Check out the new design

Përkthimi i kuptimeve të Kuranit Fisnik - El Muhtesar fi tefsir el Kuran el Kerim - Përkthimi tamilisht * - Përmbajtja e përkthimeve


Përkthimi i kuptimeve Surja: El Bekare   Ajeti:
وَلَنْ تَرْضٰی عَنْكَ الْیَهُوْدُ وَلَا النَّصٰرٰی حَتّٰی تَتَّبِعَ مِلَّتَهُمْ ؕ— قُلْ اِنَّ هُدَی اللّٰهِ هُوَ الْهُدٰی ؕ— وَلَىِٕنِ اتَّبَعْتَ اَهْوَآءَهُمْ بَعْدَ الَّذِیْ جَآءَكَ مِنَ الْعِلْمِ ۙ— مَا لَكَ مِنَ اللّٰهِ مِنْ وَّلِیٍّ وَّلَا نَصِیْرٍ ۟ؔ
2.120. அல்லாஹ் தன் தூதரை விளித்து அவருக்குப் பின்வருமாறு எச்சரிக்கிறான்: நீர் இஸ்லாத்தை விட்டுவிட்டு அவர்களது கொள்கையை பின்பற்றும் வரை யூதர்களோ, கிருஸ்தவர்களோ உம்மைக் குறித்து திருப்தியடைய மாட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ்வின் வேதமும் அவனது தெளிவும்தான் உண்மையான நேர்வழியாகும். மாறாக அவர்களிருக்கும் அசத்தியமல்ல. தெளிவான சத்தியம் உம்மிடம் வந்தபிறகு உம்மிடமிருந்தோ, உம்மைப் பின்பற்றியவர்களிடமிருந்தோ இவ்வாறு நிகழ்ந்துவிட்டால் அல்லாஹ்விடமிருந்து எந்த உதவியையும் நீர் பெறமாட்டீர். இது சத்தியத்தை விட்டுவிட்டு அசத்தியவாதிகளோடு சேர்ந்துவிடுவதால் ஏற்படும் ஆபத்தை தெளிவுபடுத்துகிறது.
Tefsiret në gjuhën arabe:
اَلَّذِیْنَ اٰتَیْنٰهُمُ الْكِتٰبَ یَتْلُوْنَهٗ حَقَّ تِلَاوَتِهٖ ؕ— اُولٰٓىِٕكَ یُؤْمِنُوْنَ بِهٖ ؕ— وَمَنْ یَّكْفُرْ بِهٖ فَاُولٰٓىِٕكَ هُمُ الْخٰسِرُوْنَ ۟۠
2.121. வேதக்காரர்களில் ஒரு பிரிவினர் தங்களிடமுள்ள வேதத்தின்படி உண்மையாகவே செயல்பட்டு வருவதாக குர்ஆன் கூறுகிறது. அவர்கள் முஹம்மது நபி உண்மையனவர் எனக் குறிப்பிடும் அடையாளங்களை தங்கள் வேதங்களில் காண்கிறார்கள். எனவேதான் விரைந்து அவரை நம்பிக்கை கொள்கிறார்கள். மற்றொரு பிரிவினர் அவற்றை நிராகரிப்பதில் உறுதியாக இருக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு இழப்பு ஏற்பட்டது.
Tefsiret në gjuhën arabe:
یٰبَنِیْۤ اِسْرَآءِیْلَ اذْكُرُوْا نِعْمَتِیَ الَّتِیْۤ اَنْعَمْتُ عَلَیْكُمْ وَاَنِّیْ فَضَّلْتُكُمْ عَلَی الْعٰلَمِیْنَ ۟
2.122. இஸ்ராயீலின் மக்களே, நான் உங்கள்மீது பொழிந்த உலக மற்றும் மார்க்கரீதியான அருட்கொடைகளை நினைவுகூருங்கள். நீங்கள் வாழ்ந்த காலத்தில் ஆட்சியதிகாரம் மற்றும் தூதுத்துவத்தைக் கொண்டு உங்களை சிறப்பித்தோம்.
Tefsiret në gjuhën arabe:
وَاتَّقُوْا یَوْمًا لَّا تَجْزِیْ نَفْسٌ عَنْ نَّفْسٍ شَیْـًٔا وَّلَا یُقْبَلُ مِنْهَا عَدْلٌ وَّلَا تَنْفَعُهَا شَفَاعَةٌ وَّلَا هُمْ یُنْصَرُوْنَ ۟
2.123. அல்லாஹ்வின் கட்டளைகளைக் கடைப்பிடித்து, அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து தவிர்ந்து மறுமைநாளில் உங்களுக்கும் தண்டனைக்குமிடையே தடுப்பை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். அந்த நாளில் எந்த உயிரும் பிற உயிருக்கு எதுவும் பயனளிக்க முடியாது. எவ்வளவு பெரிய பிணைத்தொகையும் எந்த மதிப்புமிக்கவரின் பரிந்துரையும் ஏற்றுக் கொள்ளப்படாது. அல்லாஹ்வைத்தவிர உதவிசெய்யக்கூடிய வேறு உதவியாளனும் அங்கு இருக்கமாட்டார்கள்.
Tefsiret në gjuhën arabe:
وَاِذِ ابْتَلٰۤی اِبْرٰهٖمَ رَبُّهٗ بِكَلِمٰتٍ فَاَتَمَّهُنَّ ؕ— قَالَ اِنِّیْ جَاعِلُكَ لِلنَّاسِ اِمَامًا ؕ— قَالَ وَمِنْ ذُرِّیَّتِیْ ؕ— قَالَ لَا یَنَالُ عَهْدِی الظّٰلِمِیْنَ ۟
2.124. அல்லாஹ் இப்ராஹீமுக்கு பல சட்ட திட்டங்களைக் கட்டளையிட்டு சோதித்ததையும் நினைவுகூருங்கள். அவர் அவற்றை சிறந்தமுறையில் நிறைவேற்றிக்காட்டினார். அல்லாஹ் தன்னுடைய தூதர் இப்ராஹீமிடம், நான் உம்மை செயல்களிலும், நற்குணங்களிலும், மக்கள் பின்பற்றத்தகுந்த முன்மாதிரியாக ஆக்கப்போகின்றேன் என்று கூறியபோது, என் சந்ததிகளிலிருந்தும் மக்கள் பின்பற்றத்தகுந்த வழிகாட்டிகளை ஆக்கு என்று வேண்டினார். அதற்கு அல்லாஹ், மார்க்கத் தலைமைத்துவத்திற்கு நான் உமக்களித்த உறுதிமொழி உமது சந்ததிகளில் அநியாயக்காரர்களுக்குக் கிடைக்காது என்று கூறினான்.
Tefsiret në gjuhën arabe:
وَاِذْ جَعَلْنَا الْبَیْتَ مَثَابَةً لِّلنَّاسِ وَاَمْنًا ؕ— وَاتَّخِذُوْا مِنْ مَّقَامِ اِبْرٰهٖمَ مُصَلًّی ؕ— وَعَهِدْنَاۤ اِلٰۤی اِبْرٰهٖمَ وَاِسْمٰعِیْلَ اَنْ طَهِّرَا بَیْتِیَ لِلطَّآىِٕفِیْنَ وَالْعٰكِفِیْنَ وَالرُّكَّعِ السُّجُوْدِ ۟
2.125. அல்லாஹ், புனிதமான கஅபாவை மக்கள் திரும்பத் திரும்ப வரும் இடமாகவும் ஆக்கியதையும் நினைவுகூருங்கள். அவர்களது உள்ளங்கள் எப்பொழுதும் அதனுடன் தொடர்புடையதாகவே உள்ளன. அவர்கள் அதை விட்டுச் சென்றாலும் அதன்பக்கம் திரும்புவார்கள். அதை அமைதிக்குரிய இடமாகவும் ஆக்கினோம். அங்கு அவர்கள் தாக்கப்படமாட்டார்கள். நாம் மக்களிடம் கூறினோம், கஅபாவைக் கட்டும்போது இப்ராஹீம் நின்ற கல்லை தொழுமிடமாக ஆக்கிக் கொள்ளுங்கள். கஅபாவை சிலைகள் மற்றும் அழுக்குகளிலிருந்து தூய்மைப்படுத்தி அங்கு தவாப், இஃதிகாப், தொழுகை போன்ற வணக்கங்களில் ஈடுபடுவோருக்கு அதனை தயார்படுத்துமாறு இப்ராஹீமிடமும் அவருடைய மகன் இஸ்மாயீலிடமும் நாம் அறிவுறுத்தினோம்.
Tefsiret në gjuhën arabe:
وَاِذْ قَالَ اِبْرٰهٖمُ رَبِّ اجْعَلْ هٰذَا بَلَدًا اٰمِنًا وَّارْزُقْ اَهْلَهٗ مِنَ الثَّمَرٰتِ مَنْ اٰمَنَ مِنْهُمْ بِاللّٰهِ وَالْیَوْمِ الْاَخِرِ ؕ— قَالَ وَمَنْ كَفَرَ فَاُمَتِّعُهٗ قَلِیْلًا ثُمَّ اَضْطَرُّهٗۤ اِلٰی عَذَابِ النَّارِ ؕ— وَبِئْسَ الْمَصِیْرُ ۟
2.126. தூதரே! இப்ராஹீம் தம் இறைவனிடம் பிரார்த்திக்கும்போது கூறியதை நினைவுகூருவீராக: என் இறைவனே, மக்காவை அமைதியான நகரமாக ஆக்குவாயாக. அங்கு யாருக்கும் தீங்கிழைக்கப்படக்கூடாது. அங்கு வசிப்பவர்களுக்கு பலவகையான பழங்களிலிருந்து உணவு வழங்குவாயாக. உன்மீதும் மறுமை நாள் மீதும் நம்பிக்கை கொண்டவர்களுக்கு மாத்திரம் உணவுகளை அளிப்பாயாக. அதற்கு அல்லாஹ் கூறினான்,அவர்களில் நிராகரிப்பவர்களுக்கும் உலகில் சிறிது அனுபவிக்கச்செய்வேன். பின்னர் மறுமைநாளில் அவர்களை நரக வேதனையின் பக்கம் தள்ளுவேன். மறுமைநாளில் அவர்கள் திரும்பக்கூடிய இடம் மிகவும் கெட்டதாகும்.
Tefsiret në gjuhën arabe:
Dobitë e ajeteve të kësaj faqeje:
• أن المسلمين مهما فعلوا من خير لليهود والنصارى؛ فلن يرضوا حتى يُخرجوهم من دينهم، ويتابعوهم على ضلالهم.
1. முஸ்லிம்கள், யூதர்களுக்கும் கிருஸ்தவர்களுக்கும் எவ்வளவுதான் நன்மைகள் புரிந்தாலும் தங்களின் மார்க்கத்தை விட்டு அவர்கள் வெளியேறி யூதர்களின் மற்றும் கிருஸ்தவர்களின் வழியைப் பின்பற்றாதவரை அவர்களைக் குறித்து யூதர்களும் கிருஸ்தவர்களும் திருப்தியடைய மாட்டார்கள்.

• الإمامة في الدين لا تُنَال إلا بصحة اليقين والصبر على القيام بأمر الله تعالى.
2. சரியான நம்பிக்கை மற்றும் அல்லாஹ்வின் கட்டளைகளை நிறைவேற்றுவதில் பொறுமையாக இருத்தல் ஆகியவற்றைக் கொண்டுதான் மார்க்கத் தலைமை பெறப்படுகிறது.

• بركة دعوة إبراهيم عليه السلام للبلد الحرام، حيث جعله الله مكانًا آمنًا للناس، وتفضّل على أهله بأنواع الأرزاق.
3. புனித பூமி மக்காவுக்கு இப்ராஹீம் (அலை) அவர்கள் புரிந்த பிரார்த்தனை அருள்நிறைந்ததாகும். அதன் விளைவாக அல்லாஹ் மக்களுக்கு அதனை பாதுகாப்புமிக்கதாக ஆக்கி அங்கு வசிப்போருக்கு பலவித உணவுகளையும் வழங்கியுள்ளான்.

 
Përkthimi i kuptimeve Surja: El Bekare
Përmbajtja e sureve Numri i faqes
 
Përkthimi i kuptimeve të Kuranit Fisnik - El Muhtesar fi tefsir el Kuran el Kerim - Përkthimi tamilisht - Përmbajtja e përkthimeve

Botuar nga Qendra e Tefsirit për Studime Kuranore.

Mbyll