Check out the new design

ශුද්ධවූ අල් කුර්ආන් අර්ථ කථනය - ශුද්ධ වූ අල්කුර්ආන් අර්ථ විවරණයේ සංෂිප්ත අනුවාදය - දෙමළ පරිවර්තනය * - පරිවර්තන පටුන


අර්ථ කථනය පරිච්ඡේදය: අල් අන්කබූත්   වාක්‍යය:
فَمَا كَانَ جَوَابَ قَوْمِهٖۤ اِلَّاۤ اَنْ قَالُوا اقْتُلُوْهُ اَوْ حَرِّقُوْهُ فَاَنْجٰىهُ اللّٰهُ مِنَ النَّارِ ؕ— اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّقَوْمٍ یُّؤْمِنُوْنَ ۟
29.24. இப்ராஹீம் தனது சமூகத்தை அல்லாஹ்வை மாத்திரம் வணங்கி ஏனைய தெய்வங்களை வணங்குவதை விட்டுவிடும் படி ஏவியதற்கு அவரது சமூகம் அளித்த பதில் இதுதான்: “உங்கள் தெய்வங்களுக்கு உதவி செய்யும் பொருட்டு அவரைக் கொன்றுவிடுங்கள் அல்லது நெருப்பில் போட்டுவிடுங்கள்.” அல்லாஹ் நெருப்பிலிருந்து அவரைப் பாதுகாத்தான். அவர்கள் நெருப்பில் போட்ட பிறகும் அல்லாஹ் அவரைக் காப்பாற்றியதில், நம்பிக்கைகொள்ளும் மக்களுக்குப் படிப்பினைகள் இருக்கின்றன. ஏனெனில் நிச்சயமாக அவர்கள்தாம் படிப்பினைகளைக் கொண்டு பயனடைவார்கள்.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
وَقَالَ اِنَّمَا اتَّخَذْتُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ اَوْثَانًا ۙ— مَّوَدَّةَ بَیْنِكُمْ فِی الْحَیٰوةِ الدُّنْیَا ۚ— ثُمَّ یَوْمَ الْقِیٰمَةِ یَكْفُرُ بَعْضُكُمْ بِبَعْضٍ وَّیَلْعَنُ بَعْضُكُمْ بَعْضًا ؗ— وَّمَاْوٰىكُمُ النَّارُ وَمَا لَكُمْ مِّنْ نّٰصِرِیْنَ ۟ۗۖ
29.25. இப்ராஹீம் தம் சமூகத்தாரிடம் கூறினார்: “நீங்கள் சிலைகளை வணங்கும் தெய்வங்களாக எடுத்திருப்பது, உலக வாழ்வில் அவற்றை வணங்குவதில் உள்ள பற்று மற்றும் பழக்கத்தினால்தான். பின்னர் மறுமை நாளில் உங்களிடையேயுள்ள பற்று அறுபட்டுப்போகும். வேதனையைக் காணும்போது உங்களில் ஒருவர் மற்றவரை விட்டும் விலகிவிடுவார். ஒருவரையொருவர் சபிப்பார்கள். உங்களின் இருப்பிடம் நரகமாகும். அல்லாஹ்வின் வேதனையிலிருந்து உங்களைப் தடுக்கக்கூடிய உதவியாளர்கள் யாரும் உங்களுக்கு இருக்க மாட்டார்கள். நீங்கள் வணங்கிய சிலைகளாலோ, மற்றவர்களாலோ உங்களுக்கு உதவ முடியாது.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
فَاٰمَنَ لَهٗ لُوْطٌ ۘ— وَقَالَ اِنِّیْ مُهَاجِرٌ اِلٰی رَبِّیْ ؕ— اِنَّهٗ هُوَ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟
29.26. லூத் அவரை ஏற்றுக் கொண்டார். இப்ராஹீம் கூறினார்: “நிச்சயமாக நான் என் இறைவனின் பக்கம் அருள் வளமிக்க ஷாம் தேசத்தை நோக்கி புலம்பெயர்ந்து செல்கின்றேன். திட்டமாக அவன் யாவற்றையும் மிகைத்தவன். யாராலும் அவனை மிகைக்க முடியாது. அவன் தன் பக்கம் புலம்பெயர்பவர்களை இழிவுபடுத்த மாட்டான். தனது நிர்ணயத்திலும் திட்டத்திலும் அவன் ஞானம் மிக்கவன்.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
وَوَهَبْنَا لَهٗۤ اِسْحٰقَ وَیَعْقُوْبَ وَجَعَلْنَا فِیْ ذُرِّیَّتِهِ النُّبُوَّةَ وَالْكِتٰبَ وَاٰتَیْنٰهُ اَجْرَهٗ فِی الدُّنْیَا ۚ— وَاِنَّهٗ فِی الْاٰخِرَةِ لَمِنَ الصّٰلِحِیْنَ ۟
29.27. நாம் இப்ராஹீமுக்கு இஸ்ஹாக்கையும் அவரது மகன் யஅகூபையும் வழங்கினோம். அவருடைய சந்ததியில் நபித்துவத்தை ஏற்படுத்தி அவர்களுக்கு இறக்கப்பட்ட வேதங்களையும் வழங்கினோம். அவர் சத்தியத்தில் உறுதியாக இருந்ததற்கான கூலியை இவ்வுலகில் நல்ல பிள்ளைகள், அழகிய புகழ் மூலம் அவருக்கு வழங்கினோம். நிச்சயமாக மறுமையில் அவருக்கு நல்லவர்களுக்கு கூலி வழங்கப்படுவதுபோன்றே வழங்கப்படும். உலகில் அவருக்கு வழங்கப்பட்டதனால் மறுமையில் அவருக்காக தயார்படுத்தப்பட்டுள்ள சங்கையான கூலியில் எவ்வித குறைவும் செய்யப்படாது.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
وَلُوْطًا اِذْ قَالَ لِقَوْمِهٖۤ اِنَّكُمْ لَتَاْتُوْنَ الْفَاحِشَةَ ؗ— مَا سَبَقَكُمْ بِهَا مِنْ اَحَدٍ مِّنَ الْعٰلَمِیْنَ ۟
29.28. -தூதரே!- லூத்தையும், அவர் தம் சமூகத்திடம் கூறிய வேளையை நினைவுகூர்வீராக. “உலக மக்களில் உங்களுக்கு முன்னர் நிச்சயமாக யாரும் செய்திராத மோசமான பாவத்தைச் செய்கிறீர்கள். ஆரோக்கியமான இயல்புகள் மறுக்கும் இந்த பாவத்தை நீங்கள்தாம் முதலாவதாக ஆரம்பித்துள்ளீர்கள்.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
اَىِٕنَّكُمْ لَتَاْتُوْنَ الرِّجَالَ وَتَقْطَعُوْنَ السَّبِیْلَ ۙ۬— وَتَاْتُوْنَ فِیْ نَادِیْكُمُ الْمُنْكَرَ ؕ— فَمَا كَانَ جَوَابَ قَوْمِهٖۤ اِلَّاۤ اَنْ قَالُوا ائْتِنَا بِعَذَابِ اللّٰهِ اِنْ كُنْتَ مِنَ الصّٰدِقِیْنَ ۟
29.29. நிச்சயமாக நீங்கள் உங்களின் இச்சையைத் தீர்த்துக்கொள்வதற்காக ஆண்களின் பின்புறத்தில் வருகிறீர்களா? பயணிகளுக்கு பாதையில் தடையாக இருக்கிறீர்கள். நீங்கள் செய்யும் மானக்கேடான செயலுக்குப் பயந்து நீங்கள் இருக்கும் ஊர் வழியாக எவரும் கடந்துசெல்வதில்லை. உங்களின் அவைகளில் வைத்தே நிர்வாணம், வார்த்தையினாலும் செயலினாலும் உங்களைக் கடந்து செல்வோரை துன்புறுத்தல் போன்ற மோசமான காரியங்களில் ஈடுபடுகிறீர்களா?” மோசமான செயல்களில் ஈடுபட வேண்டாம் என அவர் அவர்களைத் தடுத்ததற்கு அவரது சமூகத்தினர் கூறிய பதில் இதுதான்: “நீர் கூறும் வாதத்தில் உண்மையாளராக இருந்தால் நீர் எச்சரிக்கும் வேதனையை எங்களிடம் கொண்டுவாரும்.”
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
قَالَ رَبِّ انْصُرْنِیْ عَلَی الْقَوْمِ الْمُفْسِدِیْنَ ۟۠
29.30. தனது சமூகம் பிடிவாதமாக, தன்னை மதிக்காமல் தங்கள் மீது வேதனையை இறக்குமாறு திமிராக பதில் கூறியபோது அவர் தம் இறைவனிடம் பிரார்த்தனை செய்தார்: “இறைவா! நிராகரிப்பு மற்றும் அருவருப்பான செயல்களைப் பரப்புவதன் மூலம் பூமியில் குழப்பம் செய்யும் சமூகத்துக்கு எதிராக எனக்கு உதவி புரிவாயாக.”
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
මෙ⁣ම පිටුවේ තිබෙන වැකිවල ප්‍රයෝජන:
• عناية الله بعباده الصالحين حيث ينجيهم من مكر أعدائهم.
1. அல்லாஹ் தன் நல்லடியார்களின் மீது கொண்ட அக்கறையினால் அவன் அவர்களை எதிரிகளின் சூழ்ச்சிகளிலிருந்து பாதுகாக்கிறான்.

• فضل الهجرة إلى الله.
2. அல்லாஹ்வின்பால் புலம்பெயர்ந்து செல்வதன் சிறப்பு தெளிவாகிறது.

• عظم منزلة إبراهيم وآله عند الله تعالى.
3. இப்ராஹீமும் அவரது குடும்பத்தினரும் அல்லாஹ்விடம் உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றுள்ளார்கள்.

• تعجيل بعض الأجر في الدنيا لا يعني نقص الثواب في الآخرة.
4. உலகில் சில நன்மைகள் அவசரமாகக் கிடைப்பதன் கருத்து மறுமையில் நன்மை குறையும் என்பதல்ல.

• قبح تعاطي المنكرات في المجالس العامة.
5. பொதுச் சபைகளில் மானக் கேடான செயல்களில் ஈடுபடுவது மோசமானதாகும்.

 
අර්ථ කථනය පරිච්ඡේදය: අල් අන්කබූත්
සූරා පටුන පිටු අංක
 
ශුද්ධවූ අල් කුර්ආන් අර්ථ කථනය - ශුද්ධ වූ අල්කුර්ආන් අර්ථ විවරණයේ සංෂිප්ත අනුවාදය - දෙමළ පරිවර්තනය - පරිවර්තන පටුන

අල්කුර්ආන් අධ්‍යයන සඳහා වූ තෆ්සීර් මධ්‍යස්ථානය විසින් නිකුත් කරන ලදී.

වසන්න