د قرآن کریم د معناګانو ژباړه - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

د مخ نمبر:close

external-link copy
203 : 2

وَاذْكُرُوا اللّٰهَ فِیْۤ اَیَّامٍ مَّعْدُوْدٰتٍ ؕ— فَمَنْ تَعَجَّلَ فِیْ یَوْمَیْنِ فَلَاۤ اِثْمَ عَلَیْهِ ۚ— وَمَنْ تَاَخَّرَ فَلَاۤ اِثْمَ عَلَیْهِ ۙ— لِمَنِ اتَّقٰی ؕ— وَاتَّقُوا اللّٰهَ وَاعْلَمُوْۤا اَنَّكُمْ اِلَیْهِ تُحْشَرُوْنَ ۟

எண்ணப்பட்ட நாள்களில் அல்லாஹ்வை நினைவு கூருங்கள். எவர் இரண்டு நாள்களில் (புறப்பட) அவசரப்பட்டாரோ அவர் மீது அறவே பாவமில்லை. எவர் தாமதித்தாரோ அவர் மீதும் அறவே பாவமில்லை. (அதாவது) அல்லாஹ்வை அஞ்சியவருக்கு (பாவமில்லை). அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக நீங்கள் அவனிடமே ஒன்று திரட்டப்படுவீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். info
التفاسير:

external-link copy
204 : 2

وَمِنَ النَّاسِ مَنْ یُّعْجِبُكَ قَوْلُهٗ فِی الْحَیٰوةِ الدُّنْیَا وَیُشْهِدُ اللّٰهَ عَلٰی مَا فِیْ قَلْبِهٖ ۙ— وَهُوَ اَلَدُّ الْخِصَامِ ۟

(நபியே!) இவ்வுலக வாழ்க்கையைப் பற்றி எவனுடைய பேச்சு உம்மை வியக்க வைக்குமோ அ(த்தகைய)வனும் மக்களில் இருக்கிறான். அவன் தன் உள்ளத்தில் உள்ளவற்றிற்கு அல்லாஹ்வைச் சாட்சியாக்குவான். அவன் வாதிகளில் கடுமையான வாதியாவான். info
التفاسير:

external-link copy
205 : 2

وَاِذَا تَوَلّٰی سَعٰی فِی الْاَرْضِ لِیُفْسِدَ فِیْهَا وَیُهْلِكَ الْحَرْثَ وَالنَّسْلَ ؕ— وَاللّٰهُ لَا یُحِبُّ الْفَسَادَ ۟

அவன் பூமியில் திரும்பிச் சென்றால் அதில் விஷமம் (கலகம்) செய்வதற்கும், விளைநிலம் இன்னும் கால்நடைகளை அழிப்பதற்கும் முயற்சிக்கிறான். விஷமத்தை அல்லாஹ் விரும்பமாட்டான். info
التفاسير:

external-link copy
206 : 2

وَاِذَا قِیْلَ لَهُ اتَّقِ اللّٰهَ اَخَذَتْهُ الْعِزَّةُ بِالْاِثْمِ فَحَسْبُهٗ جَهَنَّمُ ؕ— وَلَبِئْسَ الْمِهَادُ ۟

"அல்லாஹ்வை அஞ்சிக் கொள்" என அவனுக்குக் கூறப்பட்டால், பெருமை அவனைப் பாவத்தைக் கொண்டு பிடித்துக் கொள்கிறது. எனவே, அவனுக்கு நரகமே போதும். (அந்தத்) தங்குமிடம் திட்டமாக கெட்டுவிட்டது. info
التفاسير:

external-link copy
207 : 2

وَمِنَ النَّاسِ مَنْ یَّشْرِیْ نَفْسَهُ ابْتِغَآءَ مَرْضَاتِ اللّٰهِ ؕ— وَاللّٰهُ رَءُوْفٌۢ بِالْعِبَادِ ۟

அல்லாஹ்வின் பொருத்தத்தைத் தேடி, (தன் செல்வத்தைக் கொடுத்து) தன் உயிரையே விற்பவரும் மக்களில் உண்டு. அல்லாஹ் அடியார்கள் மீது மிக இரக்கமுடையவன் ஆவான். info
التفاسير:

external-link copy
208 : 2

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوا ادْخُلُوْا فِی السِّلْمِ كَآفَّةً ۪— وَلَا تَتَّبِعُوْا خُطُوٰتِ الشَّیْطٰنِ ؕ— اِنَّهٗ لَكُمْ عَدُوٌّ مُّبِیْنٌ ۟

நம்பிக்கையாளர்களே! நீங்கள் இஸ்லாமில் முழுமையாக நுழையுங்கள். ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான எதிரியாவான். info
التفاسير:

external-link copy
209 : 2

فَاِنْ زَلَلْتُمْ مِّنْ بَعْدِ مَا جَآءَتْكُمُ الْبَیِّنٰتُ فَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ عَزِیْزٌ حَكِیْمٌ ۟

தெளிவான சான்றுகள் உங்களுக்கு வந்த பின்னர் நீங்கள் (இஸ்லாமை விட்டு) சறுகினால்... நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், மகா ஞானவான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். info
التفاسير:

external-link copy
210 : 2

هَلْ یَنْظُرُوْنَ اِلَّاۤ اَنْ یَّاْتِیَهُمُ اللّٰهُ فِیْ ظُلَلٍ مِّنَ الْغَمَامِ وَالْمَلٰٓىِٕكَةُ وَقُضِیَ الْاَمْرُ ؕ— وَاِلَی اللّٰهِ تُرْجَعُ الْاُمُوْرُ ۟۠

அல்லாஹ்வும் வானவர்களும் மேகங்களின் நிழல்களில் அவர்களிடம் வருவதையும் காரியம் முடிக்கப்படுவதையும் தவிர (வேறெதையும்) எதிர்பார்க்கிறார்களா? காரியங்கள் அல்லாஹ்வின் பக்கமே திருப்பப்படும். info
التفاسير: