Check out the new design

Vertaling van de betekenissen Edele Qur'an - Tamil vertaling van de samenvatting van de tafsier van de Heilige Koran * - Index van vertaling


Vertaling van de betekenissen Vers: (80) Surah: De bij
وَاللّٰهُ جَعَلَ لَكُمْ مِّنْ بُیُوْتِكُمْ سَكَنًا وَّجَعَلَ لَكُمْ مِّنْ جُلُوْدِ الْاَنْعَامِ بُیُوْتًا تَسْتَخِفُّوْنَهَا یَوْمَ ظَعْنِكُمْ وَیَوْمَ اِقَامَتِكُمْ ۙ— وَمِنْ اَصْوَافِهَا وَاَوْبَارِهَا وَاَشْعَارِهَاۤ اَثَاثًا وَّمَتَاعًا اِلٰی حِیْنٍ ۟
16.80. அல்லாஹ் நீங்கள் கற்களினாலும் ஏனையவற்றாலும் நிர்மாணிக்கும் உங்கள் வீடுகளில் தங்குமிடத்தையும் ஓய்வையும் வைத்துள்ளான். நகரப் புறத்தில் வீடுகள் அமைப்பதைப் போன்று ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றின் தோல்களினால் கிராமப் புறங்களில் கூடாரங்களை அவன் உங்களுக்காக ஏற்படுத்தியுள்ளான். ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு தூக்கிச் செல்வதும் இறங்குமிடத்தில் அதனை கூடாரமாக அமைப்பதும் உங்களுக்கு இலகுவாக உள்ளது. செம்மறியாட்டின் தோல்கள், ஒட்டகம் மற்றும் வெள்ளாட்டின் உரோமங்கள் ஆகியவற்றிலிருந்து வீட்டிற்குத் தேவையான தளபாடங்களையும், குறிப்பிட்ட காலம் வரை நீங்கள் அனுபவிக்கும் ஆடைகளையும் போர்வைகளையும்அவன் உங்களுக்காக ஏற்படுத்தியுள்ளான்.
Arabische uitleg van de Qur'an:
Voordelen van de verzen op deze pagina:
• دلت الآيات على جواز الانتفاع بالأصواف والأوبار والأشعار على كل حال، ومنها استخدامها في البيوت والأثاث.
1. உரோமங்கள், தோல்கள் ஆகியவற்றினால் எந்த நிலமையிலும் பயன் பெறலாம் என்பதற்கு -மேலுள்ள- வசனங்கள் ஆதாரமாகும். அவற்றை வீடுகளிலும், தளபாடங்களிலும் கூட பயன்படுத்தலாம்.

• كثرة النعم من الأسباب الجالبة من العباد مزيد الشكر، والثناء بها على الله تعالى.
2. அதிகமான அருட்கொடைகள் அடியார்கள் மென்மேலும் நன்றி செலுத்தி அதன் மூலம் அல்லாஹ்வைப் புகழ்வதற்குரிய காரணங்களில் ஒன்றாகும்.

• الشهيد الذي يشهد على كل أمة هو أزكى الشهداء وأعدلهم، وهم الرسل الذين إذا شهدوا تمّ الحكم على أقوامهم.
3. ஒவ்வொரு சமூகத்திலும் சாட்சி கூறுவதற்காக எழுப்பப்படுபவர் அவர்களில் தூய்மையானவரும் நீதமானவரும் ஆவார். அவர்கள் தூதர்களாவர். அவர்கள் சாட்சி கூறிவிட்டால் அந்த சமூகங்களுக்கு எதிராக தீர்ப்பு உறுதியாகி விடும்.

• في قوله تعالى: ﴿وَسَرَابِيلَ تَقِيكُم بِأْسَكُمْ﴾ دليل على اتخاذ العباد عدّة الجهاد؛ ليستعينوا بها على قتال الأعداء.
4. யுத்தத்தில் உங்களைக் காக்கும் கேடயம் என்ற அல்லாஹ்வின் வார்த்தையில் அடியார்கள் போருக்கான ஆயுதங்களை தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்கான ஆதாரம் உள்ளது. அதன் மூலமே அவர்கள் எதிரிகளுடன் போரிட உதவியைப் பெறமுடியும்.

 
Vertaling van de betekenissen Vers: (80) Surah: De bij
Surah's Index Pagina nummer
 
Vertaling van de betekenissen Edele Qur'an - Tamil vertaling van de samenvatting van de tafsier van de Heilige Koran - Index van vertaling

Uitgegeven door het Tafsier Centrum voor Koranstudies.

Sluit