Check out the new design

ශුද්ධවූ අල් කුර්ආන් අර්ථ කථනය - දෙමළ පරිවර්තනය- උමර් ෂරීෆ් * - පරිවර්තන පටුන

PDF XML CSV Excel API
Please review the Terms and Policies

අර්ථ කථනය පරිච්ඡේදය: යූනුස්   වාක්‍යය:
وَلَوْ اَنَّ لِكُلِّ نَفْسٍ ظَلَمَتْ مَا فِی الْاَرْضِ لَافْتَدَتْ بِهٖ ؕ— وَاَسَرُّوا النَّدَامَةَ لَمَّا رَاَوُا الْعَذَابَ ۚ— وَقُضِیَ بَیْنَهُمْ بِالْقِسْطِ وَهُمْ لَا یُظْلَمُوْنَ ۟
இன்னும், அநியாயம் செய்த ஒவ்வோர் ஆன்மாவிற்கும் பூமியில் உள்ளவை (அனைத்தும் சொந்தமாக) இருந்தால் (அந்த ஆன்மா தண்டனையிலிருந்து தப்பிப்பதற்கு) அவற்றை மீட்புத் தொகையாக கொடுத்து தன்னை விடுவித்துவிடும்! இன்னும், அவர்கள் தண்டனையைக் (கண்ணால்) காணும்போது துக்கத்தை மறைத்துக் கொள்வார்கள். இன்னும், அவர்களுக்கு மத்தியில் நீதமாகவே தீர்ப்பளிக்கப்படும்; இன்னும், அவர்கள் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
اَلَاۤ اِنَّ لِلّٰهِ مَا فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ— اَلَاۤ اِنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّ وَّلٰكِنَّ اَكْثَرَهُمْ لَا یَعْلَمُوْنَ ۟
வானங்களிலும் பூமியிலும் உள்ளவை நிச்சயமாக அல்லாஹ்விற்குரியன என்பதை அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானது என்பதை(யும்) அறிந்து கொள்ளுங்கள்! எனினும், அவர்களில் அதிகமானவர்கள் (உண்மையை) அறிய (முயற்சிக்க) மாட்டார்கள்.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
هُوَ یُحْیٖ وَیُمِیْتُ وَاِلَیْهِ تُرْجَعُوْنَ ۟
அவன்தான் உயிர்ப்பிக்கிறான்; இன்னும், மரணிக்கச் செய்கிறான்; இன்னும், அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
یٰۤاَیُّهَا النَّاسُ قَدْ جَآءَتْكُمْ مَّوْعِظَةٌ مِّنْ رَّبِّكُمْ وَشِفَآءٌ لِّمَا فِی الصُّدُوْرِ ۙ۬— وَهُدًی وَّرَحْمَةٌ لِّلْمُؤْمِنِیْنَ ۟
மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு உபதேசமும், நெஞ்சங்களிலுள்ளவற்றை குணப்படுத்தும் மருந்தும் நேர்வழியும், (குறிப்பாக இந்த வேதத்தை பின்பற்றி நடக்கின்ற) நம்பிக்கையாளர்களுக்கு (இறைவனின்) கருணையும் (அருளும்) வந்துவிட்டன.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
قُلْ بِفَضْلِ اللّٰهِ وَبِرَحْمَتِهٖ فَبِذٰلِكَ فَلْیَفْرَحُوْا ؕ— هُوَ خَیْرٌ مِّمَّا یَجْمَعُوْنَ ۟
(நபியே) கூறுவீராக! “(இந்தக் குர்ஆன்) அல்லாஹ்வின் அருளினாலும் அவனுடைய கருணையினாலும் (உங்களுக்கு) இறக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, இ(தை நம்பிக்கைக் கொண்டு, இதை பின்பற்றி நடப்ப)தன் மூலமே அவர்கள் மகிழ்ச்சியடையட்டும். இது அவர்கள் சேகரி(த்து சேமித்து வை)க்கின்ற (உலக செல்வத்)தை விட மிக மேலானதாகும்.”
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
قُلْ اَرَءَیْتُمْ مَّاۤ اَنْزَلَ اللّٰهُ لَكُمْ مِّنْ رِّزْقٍ فَجَعَلْتُمْ مِّنْهُ حَرَامًا وَّحَلٰلًا ؕ— قُلْ آٰللّٰهُ اَذِنَ لَكُمْ اَمْ عَلَی اللّٰهِ تَفْتَرُوْنَ ۟
(நபியே!) கூறுவீராக: “(மக்களே) அறிவிப்பீர்களாக, உங்களுக்காக அல்லாஹ் இறக்கிவைத்த உணவில், அதில் சிலவற்றை ஆகாதவை என்றும், சிலவற்றை ஆகுமானவை என்றும் நீங்கள் ஆக்கிக்கொள்கிறீர்களா? அல்லாஹ் (இதற்கு) உங்களுக்கு அனுமதி அளித்தானா? அல்லது, அல்லாஹ்வின் மீது நீங்கள் (இவ்வாறு கற்பனையாக) இட்டுக் கட்டுகிறீர்களா?”
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
وَمَا ظَنُّ الَّذِیْنَ یَفْتَرُوْنَ عَلَی اللّٰهِ الْكَذِبَ یَوْمَ الْقِیٰمَةِ ؕ— اِنَّ اللّٰهَ لَذُوْ فَضْلٍ عَلَی النَّاسِ وَلٰكِنَّ اَكْثَرَهُمْ لَا یَشْكُرُوْنَ ۟۠
அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுபவர்களுடைய எண்ணம்தான் மறுமை நாளில் என்ன? (அல்லாஹ் அவர்களுடன் எப்படி நடந்து கொள்வான் என்று எண்ணுகிறார்கள்?) நிச்சயமாக (இந்த உலகத்தில்) அல்லாஹ் மனிதர்கள் எல்லோர் மீதும் அதிக அருளுடையவன். (ஆகவே, அவன் யாரையும் உடனே தண்டிப்பதில்லை.) எனினும், அவர்களில் அதிகமானவர்கள் நன்றி செலுத்தமாட்டார்கள்.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
وَمَا تَكُوْنُ فِیْ شَاْنٍ وَّمَا تَتْلُوْا مِنْهُ مِنْ قُرْاٰنٍ وَّلَا تَعْمَلُوْنَ مِنْ عَمَلٍ اِلَّا كُنَّا عَلَیْكُمْ شُهُوْدًا اِذْ تُفِیْضُوْنَ فِیْهِ ؕ— وَمَا یَعْزُبُ عَنْ رَّبِّكَ مِنْ مِّثْقَالِ ذَرَّةٍ فِی الْاَرْضِ وَلَا فِی السَّمَآءِ وَلَاۤ اَصْغَرَ مِنْ ذٰلِكَ وَلَاۤ اَكْبَرَ اِلَّا فِیْ كِتٰبٍ مُّبِیْنٍ ۟
(நபியே) நீர் எந்த ஒரு செயலில் இருந்தாலும், இன்னும், (அல்லாஹ்வின் வேதமாகிய) குர்ஆனிலிருந்து நீர் எதை ஓதினாலும், இன்னும், (மக்களே) நீங்கள் எந்த ஒரு செயலை செய்தாலும் நீங்கள் அவற்றில் ஈடுபடும் போது உங்கள் மீது சாட்சியாளர்களாக (உங்களை கண்காணித்தவர்களாக) நாம் இருந்தே தவிர அவற்றை நீங்கள் செய்யமாட்டீர்கள். இன்னும், பூமியிலோ வானத்திலோ மிகச் சிறிய ஓர் எறும்பின் கனமளவும் உம் இறைவனை விட்டு மறையாது. இன்னும், இதைவிட சிறியதும் இல்லை, பெரியதும் இல்லை, (அவனுடைய) தெளிவான பதிவேட்டில் இருந்தே தவிர.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
 
අර්ථ කථනය පරිච්ඡේදය: යූනුස්
සූරා පටුන පිටු අංක
 
ශුද්ධවූ අල් කුර්ආන් අර්ථ කථනය - දෙමළ පරිවර්තනය- උමර් ෂරීෆ් - පරිවර්තන පටුන

උමර් ෂරීෆ් බින් අබ්දුස්සලාම් විසින් මෙය පරිවර්තනය කරන ලදී.

වසන්න