Check out the new design

Përkthimi i kuptimeve të Kuranit Fisnik - El Muhtesar fi tefsir el Kuran el Kerim - Përkthimi tamilisht * - Përmbajtja e përkthimeve


Përkthimi i kuptimeve Surja: El Bekare   Ajeti:
وَاتَّبَعُوْا مَا تَتْلُوا الشَّیٰطِیْنُ عَلٰی مُلْكِ سُلَیْمٰنَ ۚ— وَمَا كَفَرَ سُلَیْمٰنُ وَلٰكِنَّ الشَّیٰطِیْنَ كَفَرُوْا یُعَلِّمُوْنَ النَّاسَ السِّحْرَ ۗ— وَمَاۤ اُنْزِلَ عَلَی الْمَلَكَیْنِ بِبَابِلَ هَارُوْتَ وَمَارُوْتَ ؕ— وَمَا یُعَلِّمٰنِ مِنْ اَحَدٍ حَتّٰی یَقُوْلَاۤ اِنَّمَا نَحْنُ فِتْنَةٌ فَلَا تَكْفُرْ ؕ— فَیَتَعَلَّمُوْنَ مِنْهُمَا مَا یُفَرِّقُوْنَ بِهٖ بَیْنَ الْمَرْءِ وَزَوْجِهٖ ؕ— وَمَا هُمْ بِضَآرِّیْنَ بِهٖ مِنْ اَحَدٍ اِلَّا بِاِذْنِ اللّٰهِ ؕ— وَیَتَعَلَّمُوْنَ مَا یَضُرُّهُمْ وَلَا یَنْفَعُهُمْ ؕ— وَلَقَدْ عَلِمُوْا لَمَنِ اشْتَرٰىهُ مَا لَهٗ فِی الْاٰخِرَةِ مِنْ خَلَاقٍ ۫ؕ— وَلَبِئْسَ مَا شَرَوْا بِهٖۤ اَنْفُسَهُمْ ؕ— لَوْ كَانُوْا یَعْلَمُوْنَ ۟
2.102. அல்லாஹ்வுடைய மார்க்கத்தை விட்டுவிட்ட அவர்கள் அதற்குப் பதிலாக, இறைத்தூதர் சுலைமானுக்கு எதிராக ஷைத்தான்கள் இட்டுக்கட்டியவற்றைப் பின்பற்றினார்கள். அந்த ஷைத்தான்கள், சுலைமான் சூனியத்தின் மூலம் ஆட்சியை உறுதிப்படுத்தினார் என்று புனைந்து கூறினார்கள். யூதர்கள் கூறுவதுபோல சூனியம் செய்து சுலைமான் நிராகரிக்கவில்லை. ஆனால் ஷைத்தான்கள்தான் நிராகரித்தார்கள். அவர்கள் சூனியத்தை மக்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள். மனிதர்களைப் பரிசோதிக்கும் நோக்கில் ஈராக்கிலுள்ள பாபில் நகரத்தில் ஹாரூத், மாரூத் என்ற இரு வானவர்களுக்கு இறக்கப்பட்ட சூனியத்தையும் ஷைத்தான்கள்தான் மக்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள். இந்த இரு வானவர்களும் யாருக்காவது சூனியத்தைக் கற்றுக்கொடுக்க நேர்ந்தால், நாங்கள் மக்களுக்கு சோதனையாகவே இருக்கின்றோம். எனவே சூனியத்தைக் கற்பதின்மூலம் நிராகரித்து விடாதீர்கள் என்று அவருக்கு எச்சரிக்கை செய்துவிடுவார்கள். அவர்களின் அறிவுரையை ஏற்காதவர்கள் அவர்களிடமிருந்து சூனியத்தைக் கற்றுக்கொண்டார்கள். கணவனுக்கும் மனைவிக்குமிடையே வெறுப்பை ஏற்படுத்தி அவர்களைப் பிளவுபடுத்தும் சூனியத்தின் ஒரு வகையே. அல்லாஹ்வின் அனுமதியின்றி இந்த சூனியக்காரர்கள் யாருக்கும் எந்தத் தீங்கும் இழைத்துவிட முடியாது. தங்களுக்குப் பயனளிக்காத, தீங்கிழைக்கும் விஷயத்தையே அவர்கள் கற்றுக்கொண்டார்கள். அல்லாஹ்வின் வேதத்திற்குப் பகரமாக சூனியத்தைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு மறுமையில் எந்தப் பங்கும் இல்லை என்பதை யூதர்கள் நன்கறிந்திருந்தார்கள். அல்லாஹ்வின் வஹிக்குப் பகரமாக இவர்கள் பெற்றுக்கொண்ட சூனியம் எவ்வளவு மோசமானது! தங்களுக்குப் பயனளிக்கக்கூடியதை இவர்கள் அறிந்திருந்தால் இழிவான இந்த வழிகெட்ட செயலில் ஈடுபட்டிருக்க மாட்டார்கள்.
Tefsiret në gjuhën arabe:
وَلَوْ اَنَّهُمْ اٰمَنُوْا وَاتَّقَوْا لَمَثُوْبَةٌ مِّنْ عِنْدِ اللّٰهِ خَیْرٌ ؕ— لَوْ كَانُوْا یَعْلَمُوْنَ ۟۠
2.103. யூதர்கள் அல்லாஹ்வின்மீது உண்மையாகவே நம்பிக்கைகொண்டு, அவனுக்கு வழிப்பட்டு, தடுத்தவற்றை விட்டும் விலகி அவனை அஞ்சியிருந்தால் அல்லாஹ் அவர்களுக்கு அளிக்கும் நன்மை அவர்கள் இப்போது இருப்பதைவிடச் சிறந்ததாக இருந்திருக்கும். தங்களுக்குப் பயனளிக்கக்கூடிய விஷயத்தை அவர்கள் அறிந்திருக்க வேண்டுமே!.
Tefsiret në gjuhën arabe:
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَقُوْلُوْا رَاعِنَا وَقُوْلُوا انْظُرْنَا وَاسْمَعُوْا ؕ— وَلِلْكٰفِرِیْنَ عَذَابٌ اَلِیْمٌ ۟
2.104. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்ட அடியார்களுக்கு நல்ல வார்த்தைகளை தேர்ந்தெடுத்துப் பேசும்படி அறிவுரை வழங்குகிறான்: நம்பிக்கையாளர்களே,எங்களைக் கவனியுங்கள் என்று பொருளுடைய "ராயினா "என்ற வார்த்தையைக் கூறாதீர்கள். ஏனெனில் யூதர்கள் இந்த வார்த்தையைத் திரித்து, முட்டாள் என்ற தவறான பொருளை மனதில் வைத்து நபியவர்களை அழைக்கின்றனர். எனவே அல்லாஹ் இந்த வார்த்தையைப் பயன்படுத்துவதைத் தடுக்கிறான். அதற்குப் பதிலாக "உன்ளுர்னா" என்ற வார்த்தையைப் பயன்படுத்துமாறு தன் அடியார்களுக்குக் கட்டளையிடுகிறான். இது எங்களைக் கவனியுங்கள் என்ற ஒரே பொருளையே தருவதுடன் ராஇனா என்பதைப் போன்று தவறான பொருளில் இதனைப் பயன்படுத்தவும் முடியாது. அல்லாஹ்வை நிராகரிக்கக்கூடியவர்களுக்கு வேதனைமிக்க தண்டனை காத்திருக்கின்றது.
Tefsiret në gjuhën arabe:
مَا یَوَدُّ الَّذِیْنَ كَفَرُوْا مِنْ اَهْلِ الْكِتٰبِ وَلَا الْمُشْرِكِیْنَ اَنْ یُّنَزَّلَ عَلَیْكُمْ مِّنْ خَیْرٍ مِّنْ رَّبِّكُمْ ؕ— وَاللّٰهُ یَخْتَصُّ بِرَحْمَتِهٖ مَنْ یَّشَآءُ ؕ— وَاللّٰهُ ذُو الْفَضْلِ الْعَظِیْمِ ۟
2.105. அல்லாஹ்வை நிராகரிக்கக்கூடிய இவர்கள் - வேதக்காரர்களாக இருந்தாலும் சரி, இணைவைப்பாளர்களாக இருந்தாலும் சரியே - உங்களுக்கு இறைவனிடமிருந்து சிறியதோ பெரியதோ எவ்வித நன்மையும் இறங்குவதை விரும்பமாட்டார்கள். தூதுத்துவம், வஹி, ஈமான் ஆகிய அருட்கொடைகளை தான் நாடிய அடியார்களுக்கே அல்லாஹ் வழங்குகிறான். அவன்தான் மாபெரும் அருளாளன். படைப்புகள் அவனிடமிருந்தே நன்மைகளைப் பெற முடியும். தூதர்களை அனுப்புவதும் வேதங்களை இறக்குவதும் அவனுடைய அருளில் உள்ளவையே.
Tefsiret në gjuhën arabe:
Dobitë e ajeteve të kësaj faqeje:
• سوء أدب اليهود مع أنبياء الله حيث نسبوا إلى سليمان عليه السلام تعاطي السحر، فبرّأه الله منه، وأَكْذَبَهم في زعمهم.
1. யூதர்கள் அல்லாஹ்வின் தூதர்களுடன் மிகவும் மோசமாக நடந்து கொண்டார்கள். சுலைமானோடு சூனியத்தை இணைத்தார்கள். அல்லாஹ் அதிலிருந்து அவரைத் தூய்மைப்படுத்தினான்; அவர்களின் வாதத்தைப் பொய்யாக்கினான்.

• أن السحر له حقيقة وتأثير في العقول والأبدان، والساحر كافر، وحكمه القتل.
2. சூனியத்தின் மூலம் மனதிலும் உடலிலும் தாக்கம் ஏற்படும். சூனியம் செய்பவன் நிராகரிப்பாளன். அவனைக் கொல்வதே மார்க்கத்தீர்ப்பாகும்.

• لا يقع في ملك الله تعالى شيء من الخير والشر إلا بإذنه وعلمه تعالى.
3. அல்லாஹ்வின் ஆட்சியதிகாரத்தில் நன்மையோ, தீமையோ அவனுடைய அனுமதியின்றி நடைபெறாது.

• سد الذرائع من مقاصد الشريعة، فكل قول أو فعل يوهم أمورًا فاسدة يجب تجنبه والبعد عنه.
4. தவறான எண்ணத்தை உண்டாக்கக்கூடிய சொல்லோ செயலோ முழுமையாகத் தவிர்க்கப்பட வேண்டும். சந்தேகம் ஏற்படுத்தும் வழிகளை அடைப்பதும் ஷரீஅத்தின் நோக்கங்களில் உள்ளதாகும்.

• أن الفضل بيد الله تعالى وهو الذي يختص به من يشاء برحمته وحكمته.
5. அருள்கள் அனைத்தும் அல்லாஹ்வின் கைவசமே உள்ளன. தனது கருணை மற்றும் ஞானத்திற்கேற்ப தான் நாடியவர்களுக்கு அதனை வழங்குகிறான்.

 
Përkthimi i kuptimeve Surja: El Bekare
Përmbajtja e sureve Numri i faqes
 
Përkthimi i kuptimeve të Kuranit Fisnik - El Muhtesar fi tefsir el Kuran el Kerim - Përkthimi tamilisht - Përmbajtja e përkthimeve

Botuar nga Qendra e Tefsirit për Studime Kuranore.

Mbyll