சத்தியத்தைக் கொண்டு பேசுகின்ற ஒரு புத்தகம் இருக்கின்றது. அவர்கள் அநீதியிழைக்கப்பட மாட்டார்கள். info
التفاسير:

external-link copy
63 : 23

بَلْ قُلُوْبُهُمْ فِیْ غَمْرَةٍ مِّنْ هٰذَا وَلَهُمْ اَعْمَالٌ مِّنْ دُوْنِ ذٰلِكَ هُمْ لَهَا عٰمِلُوْنَ ۟

மாறாக அவர்களது உள்ளங்கள் இதை (இந்த குர்ஆனை) விட்டு அறியாமையில் இருக்கின்றனர். அவர்களுக்கு (57லிருந்து 61வரை வர்ணிக்கப்பட்ட நல்லவர்களின் நல்ல அமல்கள் அன்றி) வேறு செயல்களும் உள்ளன. (பாவங்கள் உள்ளன) அவர்கள் அதைத்தான் செய்பவர்கள். info
التفاسير:

external-link copy
64 : 23

حَتّٰۤی اِذَاۤ اَخَذْنَا مُتْرَفِیْهِمْ بِالْعَذَابِ اِذَا هُمْ یَجْـَٔرُوْنَ ۟ؕ

இறுதியாக, அவர்களின் சுகவாசிகளை (-செல்வமும் பதவியும் உடையவர்களை) வேதனையைக் கொண்டு நாம் பிடித்தால் அப்போது அவர்கள் கதறுகின்றனர். info
التفاسير:

external-link copy
65 : 23

لَا تَجْـَٔرُوا الْیَوْمَ ۫— اِنَّكُمْ مِّنَّا لَا تُنْصَرُوْنَ ۟

இன்றைய தினம் கதறாதீர்கள். நிச்சயமாக நீங்கள் நம்மிடமிருந்து பாதுகாக்கப்பட மாட்டீர்கள். info
التفاسير:

external-link copy
66 : 23

قَدْ كَانَتْ اٰیٰتِیْ تُتْلٰی عَلَیْكُمْ فَكُنْتُمْ عَلٰۤی اَعْقَابِكُمْ تَنْكِصُوْنَ ۟ۙ

திட்டமாக எனது வசனங்கள் உங்கள் மீது ஓதப்பட்டுக் கொண்டிருந்தன. நீங்கள் உங்கள் குதிங்கால்கள் மீது பின்னோக்கி செல்பவர்களாக இருந்தீர்கள். info
التفاسير:

external-link copy
67 : 23

مُسْتَكْبِرِیْنَ ۖۚۗ— بِهٖ سٰمِرًا تَهْجُرُوْنَ ۟

அதைக் கொண்டு பெருமை அடித்தவர்களாக (உம்மை விட்டு திரும்பிச் செல்கின்றனர்). இரவில் (நிம்மதியாக இதைப்) பேசியவர்களாக (குர்ஆன் விஷயத்தில்) வீணானதைக் கூறுகின்றனர். info
التفاسير:

external-link copy
68 : 23

اَفَلَمْ یَدَّبَّرُوا الْقَوْلَ اَمْ جَآءَهُمْ مَّا لَمْ یَاْتِ اٰبَآءَهُمُ الْاَوَّلِیْنَ ۟ؗ

இந்த பேச்சை (-குர்ஆனை) இவர்கள் ஆழ்ந்து ஆராய வேண்டாமா? அல்லது இவர்களது முன்னோர்களான மூதாதைகளுக்கு வராதது இவர்களிடம் வந்ததா? (அதனால் அவர்கள் புறக்கணிக்கின்றனரா?) info
التفاسير:

external-link copy
69 : 23

اَمْ لَمْ یَعْرِفُوْا رَسُوْلَهُمْ فَهُمْ لَهٗ مُنْكِرُوْنَ ۟ؗ

அல்லது இவர்கள் தங்களது தூதரை (அவர் உண்மையாளர், நம்பிக்கைக்குரியவர் என்று) அறியவில்லையா? ஆகவே, அவர்கள் அவரை மறுக்கின்றனரா? info
التفاسير:

external-link copy
70 : 23

اَمْ یَقُوْلُوْنَ بِهٖ جِنَّةٌ ؕ— بَلْ جَآءَهُمْ بِالْحَقِّ وَاَكْثَرُهُمْ لِلْحَقِّ كٰرِهُوْنَ ۟

அல்லது அவருக்கு பைத்தியம் இருக்கிறது (எனவே, இப்படி உளருகிறார்) என்று இவர்கள் கூறுகின்றனரா? மாறாக, இவர் அவர்களிடம் உண்மையைக் கொண்டு வந்துள்ளார். அவர்களில் அதிகமானவர்கள், உண்மையை வெறுக்கின்றார்கள். info
التفاسير:

external-link copy
71 : 23

وَلَوِ اتَّبَعَ الْحَقُّ اَهْوَآءَهُمْ لَفَسَدَتِ السَّمٰوٰتُ وَالْاَرْضُ وَمَنْ فِیْهِنَّ ؕ— بَلْ اَتَیْنٰهُمْ بِذِكْرِهِمْ فَهُمْ عَنْ ذِكْرِهِمْ مُّعْرِضُوْنَ ۟ؕ

உண்மையாளன் (-அல்லாஹ்) அவர்களது விருப்பங்களை பின்பற்றினால் (-அதற்கு ஏற்ப அவன் நடந்து கொண்டால்) வானங்களும், பூமியும் அவற்றில் உள்ளவர்களும் நாசமடைந்து இருப்பார்கள். மாறாக, அவர்களுக்கு உரிய விளக்கத்தை நாம் அவர்களுக்குக் கொடுத்தோம். ஆனால் அவர்கள் தங்களுக்கு கூறப்பட்ட விளக்கத்தை புறக்கணிக்கக்கூடியவர்கள் ஆவர். info
التفاسير:

external-link copy
72 : 23

اَمْ تَسْـَٔلُهُمْ خَرْجًا فَخَرَاجُ رَبِّكَ خَیْرٌ ۖۗ— وَّهُوَ خَیْرُ الرّٰزِقِیْنَ ۟

அல்லது அவர்களிடம் (இந்த சத்தியத்தை போதித்ததற்காக) நீர் கூலி எதையும் கேட்கிறீரா? (அதனால் அவர்கள் இந்த சத்தியத்தை விட்டு விலகி செல்கின்றனரா?) உமது இறைவனின் கூலிதான் மிகச் சிறந்தது. அவன் கொடை வழங்குபவர்களில் மிகச் சிறந்தவன். info
التفاسير:

external-link copy
73 : 23

وَاِنَّكَ لَتَدْعُوْهُمْ اِلٰی صِرَاطٍ مُّسْتَقِیْمٍ ۟

நிச்சயமாக நீர் அவர்களை நேரான பாதையின் பக்கம் அழைக்கிறீர். info
التفاسير:

external-link copy
74 : 23

وَاِنَّ الَّذِیْنَ لَا یُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ عَنِ الصِّرَاطِ لَنٰكِبُوْنَ ۟

நிச்சயமாக மறுமையை நம்பிக்கை கொள்ளாதவர்கள் (அந்த நேரான) பாதையை விட்டு விலகக்கூடியவர்கள்தான். info
التفاسير: