Check out the new design

Vertaling van de betekenissen Edele Qur'an - Tamil vertaling van de samenvatting van de tafsier van de Heilige Koran * - Index van vertaling


Vertaling van de betekenissen Vers: (52) Surah: al-Israa
یَوْمَ یَدْعُوْكُمْ فَتَسْتَجِیْبُوْنَ بِحَمْدِهٖ وَتَظُنُّوْنَ اِنْ لَّبِثْتُمْ اِلَّا قَلِیْلًا ۟۠
17.52. மஹ்ஷர் பெருவெளியில் அவன் உங்களை அழைக்கும் நாளில் அவன் உங்களை மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புவான். நீங்கள் அவனுடைய கட்டளைக்குக் கட்டுப்பட்டு அவனைப் புகழ்ந்தவாறே அவனுக்குப் பதிலளிப்பீர்கள். நிச்சயமாக நீங்கள் பூமியில் குறைந்த காலமே தங்கியிருந்ததாக உங்களுக்குத் தோன்றும்.
Arabische uitleg van de Qur'an:
Voordelen van de verzen op deze pagina:
• القول الحسن داع لكل خلق جميل وعمل صالح، فإنَّ من ملك لسانه ملك جميع أمره.
1. நல்ல வார்த்தை அனைத்து நற்பண்புகளையும் நற்செயல்களையும் வரவழைக்கக்கூடியதாகும். எவர் தம் நாவைக் கட்டுப்படுத்திக் கொண்டாரோ அவர் தம் அனைத்து விஷயங்களையும் கட்டுப்படுத்திக் கொண்டார்.

• فاضل الله بين الأنبياء بعضهم على بعض عن علم منه وحكمة.
2. அல்லாஹ் தன் அறிவு மற்றும் ஞானத்தின் அடிப்படையில் தூதர்களில் சிலரைவிட சிலரை சிறப்பித்துள்ளான்.

• الله لا يريد بعباده إلا ما هو الخير، ولا يأمرهم إلا بما فيه مصلحتهم.
3. அல்லாஹ் தன் அடியார்களுக்கு நன்மையைத் தவிர வேறொன்றும் நாட மாட்டான். அவர்களுக்கு நன்மை அடங்கியுள்ள விஷயத்தைத் தவிர வேறெதையும் அவர்களுக்குக் கட்டளையிட மாட்டான்.

• علامة محبة الله أن يجتهد العبد في كل عمل يقربه إلى الله، وينافس في قربه بإخلاص الأعمال كلها لله والنصح فيها.
4. அடியான் அல்லாஹ்விடம் நெருங்கச் செய்யும் அனைத்துவிதமான செயல்களிலும் கூடுதலாக ஈடுபடுவதும் அனைத்து செயற்பாடுகளையும் அல்லாஹ்வுக்காகவே செய்து, அவற்றில் விசுவாசமா இருந்து அவனது நெருக்கத்துக்கு போட்டியிடுவதும் அல்லாஹ்வை விரும்புவதின் அடையாளமாகும்.

 
Vertaling van de betekenissen Vers: (52) Surah: al-Israa
Surah's Index Pagina nummer
 
Vertaling van de betekenissen Edele Qur'an - Tamil vertaling van de samenvatting van de tafsier van de Heilige Koran - Index van vertaling

Uitgegeven door het Tafsier Centrum voor Koranstudies.

Sluit