पवित्र कुरअानको अर्थको अनुवाद - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

رقم الصفحة:close

external-link copy
16 : 22

وَكَذٰلِكَ اَنْزَلْنٰهُ اٰیٰتٍۢ بَیِّنٰتٍ ۙ— وَّاَنَّ اللّٰهَ یَهْدِیْ مَنْ یُّرِیْدُ ۟

இவ்வாறே (-நமது வல்லமையை மறுத்தவருக்கு நமது அத்தாட்சிகளை விவரித்தவாறே) இதை (-இந்த குர்ஆனை) (நமது வல்லமையை விவரிக்கின்ற) தெளிவான அத்தாட்சிகளாக நாம் (நபி முஹம்மதுக்கு) இறக்கினோம். மேலும் நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவருக்கு நேர்வழி காட்டுகின்றான் (என்பதற்காகவும் இந்த குர்ஆனை இறக்கினான்). info
التفاسير:

external-link copy
17 : 22

اِنَّ الَّذِیْنَ اٰمَنُوْا وَالَّذِیْنَ هَادُوْا وَالصّٰبِـِٕیْنَ وَالنَّصٰرٰی وَالْمَجُوْسَ وَالَّذِیْنَ اَشْرَكُوْۤا ۖۗ— اِنَّ اللّٰهَ یَفْصِلُ بَیْنَهُمْ یَوْمَ الْقِیٰمَةِ ؕ— اِنَّ اللّٰهَ عَلٰی كُلِّ شَیْءٍ شَهِیْدٌ ۟

நிச்சயமாக நம்பிக்கை கொண்டவர்கள், கிறித்தவர்கள், ஸாபியீன்கள், யூதர்கள், மஜூஸிகள் இன்னும் இணைவைத்தவர்கள் இவர்களுக்கு (அனைவருக்கும்) மத்தியில் மறுமைநாளில் தீர்ப்பளிப்பான். நிச்சயமாக அல்லாஹ் (இவர்களின் செயல்கள்) எல்லாவற்றின் மீதும் சாட்சியாளன் ஆவான். (அவனுக்கு எதுவும் மறைந்ததல்ல). info
التفاسير:

external-link copy
18 : 22

اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ یَسْجُدُ لَهٗ مَنْ فِی السَّمٰوٰتِ وَمَنْ فِی الْاَرْضِ وَالشَّمْسُ وَالْقَمَرُ وَالنُّجُوْمُ وَالْجِبَالُ وَالشَّجَرُ وَالدَّوَآبُّ وَكَثِیْرٌ مِّنَ النَّاسِ ؕ— وَكَثِیْرٌ حَقَّ عَلَیْهِ الْعَذَابُ ؕ— وَمَنْ یُّهِنِ اللّٰهُ فَمَا لَهٗ مِنْ مُّكْرِمٍ ؕ— اِنَّ اللّٰهَ یَفْعَلُ مَا یَشَآءُ ۟

(நபியே!) நீர் பார்க்கவில்லையா! நிச்சயமாக அல்லாஹ் அவனுக்குத்தான் வானங்களில் உள்ளவர்களும், பூமியில் உள்ளவர்களும், சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும், மலைகளும், மரங்களும், கால்நடைகளும், மக்களில் அதிகமானவர்களும் சிரம் பணிகின்றனர். இன்னும் பலர் அவர்கள் மீது வேதனை உறுதியாகி விட்டது. இன்னும் எவரை அல்லாஹ் இழிவுபடுத்தினானோ அவரை கண்ணியப்படுத்துபவர் எவரும் இல்லை. நிச்சயமாக அல்லாஹ் தான் நாடுகின்றதை செய்வான். info
التفاسير:

external-link copy
19 : 22

هٰذٰنِ خَصْمٰنِ اخْتَصَمُوْا فِیْ رَبِّهِمْ ؗ— فَالَّذِیْنَ كَفَرُوْا قُطِّعَتْ لَهُمْ ثِیَابٌ مِّنْ نَّارٍ ؕ— یُصَبُّ مِنْ فَوْقِ رُءُوْسِهِمُ الْحَمِیْمُ ۟ۚ

இவ்விருவரும் (-அல்லாஹ்வின் நம்பிக்கை கொண்டவரும், அவனை நிராகரித்தவரும்) தங்கள் இறைவனின் (மார்க்க) விஷயத்தில் தர்க்கிக்கின்றனர். ஆக, எவர்கள் நிராகரித்தார்களோ அவர்களுக்கு நரக நெருப்பில் (பழுக்க சூடுகாட்டப்பட்ட செம்பிலிருந்து) ஆடைகள் வெட்டப்படும். அவர்களின் தலைகளுக்கு மேலிருந்து நன்கு கொதிக்கின்ற சுடு நீர் ஊற்றப்படும். info
التفاسير:

external-link copy
20 : 22

یُصْهَرُ بِهٖ مَا فِیْ بُطُوْنِهِمْ وَالْجُلُوْدُ ۟ؕ

அதன்மூலம் (அந்த கொதித்த நீரின் மூலம்) அவர்களுடைய வயிறுகளில் உள்ளவை உருக்கப்படும். இன்னும் (அவர்களுடைய) தோல்கள் (பொசுக்கப்படும்). info
التفاسير:

external-link copy
21 : 22

وَلَهُمْ مَّقَامِعُ مِنْ حَدِیْدٍ ۟

அவர்களுக்கு (அவர்களை அடிப்பதற்கு வானவர்களிடம்) இரும்பு சம்மட்டிகள் இருக்கும். info
التفاسير:

external-link copy
22 : 22

كُلَّمَاۤ اَرَادُوْۤا اَنْ یَّخْرُجُوْا مِنْهَا مِنْ غَمٍّ اُعِیْدُوْا فِیْهَا ۗ— وَذُوْقُوْا عَذَابَ الْحَرِیْقِ ۟۠

(அவர்களுக்கு ஏற்பட்ட துன்பத்தின்) துக்கத்தால் அதிலிருந்து (நரகத்திலிருந்து) அவர்கள் வெளியேறுவதற்கு நாடும்போதெல்லாம் அதில் (-நரகத்தில்) திரும்பக் கொண்டு வரப்படுவார்கள். இன்னும் (அவர்களுக்குச் சொல்லப்படும்:) பொசுக்கக்கூடிய வேதனையை சுவையுங்கள். info
التفاسير:

external-link copy
23 : 22

اِنَّ اللّٰهَ یُدْخِلُ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ یُحَلَّوْنَ فِیْهَا مِنْ اَسَاوِرَ مِنْ ذَهَبٍ وَّلُؤْلُؤًا ؕ— وَلِبَاسُهُمْ فِیْهَا حَرِیْرٌ ۟

நிச்சயமாக நம்பிக்கை கொண்டு நன்மைகள் செய்தவர்களை அல்லாஹ் சொர்க்கங்களில் நுழைப்பான். அவற்றின் (மரங்களுக்கு) கீழ் நதிகள் ஓடும். அவற்றில் (-அந்த சொர்க்கங்களில்) தங்கத்தினாலான வளையல்களும் முத்து (ஆபரணமு)ம் அவர்கள் அணிவிக்கப்படுவார்கள். இன்னும் அவற்றில் அவர்களது ஆடை பட்டாகும். info
التفاسير: