د قرآن کریم د معناګانو ژباړه - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

د مخ نمبر:close

external-link copy
257 : 2

اَللّٰهُ وَلِیُّ الَّذِیْنَ اٰمَنُوْا یُخْرِجُهُمْ مِّنَ الظُّلُمٰتِ اِلَی النُّوْرِ ؕ۬— وَالَّذِیْنَ كَفَرُوْۤا اَوْلِیٰٓـُٔهُمُ الطَّاغُوْتُ یُخْرِجُوْنَهُمْ مِّنَ النُّوْرِ اِلَی الظُّلُمٰتِ ؕ— اُولٰٓىِٕكَ اَصْحٰبُ النَّارِ ۚ— هُمْ فِیْهَا خٰلِدُوْنَ ۟۠

அல்லாஹ் நம்பிக்கை யாளர்களின் பொறுப்பாளன். அவர்களை இருள்களிலிருந்து ஒளியை நோக்கி வெளியேற்றுகிறான். நிராகரிப்பவர்கள்,அவர்களின் தோழர்கள் ஷைத்தான்(கள்)தான். அவர்கள் அவர்களை ஒளியிலிருந்து இருள்களை நோக்கி வெளியேற்றுகிறார்கள். அவர்கள் நரகவாசிகள். அவர்கள் அதில் நிரந்தரமானவர்கள். info
التفاسير:

external-link copy
258 : 2

اَلَمْ تَرَ اِلَی الَّذِیْ حَآجَّ اِبْرٰهٖمَ فِیْ رَبِّهٖۤ اَنْ اٰتٰىهُ اللّٰهُ الْمُلْكَ ۘ— اِذْ قَالَ اِبْرٰهٖمُ رَبِّیَ الَّذِیْ یُحْیٖ وَیُمِیْتُ ۙ— قَالَ اَنَا اُحْیٖ وَاُمِیْتُ ؕ— قَالَ اِبْرٰهٖمُ فَاِنَّ اللّٰهَ یَاْتِیْ بِالشَّمْسِ مِنَ الْمَشْرِقِ فَاْتِ بِهَا مِنَ الْمَغْرِبِ فَبُهِتَ الَّذِیْ كَفَرَ ؕ— وَاللّٰهُ لَا یَهْدِی الْقَوْمَ الظّٰلِمِیْنَ ۟ۚ

(நபியே!) அல்லாஹ், அவனுக்கு ஆட்சியைக் கொடுத்ததால் இப்ராஹீமிடம் அவருடைய இறைவன் விசயத்தில் தர்க்கித்தவனை நீர் கவனிக்கவில்லையா? "என் இறைவன் உயிர்ப்பிக்கிறான். மரணிக்கச் செய்கிறான்" என்று இப்ராஹீம் கூறியபோது, அவன் "நான் உயிர்ப்பிப்பேன், மரணிக்கச் செய்வேன்" என்று கூறினான். இப்ராஹீம் கூறினார்: "நிச்சயமாக அல்லாஹ் சூரியனைக் கிழக்கிலிருந்து கொண்டு வருகிறான். எனவே அதை மேற்கிலிருந்து நீ கொண்டு வா." ஆகவே நிராகரித்தவன் வாயடைக்கப்பட்டான். அல்லாஹ் அநியாயக்கார மக்களை நேர்வழி செலுத்தமாட்டான். info
التفاسير:

external-link copy
259 : 2

اَوْ كَالَّذِیْ مَرَّ عَلٰی قَرْیَةٍ وَّهِیَ خَاوِیَةٌ عَلٰی عُرُوْشِهَا ۚ— قَالَ اَنّٰی یُحْیٖ هٰذِهِ اللّٰهُ بَعْدَ مَوْتِهَا ۚ— فَاَمَاتَهُ اللّٰهُ مِائَةَ عَامٍ ثُمَّ بَعَثَهٗ ؕ— قَالَ كَمْ لَبِثْتَ ؕ— قَالَ لَبِثْتُ یَوْمًا اَوْ بَعْضَ یَوْمٍ ؕ— قَالَ بَلْ لَّبِثْتَ مِائَةَ عَامٍ فَانْظُرْ اِلٰی طَعَامِكَ وَشَرَابِكَ لَمْ یَتَسَنَّهْ ۚ— وَانْظُرْ اِلٰی حِمَارِكَ۫— وَلِنَجْعَلَكَ اٰیَةً لِّلنَّاسِ وَانْظُرْ اِلَی الْعِظَامِ كَیْفَ نُنْشِزُهَا ثُمَّ نَكْسُوْهَا لَحْمًا ؕ— فَلَمَّا تَبَیَّنَ لَهٗ ۙ— قَالَ اَعْلَمُ اَنَّ اللّٰهَ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟

அல்லது ஒரு கிராமத்தை - அது (வசிப்பாரற்று) தன் முகடுகள் மீது விழுந்திருக்க - (அதைக்) கடந்தவரைப் போன்று. (அவரை நீர் பார்த்தீரா?) "இதை அது இறந்த பின்னர் அல்லாஹ் எவ்வாறு உயிர்ப்பிப்பான்?" என்றார் (அவர்). அல்லாஹ் அவருக்கு நூறு ஆண்டு(கள்) வரை மரணத்தைக் கொடுத்து பிறகு அவரை உயிர்ப்பித்து, "நீர் எத்தனை (காலம்) தங்கினீர்?" எனக் கேட்க, "ஒரு நாள் அல்லது ஒரு நாளில் சிறிதளவு தங்கினேன்" எனக் கூறினார். "மாறாக! நீ நூறு ஆண்டு(கள்) தங்கினாய். உன் உணவையும், உன் பானத்தையும் பார். அவை கெட்டுப் போகவில்லை. உன் கழுதையைப் பார். (அது செத்து மக்கிவிட்டது.) உம்மை மக்களுக்கு ஓர் அத்தாட்சியாக ஆக்குவதற்காக (இவ்வாறு செய்தோம்). (கழுதையின்) எலும்புகளைப் பார்; எவ்வாறு அவற்றை அசைத்து (சிலதிற்கு மேல் சிலதை) உயர்த்துகிறோம்; பிறகு அதற்கு மாமிசத்தைப் போர்த்துகிறோம்" என்று கூறினான். அவருக்கு (இது) தெளிவானபோது, "நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருள் மீதும் பேராற்றலுடையவன் என்பதை(க் கண்கூடாக) அறிகிறேன்" என்று கூறினார். info
التفاسير: