Check out the new design

Vertaling van de betekenissen Edele Qur'an - Tamil vertaling van de samenvatting van de tafsier van de Heilige Koran * - Index van vertaling


Vertaling van de betekenissen Surah: el-Araf   Vers:
قَالَ یٰمُوْسٰۤی اِنِّی اصْطَفَیْتُكَ عَلَی النَّاسِ بِرِسٰلٰتِیْ وَبِكَلَامِیْ ۖؗ— فَخُذْ مَاۤ اٰتَیْتُكَ وَكُنْ مِّنَ الشّٰكِرِیْنَ ۟
7.144. அல்லாஹ் மூஸாவிடம் கூறினான்: மூஸாவே “நாம் உம்மை அவர்களின்பால் அனுப்பிய போது மக்கள் அனைவரையும்விட உம்மை சிறப்பித்து எனது தூதுப் பணிக்காக தேர்ந்தெடுத்துள்ளேன். நேரடியாக உம்மிடம் பேசியும் உம்மை சிறப்பித்துள்ளேன். நாம் உமக்கு அளிக்கும் இந்த சங்கையான கண்ணியத்தை எடுத்துக் கொள்வீராக. இந்த மகத்தான அருட்கொடைக்காக அல்லாஹ்வுக்கு நன்றிசெலுத்தக்கூடியவர்களில் ஒருவராக ஆகிவிடுவீராக.
Arabische uitleg van de Qur'an:
وَكَتَبْنَا لَهٗ فِی الْاَلْوَاحِ مِنْ كُلِّ شَیْءٍ مَّوْعِظَةً وَّتَفْصِیْلًا لِّكُلِّ شَیْءٍ ۚ— فَخُذْهَا بِقُوَّةٍ وَّاْمُرْ قَوْمَكَ یَاْخُذُوْا بِاَحْسَنِهَا ؕ— سَاُورِیْكُمْ دَارَ الْفٰسِقِیْنَ ۟
7.145. இஸ்ராயீலின் மக்களுக்குத் தேவையான உலக மற்றும் மார்க்க விஷயங்கள் அனைத்தையும் மூசாவுக்கு மரம் அல்லது வேறொன்றிலான ஏடுகளில் நாம் எழுதி வழங்கினோம். அவர்களில் அறிவுரைபெற விரும்புபவர் அறிவுரை பெரும் பொருட்டும் அவர்களுக்கு விளக்கம் தேவையான சட்டங்களுக்கு விளக்கமாக அமையும் பொருட்டும் அதனை வழங்கினோம். -மூசாவே!- இந்த தௌராத்தை உறுதியாகப் பற்றிப் பிடித்துக் கொள்வீராக. கட்டளையிடப்பட்டுள்ள விஷயங்களை முழுமையான விதத்தில் நடைமுறைப்படுத்தல், பொறுமை, மன்னிப்பு போன்ற தவ்ராத்திலுள்ள அதிக கூலியைப் பெற்றுத் தரும் நல்லவற்றை பற்றிக் கொள்ளுமாறு உம்முடைய சமூகமான இஸ்ராயீலின் மக்களுக்கு ஏவுவீராக. எனக்கு அடிபணியாமல் என் கட்டளைக்கு மாறாகச் செயல்பட்டவர்களுக்கு நேர்ந்த கதியையும் அவர்களுக்கு நிகழும் அழிவையும் விரைவில் நான் உங்களுக்குக் காட்டுவேன்.
Arabische uitleg van de Qur'an:
سَاَصْرِفُ عَنْ اٰیٰتِیَ الَّذِیْنَ یَتَكَبَّرُوْنَ فِی الْاَرْضِ بِغَیْرِ الْحَقِّ ؕ— وَاِنْ یَّرَوْا كُلَّ اٰیَةٍ لَّا یُؤْمِنُوْا بِهَا ۚ— وَاِنْ یَّرَوْا سَبِیْلَ الرُّشْدِ لَا یَتَّخِذُوْهُ سَبِیْلًا ۚ— وَاِنْ یَّرَوْا سَبِیْلَ الْغَیِّ یَتَّخِذُوْهُ سَبِیْلًا ؕ— ذٰلِكَ بِاَنَّهُمْ كَذَّبُوْا بِاٰیٰتِنَا وَكَانُوْا عَنْهَا غٰفِلِیْنَ ۟
7.146. அல்லாஹ்வின் அடியார்களுக்கு எதிராகவும் சத்தியத்திற்கு எதிராகவும் அநியாயமாக கர்வம் கொள்பவர்களை பிரபஞ்சத்திலும் அவர்களுக்குள்ளும் இருக்கும் என் சான்றுகளிலிருந்து படிப்பினை பெறுவதிலிருந்தும் என் வேத வசனங்களைப் புரிந்து கொள்வதிலிருந்தும் நான் திருப்பிவிடுவேன். சான்றுகள் அனைத்தையும் கண்டுவிட்டாலும் அவற்றைப் மறுப்பதனாலும் புறக்கணிப்பதனாலும் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் எதிர்ப்பதாலும் அவர்கள் நம்பிக்கைகொள்ள மாட்டார்கள். அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றுத்தரும் சத்தியப் பாதையை அவர்கள் கண்டால் அதில் செல்லவோ செல்வதற்கு ஆர்வம் கொள்ளவோ மாட்டார்கள். அல்லாஹ்வின் கோபத்தைப் பெற்றுத் தரும் வழிகேட்டின் பாதையைக் கண்டால் அதில் அவர்கள் செல்கிறார்கள். தூதர்கள் கொண்டு வந்ததை உண்மையெனக்காட்டும் மகத்தான அல்லாஹ்வின் சான்றுகளை அவர்கள் மறுத்ததனாலும் அவற்றைக் குறித்து அலட்சியமாக இருந்ததனாலும் அவர்களுக்கு இந்நிலமை ஏற்பட்டது.
Arabische uitleg van de Qur'an:
وَالَّذِیْنَ كَذَّبُوْا بِاٰیٰتِنَا وَلِقَآءِ الْاٰخِرَةِ حَبِطَتْ اَعْمَالُهُمْ ؕ— هَلْ یُجْزَوْنَ اِلَّا مَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟۠
7.147. நம்முடைய தூதர்களை உண்மைப்படுத்தக்கூடிய நம் சான்றுகளையும் மறுமை நாளில் அல்லாஹ்வின் சந்திப்பையும் மறுத்தவர்களின் நற்செயல்கள் அனைத்தும் வீணாகிவிட்டன. அவை ஏற்கப்படுவதற்கான நிபந்தனையை இழந்ததனால் அவர்களுக்கு எந்தக் கூலியும் வழங்கப்படாது. அவர்கள் செய்துவந்த நிராகரிப்பான இணைவைப்பான செயல்களுக்கே மறுமை நாளில் கூலி வழங்கப்படுவார்கள். அதற்கான கூலி நரகத்தில் நிரந்தரமாக வீழ்ந்துகிடப்பதாகும்.
Arabische uitleg van de Qur'an:
وَاتَّخَذَ قَوْمُ مُوْسٰی مِنْ بَعْدِهٖ مِنْ حُلِیِّهِمْ عِجْلًا جَسَدًا لَّهٗ خُوَارٌ ؕ— اَلَمْ یَرَوْا اَنَّهٗ لَا یُكَلِّمُهُمْ وَلَا یَهْدِیْهِمْ سَبِیْلًا ۘ— اِتَّخَذُوْهُ وَكَانُوْا ظٰلِمِیْنَ ۟
7.148. மூஸா தம் இறைவனிடம் இரகசியமாக உரையாடச் சென்ற பிறகு அவரது சமூகத்தார் தங்கள் ஆபரணங்களால் உயிரற்ற, சப்தமிடும் ஒரு காளைக் கன்று உருவமொன்றை உருவாக்கிக் கொண்டார்கள். அந்த காளைக் கன்று அவர்களிடம் பேசவில்லை, பௌதீக, மானசீக எந்த நல்வழியையும் அவர்களுக்கு அது காட்டவில்லை, அவர்களுக்குப் பலனளிக்கவோ அவர்களை விட்டு தீங்கினை அகற்றவோ செய்யவில்லை என்பதை அவர்கள் அறியவில்லையா? அதனை வணங்கப்படும் தெய்வமாக ஆக்கிக் கொண்டார்கள். இதன் மூலம் அவர்கள் தங்களுக்குத் தாங்களே அநீதி இழைப்பவர்களாக இருந்தார்கள்.
Arabische uitleg van de Qur'an:
وَلَمَّا سُقِطَ فِیْۤ اَیْدِیْهِمْ وَرَاَوْا اَنَّهُمْ قَدْ ضَلُّوْا ۙ— قَالُوْا لَىِٕنْ لَّمْ یَرْحَمْنَا رَبُّنَا وَیَغْفِرْ لَنَا لَنَكُوْنَنَّ مِنَ الْخٰسِرِیْنَ ۟
7.149. அவர்கள் கைசேதப்பட்டு தடுமாற்றமுற்று காளைக் கன்றை அல்லாஹ்வுடன் வணங்கப்படும் தெய்வமாக ஆக்கியதனால் தாங்கள் வழிகெட்டுவிட்டோம் என்பதை அறிந்து கொண்ட போது அவர்கள் அல்லாஹ்விடம் மன்றாடினார்கள். அவர்கள் கூறினார்கள்: “எங்கள் இறைவன் அவனை வழிபடுவதற்கு எங்களுக்கு உதவி புரிந்து கருணை காட்டவில்லையெனில், நாம் காளைக் கன்றை வணங்குவதற்கு முன்வந்ததை அவன் மன்னிக்கவில்லையெனில் நிச்சயம் நாங்கள் இவ்வுலகையும் மறுவுலகையும் இழந்துவிட்டவர்களாக ஆகிவிடுவோம்.”
Arabische uitleg van de Qur'an:
Voordelen van de verzen op deze pagina:
• على العبد أن يكون من المُظْهِرين لإحسان الله وفضله عليه، فإن الشكر مقرون بالمزيد.
1. அடியான் அவனுக்கு அல்லாஹ் செய்த உபகாரத்தையும் அருளையும் வெளிப்படுத்தக்கூடியவனாக இருக்க வேண்டும். ஏனெனில் நன்றி செலுத்துதல் மென்மேலும் அதிகரிப்பதுடன் இணைந்துள்ளது.

• على العبد الأخذ بالأحسن في الأقوال والأفعال.
2. அடியான் சொற்களிலும் செயல்களிலும் சிறந்தவற்றையே எடுத்துக்கொள்ள வேண்டும்.

• يجب تلقي الشريعة بحزم وجد وعزم على الطاعة وتنفيذ ما ورد فيها من الصلاح والإصلاح ومنع الفساد والإفساد.
3. வழிபடும் உறுதியுடன் மார்க்கத்தை கற்றுக் கொள்வது, சீர்திருந்துதல், சீர்திருத்தல், குழப்பத்தைத் தடுத்தல், குழப்பம் விளைவிப்பதைத் தடுத்தல் போன்ற ஷரீஆவில் உள்ளவற்றை நடைமுறைப்படுத்துவதும் கட்டாயமாகும்.

• على العبد إذا أخطأ أو قصَّر في حق ربه أن يعترف بعظيم الجُرْم الذي أقدم عليه، وأنه لا ملجأ من الله في إقالة عثرته إلا إليه.
4.தனது இறைவனின் உரிமையில் ஒரு அடியான் தவறிழைத்தால் அல்லது குறை செய்தால் தான் செய்த பெரும் தவறை ஏற்றுக்கொள்வதோடு தனது அத்தவறை மன்னிப்பதற்கு அல்லாஹ்வை விட்டால் வேறு புகலிடமில்லை எனவும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

 
Vertaling van de betekenissen Surah: el-Araf
Surah's Index Pagina nummer
 
Vertaling van de betekenissen Edele Qur'an - Tamil vertaling van de samenvatting van de tafsier van de Heilige Koran - Index van vertaling

Uitgegeven door het Tafsier Centrum voor Koranstudies.

Sluit