Check out the new design

Vertaling van de betekenissen Edele Qur'an - Tamil vertaling van de samenvatting van de tafsier van de Heilige Koran * - Index van vertaling


Vertaling van de betekenissen Vers: (49) Surah: Asj-Sjoera
لِلّٰهِ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ— یَخْلُقُ مَا یَشَآءُ ؕ— یَهَبُ لِمَنْ یَّشَآءُ اِنَاثًا وَّیَهَبُ لِمَنْ یَّشَآءُ الذُّكُوْرَ ۟ۙ
42.49,50. வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியதிகாரம் அல்லாஹ்வுக்கே உரியது. அவன் ஆண், பெண் மற்றும் அது அல்லாதவற்றில் தான் நாடியதைப் படைக்கிறான். தான் நாடியவர்களுக்குப் பெண் குழந்தைகளை வழங்கி ஆண் குழந்தைகளைத் தடுக்கிறான். தான் நாடியவர்களுக்கு ஆண் குழந்தைகளை வழங்கி பெண் குழந்தைகளைத் தடுக்கிறான். அல்லது தான் நாடியவர்களுக்கு ஆணையும் பெண்ணையும் சேர்த்து வழங்குகிறான். தான் நாடியவர்களை குழந்தைகளற்ற மலடுகளாக ஆக்குகிறான். நிகழ்வதையும் எதிர்காலத்தில் நிகழக்கூடியதையும் நிச்சயமாக அவன் நன்கறிந்தவன். இது அவனின் பரிபூரண அறிவு மற்றும் பூரண ஞானத்தில் உள்ளதாகும். எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவனால் இயலாதது எதுவுமில்லை.
Arabische uitleg van de Qur'an:
Voordelen van de verzen op deze pagina:
• وجوب المسارعة إلى امتثال أوامر الله واجتناب نواهيه.
1. அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்துவதிலும் அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகியிருப்பதிலும் விரைவாகச் செயல்பட வேண்டும்.

• مهمة الرسول البلاغ، والنتائج بيد الله.
2. எடுத்துரைப்பது மட்டுமே தூதர்மீதுள்ள கடமையாகும். முடிவு அல்லாஹ்வின் கையில்தான் உள்ளது.

• هبة الذكور أو الإناث أو جمعهما معًا هو على مقتضى علم الله بما يصلح لعباده، ليس فيها مزية للذكور دون الإناث.
3. ஆண் குழந்தைகளை மாத்திரம் அல்லது பெண்குழந்தைகளை மாத்திரம் அல்லது இரண்டையும் சேர்த்து வழங்குவது தனது அடியார்களுக்கு பொருத்தமானது என அல்லாஹ் அறிந்ததன்படியே நடைபெறுகிறது. இதில் பெண்களை விட ஆண்களுக்கு எந்தச் சிறப்பும் இல்லை.

• يوحي الله تعالى إلى أنبيائه بطرق شتى؛ لِحِكَمٍ يعلمها سبحانه.
4. அல்லாஹ் அவன் அறிந்த நோக்கங்களின்படி தன் நபிமார்களுக்கு பலமுறைகளில் வஹி அறிவிக்கிறான்.

 
Vertaling van de betekenissen Vers: (49) Surah: Asj-Sjoera
Surah's Index Pagina nummer
 
Vertaling van de betekenissen Edele Qur'an - Tamil vertaling van de samenvatting van de tafsier van de Heilige Koran - Index van vertaling

Uitgegeven door het Tafsier Centrum voor Koranstudies.

Sluit