Vertaling van de betekenissen Edele Qur'an - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - Index van vertaling


Vertaling van de betekenissen Vers: (8) Surah: Soerat at-Tauba (Berouw)
كَیْفَ وَاِنْ یَّظْهَرُوْا عَلَیْكُمْ لَا یَرْقُبُوْا فِیْكُمْ اِلًّا وَّلَا ذِمَّةً ؕ— یُرْضُوْنَكُمْ بِاَفْوَاهِهِمْ وَتَاْبٰی قُلُوْبُهُمْ ۚ— وَاَكْثَرُهُمْ فٰسِقُوْنَ ۟ۚ
9.8. உங்களின் எதிரிகளான அவர்களுக்கு எவ்வாறு ஒப்பந்தமும் பாதுகாப்பும் இருக்க முடியும்? அவர்கள் உங்களை வென்று விட்டால் உங்கள் விஷயத்தில் அல்லாஹ்வையோ ஒப்பந்தத்தையோ உறவையோ பொருட்படுத்த மாட்டார்கள். மாறாக உங்களைக் கொடிய வேதனையில் ஆழ்த்திவிடுவார்கள். அவர்களின் நாவுகள் உச்சரிக்கும் அழகிய வார்த்தைகளால் உங்களைத் திருப்திப்படுத்த முயற்சிக்கிறார்கள். ஆனால் அவர்களின் உள்ளங்களோ நாவுகள் கூறுவதற்கு இணங்கவில்லை. அவர்கள் கூறுவதை நிறைவேற்ற மாட்டார்கள். அவர்களில் பெரும்பாலோர் ஒப்பந்தத்தை முறித்ததனால் அல்லாஹ்வுக்கு அடிபணியாதவர்களே.
Arabische uitleg van de Qur'an:
Voordelen van de verzen op deze pagina:
• دلَّت الآيات على أن قتال المشركين الناكثين العهد كان لأسباب كثيرة، أهمها: نقضهم العهد.
1. ஒப்பந்தத்தை முறித்த இணைவைப்பாளர்களுக்கு எதிராக போரிடுவதற்குப் பல காரணங்கள் இருந்தன. அவற்றுள் முக்கியமானது, அவர்கள் தங்களின் ஒப்பந்தத்தை மீறியதேயாகும்.

• في الآيات دليل على أن من امتنع من أداء الصلاة أو الزكاة فإنه يُقاتَل حتى يؤديهما، كما فعل أبو بكر رضي الله عنه.
2. மேல் உள்ள வசனங்களிலே தொழுகையைக் கடைப்பிடிக்காமல் ஸகாத்தை வழங்காமல் இருப்பவர்களுக்கு எதிராக அவர்கள் தொழுகையைக் கடைப்பிடித்து ஸகாத்தை வழங்கும் வரை போரிடலாம் என்பதற்கு ஆதாரம் உண்டு. - அபூபக்கர் (ரலி) ஸகாத் வழங்காதவர்களுக்கு எதிராகப் போரிட்டார்.-

• استدل بعض العلماء بقوله تعالى:﴿وَطَعَنُوا فِي دِينِكُمْ﴾ على وجوب قتل كل من طعن في الدّين عامدًا مستهزئًا به.
3. “அவர்கள் உங்களது மார்க்கத்தைக் குறைகூறினார்கள்” என்ற வசனத்தை ஆதாரமாகக் கொண்டு, வேண்டுமென்றே பரிகாசம் செய்யும் நோக்கில் மார்க்கத்தில் குறைகூறியவனைக் கொலை செய்வது கடமையாகும் என சில அறிஞர்கள் கூறுகின்றனர்.

• في الآيات دلالة على أن المؤمن الذي يخشى الله وحده يجب أن يكون أشجع الناس وأجرأهم على القتال.
4.அல்லாஹ்வுக்கு மாத்திரமே அஞ்சும் ஒரு விசுவாசி மனிதர்களில் மிகப் பெரும் வீரனாகவும் போர்புரிவதற்கு துனிச்சலுடையவனாகவும் இருக்க வேண்டும் என்பதற்கு இவ்வசனத்தில் ஆதாரம் உண்டு.

 
Vertaling van de betekenissen Vers: (8) Surah: Soerat at-Tauba (Berouw)
Surah's Index Pagina nummer
 
Vertaling van de betekenissen Edele Qur'an - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - Index van vertaling

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

Sluit