Check out the new design

पवित्र कुरअानको अर्थको अनुवाद - तमिल अनुवादः अब्दुल हमीद बाकवी । * - अनुवादहरूको सूची

XML CSV Excel API
Please review the Terms and Policies

अर्थको अनुवाद सूरः: अहकाफ   श्लोक:
وَاذْكُرْ اَخَا عَادٍ اِذْ اَنْذَرَ قَوْمَهٗ بِالْاَحْقَافِ وَقَدْ خَلَتِ النُّذُرُ مِنْ بَیْنِ یَدَیْهِ وَمِنْ خَلْفِهٖۤ اَلَّا تَعْبُدُوْۤا اِلَّا اللّٰهَ ؕ— اِنِّیْۤ اَخَافُ عَلَیْكُمْ عَذَابَ یَوْمٍ عَظِیْمٍ ۟
21. (நபியே!) நீர் (ஹூத் நபியாகிய) ‘ஆது' உடைய சகோதரரை நினைவு கூறுவீராக. அவருக்கு முன்னும், பின்னும் தூதர்கள் பலர் (அவர்களிடம்) வந்திருக்கின்றனர். (அவர்) தன் மக்களை ‘அஹ்காஃப்' என்ற (மணற்பாங்கான) இடத்தில் (சந்தித்து), ‘‘அல்லாஹ்வைத் தவிர (மற்றெவரையும்) நீங்கள் வணங்காதீர்கள். நிச்சயமாக மகத்தான நாளின் வேதனை உங்கள் மீது இறங்கி விடுமென்று நான் பயப்படுகிறேன்'' என்று அச்சமூட்டி எச்சரித்தார்.
अरबी व्याख्याहरू:
قَالُوْۤا اَجِئْتَنَا لِتَاْفِكَنَا عَنْ اٰلِهَتِنَا ۚ— فَاْتِنَا بِمَا تَعِدُنَاۤ اِنْ كُنْتَ مِنَ الصّٰدِقِیْنَ ۟
22. அதற்கவர்கள், ‘‘எங்கள் தெய்வங்களை விட்டும் எங்களைத் திருப்பிவிடவா நீர் எங்களிடம் வந்தீர்? நீர் மெய்யாகவே உண்மை சொல்பவராக இருந்தால், நீர் எங்களைப் பயமுறுத்தும் வேதனையை நம்மிடம் கொண்டு வருவீராக'' என்று கூறினார்கள்.
अरबी व्याख्याहरू:
قَالَ اِنَّمَا الْعِلْمُ عِنْدَ اللّٰهِ ؗ— وَاُبَلِّغُكُمْ مَّاۤ اُرْسِلْتُ بِهٖ وَلٰكِنِّیْۤ اَرٰىكُمْ قَوْمًا تَجْهَلُوْنَ ۟
23. அதற்கவர், (அவர்களை நோக்கி ‘‘உங்களுக்கு வேதனை எப்பொழுது அனுப்பப்படும் என்ற) ஞானம் எல்லாம் அல்லாஹ்விடம்தான் இருக்கிறது. எவ்விஷயத்தை உங்களுக்கு அறிவிக்க நான் அனுப்பப்பட்டேனோ, அதையே நான் உங்களுக்கு எடுத்துரைக்கிறேன். ஆயினும், நீங்கள் அறிவில்லாத மக்கள் என்று நான் எண்ணுகிறேன்'' என்று கூறினார்.
अरबी व्याख्याहरू:
فَلَمَّا رَاَوْهُ عَارِضًا مُّسْتَقْبِلَ اَوْدِیَتِهِمْ ۙ— قَالُوْا هٰذَا عَارِضٌ مُّمْطِرُنَا ؕ— بَلْ هُوَ مَا اسْتَعْجَلْتُمْ بِهٖ ؕ— رِیْحٌ فِیْهَا عَذَابٌ اَلِیْمٌ ۟ۙ
24. பின்னர், (வேதனைக்கு அறிகுறியாக வந்த) மேகம் அவர்கள் இருந்த பள்ளத்தாக்குகளை நோக்கி வருவதை அவர்கள் காணவே, ‘‘இது எங்களுக்கு மழை பெய்ய வரும் மேகம்தான்'' என்று கூறினார்கள். (அதற்கு அவர்களை நோக்கி) ‘‘அல்ல! இது நீங்கள் அவசரப்பட்ட வேதனைதான் என்றும், இது ஒரு காற்று; இதில் துன்புறுத்தும் வேதனை இருக்கிறது'' (என்றும் கூறப்பட்டது).
अरबी व्याख्याहरू:
تُدَمِّرُ كُلَّ شَیْ بِاَمْرِ رَبِّهَا فَاَصْبَحُوْا لَا یُرٰۤی اِلَّا مَسٰكِنُهُمْ ؕ— كَذٰلِكَ نَجْزِی الْقَوْمَ الْمُجْرِمِیْنَ ۟
25. ஆகவே, அது தன் இறைவனின் கட்டளைப்படி எல்லாவற்றையும் அழித்து விட்டது. அவர்கள் இருந்த வீடுகளைத் தவிர, (அனைவரும் அழிந்து ஒருவருமே) காணப்படாமல் ஆகிவிட்டார்கள். இவ்வாறே குற்றம் செய்யும் மக்களுக்கு நாம் கூலி கொடுக்கிறோம்.
अरबी व्याख्याहरू:
وَلَقَدْ مَكَّنّٰهُمْ فِیْمَاۤ اِنْ مَّكَّنّٰكُمْ فِیْهِ وَجَعَلْنَا لَهُمْ سَمْعًا وَّاَبْصَارًا وَّاَفْـِٕدَةً ۖؗ— فَمَاۤ اَغْنٰی عَنْهُمْ سَمْعُهُمْ وَلَاۤ اَبْصَارُهُمْ وَلَاۤ اَفْـِٕدَتُهُمْ مِّنْ شَیْءٍ اِذْ كَانُوْا یَجْحَدُوْنَ بِاٰیٰتِ اللّٰهِ وَحَاقَ بِهِمْ مَّا كَانُوْا بِهٖ یَسْتَهْزِءُوْنَ ۟۠
26. உங்களுக்குச் செய்து கொடுக்காத வசதிகளையெல்லாம் நிச்சயமாக நாம் அவர்களுக்குச் செய்து கொடுத்திருந்தோம். மேலும் நாம் அவர்களுக்குச் செவியையும் (கொடுத்தோம்.) கண்களையும் (கொடுத்தோம். சிந்திக்கக்கூடிய) உள்ளத்தையும் கொடுத்தோம். ஆயினும், அவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களை நிராகரித்ததன் காரணமாக அவர்களுடைய செவிகளும், அவர்களுடைய கண்களும், அவர்களுடைய உள்ளங்களும் அவர்களுக்கு ஒரு பயனுமளிக்கவில்லை. அவர்கள் பரிகாசம் செய்துகொண்டிருந்த தண்டனை அவர்களைச் சூழ்ந்துகொண்டது.
अरबी व्याख्याहरू:
وَلَقَدْ اَهْلَكْنَا مَا حَوْلَكُمْ مِّنَ الْقُرٰی وَصَرَّفْنَا الْاٰیٰتِ لَعَلَّهُمْ یَرْجِعُوْنَ ۟
27. உங்களைச் சூழ்ந்து (வசித்து) இருந்த ஊரார்களையும் நிச்சயமாக நாம் அழித்து விட்டோம். அவர்கள் (பாவத்திலிருந்து விலகி நம்மிடம்) திரும்பி வரும் பொருட்டுப் பல அத்தாட்சிகளை (ஒன்றன் பின் ஒன்றாக) நாம் காண்பித்து வந்தோம். (எனினும், அவற்றை அவர்கள் பொருட்படுத்தவே இல்லை. ஆதலால், நாம் அவர்களை அழித்துவிட்டோம்.)
अरबी व्याख्याहरू:
فَلَوْلَا نَصَرَهُمُ الَّذِیْنَ اتَّخَذُوْا مِنْ دُوْنِ اللّٰهِ قُرْبَانًا اٰلِهَةً ؕ— بَلْ ضَلُّوْا عَنْهُمْ ۚ— وَذٰلِكَ اِفْكُهُمْ وَمَا كَانُوْا یَفْتَرُوْنَ ۟
28. (அல்லாஹ்வுக்குத்) தங்களைச் சமீபமாக்கி வைக்கக்கூடிய தெய்வங்கள் என்று அல்லாஹ் அல்லாதவற்றை இவர்கள் எடுத்துக் கொண்டார்களே, அவையேனும் இவர்களுக்கு உதவி செய்திருக்க வேண்டாமா? ஆனால், அவையெல்லாம் இவர்களை விட்டும் மறைந்து விட்டன. இவையெல்லாம் அவர்கள் கற்பனை செய்துகொண்டு பொய்யாகக் கூறியவைதான் (என்று தெளிவாகி விட்டது).
अरबी व्याख्याहरू:
 
अर्थको अनुवाद सूरः: अहकाफ
अध्यायहरूको (सूरःहरूको) सूची رقم الصفحة
 
पवित्र कुरअानको अर्थको अनुवाद - तमिल अनुवादः अब्दुल हमीद बाकवी । - अनुवादहरूको सूची

शेख अब्दुल हमीद बाकवीद्वारा अनुवाद ।

बन्द गर्नुस्