Check out the new design

Vertaling van de betekenissen Edele Qur'an - Tamil vertaling van de samenvatting van de tafsier van de Heilige Koran * - Index van vertaling


Vertaling van de betekenissen Surah: Al-Insaan   Vers:
عَیْنًا یَّشْرَبُ بِهَا عِبَادُ اللّٰهِ یُفَجِّرُوْنَهَا تَفْجِیْرًا ۟
76.6. கட்டுப்படக்கூடியவர்களுக்காக தயாரிக்கப்பட்ட இந்த பானம் இலகுவாக பெற்றுக்கொள்ளமுடியுமான, தீர்ந்துவிடாதளவு ஏராளமான நீருடைய ஊற்றிலிருந்து எடுக்கப்பட்டதாகும். அல்லாஹ்வின் அடியார்கள் அதிலிருந்து அருந்துவார்கள். அவர்கள் விரும்புகின்ற இடத்தில் அதனை ஓடைகளாக ஓடச் செய்வார்கள்.
Arabische uitleg van de Qur'an:
یُوْفُوْنَ بِالنَّذْرِ وَیَخَافُوْنَ یَوْمًا كَانَ شَرُّهٗ مُسْتَطِیْرًا ۟
76.7. அந்த ஊற்றிலிருந்து பருகக்கூடிய அடியார்களின் பண்புகள், அவர்கள் தங்கள்மீது கடமையாக்கிக் கொண்ட நன்மையான விஷயங்களை நிறைவேற்றுவதும் தீங்கு பரவியிருக்கும் மறுமை நாளைக் குறித்து அஞ்சுவதுமாகும்.
Arabische uitleg van de Qur'an:
وَیُطْعِمُوْنَ الطَّعَامَ عَلٰی حُبِّهٖ مِسْكِیْنًا وَّیَتِیْمًا وَّاَسِیْرًا ۟
76.8. அவர்களுக்கு உணவின் மீது தேவையும் விருப்பமும் உள்ள நிலையிலும் அதனை ஏழைகளுக்கும் அநாதைகளுக்கும் கைதிகளுக்கும் வழங்குவார்கள்.
Arabische uitleg van de Qur'an:
اِنَّمَا نُطْعِمُكُمْ لِوَجْهِ اللّٰهِ لَا نُرِیْدُ مِنْكُمْ جَزَآءً وَّلَا شُكُوْرًا ۟
76.9. அல்லாஹ்வின் திருப்தியை நாடியே அவர்களுக்கு உணவளிப்பதாக அவர்கள் தங்கள் மனதிற்குள் நினைத்துக்கொள்வார்கள். அவர்களிடம் உணவளித்ததற்கு கூலியையோ, புகழையோ அவர்கள் எதிர்பார்க்கமாட்டார்கள்.
Arabische uitleg van de Qur'an:
اِنَّا نَخَافُ مِنْ رَّبِّنَا یَوْمًا عَبُوْسًا قَمْطَرِیْرًا ۟
76.10. நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனிடமிருந்து கொடூரம் மற்றும் கடுமையினால் துர்பாக்கியசாலிகளின் முகங்கள் கடுகடுத்துவிடும் அந்த நாளைக் குறித்து அஞ்சுகிறோம்.
Arabische uitleg van de Qur'an:
فَوَقٰىهُمُ اللّٰهُ شَرَّ ذٰلِكَ الْیَوْمِ وَلَقّٰىهُمْ نَضْرَةً وَّسُرُوْرًا ۟ۚ
76.11. அல்லாஹ் தன் அருளால் அந்த மாபெரும் நாளின் தீங்கினை விட்டும் அவர்களைப் பாதுகாத்துக் கொண்டான். அவர்களைக் கண்ணியப்படுத்தி, அவர்களின் உள்ளங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் பொருட்டு அவர்களின் முகங்களில் பொலிவையும் பிரகாசத்தையும் வழங்கினான்.
Arabische uitleg van de Qur'an:
وَجَزٰىهُمْ بِمَا صَبَرُوْا جَنَّةً وَّحَرِیْرًا ۟ۙ
76.12. -அவர்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவதிலும் பாவங்களை விட்டுத் தவிர்ந்திருப்பதிலும் அவனது விதியை ஏற்றுக்கொள்வதிலும் பொறுமையைக் கடைப்பிடித்ததனால்- அவன் அவர்களுக்கு இன்பமிக்க சுவனத்தையும் அணிவதற்கு பட்டாடைகளையும் வழங்கி கூலி கொடுப்பான்.
Arabische uitleg van de Qur'an:
مُّتَّكِـِٕیْنَ فِیْهَا عَلَی الْاَرَآىِٕكِ ۚ— لَا یَرَوْنَ فِیْهَا شَمْسًا وَّلَا زَمْهَرِیْرًا ۟ۚ
76.13. அங்கு அவர்கள் அலங்கரிக்கப்பட்ட கட்டில்களில் சாய்ந்திருப்பார்கள். அங்கு அவர்களுக்குத் நோவினையளிக்கும் கதிர்களுடைய சூரியனையோ, கடும் குளிரையோ அவர்கள் காண மாட்டார்கள். மாறாக அவர்கள் வெப்பமும் குளிர்ச்சியும் அற்ற நிரந்தரமான நிழலில் இருப்பார்கள்.
Arabische uitleg van de Qur'an:
وَدَانِیَةً عَلَیْهِمْ ظِلٰلُهَا وَذُلِّلَتْ قُطُوْفُهَا تَذْلِیْلًا ۟
76.14. அதன் நிழல் அவர்களுக்கு அருகிலிருக்கும். அதன் பழங்கள் பறிப்பவர்களுக்கு வசப்பட்டவையாக இருக்கும். சாய்ந்திருப்பவரும் அமர்ந்திருப்பவரும் எழுந்திருப்பவரும் அவற்றை இலகுவாகப் பறிக்க முடியும்.
Arabische uitleg van de Qur'an:
وَیُطَافُ عَلَیْهِمْ بِاٰنِیَةٍ مِّنْ فِضَّةٍ وَّاَكْوَابٍ كَانَتْ قَوَارِیْرَ ۟ۙ
76.15. வெள்ளிப் பாத்திரங்களுடனும் அவர்கள் பருக விரும்பும் போது தூய்மையான நிறமுடைய கிண்ணங்களுடனும் பணியாளர்கள் அவர்களைச் சுற்றி வருவார்கள்.
Arabische uitleg van de Qur'an:
قَوَارِیْرَ مِنْ فِضَّةٍ قَدَّرُوْهَا تَقْدِیْرًا ۟
76.16. அந்தக் கிண்ணங்கள் வெள்ளியாக இருந்தபோதும் அவற்றின் நிறம் கண்ணாடியைப்போன்று தூய்மையானதாக இருக்கும். அவை அவர்களின் விருப்பத்திற்கேற்ப அமைக்கப்பட்டிருக்கும். அதில் எவ்வித கூடுதலும் குறைவும் இருக்காது.
Arabische uitleg van de Qur'an:
وَیُسْقَوْنَ فِیْهَا كَاْسًا كَانَ مِزَاجُهَا زَنْجَبِیْلًا ۟ۚ
76.17. இவ்வாறு கண்ணியப்படுத்தப்பட்ட இவர்களுக்கு இஞ்சி கலந்த மதுபான கிண்ணம் புகட்டப்படும்.
Arabische uitleg van de Qur'an:
عَیْنًا فِیْهَا تُسَمّٰی سَلْسَبِیْلًا ۟
76.18. அவர்கள் சுவனத்தில் ‘ஸல்ஸபீல்’ என்று சொல்லப்படக்கூடிய ஊற்றிலிருந்து அருந்துவார்கள்.
Arabische uitleg van de Qur'an:
وَیَطُوْفُ عَلَیْهِمْ وِلْدَانٌ مُّخَلَّدُوْنَ ۚ— اِذَا رَاَیْتَهُمْ حَسِبْتَهُمْ لُؤْلُؤًا مَّنْثُوْرًا ۟
76.19. சுவனத்தில் என்றும் இளமையாக இருக்கக்கூடிய சிறுவர்கள் அவர்களைச் சுற்றிச் சுற்றி வருவார்கள். அவர்களை நீர் பார்த்தால் அவர்கள் முகப்பொலிவுடனும் அழகிய நிறத்துடனும் ஏராளமான எண்ணிக்கையில் பிரிந்துகிடப்பதால் சிதறிய முத்துக்கள் என்று நீர் எண்ணி விடுவீர்.
Arabische uitleg van de Qur'an:
وَاِذَا رَاَیْتَ ثَمَّ رَاَیْتَ نَعِیْمًا وَّمُلْكًا كَبِیْرًا ۟
76.20. நீர் சுவனத்தில் பார்த்தால் அங்கு வர்ணிக்க முடியாத அருட்கொடைகளையும் ஈடிணையற்ற மாபெரும் அரசாட்சியையும் நீர் காண்பீர்.
Arabische uitleg van de Qur'an:
عٰلِیَهُمْ ثِیَابُ سُنْدُسٍ خُضْرٌ وَّاِسْتَبْرَقٌ ؗ— وَّحُلُّوْۤا اَسَاوِرَ مِنْ فِضَّةٍ ۚ— وَسَقٰىهُمْ رَبُّهُمْ شَرَابًا طَهُوْرًا ۟
76.21. அவர்கள் பகட்டான மெல்லிய பச்சை நிற பட்டாடைகளையும் கனமான பச்சை நிற பட்டாடைகளையும் தங்கள் உடலில் அணிந்திருப்பார்கள். அங்கு அவர்களுக்கு வெள்ளிக் காப்புகள் அணிவிக்கப்படும். அல்லாஹ் எவ்வித கலப்படமுமற்ற தூய்மையான பானத்தை அவர்களுக்குப் புகட்டுவான்.
Arabische uitleg van de Qur'an:
اِنَّ هٰذَا كَانَ لَكُمْ جَزَآءً وَّكَانَ سَعْیُكُمْ مَّشْكُوْرًا ۟۠
76.22. அவர்களைக் கண்ணியப்படுத்தும் விதமாக அவர்களிடம் கூறப்படும்: “உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த அருட்கொடை நீங்கள் செய்த நற்செயல்களுக்கு வழங்கப்படும் கூலியாகும். உங்களின் செயல்கள் அல்லாஹ்விடத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது.”
Arabische uitleg van de Qur'an:
اِنَّا نَحْنُ نَزَّلْنَا عَلَیْكَ الْقُرْاٰنَ تَنْزِیْلًا ۟ۚ
76.23. -தூதரே!- நிச்சயமாக நாம் உம்மீது குர்ஆனை கொஞ்சம் கொஞ்சமாக இறக்கியுள்ளோம். நாம் அதனை உம்மீது ஒரேயடியாக இறக்கவில்லை.
Arabische uitleg van de Qur'an:
فَاصْبِرْ لِحُكْمِ رَبِّكَ وَلَا تُطِعْ مِنْهُمْ اٰثِمًا اَوْ كَفُوْرًا ۟ۚ
76.24. அல்லாஹ் நிர்ணயித்த விதியையும் விதித்த சட்டதிட்டங்களையும் பொறுமையுடன் சகித்துக் கொள்வீராக. பாவத்தின்பால் அழைக்கும் பாவிக்கும் நிராகரிப்பின்பால் அழைக்கும் நிராகரிப்பாளனுக்கும் கட்டுப்படாதீர்.
Arabische uitleg van de Qur'an:
وَاذْكُرِ اسْمَ رَبِّكَ بُكْرَةً وَّاَصِیْلًا ۟ۖۚ
76.25. பகலின் ஆரம்பத்தில் ஃபஜ்ர் தொழுகையின் மூலமும் அதன் முடிவில் லுஹர் மற்றும் அஸர் தொழுகையின் மூலம் உம் இறைவனை நினைவுகூர்வீராக.
Arabische uitleg van de Qur'an:
Voordelen van de verzen op deze pagina:
• الوفاء بالنذر وإطعام المحتاج، والإخلاص في العمل، والخوف من الله: أسباب للنجاة من النار، ولدخول الجنة.
1. நேர்ச்சைகளை நிறைவேற்றுவது, தேவையுடையோருக்கு உணவளிப்பது, உளத்தூய்மையுடன் செயல்படுவது, அல்லாஹ்வுக்கு அஞ்சுவது ஆகியவை நரகத்திலிருந்து விடுதலையளித்து சுவனத்தின் பக்கம் இட்டுச் செல்லும் காரணிகளாக இருக்கின்றன.

• إذا كان حال الغلمان الذين يخدمونهم في الجنة بهذا الجمال، فكيف بأهل الجنة أنفسهم؟!
சுவனவாதிகளுக்கு பணிபுரியும் சிறுவர்களே இவ்வளவு அழகென்றால் சுவனவாதிகளின் அழகு எப்படியிருக்கும்!

 
Vertaling van de betekenissen Surah: Al-Insaan
Surah's Index Pagina nummer
 
Vertaling van de betekenissen Edele Qur'an - Tamil vertaling van de samenvatting van de tafsier van de Heilige Koran - Index van vertaling

Uitgegeven door het Tafsier Centrum voor Koranstudies.

Sluit