Check out the new design

ශුද්ධවූ අල් කුර්ආන් අර්ථ කථනය - ශුද්ධ වූ අල්කුර්ආන් අර්ථ විවරණයේ සංෂිප්ත අනුවාදය - දෙමළ පරිවර්තනය * - පරිවර්තන පටුන


අර්ථ කථනය පරිච්ඡේදය: අල් ඉස්රා   වාක්‍යය:
ذٰلِكَ مِمَّاۤ اَوْحٰۤی اِلَیْكَ رَبُّكَ مِنَ الْحِكْمَةِ ؕ— وَلَا تَجْعَلْ مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَ فَتُلْقٰی فِیْ جَهَنَّمَ مَلُوْمًا مَّدْحُوْرًا ۟
17.39. நாம் தெளிவுபடுத்திய மேற்கூறிய கட்டளைகளும், விலக்கல்களும், சட்டங்களும் உன் இறைவன் வஹியாக உமக்கு அறிவித்த ஞானத்தில் உள்ளதாகும். -மனிதனே!- அல்லாஹ்வுடன் வேறு ஒரு இறைவனை ஏற்படுத்திவிடாதே. அவ்வாறு செய்தால் மக்களாலும் உன் மனதாலும் பழிக்கப்பட்டவானாக, எல்லாவகையான நன்மைகளை விட்டும் தூரமாக்கப்பட்டவானாக மறுமை நாளில் நரகத்தில் எறியப்பட்டு விடுவாய்.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
اَفَاَصْفٰىكُمْ رَبُّكُمْ بِالْبَنِیْنَ وَاتَّخَذَ مِنَ الْمَلٰٓىِٕكَةِ اِنَاثًا ؕ— اِنَّكُمْ لَتَقُوْلُوْنَ قَوْلًا عَظِیْمًا ۟۠
17.40. வானவர்களை அல்லாஹ்வின் மகள்கள் என்று அழைப்பவர்களே! உங்கள் இறைவன் உங்களுக்கு ஆண்மக்களை அளித்துவிட்டு வானவர்களை தனக்கு பெண்மக்களாக ஏற்படுத்திக் கொண்டானா? நீங்கள் கூறுவதை விட்டும் அல்லாஹ் மிக உயர்ந்தவன். நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வுக்குப் பிள்ளை உண்டு எனக் கூறியது மாத்திரமின்றி நிராகரிப்பில் அதிகரித்துச் சென்று அவனுக்கு பெண்பிள்ளைகளே உண்டு என வாதிட்டு அவன் மீது மிகவும் மோசமான அவதூறைக் கூறியுள்ளீர்கள்.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
وَلَقَدْ صَرَّفْنَا فِیْ هٰذَا الْقُرْاٰنِ لِیَذَّكَّرُوْا ؕ— وَمَا یَزِیْدُهُمْ اِلَّا نُفُوْرًا ۟
17.41. மக்கள் படிப்பினை பெற்று, தங்களுக்குப் பயனளிக்கும் விஷயங்களில் ஈடுபட்டு தீங்கிழைக்கும் விஷயங்களை விட்டுவிடுவதற்காக நாம் இந்தக் குர்ஆனிலே சட்டங்களையும் அறிவுரைகளையும் உதாரணங்களையும் தெளிவுபடுத்தியுள்ளோம். ஆனால் இந்நிலையிலும் இயல்பு சிதைந்துவிட்ட அவர்களில் சிலர் அதன் மூலம் சத்தியத்தை விட்டு இன்னுமின்னும் தூரமாகியும், வெறுப்புற்றும் செல்கின்றனர்.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
قُلْ لَّوْ كَانَ مَعَهٗۤ اٰلِهَةٌ كَمَا یَقُوْلُوْنَ اِذًا لَّابْتَغَوْا اِلٰی ذِی الْعَرْشِ سَبِیْلًا ۟
17.42. -தூதரே!- இந்த இணைவைப்பாளர்களிடம் நீர் கூறுவீராக: “நீங்கள் இட்டுக்கட்டிக் பொய் கூறுவதுபோல அல்லாஹ்வுடன் வேறு தெய்வங்களும் இருந்திருந்தால் அவனது ஆட்சியில் அவனை மிகைத்து, சண்டைபிடிக்க அவை அர்ஷ் உடைய அல்லாஹ்வை நோக்கிச் செல்லக்கூடிய வழியை தேடியிருக்கும்.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
سُبْحٰنَهٗ وَتَعٰلٰی عَمَّا یَقُوْلُوْنَ عُلُوًّا كَبِیْرًا ۟
17.43. இணைவைப்பாளர்களின் வர்ணனைகளை விட்டும் அல்லாஹ் பரிசுத்தமானவன். அவர்கள் கூறுவதை விட்டும் அவன் மிக மிக உயர்ந்தவன்.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
تُسَبِّحُ لَهُ السَّمٰوٰتُ السَّبْعُ وَالْاَرْضُ وَمَنْ فِیْهِنَّ ؕ— وَاِنْ مِّنْ شَیْءٍ اِلَّا یُسَبِّحُ بِحَمْدِهٖ وَلٰكِنْ لَّا تَفْقَهُوْنَ تَسْبِیْحَهُمْ ؕ— اِنَّهٗ كَانَ حَلِیْمًا غَفُوْرًا ۟
17.44. வானங்களும் பூமியும் அவையிரண்டிலுமுள்ள படைப்புகளும் அல்லாஹ்வின் தூய்மையைப் பறைசாற்றுகின்றன. அவற்றிலுள்ள அனைத்தும் அவனது தூய்மையைப் பறைசாற்றுவதுடன் அவனைப் புகழ்ந்துகொண்டும் இருக்கின்றன. ஆனால் அவை எவ்வாறு அவனது தூய்மையைப் பறைசாற்றுகின்றன என்பதை நீங்கள் புரிந்துகொள்ள மாட்டீர்கள். உங்களின் மொழியில் அவனைப் புகழ்பவர்களைத்தான் உங்களால் புரிந்துகொள்ள முடியும். நிச்சயமாக அவன் சகிப்புத்தன்மை மிக்கவனாக இருக்கின்றான். உடனுக்குடன் தண்டித்துவிட
மாட்டான். தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களை அவன் மன்னிக்கக் கூடியவனாகவும் இருக்கின்றான்.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
وَاِذَا قَرَاْتَ الْقُرْاٰنَ جَعَلْنَا بَیْنَكَ وَبَیْنَ الَّذِیْنَ لَا یُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ حِجَابًا مَّسْتُوْرًا ۟ۙ
17.45. -தூதரே!- நீர் குர்ஆனைப் படித்து, அதிலுள்ள எச்சரிக்கைகளையும், அறிவுரைகளையும் அவர்கள் செவியுற்றால், உமக்கும் மறுமை நாளை நம்பாதவர்களுக்குமிடையே அல்குர்ஆனைப் புரிந்துகொள்ளத் தடையாக நாம் ஒரு திரையை ஏற்படுத்திவிடுகின்றோம். இது அவர்களது புறக்கணிப்புக்கான தண்டனையாகும்.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
وَّجَعَلْنَا عَلٰی قُلُوْبِهِمْ اَكِنَّةً اَنْ یَّفْقَهُوْهُ وَفِیْۤ اٰذَانِهِمْ وَقْرًا ؕ— وَاِذَا ذَكَرْتَ رَبَّكَ فِی الْقُرْاٰنِ وَحْدَهٗ وَلَّوْا عَلٰۤی اَدْبَارِهِمْ نُفُوْرًا ۟
17.46. குர்ஆனைப் புரிந்துகொள்ள முடியாதவாறு அவர்களின் உள்ளங்களில் நாம் திரைகளை ஏற்படுத்தியுள்ளோம். அவர்களின் செவிகளிலும் ஒரு அடைப்பை ஏற்படுத்தியுள்ளோம். அவர்களால் அதிலிருந்து பயனடையும் வகையில் செவியுற முடியாது. நீர் குர்ஆனில் அவர்களால் தெய்வமாகக் கருதப்படுபவற்றை குறிப்பிடாமல் அல்லாஹ் ஒருவனை மட்டுமே குறிப்பிட்டால் அவர்கள் அல்லாஹ்வுக்கு மாத்திரம் ஏகத்துவத்தை வழங்க மறுத்து ஒதுங்கித் திரும்பிச் சென்றுவிடுகிறார்கள்.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
نَحْنُ اَعْلَمُ بِمَا یَسْتَمِعُوْنَ بِهٖۤ اِذْ یَسْتَمِعُوْنَ اِلَیْكَ وَاِذْ هُمْ نَجْوٰۤی اِذْ یَقُوْلُ الظّٰلِمُوْنَ اِنْ تَتَّبِعُوْنَ اِلَّا رَجُلًا مَّسْحُوْرًا ۟
17.47. அவர்களது தலைவர்கள் எவ்வாறு குர்ஆனை காதுகொடுத்துக் கேட்கிறார்கள் என்பதை நாம் நன்கறிவோம். அவர்கள் இதன் மூலம் நேர்வழியில் செல்வதை விரும்பவில்லை. மாறாக அவர்கள் நீர் குர்ஆன் ஓதும் போது பரிகாசத்திலும் வீணானவற்றிலும் ஈடுபடவே முனைகின்றனர். -“மக்களே!- நீங்கள் சூனியம் செய்யப்பட்ட, அறிவு குழம்பிய ஒரு மனிதரையே பின்பற்றுகிறீர்கள்” என்று நிராகரிப்பினால் தமக்குத் தாமே அநீதியிழைத்துக்கொண்டவர்கள் கூறி ஒருவருக்கொருவர் இரகசியமாக பேசி அல்குர்ஆனைப் பொய்ப்பிப்பதிலும் அதனை விட்டும் தடுப்பதிலும் ஈடுபடுவதை நாம் நன்கறிந்துள்ளோம்.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
اُنْظُرْ كَیْفَ ضَرَبُوْا لَكَ الْاَمْثَالَ فَضَلُّوْا فَلَا یَسْتَطِیْعُوْنَ سَبِیْلًا ۟
17.48. -தூதரே!- அவர்கள் உம்மை எவ்வாறெல்லாம் பல்வேறுபட்ட இழிவான பண்புகளால் சித்தரிக்கிறார்கள்? என்பதையிட்டு ஆச்சரியப்படுவதற்கு, சிந்தித்துப் பார்ப்பீராக. அவர்கள் சத்தியத்திலிருந்து விலகி தடுமாறிவிட்டனர். எனவே நேரான வழியை அவர்கள் பெறவில்லை.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
وَقَالُوْۤا ءَاِذَا كُنَّا عِظَامًا وَّرُفَاتًا ءَاِنَّا لَمَبْعُوْثُوْنَ خَلْقًا جَدِیْدًا ۟
17.49. மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை நிராகரித்தவாறு இணைவைப்பாளர்கள் கூறுகிறார்கள்: “நாங்கள் இறந்து எலும்புகளாக, எமது உடல்கள் மண்ணோடு மண்ணாக மக்கிப் போய்விட்டாலும் மீண்டும் புதிய படைப்பாக எழுப்பப்படுவோமா என்ன? நிச்சயமாக இது சாத்தியமற்றது.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
මෙ⁣ම පිටුවේ තිබෙන වැකිවල ප්‍රයෝජන:
• الزعم بأن الملائكة بنات الله افتراء كبير، وقول عظيم الإثم عند الله عز وجل.
1. வானவர்களை அல்லாஹ்வின் மகள்கள் என்று எண்ணுவது மிகப் பெரும் இட்டுக்கட்டுதலாகும். அல்லாஹ்விடத்தில் பெரும் பாவமான வார்த்தையாகும்.

• أكثر الناس لا تزيدهم آيات الله إلا نفورًا؛ لبغضهم للحق ومحبتهم ما كانوا عليه من الباطل.
2. மக்களில் பெரும்பாலோருக்கு அல்லாஹ்வின் வசனங்கள் வெறுப்பையே அதிகப்படுத்துகின்றன. காரணம், அவர்கள் சத்தியத்தை வெறுக்கிறார்கள், அவர்கள் இருந்துகொண்டிருக்கும் அசத்தியத்தை விரும்புகிறார்கள்.

• ما من مخلوق في السماوات والأرض إلا يسبح بحمد الله تعالى فينبغي للعبد ألا تسبقه المخلوقات بالتسبيح.
3. வானங்கள் மற்றும் பூமியிலுள்ள அனைத்து படைப்புகளும் அல்லாஹ்வின் புகழை பறைசாற்றிக்கொண்டே இருக்கின்றன. எனவே ஏனைய படைப்பினங்கள் இறைவனைத் துதிப்பதில் முந்திச்செல்வது அடியானுக்கு அழகல்ல.

• من حلم الله على عباده أنه لا يعاجلهم بالعقوبة على غفلتهم وسوء صنيعهم، فرحمته سبقت غضبه.
4. அல்லாஹ் தன் அடியார்களின்மீது கொண்ட சகிப்புத்தன்மையின் வெளிப்பாடு, அவர்களது கவனயீனத்திற்காகவும் தீய செயலுக்காகவும் நிச்சயமாக அவன் அவர்களை அவசரமாக தண்டிக்காமையாகும். ஏனெனில் அவனுடைய கருணை அவனது கோபத்தை முந்திவிட்டது.

 
අර්ථ කථනය පරිච්ඡේදය: අල් ඉස්රා
සූරා පටුන පිටු අංක
 
ශුද්ධවූ අල් කුර්ආන් අර්ථ කථනය - ශුද්ධ වූ අල්කුර්ආන් අර්ථ විවරණයේ සංෂිප්ත අනුවාදය - දෙමළ පරිවර්තනය - පරිවර්තන පටුන

අල්කුර්ආන් අධ්‍යයන සඳහා වූ තෆ්සීර් මධ්‍යස්ථානය විසින් නිකුත් කරන ලදී.

වසන්න