Check out the new design

Vertaling van de betekenissen Edele Qur'an - Tamil vertaling van de samenvatting van de tafsier van de Heilige Koran * - Index van vertaling


Vertaling van de betekenissen Surah: An-nisa   Vers:
وَاللّٰهُ اَعْلَمُ بِاَعْدَآىِٕكُمْ ؕ— وَكَفٰی بِاللّٰهِ وَلِیًّا ؗۗ— وَّكَفٰی بِاللّٰهِ نَصِیْرًا ۟
4.45. நம்பிக்கையாளர்களே! உங்கள் எதிரிகளை உங்களைவிட அல்லாஹ் நன்கறிவான். அதனால்தான் அவன் அவர்களைக் குறித்து உங்களுக்குத் தெளிவுபடுத்தியுள்ளான். அவர்களின் பகைமையை வெளிப்படுத்திவிட்டான். அவர்களின் தாக்குதலிலிருந்து உங்களைக் காக்கும் பாதுகாவலனாக இருப்பதற்கும் அவர்களின் சூழ்ச்சியையும் நோவினையையும் உங்களைவிட்டும் தடுத்து அவர்களுக்கெதிராக உங்களுக்கு உதவிசெய்வதற்கும் அல்லாஹ்வே போதுமானவனாவான்.
Arabische uitleg van de Qur'an:
مِنَ الَّذِیْنَ هَادُوْا یُحَرِّفُوْنَ الْكَلِمَ عَنْ مَّوَاضِعِهٖ وَیَقُوْلُوْنَ سَمِعْنَا وَعَصَیْنَا وَاسْمَعْ غَیْرَ مُسْمَعٍ وَّرَاعِنَا لَیًّا بِاَلْسِنَتِهِمْ وَطَعْنًا فِی الدِّیْنِ ؕ— وَلَوْ اَنَّهُمْ قَالُوْا سَمِعْنَا وَاَطَعْنَا وَاسْمَعْ وَانْظُرْنَا لَكَانَ خَیْرًا لَّهُمْ وَاَقْوَمَ ۙ— وَلٰكِنْ لَّعَنَهُمُ اللّٰهُ بِكُفْرِهِمْ فَلَا یُؤْمِنُوْنَ اِلَّا قَلِیْلًا ۟
4.46. அல்லாஹ் இறக்கிய அவனது வார்த்தையை மாற்றுபவர்களும் யூதர்களில் உள்ளனர். அவர்கள் அல்லாஹ் இறக்கியதற்கு மாறாக விளக்கமளிக்கிறார்கள். தூதர் ஏதேனும் விஷயத்தைக் கொண்டு அவர்களுக்குக் கட்டளையிட்டால், “உமது பேச்சை கேட்டுக் கொண்டோம். ஆனால் உமக்குக் கீழ்ப்படிய மாட்டோம். நாங்கள் சொல்வதைக் கேட்பீராக. உமது பேச்சு கேட்கப்படாது“ என்று கூறி பரிகாசம் செய்கிறார்கள். அவர்கள் எங்களது பேச்சை செவிமடுப்பீராக என்ற கருத்தையுடைய ‘ராயினா’ என்ற வார்த்தையைக் கூறுவது போன்று பாசாங்குசெய்து அதன் மூலம் தூதருக்கு சாபமிட நாடுகிறார்கள். மார்க்கத்தில் குறைகாண நாடுகிறார்கள். இவற்றுக்குப் பதிலாக அவர்கள், “நாங்கள் உமது பேச்சை செவியுற்றோம். நீர் கூறும் விஷயத்திற்குக் கட்டுப்பட்டோம், நீர் கேட்பீராக” என்றும் ‘ராயினா’ என்ற வார்த்தைக்குப் பதிலாக ‘இன்தளிர்னா - நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்ள எங்களுக்காக காத்திருங்கள்’ என்றும் கூறியிருந்தால் அது அவர்களுக்குச் சிறந்ததாகவும் நியாயமானதாகவும் அமைந்திருக்கும்.ஏனெனில் அதுவே நபியவர்களுடன் அவர்களது தகுதிக்குப் பொருத்தமான அழகிய நடத்தையாகும். ஆயினும் அல்லாஹ் அவர்களைச் சபித்துவிட்டான். அவர்களின் நிராகரிப்பினால் தன் அருளிலிருந்து அவர்களைத் தூரமாக்கிவிட்டான். தங்களுக்குப் பயனளிக்கும் விதத்தில் அவர்கள் நம்பிக்கைகொள்ள மாட்டார்கள்.
Arabische uitleg van de Qur'an:
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اُوْتُوا الْكِتٰبَ اٰمِنُوْا بِمَا نَزَّلْنَا مُصَدِّقًا لِّمَا مَعَكُمْ مِّنْ قَبْلِ اَنْ نَّطْمِسَ وُجُوْهًا فَنَرُدَّهَا عَلٰۤی اَدْبَارِهَاۤ اَوْ نَلْعَنَهُمْ كَمَا لَعَنَّاۤ اَصْحٰبَ السَّبْتِ ؕ— وَكَانَ اَمْرُ اللّٰهِ مَفْعُوْلًا ۟
4.47. வேதம் வழங்கப்பட்ட யூதர்கள் மற்றும் கிருஸ்தவர்களே! நாம் உங்கள் முகங்களில் உள்ள புலன்களை நீக்கி அவற்றை உங்கள் பின்புறத்தில் வைப்பதற்கு முன்னர் அல்லது தடுக்கப்பட்ட சனிக்கிழமையில் தடையையும் மீறி மீன்பிடித்தவர்களைக் குரங்குகளாக உருமாற்றி என் அருளிலிருந்து தூரமாக்கியது போன்று உங்களையும் என் அருளிலிருந்து தூரமாக்குவதற்கு முன்னர் நாம் முஹம்மது மீது இறக்கியவற்றின்மீது நம்பிக்கைகொள்ளுங்கள். அது உங்களிடம் உள்ள தவ்ராத்தையும் இன்ஜீலையும் உண்மைப்படுத்துகிறது. அல்லாஹ்வின் கட்டளையும் விதியும் நிச்சயமாக நிறைவேறியே தீரும்.
Arabische uitleg van de Qur'an:
اِنَّ اللّٰهَ لَا یَغْفِرُ اَنْ یُّشْرَكَ بِهٖ وَیَغْفِرُ مَا دُوْنَ ذٰلِكَ لِمَنْ یَّشَآءُ ۚ— وَمَنْ یُّشْرِكْ بِاللّٰهِ فَقَدِ افْتَرٰۤی اِثْمًا عَظِیْمًا ۟
4.48. நிச்சயமாக அல்லாஹ் தன் படைப்புகளில் எந்த ஒன்றும் தனக்கு இணையாக்கப்படுவதை மன்னிக்கவே மாட்டான். இணைவைப்பு நிராகரிப்பு ஆகியவற்றைத்தவிர மற்ற பாவங்களை தான் நாடியவர்களுக்கு மன்னித்துவிடுகிறான் அல்லது தனது நீதிக்கு ஏற்ப தான் நாடியவர்களை - அவர்கள் செய்த பாவங்களின் அளவு - தண்டித்துவிடுகிறான். அல்லாஹ்வுக்கு இணையாக மற்றவர்களை ஆக்குபவர்கள் பெரும் பாவத்தையே கற்பனை செய்துள்ளனர். அதே நிலையிலேயே மரணித்துவிடுபவர்களை அல்லாஹ் மன்னிக்க மாட்டான்.
Arabische uitleg van de Qur'an:
اَلَمْ تَرَ اِلَی الَّذِیْنَ یُزَكُّوْنَ اَنْفُسَهُمْ ؕ— بَلِ اللّٰهُ یُزَكِّیْ مَنْ یَّشَآءُ وَلَا یُظْلَمُوْنَ فَتِیْلًا ۟
4.49. தூதரே! தங்களையும் தங்களின் செயல்களையும் பரிசுத்தப்படுத்தும் விதத்தில் புகழ்ந்து கொள்கிறார்களே அவர்களை உமக்குத் தெரியுமா? மாறாக அல்லாஹ் மட்டுமே தன் அடியார்களில் தான் நாடியவர்களைப் புகழ்ந்து பரிசுத்தப்படுத்துபவன். ஏனெனில் அவன்தான் உள்ளங்களின் இரகசியங்களை அறிந்தவன். அவர்கள் செய்த நன்மை பேரீச்சம் விதையில் இருக்கும் நூலளவு இருந்தாலும் அதுவும் அவர்களுக்குக் குறைக்கப்படமாட்டாது.
Arabische uitleg van de Qur'an:
اُنْظُرْ كَیْفَ یَفْتَرُوْنَ عَلَی اللّٰهِ الْكَذِبَ ؕ— وَكَفٰی بِهٖۤ اِثْمًا مُّبِیْنًا ۟۠
4.50. தூதரே! அவர்கள் தம்மைத் தாமே புகழ்ந்து எவ்வாறு அல்லாஹ்வின்மீது அபாண்டமாகப் பொய் கூறுகிறார்கள் என்பதைப் பாரும். இதுவே அவர்களது வழிகேட்டைத் தௌிவுபடுத்தும் பாவத்துக்குப் போதுமானதாகும்.
Arabische uitleg van de Qur'an:
اَلَمْ تَرَ اِلَی الَّذِیْنَ اُوْتُوْا نَصِیْبًا مِّنَ الْكِتٰبِ یُؤْمِنُوْنَ بِالْجِبْتِ وَالطَّاغُوْتِ وَیَقُوْلُوْنَ لِلَّذِیْنَ كَفَرُوْا هٰۤؤُلَآءِ اَهْدٰی مِنَ الَّذِیْنَ اٰمَنُوْا سَبِیْلًا ۟
4.51. தூதரே! அல்லாஹ்வால் கொஞ்சம் அறிவுவழங்கப்பட்ட யூதர்களைக் குறித்து உமக்குத் தெரியாதா? அவர்களின் நிலை உமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லையா? அவர்கள் அல்லாஹ்வைத் தவிர அவர்களாகவே ஏற்படுத்திக்கொண்ட தெய்வங்களை நம்புகிறார்கள். இன்னும் அவர்கள் இணைவைப்பாளர்களைத் திருப்திப்படுத்துவதற்காக, “முஹம்மதின் தோழர்களைவிட நீங்கள்தாம் நேரான வழியில் உள்ளீர்கள்.” எனவும் கூறுகிறார்கள்.
Arabische uitleg van de Qur'an:
Voordelen van de verzen op deze pagina:
• كفاية الله للمؤمنين ونصره لهم تغنيهم عما سواه.
1. நம்பிக்கையாளர்களுக்கு உதவிசெய்வதற்கு அல்லாஹ்வே போதுமானவன். அது அவனைத்தவிர மற்றவர்களை விட்டும் அவர்களைத் தேவையற்றவர்களாக்கிவிட்டது.

• بيان جرائم اليهود، كتحريفهم كلام الله، وسوء أدبهم مع رسوله صلى الله عليه وسلم، وتحاكمهم إلى غير شرعه سبحانه.
2. அல்லாஹ்வின் வேதத்தை திரித்தல், அல்லாஹ்வின் தூதருடன் மோசமான முறையில் நடந்துகொண்டமை, அல்லாஹ்வின் சட்டத்தை விட்டுவிட்டு ஏனையோரிடம் தீர்ப்புக் கேட்டுச் சென்றமை போன்ற யூதர்களின் பல குற்றங்கள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. .

• بيان خطر الشرك والكفر، وأنه لا يُغْفر لصاحبه إذا مات عليه، وأما ما دون ذلك فهو تحت مشيئة الله تعالى.
3. இணைவைப்பு, நிராகரிப்பு என்பவற்றின் விபரீதம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இணைவைத்த நிலையிலேயே மரணிப்பவரை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான். அதைத் தவிர மற்ற பாவங்கள் அவனது நாட்டத்திற்குட்பட்டதாகும்.

 
Vertaling van de betekenissen Surah: An-nisa
Surah's Index Pagina nummer
 
Vertaling van de betekenissen Edele Qur'an - Tamil vertaling van de samenvatting van de tafsier van de Heilige Koran - Index van vertaling

Uitgegeven door het Tafsier Centrum voor Koranstudies.

Sluit