Check out the new design

Vertaling van de betekenissen Edele Qur'an - Tamil vertaling van de samenvatting van de tafsier van de Heilige Koran * - Index van vertaling


Vertaling van de betekenissen Surah: Hoed   Vers:
اَمْ یَقُوْلُوْنَ افْتَرٰىهُ ؕ— قُلْ فَاْتُوْا بِعَشْرِ سُوَرٍ مِّثْلِهٖ مُفْتَرَیٰتٍ وَّادْعُوْا مَنِ اسْتَطَعْتُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟
11.13. “முஹம்மது குர்ஆனை சுயமாகப் புனைந்து கொண்டார். அது அல்லாஹ்விடமிருந்து அறிவிக்கப்பட்ட வஹி அல்ல” என்று இணைவைப்பாளர்கள் கூறுகிறார்களா? -தூதரே!- நீர் அவர்களிடம் சவால் விடுத்தவராகக் கூறுவீராக: “நீங்கள் புனையப்பட்டதாக வாதிடும் குர்ஆனைப் போன்று உண்மையற்ற இந்த குர்ஆனில் உள்ளதைப் போன்ற பத்து அத்தியாயங்களைப் புனைந்து கொண்டு வாருங்கள் பார்க்கலாம். குர்ஆன் புனைந்து கூறப்பட்டது என்ற உங்களின் வாதத்தில் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இதற்காக உங்களால் உதவிக்கு அழைக்க முடிந்தவர்களை அழைத்துக் கொள்ளுங்கள்.
Arabische uitleg van de Qur'an:
فَاِلَّمْ یَسْتَجِیْبُوْا لَكُمْ فَاعْلَمُوْۤا اَنَّمَاۤ اُنْزِلَ بِعِلْمِ اللّٰهِ وَاَنْ لَّاۤ اِلٰهَ اِلَّا هُوَ ۚ— فَهَلْ اَنْتُمْ مُّسْلِمُوْنَ ۟
11.14. -நம்பிக்கையாளர்களே!- நீங்கள் அவர்களிடம் வேண்டியதை இயலாமையினால் அவர்களால் கொண்டுவர முடியவில்லையெனில் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள், “நிச்சயமாக குர்ஆன் அல்லாஹ் தன் தூதர் மீது தன் அறிவுடன் இறக்கிய வேதமாகும். அது புனைந்து கூறப்பட்டதல்ல.” அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாருமில்லை என்பதை அறிந்துகொள்ளுங்கள். தெளிவான இந்த ஆதாரங்களுக்குப் பிறகு அல்லாஹ்வுக்கு நீங்கள் அடிபணிவீர்களா?
Arabische uitleg van de Qur'an:
مَنْ كَانَ یُرِیْدُ الْحَیٰوةَ الدُّنْیَا وَزِیْنَتَهَا نُوَفِّ اِلَیْهِمْ اَعْمَالَهُمْ فِیْهَا وَهُمْ فِیْهَا لَا یُبْخَسُوْنَ ۟
11.15. யார் தம் செயல்களின் மூலம் மறுமையை விரும்பாமல் இவ்வுலகத்தையும் அழியக்கூடிய அதன் இன்பங்களையும் விரும்புவார்களோ நாம் அவர்களின் செயல்களுக்கான கூலியை ஆரோக்கியம், செல்வ வளம், அமைதி போன்ற வடிவில் இவ்வுலகிலேயே வழங்கிவிடுவோம். அவர்களின் செயல்களுக்கான கூலியிலிருந்து எதுவும் குறைக்கப்படமாட்டாது.
Arabische uitleg van de Qur'an:
اُولٰٓىِٕكَ الَّذِیْنَ لَیْسَ لَهُمْ فِی الْاٰخِرَةِ اِلَّا النَّارُ ۖؗ— وَحَبِطَ مَا صَنَعُوْا فِیْهَا وَبٰطِلٌ مَّا كَانُوْا یَعْمَلُوْنَ ۟
11.16. இழிவான இந்த நோக்கம் உடையவர்களுக்கு மறுமையில் நரக நெருப்பில் நுழைவதைத் தவிர வேறு எந்தக் கூலியும் இல்லை. அவர்களது செயல்களுக்கான கூலி அவர்களை விட்டும் சென்று விடும். அவர்களது செயல்கள் வீணாகிவிடக் கூடியன. ஏனெனில் ஈமானும் சரியான நோக்கமும் அவைகளுக்கு இருக்கவில்லை. எனவே அவர்கள் அல்லாஹ்வின் திருப்தியையும் மறுமையின் வீட்டையும் அதன் மூலம் நாடவில்லை.
Arabische uitleg van de Qur'an:
اَفَمَنْ كَانَ عَلٰی بَیِّنَةٍ مِّنْ رَّبِّهٖ وَیَتْلُوْهُ شَاهِدٌ مِّنْهُ وَمِنْ قَبْلِهٖ كِتٰبُ مُوْسٰۤی اِمَامًا وَّرَحْمَةً ؕ— اُولٰٓىِٕكَ یُؤْمِنُوْنَ بِهٖ ؕ— وَمَنْ یَّكْفُرْ بِهٖ مِنَ الْاَحْزَابِ فَالنَّارُ مَوْعِدُهٗ ۚ— فَلَا تَكُ فِیْ مِرْیَةٍ مِّنْهُ ۗ— اِنَّهُ الْحَقُّ مِنْ رَّبِّكَ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا یُؤْمِنُوْنَ ۟
11.17. தம் இறைவனிடமிருந்து ஆதாரத்தைப் பெற்று, அவனிடமிருந்துள்ள சாட்சியான ஜிப்ரீல் அவரைத் தொடரும் முஹம்மது நபியும் அவருடன் நம்பிக்கை கொண்டவர்களும் வழிகேட்டில் தடுமாறித் திரியும் நிராகரிப்பாளர்களும் சமமாக மாட்டார்கள். அவரது தூதுக்கு குர்ஆனுக்கு முன் மூஸாவின் மீது மக்களுக்கு வழிகாட்டியாகவும் அருளாகவும் இறக்கப்பட்ட தவ்ராதும் சான்று பகர்கின்றது. முஹம்மதின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் குர்ஆனையும் அவர் மீது இறக்கப்பட்டதையும் உண்மைப்படுத்துகிறார்கள். அதனை நிராகரிக்கும் பிற சமயத்தினர் மறுமைநாளில் நரகத்தையே தங்களுக்கு வாக்களிக்கப்பட்ட இடமாகப் பெறுவார்கள். -தூதரே!- குர்ஆனைக் குறித்தும் அது கூறும் அவர்களுக்கு வாக்களிக்கப்ட்ட இடம் குறித்தும் சந்தேகம் கொண்டு விடாதீர். அது சந்தேகமற்ற உண்மையாகும். மனிதர்களில் பெரும்பாலோர் தெளிவான ஆதாரங்களும் சான்றுகளும் இருந்தும் நம்பிக்கை கொள்வதில்லை.
Arabische uitleg van de Qur'an:
وَمَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَرٰی عَلَی اللّٰهِ كَذِبًا ؕ— اُولٰٓىِٕكَ یُعْرَضُوْنَ عَلٰی رَبِّهِمْ وَیَقُوْلُ الْاَشْهَادُ هٰۤؤُلَآءِ الَّذِیْنَ كَذَبُوْا عَلٰی رَبِّهِمْ ۚ— اَلَا لَعْنَةُ اللّٰهِ عَلَی الظّٰلِمِیْنَ ۟ۙ
11.18. அல்லாஹ்வுக்கு இணை உண்டு, அல்லது மகன் உண்டு என்று இட்டுக்கட்டிக் கூறுபவனைவிட மிகப் பெரிய அநியாயக்காரன் வேறுயாருமில்லை. அல்லாஹ்வின் மீது பொய்யாக இட்டுக்கட்டுபவர்கள் மறுமை நாளில் தங்கள் இறைவனுக்கு முன்னால் அவர்களின் செயல்களைக் குறித்து விசாரிக்கப்படுவதற்காக நிறுத்தப்படுவார்கள். அவர்களுக்கு எதிராக வானவர்களும் தூதர்களும் “இவர்கள்தாம் அல்லாஹ்வின் மீது பொய்யாக இட்டுக்கட்டி அவனுக்கு இணை உண்டு, மகன் உண்டு என்று கூறினார்கள் என்று.” சாட்சி கூறுவார்கள். அறிந்து கொள்ளுங்கள், அல்லாஹ்வின் விஷயத்தில் பொய்கூறி தமக்குத் தாமே அநீதி இழைத்துக்கொண்ட இந்த அநியாயக்காரர்கள் அல்லாஹ்வின் அருளை விட்டும் தூரமாகட்டும்.”
Arabische uitleg van de Qur'an:
الَّذِیْنَ یَصُدُّوْنَ عَنْ سَبِیْلِ اللّٰهِ وَیَبْغُوْنَهَا عِوَجًا ؕ— وَهُمْ بِالْاٰخِرَةِ هُمْ كٰفِرُوْنَ ۟
11.19. அவர்கள் அல்லாஹ்வின் நேரான வழியை விட்டும் மக்களைத் தடுத்தார்கள். அவனுடைய பாதையில் யாரும் செல்லாதிருக்க அதில் கோணல் ஏற்படுவதை நாடினார்கள். அவர்கள் மரணத்திற்குப் பிறகு மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை நிராகரித்து மறுக்கிறார்கள்.
Arabische uitleg van de Qur'an:
Voordelen van de verzen op deze pagina:
• تحدي الله تعالى للمشركين بالإتيان بعشر سور من مثل القرآن، وبيان عجزهم عن الإتيان بذلك.
1. அல்லாஹ் இணைவைப்பாளர்களுக்கு குர்ஆனைப் போன்று பத்து அத்தியாயங்களைப் புனைந்து கொண்டு வரும்படி சவால் விடுகிறான். அவர்களால் ஒரு போதும் கொண்டுவர முடியாது என்பதையும் தெளிவுபடுத்துகிறான்.

• إذا أُعْطِي الكافر مبتغاه من الدنيا فليس له في الآخرة إلّا النار.
2. நிராகரிப்பாளனுக்கு உலகில் அவனது எதிர்பார்ப்பு நிவைற்றப்பட்டாலும் மறுமையில் அவனுக்கு நரகத்தைத் தவிர வேறொன்றுமில்லை.

• عظم ظلم من يفتري على الله الكذب وعظم عقابه يوم القيامة.
3.அல்லாஹ்வின் மீது பொய்யை புனைந்தரைப்பவனின் அநியாயம் மிகப் பெரியது. மறுமையில் அவனுக்குரிய தண்டனையும் மிகப் பெரியது.

 
Vertaling van de betekenissen Surah: Hoed
Surah's Index Pagina nummer
 
Vertaling van de betekenissen Edele Qur'an - Tamil vertaling van de samenvatting van de tafsier van de Heilige Koran - Index van vertaling

Uitgegeven door het Tafsier Centrum voor Koranstudies.

Sluit