Check out the new design

पवित्र कुरअानको अर्थको अनुवाद - पवित्र कुर्आनको संक्षिप्त व्याख्याको तमिल भाषामा अनुवाद । * - अनुवादहरूको सूची


अर्थको अनुवाद सूरः: सबा   श्लोक:
وَلَا تَنْفَعُ الشَّفَاعَةُ عِنْدَهٗۤ اِلَّا لِمَنْ اَذِنَ لَهٗ ؕ— حَتّٰۤی اِذَا فُزِّعَ عَنْ قُلُوْبِهِمْ قَالُوْا مَاذَا ۙ— قَالَ رَبُّكُمْ ؕ— قَالُوا الْحَقَّ ۚ— وَهُوَ الْعَلِیُّ الْكَبِیْرُ ۟
34.23. அல்லாஹ் யாருக்கு அனுமதியளித்தானோ அவர்களைத் தவிர மற்றவர்களின் பரிந்துரைகள் அவனிடம் எந்தப் பயனையும் அளிக்காது. தனது மகத்துவத்தின் காரணமாக அவன் யாரைக் குறித்து திருப்தியடைந்தானோ அவருக்குத்தான் பரிந்துரை செய்ய அனுமதியளிப்பான். அவனது மகத்துவத்தின் காரணத்தினால் நிச்சயமாக அவன் வானத்தில் பேசினால் வானவர்கள் அவனுடைய வார்த்தைக்குக் கட்டுப்பட்டவர்களாக தங்கள் இறக்கைகளை அடித்துக் கொள்கிறார்கள். அவர்களின் உள்ளங்களிலிருந்து பதற்றம் நீங்கிய பிறகு “உங்களின் இறைவன் என்ன கூறினான்?” என்று வானவர்கள் ஜிப்ரீலிடம் கேட்கிறார்கள். அதற்கு ஜிப்ரீல் “அவன் உண்மையையே கூறினான். உள்ளமையிலும் அடக்கியாள்வதிலும் அவன் மிக உயர்ந்தவனாகவும் மிகப் பெரியவனாகவும் இருக்கின்றான். ஏனைய அனைத்தும் அவனை விடச் சிறியன. என்று கூறுவார்.
अरबी व्याख्याहरू:
قُلْ مَنْ یَّرْزُقُكُمْ مِّنَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ— قُلِ اللّٰهُ ۙ— وَاِنَّاۤ اَوْ اِیَّاكُمْ لَعَلٰی هُدًی اَوْ فِیْ ضَلٰلٍ مُّبِیْنٍ ۟
34.24. -தூதரே!- நீர் இந்த இணைவைப்பாளர்களிடம் கேட்பீராக: “வானத்திலிருந்து மழையை இறக்கியும் பூமியிலிருந்து தாவரங்களையும் பழங்களையும் விளையச் செய்தல் போன்ற இன்னோரன்னவற்றின் மூலம் உங்களுக்கு வாழ்வாதாரம் அளிப்பவன் யார்?” நீர் கூறுவீராக: “அல்லாஹ்வே உங்களுக்கு அவற்றிலிருந்து வாழ்வாதாரம் அளிக்கிறான். -இணைவைப்பாளர்களே!- நீங்களோ, நாங்களோ சந்தேகம் இல்லாமல் நம்மில் ஒருவர்தான் நேர்வழியிலோ அல்லது (சத்திய) பாதையை விட்டும் தெளிவான வழிகேட்டிலோ இருக்கின்றோம். நிச்சயமாக நம்பிக்கையாளர்கள்தாம் நேரான வழியில் இருக்கின்றார்கள். இணைவைப்பாளர்கள்தாம் வழிகேட்டில் இருக்கின்றார்கள்.
अरबी व्याख्याहरू:
قُلْ لَّا تُسْـَٔلُوْنَ عَمَّاۤ اَجْرَمْنَا وَلَا نُسْـَٔلُ عَمَّا تَعْمَلُوْنَ ۟
34.25. தூதரே! நீர் அவர்களிடம் கூறுவீராக: “மறுமைநாளில் நாங்கள் செய்த பாவங்களைக் குறித்து நீங்கள் விசாரிக்கப்பட மாட்டீர்கள். நீங்கள் செய்துகொண்டிருந்த பாவங்களைக் குறித்து நாங்கள் விசாரிக்கப்படமாட்டோம்.”
अरबी व्याख्याहरू:
قُلْ یَجْمَعُ بَیْنَنَا رَبُّنَا ثُمَّ یَفْتَحُ بَیْنَنَا بِالْحَقِّ ؕ— وَهُوَ الْفَتَّاحُ الْعَلِیْمُ ۟
34.26. நீர் அவர்களிடம் கூறுவீராக: “மறுமை நாளில் அல்லாஹ் உங்களையும் எங்களையும் ஒன்றுதிரட்டுவான். பின்னர் உங்களுக்கும் எங்களுக்குமிடையே நியாயமாகத் தீர்ப்பளிப்பான். அசத்தியவாதிகளில் யார் சத்தியவாதிகள்? என்பதை அவன் தெளிவுபடுத்துவான். அவன் நியாயமாகத் தீர்ப்பளிக்கக்கூடியவன்; தான் அளிக்கும் தீர்ப்பைக்குறித்து நன்கறிந்தவன்.”
अरबी व्याख्याहरू:
قُلْ اَرُوْنِیَ الَّذِیْنَ اَلْحَقْتُمْ بِهٖ شُرَكَآءَ كَلَّا ؕ— بَلْ هُوَ اللّٰهُ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟
34.27. -தூதரே!- நீர் அவர்களிடம் கூறுவீராக: “நீங்கள் அல்லாஹ்வுக்கு இணையாக ஆக்கிய இணைத்தெய்வங்களை எனக்குக் காட்டுங்கள். ஒருபோதும் இல்லை. நிச்சயமாக அவனுக்கு இணைகள் உண்டு என்று நீங்கள் எண்ணுவது போலல்ல விடயம். என்றாலும் அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவன். யாராலும் அவனை மிகைக்க முடியாது. தன் படைப்பிலும், நிர்ணயத்திலும், திட்டமிடலிலும் அவன் ஞானம் மிக்கவன்.
अरबी व्याख्याहरू:
وَمَاۤ اَرْسَلْنٰكَ اِلَّا كَآفَّةً لِّلنَّاسِ بَشِیْرًا وَّنَذِیْرًا وَّلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا یَعْلَمُوْنَ ۟
34.28. -தூதரே!- நாம் உம்மை மனிதர்கள் அனைவருக்கும் தூதராகவும் இறையச்சமுடையவர்களுக்கு சுவனம் உண்டு என்னும் நற்செய்தியைக் கூறக்கூடியவராகவும் நிராகரிப்பாளர்களையும் பாவிகளையும் நரகத்தைக் கொண்டு எச்சரிப்பவராகவும் அனுப்பியுள்ளோம். ஆயினும் மனிதர்களில் பெரும்பாலானோர் இதனை அறிந்துகொள்வதில்லை. அவர்கள் அதனை அறிந்திருந்தால் உம்மை பொய்ப்பித்திருக்க மாட்டார்கள்.
अरबी व्याख्याहरू:
وَیَقُوْلُوْنَ مَتٰی هٰذَا الْوَعْدُ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟
34.29. எச்சரிக்கப்படும் வேதனையை விரைவாக வேண்டியவர்களாக இணைவைப்பாளர்கள் கேட்கிறார்கள்: “நிச்சயமாக நீர் உண்மையாக நிகழும் என அழைக்கும் விஷயத்தில் உண்மையாளராக இருந்தால் நீர் வாக்களித்த வேதனை எப்போது வரும்?”
अरबी व्याख्याहरू:
قُلْ لَّكُمْ مِّیْعَادُ یَوْمٍ لَّا تَسْتَاْخِرُوْنَ عَنْهُ سَاعَةً وَّلَا تَسْتَقْدِمُوْنَ ۟۠
30. -தூதரே!- தண்டனையை விரைவாக வேண்டும் இவர்களிடம் நீர் கூறுவீராக: “உங்களுக்கு குறிப்பிட்ட நாள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த நாளை விட்டு நீங்கள் ஒரு கணப்பொழுதுகூட முந்தவோ, பிந்தவோ மாட்டீர்கள். அந்த நாள் மறுமை நாளாகும்.
अरबी व्याख्याहरू:
وَقَالَ الَّذِیْنَ كَفَرُوْا لَنْ نُّؤْمِنَ بِهٰذَا الْقُرْاٰنِ وَلَا بِالَّذِیْ بَیْنَ یَدَیْهِ ؕ— وَلَوْ تَرٰۤی اِذِ الظّٰلِمُوْنَ مَوْقُوْفُوْنَ عِنْدَ رَبِّهِمْ ۖۚ— یَرْجِعُ بَعْضُهُمْ اِلٰی بَعْضِ ١لْقَوْلَ ۚ— یَقُوْلُ الَّذِیْنَ اسْتُضْعِفُوْا لِلَّذِیْنَ اسْتَكْبَرُوْا لَوْلَاۤ اَنْتُمْ لَكُنَّا مُؤْمِنِیْنَ ۟
34.31. அல்லாஹ்வை நிராகரித்தோர் கூறுவார்கள்: தன் மீது இறக்கப்பட்டதாக முஹம்மது எண்ணும் இந்த குர்ஆனின் மீதோ முந்தைய வான வேதங்களின் மீதோ நாங்கள் ஒருபோதும் நம்பிக்கைகொள்ள மாட்டோம்.” -தூதரே!- மறுமை நாளில் அநியாயக்காரர்கள் விசாரணைக்காக தங்கள் இறைவனிடம் தடுத்துவைக்கப்படுவதை நீர் பார்க்க வேண்டுமே! அப்போது பொறுப்பையும் பழியையும் அடுத்தவர்கள் மீது சுமத்தி தமக்கு மத்தியில் ஒருவருக்கொருவர் மறுப்பு வழங்கிக்கொள்வார்கள். தம்மை உலகில் பலவீனர்களாக்கிய தங்கள் தலைவர்களிடம் அவர்களைப் பின்பற்றிய பலவீனர்கள் கூறுவார்கள்: “நீங்கள் மட்டும் எங்களை வழிகெடுக்காமல் இருந்திருந்தால் நாங்கள் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர்களின் மீதும் நம்பிக்கைகொண்டிருப்போம்.”
अरबी व्याख्याहरू:
यस पृष्ठको अायतहरूका लाभहरूमध्येबाट:
• التلطف بالمدعو حتى لا يلوذ بالعناد والمكابرة.
1. அழைக்கப்படுபவர் பிடிவாதத்துடன் விதண்டாவாதம் செய்து விரண்டோடுவதை தவிர்க்குமுகமாக அவருடன் மென்மையாக நடந்துகொள்ள வேண்டும்.

• صاحب الهدى مُسْتَعْلٍ بالهدى مرتفع به، وصاحب الضلال منغمس فيه محتقر.
2. நேர்வழி பெற்றவர் நேர்வழியின் மூலம் உயர்வு பெற்றவர். வழிகேடர் வழிகேட்டில் மூழ்கி இழிவடைந்தவர்.

• شمول رسالة النبي صلى الله عليه وسلم للبشرية جمعاء، والجن كذلك.
3. நபியவர்களின் தூதுத்துவம் மனித, ஜின் வர்க்கம் அனைவரையும் உள்ளடக்கியது.

 
अर्थको अनुवाद सूरः: सबा
अध्यायहरूको (सूरःहरूको) सूची رقم الصفحة
 
पवित्र कुरअानको अर्थको अनुवाद - पवित्र कुर्आनको संक्षिप्त व्याख्याको तमिल भाषामा अनुवाद । - अनुवादहरूको सूची

मर्क्ज तफ्सीर लिद्दिरासात अल-कुर्आनियह द्वारा प्रकाशित ।

बन्द गर्नुस्