Vertaling van de betekenissen Edele Qur'an - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - Index van vertaling


Vertaling van de betekenissen Vers: (1) Surah: Soerat El-Maidah (De tafel)

ஸூரா அல்மாயிதா

Het doel van deze surah:
الأمر بالوفاء بالعقود، والتحذير من مشابهة أهل الكتاب في نقضها.
ஒப்பந்தங்களை நிறைவேற்றுமாறு ஏவுதலும் வேதக்காரர்களுக்கு ஒப்பாகி அவற்றை முறிப்பதை விட்டும் எச்சரித்தலும்.

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اَوْفُوْا بِالْعُقُوْدِ ؕ۬— اُحِلَّتْ لَكُمْ بَهِیْمَةُ الْاَنْعَامِ اِلَّا مَا یُتْلٰی عَلَیْكُمْ غَیْرَ مُحِلِّی الصَّیْدِ وَاَنْتُمْ حُرُمٌ ؕ— اِنَّ اللّٰهَ یَحْكُمُ مَا یُرِیْدُ ۟
5.1. நம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கும் உங்கள் படைப்பாளனுக்குமிடையே இருக்கும் உறுதியான ஒப்பந்தங்களையும் உங்களுக்கும் ஏனைய அடியார்களுக்குமிடையே செய்துகொண்ட ஒப்பந்தங்களையும் முழுமையாக நிறைவேற்றுங்கள். அல்லாஹ் உங்கள் மீது கருணை செலுத்தும் பொருட்டு ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற கால்நடைகளை உங்களுக்கு ஆகுமாக்கித் தந்துள்ளான். ஆயினும் வசனங்கள் மூலம் குர்ஆனில் உங்களுக்குத் தடைசெய்யப்பட்டவற்றைத் தவிர. ஹஜ் அல்லது உம்ராவுக்காக நீங்கள் இஹ்ராம் அணிந்திருக்கும் போது தரையில் வேட்டையாடுவது உங்களுக்குத் தடைசெய்யப்பட்டுள்ளது. தனது ஞானத்திற்கு ஏற்ப அல்லாஹ் தான் நாடியதை ஹலாலாகவும் ஹராமாகவும் தீர்மானிக்கிறான். அவனை யாரும் நிர்ப்பந்திக்க முடியாது. அவனுடைய தீர்மானத்தை யாரும் ஆட்சேபிக்கவும் முடியாது.
Arabische uitleg van de Qur'an:
Voordelen van de verzen op deze pagina:
• عناية الله بجميع أحوال الورثة في تقسيم الميراث عليهم.
1.அனந்தரச் சொத்துப் பங்கீட்டில் அனந்தரம் பெறுவோரின் அனைத்து நிலைகளையும் அல்லாஹ் கவனித்துள்ளான்.

• الأصل هو حِلُّ الأكل من كل بهيمة الأنعام، سوى ما خصه الدليل بالتحريم، أو ما كان صيدًا يعرض للمحرم في حجه أو عمرته.
2. எவை குறித்து பிரத்யேக தடைஉத்தரவு வந்துள்ளதோ அவற்றைத் தவிர மற்ற கால்நடைகள் அனைத்தும் உண்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஹஜ்ஜுக்காகவோ உம்ராவுக்காகவோ இஹ்ராம் அணிந்த நிலையில் வேட்டையாடுவது தடைசெய்யப்பட்டுள்ளது.

• النهي عن استحلال المحرَّمات، ومنها: محظورات الإحرام، والصيد في الحرم، والقتال في الأشهر الحُرُم، واستحلال الهدي بغصب ونحوه، أو مَنْع وصوله إلى محله.
3. தடுக்கப்பட்டவற்றை ஆகுமாக்கிக்கொள்வது தடையாகும். அவற்றுள் சில: இஹ்ராம் உடைய நிலையில் தவிர்க்க வேண்டியவை, ஹரமில் வேட்டையாடுதல், புனித மாதங்களில் போர்புரிதல், பலிப் பிராணியை அபகரிப்பது அல்லது உரிய இடத்தை அடையாது தடுத்துவிடுவது ஆகியவற்றின் மூலம் ஆகுமாக்குதல்.

 
Vertaling van de betekenissen Vers: (1) Surah: Soerat El-Maidah (De tafel)
Surah's Index Pagina nummer
 
Vertaling van de betekenissen Edele Qur'an - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - Index van vertaling

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

Sluit