Check out the new design

ශුද්ධවූ අල් කුර්ආන් අර්ථ කථනය - ශුද්ධ වූ අල්කුර්ආන් අර්ථ විවරණයේ සංෂිප්ත අනුවාදය - දෙමළ පරිවර්තනය * - පරිවර්තන පටුන


අර්ථ කථනය පරිච්ඡේදය: අල් ඉස්රා   වාක්‍යය:
وَاِمَّا تُعْرِضَنَّ عَنْهُمُ ابْتِغَآءَ رَحْمَةٍ مِّنْ رَّبِّكَ تَرْجُوْهَا فَقُلْ لَّهُمْ قَوْلًا مَّیْسُوْرًا ۟
17.28. உன்னிடம் கொடுப்பதற்கு எதுவும் இல்லாத காரணத்தால் நீ அல்லாஹ்வின் வாழ்வாதாரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களுக்குக் கொடுக்காமல் நீ தவிர்ந்துகொண்டால் அவர்களிடம் இதமான வார்த்தையைக் கூறு. உதாரணமாக, அவர்களின் வாழ்வாதார அபிவிருத்திக்காக பிரார்த்தனை செய்வது அல்லது அல்லாஹ் தனக்கு செல்வத்தை வழங்கினால் தருவேன் என்று வாக்களிப்பது.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
وَلَا تَجْعَلْ یَدَكَ مَغْلُوْلَةً اِلٰی عُنُقِكَ وَلَا تَبْسُطْهَا كُلَّ الْبَسْطِ فَتَقْعُدَ مَلُوْمًا مَّحْسُوْرًا ۟
17.29. செலவழிக்காமல் கஞ்சத்தனம் செய்து விடாதே. வீண்விரயமும் செய்துவிடாதே. ஏனெனில் செலவளிக்காவிட்டால் உனது கஞ்சத்தனத்தினால் மக்களின் பழிப்புக்கு ஆளாவாய். உனது வீண்விரயத்தினால் செலவளிப்பதற்கு எதுவும் அற்றவனாக ஆகிவிடுவாய்.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
اِنَّ رَبَّكَ یَبْسُطُ الرِّزْقَ لِمَنْ یَّشَآءُ وَیَقْدِرُ ؕ— اِنَّهٗ كَانَ بِعِبَادِهٖ خَبِیْرًا بَصِیْرًا ۟۠
17.30. நிச்சயமாக உன் இறைவன் உயர்ந்த ஒரு நோக்கத்தின்படி தான் நாடியோருக்கு வாழ்வாதாரத்தை தாராளமாக வழங்குகிறான்; தான் நாடியோருக்கு சுருக்கியும் விடுகிறான். நிச்சயமாக அவன் தன் அடியார்களைக் குறித்து நன்கறிந்தவனாகவும் பார்ப்பவனாகவும் இருக்கின்றான். அவர்களிடம் இருந்து எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. தான் நாடியவாறு அவர்களிடம் தன் கட்டளைகளைச் திருப்பி விடுகிறான்.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
وَلَا تَقْتُلُوْۤا اَوْلَادَكُمْ خَشْیَةَ اِمْلَاقٍ ؕ— نَحْنُ نَرْزُقُهُمْ وَاِیَّاكُمْ ؕ— اِنَّ قَتْلَهُمْ كَانَ خِطْاً كَبِیْرًا ۟
17.31. உங்கள் பிள்ளைகளுக்கு செலவளிப்பதனால் எதிர்காலத்தில் வறுமை ஏற்படுமோ என அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொன்றுவிடாதீர்கள். அவர்களுக்கும் உங்களுக்கும் வாழ்வாதாரம் வழங்குவதற்கு நாமே பொறுப்பேற்றுள்ளோம். ஒரு பாவமும் செய்யாத, கொல்வதற்குரிய காரணம் எதுவும் இல்லாத அவர்களைக் கொல்வது பெரும் பாவமாக இருக்கின்றது.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
وَلَا تَقْرَبُوا الزِّنٰۤی اِنَّهٗ كَانَ فَاحِشَةً ؕ— وَسَآءَ سَبِیْلًا ۟
17.32. விபச்சாரத்தை விட்டும் அதனைத் தூண்டும் காரணிகளை விட்டும் விலகியிருங்கள். நிச்சயமாக அது மிகவும்அருவருப்பான காரியமாகவும் குடும்ப வம்சத்தை சிதைத்து இறைவேதனையைப் பெற்றுத்தரும் தீய வழியாகவும் இருக்கின்றது.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
وَلَا تَقْتُلُوا النَّفْسَ الَّتِیْ حَرَّمَ اللّٰهُ اِلَّا بِالْحَقِّ ؕ— وَمَنْ قُتِلَ مَظْلُوْمًا فَقَدْ جَعَلْنَا لِوَلِیِّهٖ سُلْطٰنًا فَلَا یُسْرِفْ فِّی الْقَتْلِ ؕ— اِنَّهٗ كَانَ مَنْصُوْرًا ۟
17.33. நம்பிக்கை அல்லது அபயமளித்தல் என்பவற்றின் மூலம் அல்லாஹ் பாதுகாத்த எந்த உயிரையும் கொன்றுவிடாதீர்கள். இஸ்லாத்தை விட்டு வெளியேறுதல், மணமான பிறகு விபச்சாரம் செய்தல், கொலைக் குற்றம் ஆகியவற்றினால் கொல்லப்படத் தகுதியானவர்களைத் தவிர. எவர் காரணமின்றி அநியாயமாகக் கொலைசெய்யப்பட்டாரோ அவருடைய வாரிசுகளுக்கு நாம் கொலையாளி மீது அதிகாரம் அளித்துள்ளோம். அவர்களுக்குப் பழிவாங்கும் உரிமையும், ஈட்டுத் தொகை பெற்றுக்கொண்டு அல்லது எதனையும் பெறாமலும் மன்னிக்கும் உரிமையும் உண்டு. கொலையாளியைச் சித்திரவதை செய்தல் அல்லது அவர் கொல்லாத ஒரு ஆயுதத்தால் கொலை செய்வது அல்லது கொலை செய்யாதவனைக் கொல்லுதல் போன்றவற்றைச் செய்து அல்லாஹ் அனுமதித்த எல்லையை மீறிவிட வேண்டாம். நிச்சயமாக அவர் உதவிசெய்யப்படுவார்.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
وَلَا تَقْرَبُوْا مَالَ الْیَتِیْمِ اِلَّا بِالَّتِیْ هِیَ اَحْسَنُ حَتّٰی یَبْلُغَ اَشُدَّهٗ ۪— وَاَوْفُوْا بِالْعَهْدِ ۚ— اِنَّ الْعَهْدَ كَانَ مَسْـُٔوْلًا ۟
17.34. தந்தையை இழந்த குழந்தைகளின் சிந்தனையாற்றலும் பக்குவமும் முழுமையடையும் வரை அவர்களின் செல்வத்தை அவர்களுக்குப் பயனளிக்கும் விதத்தில் அதனை அபிவிருத்தி செய்து பாதுகாக்கும் வழிகளிலே அன்றி பயன்படுத்தாதீர்கள். அல்லாஹ்வுக்கும் உங்களுக்கும் இடையேயுள்ள ஒப்பந்தத்தையும் உங்களுக்கும் அவனுடைய அடியார்களுக்கும் இடையேயுள்ள ஒப்பந்தத்தையை முறிக்காமல், குறைவின்றி நிறைவேற்றுங்கள். நிச்சயமாக அல்லாஹ் வாக்குறுதி வழங்கியவரிடம் அதனை நிறைவேற்றினாயா அல்லது நிறைவேற்றவில்லையா ? என மறுமை நாளில் விசாரிப்பான். அவற்றை நிறைவேற்றியவர்களுக்கு அவன் நற்கூலி வழங்குவான். அவற்றை நிறைவேற்றாதவர்களுக்கு தண்டனை வழங்குவான்.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
وَاَوْفُوا الْكَیْلَ اِذَا كِلْتُمْ وَزِنُوْا بِالْقِسْطَاسِ الْمُسْتَقِیْمِ ؕ— ذٰلِكَ خَیْرٌ وَّاَحْسَنُ تَاْوِیْلًا ۟
17.35. நீங்கள் மற்றவர்களுக்கு அளந்துகொடுத்தால் முழுமையாக அளந்துகொடுங்கள். அதனைக் குறைத்துவிடாதீர்கள். எதையும் குறைத்துவிடாத சரியான தராசைக் கொண்டு எடைபோடுங்கள். அளவையையும், நிறுவையையும் பரிபூரணமாக நிறைவேற்றுவது உங்களுக்கு இவ்வுலகிலும் மறுவுலகிலும் நன்மை தரக்கூடியதுடன் அளவை நிறுவையில் குறை செய்து, மோசடி செய்வதை விட சிறந்த விளைவைத் தருவதுமாகும்.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
وَلَا تَقْفُ مَا لَیْسَ لَكَ بِهٖ عِلْمٌ ؕ— اِنَّ السَّمْعَ وَالْبَصَرَ وَالْفُؤَادَ كُلُّ اُولٰٓىِٕكَ كَانَ عَنْهُ مَسْـُٔوْلًا ۟
17.36. -ஆதமின் மகனே!- உனக்கு அறிவில்லாத விஷயங்களைப் பின்பற்றாதே; யூகங்களையும் அனுமானங்களையும் பின்பற்றாதே. நிச்சயமாக மனிதனின் செவிப்புலன், பார்வை, உள்ளம் என ஒவ்வொரு உறுப்பையும் நன்மையிலா தீமையிலா பயன்படுத்தினான் என்று மனிதன் விசாரிக்கப்படுவான். அவன் அவற்றை நன்மையான விஷயங்களுக்காகப் பயன்படுத்தினால் அதற்காக அவன் கூலி வழங்கப்படுவான். தீமையான விஷயங்களுக்காகப் பயன்படுத்தினால் அதற்காகத் தண்டிக்கப்படுவான்.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
وَلَا تَمْشِ فِی الْاَرْضِ مَرَحًا ۚ— اِنَّكَ لَنْ تَخْرِقَ الْاَرْضَ وَلَنْ تَبْلُغَ الْجِبَالَ طُوْلًا ۟
17.37. பூமியில் ஆணவம்கொண்டு நடக்காதே. நிச்சயமாக நீ ஆணவம்கொண்டு நடந்தால் நீ நினைத்தவாறு பூமியைப் பிளந்துவிடவும் முடியாது, நீளத்திலும் உயரத்திலும் மலைகளிள் அளவுக்கு உன்னால் உயர்ந்து விடவும் முடியாது. பின் எதற்கு ஆணவம் கொள்கிறாய்?
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
كُلُّ ذٰلِكَ كَانَ سَیِّئُهٗ عِنْدَ رَبِّكَ مَكْرُوْهًا ۟
17.38. -மனிதனே!- மேற்குறிப்பிட்ட அனைத்திலுமுள்ள தீயவை உம் இறைவனிடம் தடுக்கப்பட்டவைகளாகும். அவற்றில் ஈடுபடுவோரை அவன் நேசிப்பதில்லை. மாறாக அவன் அவர்களை வெறுக்கிறான்.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
මෙ⁣ම පිටුවේ තිබෙන වැකිවල ප්‍රයෝජන:
• الأدب الرفيع هو رد ذوي القربى بلطف، ووعدهم وعدًا جميلًا بالصلة عند اليسر، والاعتذار إليهم بما هو مقبول.
1. உறவினர்கள் உதவிகேட்டு மறுக்கும் சூழ்நிலைவந்தால் மென்மையான முறையில் நடந்துகொண்டு வசதி வாய்ப்பு வரும்போது உதவுவதாக அழகிய முறையில் வாக்குறுதியளித்தல், ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் உதவ முடியாததன் காரணத்தைத் தெளிவுபடுத்தல் என்பன உயர் ஒழுக்கங்களாகும்.

• الله أرحم بالأولاد من والديهم؛ فنهى الوالدين أن يقتلوا أولادهم خوفًا من الفقر والإملاق وتكفل برزق الجميع.
2. தாய், தந்தையரைவிட பிள்ளைகளுடன் அல்லாஹ்வே அதிக கருணையாளனாவான். எனவேதான் வறுமைக்குப் பயந்து அவர்கள் தங்கள் குழந்தைகளைக் கொல்வதை அவன் தடுத்து, அனைவருக்கும் வாழ்வாதாரம் அளிக்கும் பொறுப்பையும் அவனே ஏற்றுக் கொண்டுள்ளான்.

• في الآيات دليل على أن الحق في القتل للولي، فلا يُقْتَص إلا بإذنه، وإن عفا سقط القصاص.
3. கொலை செய்யப்பட்டதற்குப் பதிலாக பழிதீர்க்கும் உரிமை கொலை செய்யப்பட்டவரின் பொறுப்பாளருக்குரியதாகும். அவரது அனுமதி இன்றி கொலையாளி கொலை செய்யப்பட முடியாது. அவர் மன்னித்து விட்டால் கொலைத் தண்டனை ரத்தாகிவிடும்.

• من لطف الله ورحمته باليتيم أن أمر أولياءه بحفظه وحفظ ماله وإصلاحه وتنميته حتى يبلغ أشده.
4. அநாதையின் மீது அல்லாஹ் வைத்துள்ள கருணையினால் அவன் பக்குவம் அடையும் வரை அவனையும் அவனது சொத்துக்களையும் பாதுகாக்குமாறும் அதன் வளர்ச்சிக்கான முயற்சிகளில் ஈடுபடுமாறும் அவனது பொறுப்பாளர்களுக்கு கட்டளையிட்டுள்ளான்.

 
අර්ථ කථනය පරිච්ඡේදය: අල් ඉස්රා
සූරා පටුන පිටු අංක
 
ශුද්ධවූ අල් කුර්ආන් අර්ථ කථනය - ශුද්ධ වූ අල්කුර්ආන් අර්ථ විවරණයේ සංෂිප්ත අනුවාදය - දෙමළ පරිවර්තනය - පරිවර්තන පටුන

අල්කුර්ආන් අධ්‍යයන සඳහා වූ තෆ්සීර් මධ්‍යස්ථානය විසින් නිකුත් කරන ලදී.

වසන්න