पवित्र कुरअानको अर्थको अनुवाद - तामिल अनुवाद : उमर शरीफ * - अनुवादहरूको सूची

PDF XML CSV Excel API
Please review the Terms and Policies

अर्थको अनुवाद सूरः: सूरतुल् फतह   श्लोक:

ஸூரா அல்பத்ஹ்

اِنَّا فَتَحْنَا لَكَ فَتْحًا مُّبِیْنًا ۟ۙ
(நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு தெளிவான வெற்றியை வழங்கினோம்.
अरबी व्याख्याहरू:
لِّیَغْفِرَ لَكَ اللّٰهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْۢبِكَ وَمَا تَاَخَّرَ وَیُتِمَّ نِعْمَتَهٗ عَلَیْكَ وَیَهْدِیَكَ صِرَاطًا مُّسْتَقِیْمًا ۟ۙ
அல்லாஹ் உமது பாவத்தில் முந்தியதையும் (பழையதையும்) பிந்தியதையும் (புதியதையும்) உமக்கு மன்னிப்பதற்காகவும் அவனது அருளை உம் மீது முழுமைப்படுத்துவதற்காகவும் உமக்கு நேரான பாதையை வழி காண்பிப்பதற்காகவும்,
अरबी व्याख्याहरू:
وَّیَنْصُرَكَ اللّٰهُ نَصْرًا عَزِیْزًا ۟
அல்லாஹ் உமக்கு மிக கம்பீரமான (மிகப்பெரிய) உதவியை செய்வதற்காகவும் (உமக்கு மகத்தான தெளிவான வெற்றியை அளித்தோம்).
अरबी व्याख्याहरू:
هُوَ الَّذِیْۤ اَنْزَلَ السَّكِیْنَةَ فِیْ قُلُوْبِ الْمُؤْمِنِیْنَ لِیَزْدَادُوْۤا اِیْمَانًا مَّعَ اِیْمَانِهِمْ ؕ— وَلِلّٰهِ جُنُوْدُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ— وَكَانَ اللّٰهُ عَلِیْمًا حَكِیْمًا ۟ۙ
அவன்தான் நம்பிக்கையாளர்களின் உள்ளங்களில் அமைதியை (நிம்மதியை) இறக்கினான், அவர்கள் (முன்னர் இறக்கப்பட்ட சட்டங்களை நம்பிக்கை கொண்டும் செயல்படுத்தியும் வந்த) தங்கள் நம்பிக்கையுடன் (புதிதாக இறக்கப்பட்ட சட்டங்களையும் நம்பிக்கை கொண்டு, செயல்படுத்தி) மேலும் நம்பிக்கை அதிகரிப்பதற்காக (அவன் அவர்கள் மீது நிம்மதியை இறக்கினான்). வானங்கள் இன்னும் பூமியின் இராணுவங்கள் அல்லாஹ்விற்கே உரியன. அல்லாஹ் நன்கறிந்தவனாக, மகா ஞானவானாக இருக்கிறான்.
अरबी व्याख्याहरू:
لِّیُدْخِلَ الْمُؤْمِنِیْنَ وَالْمُؤْمِنٰتِ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِیْنَ فِیْهَا وَیُكَفِّرَ عَنْهُمْ سَیِّاٰتِهِمْ ؕ— وَكَانَ ذٰلِكَ عِنْدَ اللّٰهِ فَوْزًا عَظِیْمًا ۟ۙ
நம்பிக்கைகொண்ட ஆண்களையும், நம்பிக்கைகொண்ட பெண்களையும் சொர்க்கங்களில் அவன் பிரவேசிக்க வைப்பதற்காகவும் அவர்களை விட்டும் அவர்களின் பாவங்களை போக்கிவிடுவதற்காகவும் (அவன் உமக்கு மகத்தான வெற்றியை கொடுத்தான்). அவற்றின் கீழ் (அந்த சொர்க்கங்களில் உள்ள மரங்களையும் கட்டிடங்களையும் சுற்றி) நதிகள் ஓடும். அவர்கள் அதில் நிரந்தரமாகத் தங்குவார்கள். இதுதான் அல்லாஹ்விடம் மகத்தான வெற்றியாக (- நற்பாக்கியமாக) இருக்கிறது.
अरबी व्याख्याहरू:
وَّیُعَذِّبَ الْمُنٰفِقِیْنَ وَالْمُنٰفِقٰتِ وَالْمُشْرِكِیْنَ وَالْمُشْرِكٰتِ الظَّآنِّیْنَ بِاللّٰهِ ظَنَّ السَّوْءِ ؕ— عَلَیْهِمْ دَآىِٕرَةُ السَّوْءِ ۚ— وَغَضِبَ اللّٰهُ عَلَیْهِمْ وَلَعَنَهُمْ وَاَعَدَّ لَهُمْ جَهَنَّمَ ؕ— وَسَآءَتْ مَصِیْرًا ۟
இன்னும், நயவஞ்சகம் உடைய ஆண்களையும் நயவஞ்சகம் உடைய பெண்களையும் இணைவைக்கின்ற ஆண்களையும் இணைவைக்கின்ற பெண்களையும் அல்லாஹ் தண்டிப்பதற்காக (அவன் உமக்கு மகத்தான வெற்றியை கொடுத்தான்). அவர்கள் அல்லாஹ்வின் விஷயத்தில் (அவன் தனது நபிக்கும் நம்பிக்கையாளர்களுக்கும் உதவமாட்டான் என்று) கெட்ட எண்ணம் எண்ணுகிறார்கள். அவர்கள் மீதுதான் கெட்ட சுழற்சி (சுற்ற) இருக்கிறது. (-அவர்கள்தான் தோற்கப் போகிறார்கள். நம்பிக்கையாளர்களின் கரத்தால் தண்டனையை சுவைக்க இருக்கிறார்கள்.) இன்னும், அல்லாஹ் அவர்கள் மீது கோபப்படுகிறான். அவர்களை சபிக்கிறான். அவர்களுக்கு நரகத்தை தயார் செய்திருக்கிறான். அது மிகக் கெட்ட மீளுமிடமாகும்.
अरबी व्याख्याहरू:
وَلِلّٰهِ جُنُوْدُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ— وَكَانَ اللّٰهُ عَزِیْزًا حَكِیْمًا ۟
வானங்கள், இன்னும் பூமியின் இராணுவங்கள் அல்லாஹ்விற்கே உரியன. அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவனாக, மகா ஞானவானாக இருக்கிறான்.
अरबी व्याख्याहरू:
اِنَّاۤ اَرْسَلْنٰكَ شَاهِدًا وَّمُبَشِّرًا وَّنَذِیْرًا ۟ۙ
நிச்சயமாக நாம் உம்மை சாட்சியாளராகவும் நற்செய்தி கூறுபவராகவும் எச்சரிப்பவராகவும் அனுப்பினோம்,
अरबी व्याख्याहरू:
لِّتُؤْمِنُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ وَتُعَزِّرُوْهُ وَتُوَقِّرُوْهُ ؕ— وَتُسَبِّحُوْهُ بُكْرَةً وَّاَصِیْلًا ۟
நீங்கள் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொள்வதற்காகவும் அவரை கண்ணியப்படுத்துவதற்காகவும் அவரை மதிப்பதற்காகவும் அ(ந்த இறை)வனை காலையிலும் மாலையிலும் புகழ்ந்து துதித்து வணங்குவதற்காகவும் (அவன் தனது தூதரை உங்களிடம் அனுப்பினான்).
अरबी व्याख्याहरू:
اِنَّ الَّذِیْنَ یُبَایِعُوْنَكَ اِنَّمَا یُبَایِعُوْنَ اللّٰهَ ؕ— یَدُ اللّٰهِ فَوْقَ اَیْدِیْهِمْ ۚ— فَمَنْ نَّكَثَ فَاِنَّمَا یَنْكُثُ عَلٰی نَفْسِهٖ ۚ— وَمَنْ اَوْفٰی بِمَا عٰهَدَ عَلَیْهُ اللّٰهَ فَسَیُؤْتِیْهِ اَجْرًا عَظِیْمًا ۟۠
நிச்சயமாக எவர்கள் உம்மிடம் பைஅத் (-விசுவாச உறுதிமொழி) செய்தார்களோ அவர்கள் விசுவாச உறுதி மொழி செய்வதெல்லாம் அல்லாஹ்விடம்தான். அல்லாஹ்வின் கை அவர்களின் கைகளுக்கு மேல் இருக்கிறது. ஆகவே, யார் (அந்த உறுதி மொழியை) முறிப்பாரோ அவர் முறிப்பதெல்லாம் தனக்கு எதிராகத்தான். (-அது அவருக்குத்தான் கேடாகும்.) இன்னும், யார் அல்லாஹ்விடம் எதன் மீது ஒப்பந்தம் செய்தாரோ அதை நிறைவேற்றுவாரோ அவருக்கு அவன் மகத்தான கூலியை (-சொர்க்கத்தை) கொடுப்பான்.
अरबी व्याख्याहरू:
سَیَقُوْلُ لَكَ الْمُخَلَّفُوْنَ مِنَ الْاَعْرَابِ شَغَلَتْنَاۤ اَمْوَالُنَا وَاَهْلُوْنَا فَاسْتَغْفِرْ لَنَا ۚ— یَقُوْلُوْنَ بِاَلْسِنَتِهِمْ مَّا لَیْسَ فِیْ قُلُوْبِهِمْ ؕ— قُلْ فَمَنْ یَّمْلِكُ لَكُمْ مِّنَ اللّٰهِ شَیْـًٔا اِنْ اَرَادَ بِكُمْ ضَرًّا اَوْ اَرَادَ بِكُمْ نَفْعًا ؕ— بَلْ كَانَ اللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِیْرًا ۟
11 கிராமவாசிகளில் (போருக்கு வராமல்) பின் தங்கியவர்கள் உமக்கு கூறுவார்கள்: “எங்களை எங்கள் செல்வங்களும் எங்கள் குடும்பங்களும் (போருக்கு செல்ல முடியாதபடி மற்ற அலுவல்களில்) ஈடுபடுத்திவிட்டன. (எனவேதான் போரில் நாங்கள் உங்களுடன் கலந்துகொள்ள முடியவில்லை.) ஆகவே, நீர் எங்களுக்காக (உமது இறைவனிடம்) பாவமன்னிப்புக் கோருவீராக!” அவர்கள் தங்கள் நாவுகளினால் தங்கள் உள்ளங்களில் இல்லாதவற்றை கூறுகிறார்கள். (நபியே!) கூறுவீராக! “ஆக, அல்லாஹ் உங்களுக்கு ஏதும் தீங்கை நாடினால் (அதை தடுப்பதற்கு); அல்லது, உங்களுக்கு ஏதும் நன்மையை நாடினால் (அதை நிறுத்துவதற்கு) அல்லாஹ்விடம் உங்களுக்காக சிறிதும் யார் உரிமை பெறுவார்? (யாருக்கும் அந்த சக்தி இல்லை.) மாறாக, அல்லாஹ் நீங்கள் செய்வதை (எல்லாம்) ஆழ்ந்தறிபவனாக இருக்கிறான்.
अरबी व्याख्याहरू:
بَلْ ظَنَنْتُمْ اَنْ لَّنْ یَّنْقَلِبَ الرَّسُوْلُ وَالْمُؤْمِنُوْنَ اِلٰۤی اَهْلِیْهِمْ اَبَدًا وَّزُیِّنَ ذٰلِكَ فِیْ قُلُوْبِكُمْ وَظَنَنْتُمْ ظَنَّ السَّوْءِ ۖۚ— وَكُنْتُمْ قَوْمًا بُوْرًا ۟
மாறாக, தூதரும், நம்பிக்கையாளர்களும் தங்கள் குடும்பங்களுக்கு ஒருபோதும் திரும்பவே மாட்டார்கள் என்று நீங்கள் எண்ணினீர்கள். இ(ந்த எண்ணமான)து உங்கள் உள்ளங்களில் அலங்கரிக்கப்பட்டு விட்டது. (அல்லாஹ், தன் தூதருக்கு உதவமாட்டான் என்று அல்லாஹ்வின் மீது) நீங்கள் கெட்ட எண்ணம் எண்ணினீர்கள். (இந்த தீய எண்ணத்தால் அல்லாஹ்வின் தண்டனையில்) நீங்கள் அழிந்து நாசமாகக்கூடிய மக்களாக இருக்கின்றீர்கள்.
अरबी व्याख्याहरू:
وَمَنْ لَّمْ یُؤْمِنْ بِاللّٰهِ وَرَسُوْلِهٖ فَاِنَّاۤ اَعْتَدْنَا لِلْكٰفِرِیْنَ سَعِیْرًا ۟
எவர்கள் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொள்ள வில்லையோ நிச்சயமாக நாம் (அத்தகைய) நிராகரிப்பாளர்களுக்கு கொழுந்து விட்டெரியும் நரகத்தை தயார் செய்திருக்கிறோம்.
अरबी व्याख्याहरू:
وَلِلّٰهِ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ— یَغْفِرُ لِمَنْ یَّشَآءُ وَیُعَذِّبُ مَنْ یَّشَآءُ ؕ— وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِیْمًا ۟
வானங்கள் இன்னும் பூமியின் ஆட்சி அல்லாஹ்விற்கே உரியது. அவன், தான் நாடுகிறவர்களை மன்னிக்கிறான்; இன்னும், தான் நாடுகிறவர்களை தண்டிக்கிறான். அல்லாஹ் மகா மன்னிப்பாளனாக, மகா கருணையாளனாக இருக்கிறான்.
अरबी व्याख्याहरू:
سَیَقُوْلُ الْمُخَلَّفُوْنَ اِذَا انْطَلَقْتُمْ اِلٰی مَغَانِمَ لِتَاْخُذُوْهَا ذَرُوْنَا نَتَّبِعْكُمْ ۚ— یُرِیْدُوْنَ اَنْ یُّبَدِّلُوْا كَلٰمَ اللّٰهِ ؕ— قُلْ لَّنْ تَتَّبِعُوْنَا كَذٰلِكُمْ قَالَ اللّٰهُ مِنْ قَبْلُ ۚ— فَسَیَقُوْلُوْنَ بَلْ تَحْسُدُوْنَنَا ؕ— بَلْ كَانُوْا لَا یَفْقَهُوْنَ اِلَّا قَلِیْلًا ۟
நீங்கள் கனீமத்துகளை (-போரில் கைப்பற்றப்பட்ட செல்வங்களை) நோக்கி அவற்றை நீங்கள் எடுப்பதற்காக சென்றால், “எங்களை விடுங்கள்! நாங்களும் உங்களைப் பின்பற்றி வருகிறோம்” என்று (போருக்கு வராமல்) பின்தங்கியவர்கள் கூறுவார்கள். அல்லாஹ்வின் பேச்சை (-வாக்கை) அவர்கள் மாற்றிவிட நாடுகிறார்கள். (நபியே!) நீர் கூறுவீராக! “நீங்கள் அறவே எங்களை பின்பற்ற மாட்டீர்கள். இப்படித்தான் இதற்கு முன்னரே (இதைப் பற்றி) அல்லாஹ் (எங்களுக்கு) கூறி இருக்கிறான்.” “இல்லை, நீங்கள் எங்கள் மீது பொறாமைப்படுகின்றீர்கள்” என்று அவர்கள் கூறுவார்கள். மாறாக, குறைவாகவே தவிர அவர்கள் (அல்லாஹ்வின் கட்டளைகளை) விளங்காதவர்களாக இருக்கிறார்கள்.
अरबी व्याख्याहरू:
قُلْ لِّلْمُخَلَّفِیْنَ مِنَ الْاَعْرَابِ سَتُدْعَوْنَ اِلٰی قَوْمٍ اُولِیْ بَاْسٍ شَدِیْدٍ تُقَاتِلُوْنَهُمْ اَوْ یُسْلِمُوْنَ ۚ— فَاِنْ تُطِیْعُوْا یُؤْتِكُمُ اللّٰهُ اَجْرًا حَسَنًا ۚ— وَاِنْ تَتَوَلَّوْا كَمَا تَوَلَّیْتُمْ مِّنْ قَبْلُ یُعَذِّبْكُمْ عَذَابًا اَلِیْمًا ۟
கிராமவாசிகளில் பின்தங்கியவர்களை நோக்கி கூறுவீராக! “நீங்கள் கடுமையான பலமுடைய ஒரு கூட்டத்தின் பக்கம் நீங்கள் அழைக்கப்படுவீர்கள். அவர்களிடம் நீங்கள் சண்டை செய்ய வேண்டும். அல்லது, அவர்கள் பணிந்துவிட வேண்டும். ஆக, நீங்கள் (அந்த அழைப்புக்கு) கீழ்ப்படிந்தால் அல்லாஹ் உங்களுக்கு அழகிய கூலியை கொடுப்பான். இதற்கு முன்பு நீங்கள் விலகியதைப் போன்று (இப்போதும் போர் செய்யாமல்) விலகினால் அவன் வலி நிறைந்த தண்டனையால் உங்களை தண்டிப்பான்.
अरबी व्याख्याहरू:
لَیْسَ عَلَی الْاَعْمٰی حَرَجٌ وَّلَا عَلَی الْاَعْرَجِ حَرَجٌ وَّلَا عَلَی الْمَرِیْضِ حَرَجٌ ؕ— وَمَنْ یُّطِعِ اللّٰهَ وَرَسُوْلَهٗ یُدْخِلْهُ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ ۚ— وَمَنْ یَّتَوَلَّ یُعَذِّبْهُ عَذَابًا اَلِیْمًا ۟۠
குருடர் மீது குற்றம் இல்லை, ஊனமானவர் மீது குற்றம் இல்லை, நோயாளி மீது குற்றம் இல்லை. (அவர்கள் போருக்கு வராமல் இருப்பது அவர்கள் மீது குற்றமாகாது.) எவர் அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் கீழ்ப்படி(ந்து போருக்கு அழைக்கப்படும் போது போரில் கலந்து கொள்)வாரோ அவரை அவன் சொர்க்கங்களில் பிரவேசிக்க வைப்பான். அவற்றின் கீழ் நதிகள் ஓடும். (உடல் வலிமை இருந்தும்) எவர் (போருக்கு வராமல்) விலகுவாரோ அவரை வலி நிறைந்த தண்டனையால் அவன் தண்டிப்பான்.
अरबी व्याख्याहरू:
لَقَدْ رَضِیَ اللّٰهُ عَنِ الْمُؤْمِنِیْنَ اِذْ یُبَایِعُوْنَكَ تَحْتَ الشَّجَرَةِ فَعَلِمَ مَا فِیْ قُلُوْبِهِمْ فَاَنْزَلَ السَّكِیْنَةَ عَلَیْهِمْ وَاَثَابَهُمْ فَتْحًا قَرِیْبًا ۟ۙ
திட்டவட்டமாக அல்லாஹ் நம்பிக்கையாளர்களை திருப்தி அடைந்தான், அவர்கள் உம்மிடம் மரத்தின் கீழ் விசுவாச உறுதிமொழி செய்தபோது. ஆக, அவன் அவர்களின் உள்ளங்களில் உள்ளதை (-உறுதிமொழியை நிறைவேற்றும் உண்மையான எண்ணத்தை) அறிந்தான். ஆகவே, அவர்கள் மீது அமைதியை (நிம்மதியை, பொறுமையை, கண்ணியத்தை, மார்க்கத்தில் உறுதியாக இருப்பதை) இறக்கினான்; இன்னும், சமீபமான ஒரு வெற்றியையும் அவன் அவர்களுக்கு வெகுமதியாகக் கொடுத்தான்.
अरबी व्याख्याहरू:
وَّمَغَانِمَ كَثِیْرَةً یَّاْخُذُوْنَهَا ؕ— وَكَانَ اللّٰهُ عَزِیْزًا حَكِیْمًا ۟
இன்னும், அதிகமான கனீமத்துகளை (அவன் அவர்களுக்கு வெகுமதியாகக் கொடுப்பான்). அவர்கள் அவற்றை பெறுவார்கள். அல்லாஹ் மிகைத்தவனாக, மகா ஞானவானாக இருக்கிறான்.
अरबी व्याख्याहरू:
وَعَدَكُمُ اللّٰهُ مَغَانِمَ كَثِیْرَةً تَاْخُذُوْنَهَا فَعَجَّلَ لَكُمْ هٰذِهٖ وَكَفَّ اَیْدِیَ النَّاسِ عَنْكُمْ ۚ— وَلِتَكُوْنَ اٰیَةً لِّلْمُؤْمِنِیْنَ وَیَهْدِیَكُمْ صِرَاطًا مُّسْتَقِیْمًا ۟ۙ
அல்லாஹ் உங்களுக்கு அதிகமான கனீமத்துகளை வாக்களித்தான். அவற்றை நீங்கள் பெறுவீர்கள். ஆக, (அவற்றில்) இதை (-கைபர் யுத்தத்தின் கனீமத் பொருட்களை) அவன் உங்களுக்கு விரைவாகக் கொடுத்தான். இன்னும், (பிற) மக்களின் கரங்களை உங்களை (விட்டும் உங்கள் குடும்பத்தை) விட்டும் அவன் தடுத்தான். (நம்பிக்கையாளர்களையும் அவர்களின் குடும்பங்களையும் அல்லாஹ் பாதுகாத்தது) நம்பிக்கையாளர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இருப்பதற்காகவும்; இன்னும், உங்களை நேரான பாதையில் வழி நடத்துவதற்காகவும் (அவன் உங்களை விட்டு எதிரிகளின் கரங்களை தடுத்து, உங்களை பாதுகாத்தான்).
अरबी व्याख्याहरू:
وَّاُخْرٰی لَمْ تَقْدِرُوْا عَلَیْهَا قَدْ اَحَاطَ اللّٰهُ بِهَا ؕ— وَكَانَ اللّٰهُ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرًا ۟
இன்னும் (நாடுகளில்) வேறு பலவற்றையும் உங்களுக்கு வாக்களித்திருக்கிறான். (இப்போது) நீங்கள் அவற்றின் மீது (போர் தொடுத்து அவற்றை வெற்றி கொள்ள) ஆற்றல் பெறவில்லை. அல்லாஹ் அவற்றை (எல்லாம்) திட்டமாக சூழ்ந்திருக்கிறான். இன்னும், அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கிறான்.
अरबी व्याख्याहरू:
وَلَوْ قَاتَلَكُمُ الَّذِیْنَ كَفَرُوْا لَوَلَّوُا الْاَدْبَارَ ثُمَّ لَا یَجِدُوْنَ وَلِیًّا وَّلَا نَصِیْرًا ۟
நிராகரிப்பாளர்கள் உங்களிடம் போரிட்டால் (கண்டிப்பாக) அவர்கள் புறமுதுகு காட்டி (ஓடி)யிருப்பார்கள். பிறகு, அவர்கள் (தங்களுக்கு) பாதுகாவலரையும் உதவியாளரையும் காண மாட்டார்கள்.
अरबी व्याख्याहरू:
سُنَّةَ اللّٰهِ الَّتِیْ قَدْ خَلَتْ مِنْ قَبْلُ ۖۚ— وَلَنْ تَجِدَ لِسُنَّةِ اللّٰهِ تَبْدِیْلًا ۟
இதற்கு முன்னர் சென்ற அல்லாஹ்வின் நடைமுறைப்படிதான் (இவர்களுடனும் அல்லாஹ் நடந்து கொண்டான்). அல்லாஹ்வின் நடைமுறையில் (எவ்வித) மாற்றத்தை(யும்) நீர் காணமாட்டீர்.
अरबी व्याख्याहरू:
وَهُوَ الَّذِیْ كَفَّ اَیْدِیَهُمْ عَنْكُمْ وَاَیْدِیَكُمْ عَنْهُمْ بِبَطْنِ مَكَّةَ مِنْ بَعْدِ اَنْ اَظْفَرَكُمْ عَلَیْهِمْ ؕ— وَكَانَ اللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ بَصِیْرًا ۟
அவன்தான் அவர்களின் கரங்களை உங்களை விட்டும் தடுத்தான். இன்னும், அவர்கள் மீது உங்களுக்கு வெற்றியை கொடுத்த பின்னர் உங்கள் கரங்களை அவர்களை விட்டும் மக்காவின் நடுப்பகுதியில் வைத்து தடுத்தான். இன்னும், அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை உற்று நோக்கியவனாக இருக்கிறான்.
अरबी व्याख्याहरू:
هُمُ الَّذِیْنَ كَفَرُوْا وَصَدُّوْكُمْ عَنِ الْمَسْجِدِ الْحَرَامِ وَالْهَدْیَ مَعْكُوْفًا اَنْ یَّبْلُغَ مَحِلَّهٗ ؕ— وَلَوْلَا رِجَالٌ مُّؤْمِنُوْنَ وَنِسَآءٌ مُّؤْمِنٰتٌ لَّمْ تَعْلَمُوْهُمْ اَنْ تَطَـُٔوْهُمْ فَتُصِیْبَكُمْ مِّنْهُمْ مَّعَرَّةٌ بِغَیْرِ عِلْمٍ ۚ— لِیُدْخِلَ اللّٰهُ فِیْ رَحْمَتِهٖ مَنْ یَّشَآءُ ۚ— لَوْ تَزَیَّلُوْا لَعَذَّبْنَا الَّذِیْنَ كَفَرُوْا مِنْهُمْ عَذَابًا اَلِیْمًا ۟
(மக்காவின் குறைஷிகளாகிய) அவர்கள் எத்தகையோர் என்றால் அவர்கள் (அல்லாஹ்வை பரிசுத்தமாக வணங்குவதையும் உமது தூதுத்துவத்தையும்) நிராகரித்தார்கள்; இன்னும், புனிதமான மஸ்ஜிதை விட்டு உங்களையும் வழிபாட்டுக்காக கொண்டுவரப்பட்ட பலிப் பிராணியை – அது தனது இடத்திற்கு (சென்று) சேர்வதையும் - அவர்கள் தடுத்தார்கள். இன்னும், நம்பிக்கை கொண்ட ஆண்களும் நம்பிக்கை கொண்ட பெண்களும் அங்கு (-மக்காவில்) இல்லாமல் இருந்திருந்தால் (நீங்கள் அந்த மக்காவாசிகளை தாக்கும்படி நாம் செய்திருப்போம். அப்படி செய்திருந்தால் ஹிஜ்ரத் செய்யாமல் மக்காவில் காஃபிர்களுக்கு மத்தியில் தங்கியிருந்த நம்பிக்கை கொண்ட ஆண்களையும் பெண்களையும் நீங்கள் தவறாக கொன்றிருப்பீர்கள். நீங்கள் அறியாமல் இப்படி செய்து விட்டால் உங்கள் மீது பழியும் பாவமும் வந்திருக்கும்). நீங்கள் (அவர்களை) அறியாமல் அவர்களை தாக்கிவிட, அவர்களினால் (-அவர்களைக் கொன்றுவிடுவதால்) உங்களுக்கு பழிப்பு(ம் குற்றப் பரிகாரமும்) ஏற்பட்டுவிடும். (எதிரி நாட்டில் இருந்த நம்பிக்கையாளர்களை கொன்றதால் பரிகாரம் - கஃப்பாரா செய்வது உங்கள் மீது கடமையாகிவிடும். அது உங்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்திவிடும். ஆகவே, போர் நிகழாமல் அல்லாஹ் தடுத்தான். மேலும்,) அல்லாஹ், தான் நாடுகிறவர்களை தனது அருளில் (-இஸ்லாமிய மார்க்கத்தில்) நுழைப்பதற்காக(வும் மக்காவில் உங்களுக்குள் போர் நிகழ்ந்துவிடாமல் பாதுகாத்தான்). அவர்கள் (-அந்த நம்பிக்கையாளர்கள் ஹிஜ்ரத் செய்து நிராகரிப்பாளர்களை விட்டு) நீங்கி இருந்திருந்தால் அவர்களில் (-அந்த மக்கா வாசிகளில்) நிராகரித்தவர்களை துன்புறுத்தும் தண்டனையால் தண்டித்திருப்போம்.
अरबी व्याख्याहरू:
اِذْ جَعَلَ الَّذِیْنَ كَفَرُوْا فِیْ قُلُوْبِهِمُ الْحَمِیَّةَ حَمِیَّةَ الْجَاهِلِیَّةِ فَاَنْزَلَ اللّٰهُ سَكِیْنَتَهٗ عَلٰی رَسُوْلِهٖ وَعَلَی الْمُؤْمِنِیْنَ وَاَلْزَمَهُمْ كَلِمَةَ التَّقْوٰی وَكَانُوْۤا اَحَقَّ بِهَا وَاَهْلَهَا ؕ— وَكَانَ اللّٰهُ بِكُلِّ شَیْءٍ عَلِیْمًا ۟۠
நிராகரித்தவர்கள் தங்கள் உள்ளங்களில் அறியாமைக்கால திமிரை (அகம்பாவத்தை) ஏற்படுத்திக் கொண்ட அந்த சமயத்தை நினைவு கூருங்கள்! ஆக, அல்லாஹ் தனது தூதர் மீதும் நம்பிக்கையாளர்கள் மீதும் தனது சகீனாவை (-தன் புறத்தில் இருந்து நிம்மதியையும் பொறுமையையும் கண்ணியத்தையும்) இறக்கினான். இன்னும், அவர்களுக்கு இறையச்சத்தின் வாக்கை அவசியமாக்கினான். (லா இலாஹ இல்லல்லாஹ் என்ற திரு கலிமாவை விரும்பி ஏற்கும்படியும் அதை உறுதியாக பற்றிப் பிடிக்கும்படியும் செய்தான்.) இன்னும், அவர்கள்தான் அதற்கு மிகத்தகுதியுடைவர்களாகவும் அதற்கு சொந்தக்காரர்களாகவும் (-உரிமை உள்ளவர்களாகவும்) இருந்தார்கள். அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவனாக இருக்கிறான்.
अरबी व्याख्याहरू:
لَقَدْ صَدَقَ اللّٰهُ رَسُوْلَهُ الرُّءْیَا بِالْحَقِّ ۚ— لَتَدْخُلُنَّ الْمَسْجِدَ الْحَرَامَ اِنْ شَآءَ اللّٰهُ اٰمِنِیْنَ ۙ— مُحَلِّقِیْنَ رُءُوْسَكُمْ وَمُقَصِّرِیْنَ ۙ— لَا تَخَافُوْنَ ؕ— فَعَلِمَ مَا لَمْ تَعْلَمُوْا فَجَعَلَ مِنْ دُوْنِ ذٰلِكَ فَتْحًا قَرِیْبًا ۟
திட்டவட்டமாக அல்லாஹ் தனது தூதருக்கு (அவர் பார்த்த) கனவை யதார்த்தத்தில் உண்மையாக நிகழ்த்திக் கொடுத்தான். அல்லாஹ் நாடினால், - பாதுகாப்பு பெற்றவர்களாக உங்கள் தலை(முடி)களை சிரைத்தவர்களாக; இன்னும், (உங்களில் சிலர்) தலை முடியை குறைத்தவர்களாக - நிச்சயமாக நீங்கள் புனிதமான மஸ்ஜிதில் நுழைவீர்கள். (அப்போது எந்த எதிரியையும்) நீங்கள் பயப்பட மாட்டீர்கள். ஆக, (ஹுதைபிய்யா உடன்படிக்கையில் உள்ள நன்மைகளில்) நீங்கள் அறியாதவற்றை அவன் அறிவான். அதற்கு (-மக்காவில் உம்ராவிற்கு நுழைவதற்கு) முன்பாக சமீபமான (வேறு) ஒரு வெற்றியையும் (-ஹுதைபிய்யா உடன்படிக்கையையும் கைபர் வெற்றியையும் உங்களுக்கு) ஏற்படுத்தினான்.
अरबी व्याख्याहरू:
هُوَ الَّذِیْۤ اَرْسَلَ رَسُوْلَهٗ بِالْهُدٰی وَدِیْنِ الْحَقِّ لِیُظْهِرَهٗ عَلَی الدِّیْنِ كُلِّهٖ ؕ— وَكَفٰی بِاللّٰهِ شَهِیْدًا ۟ؕ
அவன்தான் தனது தூதரை நேர்வழி இன்னும் உண்மையான மார்க்கத்தைக் கொண்டு அனுப்பினான், எல்லா மார்க்கங்களை விட அ(ந்த உண்மையான மார்க்கத்)தை மேலோங்க வைப்பதற்காக. இன்னும் சாட்சியாளனாக அல்லாஹ்வே போதுமானவன்.
अरबी व्याख्याहरू:
مُحَمَّدٌ رَّسُوْلُ اللّٰهِ ؕ— وَالَّذِیْنَ مَعَهٗۤ اَشِدَّآءُ عَلَی الْكُفَّارِ رُحَمَآءُ بَیْنَهُمْ تَرٰىهُمْ رُكَّعًا سُجَّدًا یَّبْتَغُوْنَ فَضْلًا مِّنَ اللّٰهِ وَرِضْوَانًا ؗ— سِیْمَاهُمْ فِیْ وُجُوْهِهِمْ مِّنْ اَثَرِ السُّجُوْدِ ؕ— ذٰلِكَ مَثَلُهُمْ فِی التَّوْرٰىةِ ۛۖۚ— وَمَثَلُهُمْ فِی الْاِنْجِیْلِ ۛ۫ۚ— كَزَرْعٍ اَخْرَجَ شَطْاَهٗ فَاٰزَرَهٗ فَاسْتَغْلَظَ فَاسْتَوٰی عَلٰی سُوْقِهٖ یُعْجِبُ الزُّرَّاعَ لِیَغِیْظَ بِهِمُ الْكُفَّارَ ؕ— وَعَدَ اللّٰهُ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ مِنْهُمْ مَّغْفِرَةً وَّاَجْرًا عَظِیْمًا ۟۠
முஹம்மத் (அவர் மீது அல்லாஹ்வின் அருள் நிலவுக!) அல்லாஹ்வின் தூதர் ஆவார். அவருடன் இருப்பவர்கள் நிராகரிப்பாளர்கள் மீது கடினமானவர்கள், தங்களுக்கு மத்தியில் கருணையாளர்கள் ஆவர். (தொழுகையில் குனிந்து) ருகூஃ செய்தவர்களாக; (சிரம் பணிந்து) சுஜூது செய்தவர்களாக அவர்களை நீர் காண்பீர். அவர்கள் அல்லாஹ்வின் அருளையும் பொருத்தத்தையும் விரும்புகிறார்கள். அவர்களின் தோற்றம் அவர்களின் முகங்களில் சுஜூது (-சிரம் பணிந்து வணங்குவது) உடைய அடையாளமாக இருக்கும். இது தவ்ராத்தில் கூறப்பட்ட அவர்களின் தன்மையாகும். இன்னும், இன்ஜீலில் கூறப்பட்ட அவர்களின் தன்மையாவது, (நெல், கோதுமை போன்ற) ஒரு விளைச்சலைப் போலாகும். அது (-அந்த விளைச்சல்) தனது (செடியின்) காம்பை வெளியாக்கியது. இன்னும், அதைப் பலப்படுத்தியது. பிறகு அது தடிப்பமாக ஆனது. அது தனது தண்டின் மீது உயர்ந்து நின்று, விவசாயிகளை கவர்கிறது. (இப்படித்தான் நம்பிக்கையாளர்களை) அவர்கள் மூலமாக நிராகரிப்பாளர்களுக்கு ரோஷமூட்டுவதற்காக (அல்லாஹ் ஓங்கி உயரச் செய்வான்). நம்பிக்கை கொண்டு நன்மைகளை செய்த அவர்களுக்கு அல்லாஹ் (தனது) மன்னிப்பையும் மகத்தான கூலியையும் வாக்களித்தான்.
अरबी व्याख्याहरू:
 
अर्थको अनुवाद सूरः: सूरतुल् फतह
अध्यायहरूको (सूरःहरूको) सूची رقم الصفحة
 
पवित्र कुरअानको अर्थको अनुवाद - तामिल अनुवाद : उमर शरीफ - अनुवादहरूको सूची

पवित्र कुर्आनको अर्थको तामिल भाषामा अनुवाद, अनुवादक : शैख उमर शरीफ बिन अब्दुस्सलाम ।

बन्द गर्नुस्