Check out the new design

पवित्र कुरअानको अर्थको अनुवाद - तमिल अनुवाद : उमर शरीफ * - अनुवादहरूको सूची

PDF XML CSV Excel API
Please review the Terms and Policies

अर्थको अनुवाद सूरः: इस्रा   श्लोक:
مَنْ كَانَ یُرِیْدُ الْعَاجِلَةَ عَجَّلْنَا لَهٗ فِیْهَا مَا نَشَآءُ لِمَنْ نُّرِیْدُ ثُمَّ جَعَلْنَا لَهٗ جَهَنَّمَ ۚ— یَصْلٰىهَا مَذْمُوْمًا مَّدْحُوْرًا ۟
எவர், (அவசரமான) இம்மை (வாழ்க்கை)யை (மட்டும்) நாடுகின்றவராக இருப்பாரோ (அப்படிப்பட்டவர்களில்) நாம் நாடுபவருக்கு (உலக செல்வத்தில்) நாம் நாடுவதை (மட்டும்) அதில் முற்படுத்திக் கொடுப்போம். பிறகு, அவருக்கு நரகத்தை (தங்குமிடமாக) ஆக்குவோம். அவர் இகழப்பட்டவராக, (நம் அருளைவிட்டு) தூரமாக்கப்பட்டவராக (கேவலமாக தள்ளப்பட்டு) அதில் நுழை(ந்து எரிந்து பொசுங்கு)வார்.
अरबी व्याख्याहरू:
وَمَنْ اَرَادَ الْاٰخِرَةَ وَسَعٰی لَهَا سَعْیَهَا وَهُوَ مُؤْمِنٌ فَاُولٰٓىِٕكَ كَانَ سَعْیُهُمْ مَّشْكُوْرًا ۟
இன்னும், எவர்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்து, மறுமையை நாடி, அதற்குரிய (சரியான) முயற்சிகளை செய்வார்களோ, அத்தகையவர்களுடைய முயற்சி நன்றி செலுத்தப்பட்(டு நற்கூலி கொடுக்கப்பட்)டதாக இருக்கும்.
अरबी व्याख्याहरू:
كُلًّا نُّمِدُّ هٰۤؤُلَآءِ وَهٰۤؤُلَآءِ مِنْ عَطَآءِ رَبِّكَ ؕ— وَمَا كَانَ عَطَآءُ رَبِّكَ مَحْظُوْرًا ۟
(உலகை விரும்புகிற) இவர்களுக்கும் (மறுமையை விரும்புகிற) இவர்களுக்கும் உம் இறைவனின் கொடையிலிருந்து நாம் கொடுத்து உதவுவோம். மேலும், உம் இறைவனின் கொடை (இவ்வுலகில் எவருக்கும்) தடுக்கப்பட்டதாக இருக்கவில்லை.
अरबी व्याख्याहरू:
اُنْظُرْ كَیْفَ فَضَّلْنَا بَعْضَهُمْ عَلٰی بَعْضٍ ؕ— وَلَلْاٰخِرَةُ اَكْبَرُ دَرَجٰتٍ وَّاَكْبَرُ تَفْضِیْلًا ۟
(நபியே!) அவர்களில் சிலரை விட சிலரை (பொருளாதாரத்தில்) எப்படி மேன்மையாக்கினோம் என்பதை கவனிப்பீராக! மேலும், மறுமை (வாழ்வு)தான் பதவிகளாலும் மிகப் பெரியது; மேன்மையாலும் மிகப் பெரியது.
अरबी व्याख्याहरू:
لَا تَجْعَلْ مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَ فَتَقْعُدَ مَذْمُوْمًا مَّخْذُوْلًا ۟۠
(நபியே!) அல்லாஹ்வுடன் வணங்கப்படுகின்ற வேறு ஓர் இறைவனை ஆக்காதீர். (அவ்வாறு செய்தால்) இகழப்பட்டவராக, கைவிடப்பட்டவராக, முடங்கிவிடுவீர்.
अरबी व्याख्याहरू:
وَقَضٰی رَبُّكَ اَلَّا تَعْبُدُوْۤا اِلَّاۤ اِیَّاهُ وَبِالْوَالِدَیْنِ اِحْسَانًا ؕ— اِمَّا یَبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ اَحَدُهُمَاۤ اَوْ كِلٰهُمَا فَلَا تَقُلْ لَّهُمَاۤ اُفٍّ وَّلَا تَنْهَرْهُمَا وَقُلْ لَّهُمَا قَوْلًا كَرِیْمًا ۟
மேலும், (நபியே!) உம் இறைவன் (உமக்கும் உமது சமுதாயத்திற்கும்) கட்டளையிடுகிறான்: “அவனைத் தவிர (யாரையும்) நீங்கள் வணங்காதீர்கள்; இன்னும், பெற்றோருக்கு நல்லுபகாரம் புரியுங்கள்!” (மனிதனே!) உன்னிடம் அவ்விருவர்களில் ஒருவர்; அல்லது, அவர்கள் இருவரும் முதுமையை அடைந்தால் அவ்விருவரையும் (உதாசினப்படுத்தி) ‘ச்சீ’ என்று சொல்லாதே; இன்னும், அவ்விருவரையும் அதட்டாதே; இன்னும், அவ்விருவரிடமும் மிக கண்ணியமாக பேசு.
अरबी व्याख्याहरू:
وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُلْ رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّیٰنِیْ صَغِیْرًا ۟ؕ
இன்னும், அவர்களுக்கு முன் கருணையுடன் பணிவாக நடந்துகொள்! இன்னும், “என் இறைவா! நான் சிறியவனாக இருக்கும்போது என்னை அவர்கள் வளர்த்தவாறே நீயும் அவ்விருவருக்கும் கருணை புரி!” என்று கூறு!
अरबी व्याख्याहरू:
رَبُّكُمْ اَعْلَمُ بِمَا فِیْ نُفُوْسِكُمْ ؕ— اِنْ تَكُوْنُوْا صٰلِحِیْنَ فَاِنَّهٗ كَانَ لِلْاَوَّابِیْنَ غَفُوْرًا ۟
உங்கள் மனங்களில் உள்ளதை உங்கள் இறைவன் மிக அறிந்தவன். நீங்கள் நல்லவர்களாக இருந்தால் நிச்சயமாக அவன், (தன் பக்கம்) முற்றிலுமாக மீளுகிறவர்களை (-அதிகம் நன்மைகளை செய்பவர்களை) பெரிதும் மன்னிப்பவனாக இருக்கிறான்.
अरबी व्याख्याहरू:
وَاٰتِ ذَا الْقُرْبٰی حَقَّهٗ وَالْمِسْكِیْنَ وَابْنَ السَّبِیْلِ وَلَا تُبَذِّرْ تَبْذِیْرًا ۟
இன்னும், (மனிதனே! உன்) உறவினருக்கு அவருடைய உரிமையைக் கொடு! ஏழைக்கும் வழிப்போக்கருக்கும் (அவர்களின் உரிமைகளைக்) கொடு! மிதமிஞ்சி (வீணாக) செலவழிக்காதே!
अरबी व्याख्याहरू:
اِنَّ الْمُبَذِّرِیْنَ كَانُوْۤا اِخْوَانَ الشَّیٰطِیْنِ ؕ— وَكَانَ الشَّیْطٰنُ لِرَبِّهٖ كَفُوْرًا ۟
மிதமிஞ்சி செலவழிப்பவர்கள் ஷைத்தான்களின் சகோதரர்களாக இருக்கிறார்கள். ஷைத்தான் தன் இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்.
अरबी व्याख्याहरू:
 
अर्थको अनुवाद सूरः: इस्रा
अध्यायहरूको (सूरःहरूको) सूची رقم الصفحة
 
पवित्र कुरअानको अर्थको अनुवाद - तमिल अनुवाद : उमर शरीफ - अनुवादहरूको सूची

यसलाई शेख उमर शरीफ बिन अब्दुस्सलामले अनुवाद गरेका हुन् ।

बन्द गर्नुस्